![]() |
Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes |
Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 10th Tamil |
Subject |
10th Tamil |
Chapter |
Chapter 1.5 எழுத்து சொல் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 10th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் notes PDF.
Download Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF from the links provided in this article.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.5 எழுத்து சொல்
கற்பவை கற்றபின்
Question 1.
தேன், நூல், பை, மலர், வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.
Answer:
தேன் – தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
நூல் – நூல் பல கல்.
பை – பை நிறைய பணம் இருந்தது.
மலர் – மலர் பறித்து வந்தேன்.
வா – விரைந்து வா.
Question 2.
வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
காண், சிரி, படி, தடு. எ.கா: காண் – காட்சி, காணுதல், காணல், காணாமை
Answer:
சிரி – சிரிப்பு, சிரித்தல், சிரிக்காமை
படி – படிப்பு, படித்தல், படிக்காமை
தடு – தடுப்பு, தடுத்தல், தடுக்காமை
Question 3.
தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.
அண்ணன் : எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி)
தம்பி :………………………….. (தனிமொழி)
அண்ணன் : ………………………….. வாங்குகிறாய்? (தொடர்மொழி)
தம்பி :………………………….. (தொடர்மொழி)
அண்ணன் : …………………………..(தனிமொழி)
தம்பி : ………………………….. (தொடர்மொழி)
அண்ணன் : …………………………..
தம்பி : …………………………..
Answer:
அண்ணன் : எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி)
தம்பி : கடைக்கு (தனிமொழி)
அண்ணன் : இப்பொழுது என்ன வாங்குகிறாய்? (தொடர்மொழி)
தம்பி :: பருப்பு வாங்குகிறேன். (தொடர்மொழி)
அண்ணன் : எதற்கு? (தனிமொழி)
தம்பி : பருப்பு சோறு செய்ய அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் (தொடர்மொழி)
அண்ணன் : இன்று பருப்பு சோறு வேண்டாமென்று அம்மாவிடம் சொல்வோம் (தொடர்மொழி)
தம்பி : சரி இன்று அம்மாவைப் பிரியாணி செய்து தரச்சொல்வோம். (தொடர்மொழி)
Question 4.
மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.
Answer:
இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.
- அழைக்கும் – அழைத்தல்
- ஏறுவேன் – ஏறுதல்
- அமர்வேன் – அமர்தல்
- பார்ப்பேன் – பார்த்தல்
- எய்தும் – எய்தல்
Question 5.
கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் – இத்தொழிற்பெயர்களை வகைப்படுத்துக.
Answer:
கட்டு : முதனிலைத் தொழிற்பெயர்
சொட்டு : முதனிலைத் தொழிற்பெயர்
வழிபாடு : விகுதி பெற்ற தொழிற்பெயர்
கேடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்
கோறல் : விகுதி பெற்ற தொழிற்பெயர்
மொழியை ஆள்வோம்
படித்துச் சுவைக்க.
பாடலில், மரம் என்னும் சொல், இடத்திற்கேற்ப பொருள் தருவதாய் 11 இடங்களில் இடம்பெற்றுள்ளது. பொருள்களைப் பொருத்திப் படித்து சுவைக்க.
Answer:
பாடலின் பொருள்:
“அரசன் குதிரையில் ஏறி
வேலைத் தோளில் வைத்து
அரசன் புலியைக் கண்டு
வேலினால் புலியைக் குத்தி
காட்டு வழியே சென்று
வளமனைக் கேட்கும் போது
அரசனைக் கண்ட மாதர்
ஆலமரமுடன் ஆரத்தி எடுத்தார்.”
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே அ) பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய
ஈ) பாடல்; கேட்டவர்
Answer:
ஈ) பாடல்; கேட்டவர்
குறுவினா
Question 1.
‘வேங்கை’ என்பதைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
Answer:
வேங்கை : வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும் (தனிமொழி)
வேம் + கை : வேகின்ற கை எனவும் பொருள் தருகிறது (தொடர்மொழி)
Question 2.
“உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்”
– இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.
Answer:
- உடுப்பதூஉம் உண்பதூஉம் : இன்னிசை அளபெடை வந்துள்ளது.
- செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.
சிறுவினா
Question 1.
‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’
Answer:
இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) இரண்டு
Answer:
ஆ) நான்கு
Question 2.
எஃஃகிலங்கிய, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை
ஈ) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை
Answer:
அ) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை
Question 3.
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
அ) 11)
ஆ) 13
இ) 15
ஈ) 12
Answer:
அ) 11
Question 4.
பொருத்துக.
i) ஓ ஒதல் வேண்டும் – 1. இன்னிசை அளபெடை
ii) கெடுப்பதூஉம் 2. செய்யுளிசை அளபெடை
iii) உரனசைஇ – 3. ஒற்றளபெடை
iv) எஃஃகிலங்கிய – 4. சொல்லிசை அளபெடை
அ) i.2 ii.1 ili.4 iv.3
ஆ) i.4 ii.3 ili.2 iv.1
இ) i.2 ii.3 iii.4 iv.1
ஈ) ii.4 iii.1 iv.2
Answer:
அ) i.2 ii.1 iii.4 iv.3
Question 5.
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) உறாஅர்
ஆ) கெடுப்பதூஉம்
இ) வரனசைஇ
ஈ) எஃஃகிலங்கிய
Answer:
ஈ) எஃஃகிலங்கிய
Question 6.
பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) ஓஒதல்
ஆ) உறாஅர்க்கு
இ) படாஅபறை
ஈ) தம்பீஇ
Answer:
ஈ) தம்பீஇ
Question 7.
பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க.
அ) படி
ஆ) வேங்கை
இ) கண்ண ன்
ஈ) கண்ணன் வந்தான்
Answer:
ஆ) வேங்கை
Question 8.
எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்
அ) எட்டு
ஆ) எள்ளை உண்
இ) வேகின்ற கை
ஈ) எள்ளை எடு
Answer:
ஆ) எள்ளை உண்
Question 9.
பொருத்துக.
1. நடத்தல் – அ) எதிர்மறைத் தொழிற்பெயர்
2. கொல்லாமை – ஆ) வினையாலணையும் பெயர்
3. கேடு – இ) தொழிற்பெயர்
4. வந்தவர் – ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.இ 2.அ 3.ஈ. 4.ஆ
இ) 1.இ 2.ஆ 3.ஈ. 4.அ
ஈ) 1.இ 2.அ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.இ 2.அ 3.ஈ. 4.ஆ
Question 10.
எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க.
அ) கொல்லாமை
ஆ) வாழ்க்கை
இ) நடத்தல்
ஈ) சூடு
Answer:
அ) கொல்லாமை
Question 11.
மொழியின் சிறப்புகளை அறிய துணை செய்வது
அ) கவிதை
ஆ) இலக்கணம்
இ) உரைநடை
ஈ) எதுவுமில்லை
Answer:
ஆ) இலக்கணம்
Question 12.
சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
அ) முப்பது
ஆ) பன்னிரண்டு
இ) பத்து
ஈ) ஒன்பது
Answer:
இ) பத்து
Question 13.
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) மூன்று
Question 14.
நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?
அ) செய்யுளிசை அளபெடை
ஆ) இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
ஈ) எதுவுமில்லை
Answer:
அ) செய்யுளிசை அளபெடை
Question 15.
சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?
அ) செய்யுளிசை அளபெடை
ஆ) சொல்லிசை அளபெடை
இ) இன்னிசை அளபெடை
ஈ) எதுவுமில்லை
Answer:
ஆ) சொல்லிசை அளபெடை
Question 16.
மொழி என்பது எத்தனை வகை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) மூன்று
Question 17.
“அந்தமான்” என்பது எவ்வகை மொழி?
அ) தொடர் மொழி
ஆ) தனி மொழி
இ) பொது மொழி
ஈ) எதுவுமில்லை
Answer:
இ) பொது மொழி
Question 18.
பொருத்திக் காட்டுக.
1. அந்தமான் – அ) தொடர்மொழி
2. கண் – ஆ) தொழிற்பெயர்
3. நடத்தை – இ) பொதுமொழி
4. கண்ணன் வந்தான் – ஈ) தனிமொழி
அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
ஈ) 1.இ 2.ஆ 3.ஈ 4.அ
Answer:
இ) 1.இ 2.ஈ 3.ஆ 4.அ
Question 19.
உறாஅர்க்கு, வரனசைஇ – அளபெடை வகை
அ) சொல்லிசை, இன்னிசை
ஆ) ஒற்றளபெடை, சொல்லிசை
இ) செய்யுளிசை, சொல்லிசை
ஈ) இன்னிசை, சொல்லிசை
Answer:
இ) செய்யுளிசை, சொல்லிசை
Question 20.
தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது
அ) தொழிற்பெயர்
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ) முதனிலைத் தொழிற்பெயர்
ஈ) வினையாலணையும் பெயர்
Answer:
ஈ) வினையாலணையும் பெயர்]
Question 21.
மூவிடத்திற்கும் உரியது ………….; படர்க்கைக்கே உரியது ………….
அ) தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்
ஆ) வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்
இ) உரிச்சொற்றொடர், வினையாலணையும் பெயர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்
Question 22.
‘நடத்தல்’ என்னும் சொல்லில் ‘நட’ என்பது
அ) வினையடி
ஆ) விகுதி
இ) தொழிற்பெயர்
ஈ) இடைநிலை
Answer:
அ) வினையடி
Question 23.
‘வேம் + கை’ என்பதன் பொருள்
அ) வேட்கை
ஆ) வேங்கை
இ) வேகின்ற கை
ஈ) வேகாத கை
Answer:
ஈ) வேகாத கை
Question 24.
‘வாழ்க்கை ‘ என்னும் சொல்லுக்குரிய விகுதியைக் குறிப்பிடுக.
அ) வாழ்
ஆ) க்
இ) கை
ஈ) ஐ
Answer:
இ) கை
Question 25.
அளபெடுத்தல் என்பதன் பொருள்
அ) நீண்டு ஒலித்தல்
ஆ) குறுகி ஒலித்தல்
இ) அளவாக ஒலித்தல்
ஈ) ஒலித்தல் இல்லை
Answer:
அ) நீண்டு ஒலித்தல்
Question 26.
‘நசைஇ’ என்பதன் பொருள்
அ) விருப்பம்
ஆ) விரும்பி
இ) துன்பம்
ஈ) கவனித்து
Answer:
ஆ) விரும்பி
குறுவினா
Question 1.
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை:
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலுகரம்
- ஆய்தக் குறுக்கம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- குற்றியலிகரம்
Question 2.
குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
Answer:
குறுக்கங்கள் நான்கு வகைப்படும். அவை:
- ஐகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
Question 3.
அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
அளபெடை இரண்டு வகைப்படும். அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.
Question 4.
உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
உயிரளபெடை மூன்று வகைப்படும்.
அவை: செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை.
Question 5.
உயிரளபெடை என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும்.
- அளபெடுக்கும் போது அவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் பக்கத்தில் வரும்.
- சான்று: உழாஅர்.
Question 6.
செய்யுளிசை அளபெடை / இசைநிறை அளபெடை என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- செய்யுளின் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுக்கும். (ஈரசை கொண்ட சீர்களில் மட்டும் வரும்)
- சான்று: உழாஅர் (உழா/அர்)
Question 7.
செய்யுளிசை அளபெடைக்கு மூன்று சான்று தருக.
Answer:
- ஓஒதல் வேண்டும் – மொழி முதல்
- உறாஅர்க்கு உறுநோய் – மொழி இடை
- நல்ல படாஅ பறை – மொழி இறுதி
Question 8.
இன்னிசை அளபெடை என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை எனப்படும்.
- சான்று: கெடுப்பதூஉம் (கெடுப்/பதூ/உம்)
(மூவசை கொண்ட சீர்களில் மட்டும் வரும் )
Question 9.
சொல்லிசை அளபெடை என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச்சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசையளபெடை ஆகும்.
- சான்று: வரனசைஇ, உரனசைஇ.
Question 10.
ஒற்றளபெடை என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய சில மெய்யெழுத்துகளும், ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடையாகும்.
- சான்று: எஃஃகிலங்கிய, எங்ங்கிறைவன்.
Question 11.
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகள் மற்றும் ஆய்த எழுத்து ஆகியவற்றை எழுதுக.
Answer:
- மெய் எழுத்துகள் – ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் (பத்து)
- ஆய்த எழுத்து – ஃ (ஒன்று)
- மொத்த எழுத்துகள் – 11
Question 12.
சொல் என்றால் என்ன?
Answer:
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தருமாயின் அது சொல் எனப்படும்.
(சொல்லின் வேறுபெயர்கள் – பதம், மொழி, கிளவி)
Question 13.
மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
மொழி மூன்று வகைப்படும்.
அவை: தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி.
Question 14.
தனிமொழி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி எனப்படும்.
- சான்று: கண், படி.
Question 15.
தொடர்மொழி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.
- சான்று: கண்ணன் வந்தான்.
Question 16.
பொதுமொழி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது பொதுமொழி ஆகும்.
- தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமையும்.
- சான்று: எட்டு.
எட்டு – எண்ணைக் குறிக்கிறது. எள் + து – எள்ளை உண்.
Question 17.
தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், பால், காலம் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
- எ.கா: ஈதல், வாழ்க்கை .
Question 18.
விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
- சான்று: நடத்தல். நட – வினையடி, தல் – விகுதி.
Question 19.
எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் எனப்படும்.
- சான்று: நடவாமை, கொல்லாமை.
Question 20.
தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொழிற்பெயர் இரண்டு வகைப்படும். அவை:
- முதனிலைத் தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்
Question 21.
முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற் பெயராகும்.
- சான்று: தட்டு, உரை, அடி.
- இச்சொற்கள் முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும் போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
Question 22.
முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பது விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வருவது. முதனிலை திரிந்த தொழிற்பெயராகும்.
- சான்று: கெடு – கேடு, சுடு – சூடு.
கேடு, சூடு (கெடு, சுடு என்னும் முதனிலைகள் கேடு, சூடு எனத் திரிந்து வந்துள்ளது)
Question 23.
வினையாலணையும் பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
- வினையைக் குறிக்காமல் வினை செய்தவரைக் குறிக்கும்.
- ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடியும்.
- தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும்.
- மூன்று காலங்களிலும் வரும்.
- சான்று: வந்தவர்.
Question 24.
தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறு.
Answer:
சிறுவினா
Question 1.
மொழியின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
மொழிவகைகள்:
மூன்று வகைப்படும்.
அவை: தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என்பன.
தனிமொழி:
- ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி எனப்படும்.
- எ.கா: கண், மரம்.
தொடர்மொழி:
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.
- எ.கா: கண்ண ன் வந்தான்.
பொதுமொழி:
- ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் ! தருவது பொதுமொழி ஆகும்.
- தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமையும்.
- சான்று: எட்டு
எட்டு – எண்ணைக் குறிக்கிறது. எள் + து – எள்ளை உண்.
Question 2.
சொல்லின் செயல்களைக் குறிப்பிடுக.
Answer:
- இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்.
- மூவகை இடங்களிலும் வரும்.
- உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.
- வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்.
மொழிபெயர்ப்பு:
Question 1.
If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own
language that goes to his heart. – Nelson Mandela
Answer:
நீங்கள் ஒரு மனிதனிடம் ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அதை அவன் புரிந்து கொண்டு அவன் மூளைக்குச் செல்கிறது. ஆனால் அவனுடைய மொழியில் பேசினால் அது அவன் நெஞ்சத்தைத்
தொடும். – நெல்சன் மண்டேலா
Question 2.
Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going. Rita Mae Brown
Answer:
மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி. அதுவே மக்கள் எங்கிருந்து வந்தார்கள் மற்றும் எங்குப் போகிறார்கள் என்பதைச் சொல்லும். – ரிட்டா மே பிரவுண்
சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே” – கவிமணி தேசிக விநாயகனார்.
Answer:
திருத்தம்:
“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே”
கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
(குவியல், குலை, மந்தை, கட்டு)
Answer:
- கல் – குவியல் (கற்குவியல்)
- பழம் – குலை (பழக்குலை)
- புல் – கட்டு (புற்கட்டு)
- ஆடு – மந்தை (ஆட்டுமந்தை)
வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
Question 1.
கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
Answer:
எ.கா: கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
Question 2.
ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
Answer:
ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
Question 3.
நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
Answer:
நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.
Question 4.
பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
Answer:
பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை மீள எழுதுக.
Question 1.
உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
Answer:
புவியில் வாழும் மானுடர்கள் சிலர் பழமிருக்கக் காய் உண்பதைப்போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.
Quesiton 2.
வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
Answer:
வள்ளல் குமணன் துன்பத்தால் வாடிவந்த அறிஞர்களுக்குத் தனது தலையை ஈந்து மங்காப் பெருமை பெற்றான்.
Question 3.
நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.
Answer:
நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயிலைப் போல மகிழ்ச்சி கொண்டனர்.
Question 4.
சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
Answer:
நந்தவனத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனை உண்டன.
Question 5.
பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
Answer:
ஆப்போல் அமைதியும் வேங்கை போல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
கட்டுரை எழுதுக.
குமரிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
Answer:
உலகில் மனித இனம் என்று தோன்றியதோ, அன்றே தமிழ் மொழியும் தோன்றியது. அன்று முதல் இன்று வரை தமிழ்மொழி இளமையாகவே இருந்துவருகின்றது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாழ்ந்த சான்றோர்களால் தமிழ் சிறப்புற்று நிற்கின்றது.
சங்கத்தமிழ்:
‘தமிழ்’ என்ற சொல் தொல்காப்பியப் பாயிரத்தில் இடம்பெறுகின்றது. கிபி. 2 ஆம் நூற்றாண்டிற்கு முன் தோன்றிய இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். அவையே சங்கத்தமிழ் தரும் களஞ்சியம் ஆகும். கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர், நல்லந்துவனார் முதலிய எண்ண ற்றத் தமிழ்ச் சான்றோர்களால் பாட்டும் தொகையும் உருவாக்கப்பட்டு சங்கத்தமிழ் வளர்க்கப்பட்டது.
அறத்தமிழ்:
சங்ககாலத்திற்குப் பின் தோன்றிய காலத்தில் பொய்யும் குற்றமும் தோன்ற ஆரம்பித்தது. அதனைப் போக்க திருவள்ளுவர், சமண முனிவர்கள், விளம்பிநாகனார், கபிலர், கணிமேதாவியார் ஆகிய பல சான்றோர் பெருமக்கள் அறநூல்களைப் படைத்து, அறத்தமிழை வளர்த்தனர்.
காப்பியத்தமிழ்:
ஐம்பெருங்காப்பியங்களும், ஐஞ்சிறுகாப்பியங்களும் காப்பியத் தமிழை வளர்த்தன. இளங்கோவடிகள், சீத்தலைச்சாத்தனார், திருத்தக்கத்தேவர் ஆகிய சான்றோர்கள் காப்பியத் தமிழைத் தழைக்கச் செய்தனர்.
சிற்றிலக்கியம்:
(பரணி, சதகம், பிள்ளைத்தமிழ்) சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும். அவை வழி சிற்றிலக்கிய வகைகள் பெருகி சிற்றிலக்கியத் தமிழை வளர்த்தனர். ஒருவரைக் குழந்தையாகப் பாவித்து, 10 பருவங்களில் வளாச்சி நிலையைப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். ஒட்டக்கூத்தர், குமரகுருபரர் ஆகியோர் பிள்ளைத்தமிழ் பாடி வளர்த்தனர். சதகம் (100) பாடல்களைக் கொண்டது சதகம். ஆத்மநாத தேசிகர், கார்மேகக் கவிஞர் ஆகியோர் சதகம் பாடினார். ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார் பரணி இலக்கியத்தை வளர்த்தனர்.
சமயத்தமிழ்:
சைவம், வைணவம், கிறித்தவம், இஸ்லாம், சமணம், பௌத்தம் ஆகியசமயங்களும் தமிழ்வளர்க்கும் பணியில் ஈடுபட்டு சமயத்தமிழை வளர்த்தனர். திருநாவுக்கரசர், வீரமாமுனிவர், உமறுப்புலவர் ஆகியோர் சமயத்தமிழை வளர்த்தனர். இதற்கு பன்னிரு திருமுறைகள், நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம், சீறாப்புராணம், தேம்பாவணி சான்றாகும்.
முடிவுரை:
காலந்தோறும் தமிழ், தன்னை வளர்ப்பவர்களால் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வளர்ந்தும் சிறந்தும் வருகின்றது என்பதை இலக்கிய வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன.
நயம் பாராட்டுக.
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே – கா. நமச்சிவாயர்
திரண்ட கருத்து:
‘வாழைக்கு அழகு குருத்து
செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து’
“தேனினும் இனிமையான செம்மை பெற்ற மொழி தமிழ் மொழி. தென்னாட்டில் சிறந்து விளங்குகின்ற மொழி தமிழ்மொழி. ஒளி வீசி அறிவும், செறிவும் நுட்பமும் கொண்ட மொழி தமிழ்மொழி உணர்வோடு உணர்வான மொழி, வானினும் உயர்ந்த வளம்மிக்க மொழி தமிழ். தழைத்து ஓங்குவாய் குளிர்ச்சி தங்கிய தமிழ் மொழியே” என தமிழ்மொழியைச் சிறப்பித்துக் கூறியுள்ளார் க. நமச்சிவாயர்.
தொடை நயம்:
‘தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்’
செய்யுளானது எதுகை, மோனை, இயைபு, முரண் முதலியவற்றால் தொகுக்கப்படுவது தொடை எனப்படும். இப்பாடலில் தொடை நயங்கள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன.
‘மோனை நயம்:
‘மோனையற்ற பாட்டு
சேனையற்ற நாடு’
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத் தொடை.
ஒண்டமிழ், ஒளிர்தமிழ், ஒளிர்வுறும்,
தனித்தமிழ், தண்டமிழ் ஆகிய மோனைச் சொற்கள் பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது.
எதுகை நயம்:
‘வீரத்துக்கு அழகு வேங்கை
செய்யுளுக்கு அழகு எதுகை’
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத் தொடை.
தேனினும், ஊனினும், வானினும் ஆகிய எதுகைச் சொற்கள் பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது.
இயைபு நயம்:
‘பாடலின் இயைபு
படிப்போர்க்கு வியப்பு’
செய்யுளில் கடைசி எழுத்தோ சீரோ அசையோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும். ‘மொழியே’ என்னும் சொல் அடிதோறும் வந்து இயைபாக அமைந்துள்ளது. அடிதோறும் மூன்றாம் சீரில் செந்தமிழ், ஒண்டமிழ், ஒளிர்தமிழ், வண்டமிழ், தனித்தமிழ், தண்டமிழ் என்னும் சொற்கள் வந்து பாடலுக்கு இயைபாக அமைந்துள்ளன.
அணி நயம்:
‘கோவிலுக்கு அழகு மணி
செய்யுளுக்கு அழகு அணி’
இப்பாடலில் ‘மொழி’ என்ற சொல் ஒரே பொருளில் பலமுறை வந்து சொற்பொருட் பின்வரு நிலையணியைக் கொண்டுள்ளது.
பாவகை : எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
மொழியோடு விளையாடு
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
தேன் , விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ. எ.கா: பூமணி
Answer:
புதிய சொற்கள்:
குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க.
குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்
Answer:
எ.கா: குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா ?
சுவைக்காத இளநீர் : மன்னன் சுவைக்காத இளநீர் உண்டோ ?
காப்பியச் சுவை : கம்பர் காலத்தில் காப்பியச் சுவை உச்சநிலையில் இருந்ததோ?
மனிதகுல மேன்மை : இந்நூற்றாண்டில் மனிதகுல மேன்மை சிறப்புற்று விளங்குகிறதோ?
விடுமுறைநாள் : தேரோட்டம் அன்று விடுமுறை நாள் என அறிவிக்கப்படுமா?
எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
Answer:
அகராதியில் காண்க.
அடவி, அவல், சுவல், செறு, பழனம், புறவு.
Answer:
அடவி – காடு, திரள், தொகுதி, சோலை
அவல் – பள்ளம், விளைநிலம், குளம், நெல் இடியல்
சுவல் – பிடரி, முதுகு, மேடு, தொல்லை
செறு – வயல், குளம், பாத்தி, கோபம்
பழனம் – வயல், மருதநிலம், பொய்கை
புறவு – புறா, சிறுகாடு, முல்லைக்கொடி, பயிரிடும் நிலம்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Answer:
நிற்க அதற்குத் தக
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
…………………………………………………………………………………………………………………………………………………………………..
…………………………………………………………………………………………………………………………………………………………………..
…………………………………………………………………………………………………………………………………………………………………..
Answer:
நாங்கள் இன்சொல் வழியையே பின்பற்றுவோம். எங்கள் நண்பருக்கும் அவ்வழியையே காட்டி அவர்களையும் அவ்வழியின் படி நடக்கச் செய்வோம்.
கலைச்சொல் அறிவோம்
- Vowel – உயிரெழுத்து
- Consonant – மெய்யெழுத்து
- Homograph – ஒப்பெழுத்து
- Monolingual – ஒரு மொழி
- Conversation – உரையாடல்
- Discussion – கலந்துரையாடல்
How to Prepare using Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 10th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.2 தமிழ்சொல் வளம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.2 தமிழ்சொல் வளம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.2 நீதி வெண்பா Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.2 நீதி வெண்பா Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.4 புதியநம்பிக்கை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.4 புதியநம்பிக்கை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.2 பூத்தொடுத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.2 பூத்தொடுத்தல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.4 கம்பராமாயணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.4 கம்பராமாயணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.5 பாய்ச்சல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.5 பாய்ச்சல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.2 ஏர் புதிதா? Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.2 ஏர் புதிதா? Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.2 ஞானம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.2 ஞானம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.2 சித்தாளு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.2 சித்தாளு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.5 அணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.5 அணி Notes
0 comments:
Post a Comment