Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 11th History |
Subject |
11th History |
Chapter |
Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 11th History Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் notes PDF.
Download Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDF from the links provided in this article.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
புத்தர் தனது முதல் போதனையை …………… இல் நிகழ்த்தினார்.
அ) சாஞ்சி
ஆ) வாரணாசி
இ) சாரநாத்
ஈ) லும்பினி
Answer:
இ) சாரநாத்
Question 2.
அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல் ………….. ஆகும்?
அ) சீவகசிந்தாமணி
ஆ) அச்சரங்க சூத்திரம்
இ) கல்பசூத்திரம்
ஈ) சமனபலசுத்தா
Answer:
ஈ) சமனபலசுத்தா
Question 3.
பகவதி சூத்திரம் ஒரு ………………… நூலாகும். இல் நிகழ்த்தினார்.
அ) பௌத்தம்
ஆ) சமணம்
இ) ஆசீவகம்
ஈ) வேதம்
Answer:
ஆ) சமணம்
Question 4.
……………………… வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
அ) இரும்பு
ஆ) வெண்கலம்
இ) செம்பு
ஈ) பித்தளை
Answer:
அ) இரும்பு
Question 5.
வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு …………. ஆகும்.
அ) கோசலம்
ஆ) அவந்தி
இ) மகதம்
ஈ) குரு
Answer:
இ) மகதம்
கூடுதல் வினாக்கள்
Question 1.
…………………. தொழில் நுட்பத்தின் பயன்பாடு நகரமயமாக்க ஏற்படுத்தியது.
அ) செம்பு
ஆ) தங்கம்
இ) இரும்பு
ஈ) இதில் எதுவும் இல்லை
Answer:
இ) இரும்பு
Question 2.
மகாவீரர் பிறந்த இடம் ……………
அ) பாடலிபுத்திரம்
ஆ) குசுமபுரம்
இ) குண்டகிராமம்
ஈ) கபிலபஸ்து
Answer:
இ) குண்டகிராமம்
Question 3.
திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
அ) பால
ஆ) பிரகிருதம்
இ) சமஸ்கிருதம்
ஈ) இந்தி
Answer:
அ) பால
Question 4.
ஆரியர்கள் ஏறத்தாழ பொ. ஆ. மு. ……….. வாக்கில் கிழக்கு நோக்கி இடம் பெயர ஆரம்பித்தனர்.
அ) 1000
ஆ) 1500
இ) 1750
ஈ) 2000
Answer:
அ) 1000
Question 5. ………….. என்ற சொல்லுக்கு ‘இனக்குழு தன் காலை பதித்த இடம் என்று பொருள்.
அ) மகாஸ்ரீனபதம்
ஆ) ஜனபதம்
இ) கிசாசம்சிக்கா
ஈ) குரு பாஞ்சாலம்
Answer:
ஆ) ஜனபதம்
Question 6.
தொடக்ககால நூல்களில் ………… மகாஜனபதங்கள் காணப்படுகின்றன.
அ) 10
ஆ) 13
இ) 16
ஈ) 17
Answer:
இ) 16
Question 7.
மிகவும் பிரபலமான விரிஜ்ஜி கண சங்கத்தின் தலை நகரம் …………………..
அ) மிதிலை
ஆ) வைசாலி
இ) ராஜகிருஹம்
ஈ) தட்சசீலம்
Answer:
ஆ) வைசாலி
Question 8.
வேளாண் நிலத்தின் மீதான வரி ……………… எனப்பட்டது.
அ) சுரா
ஆ) சுல்கா
இ) பலி
ஈ) பாகா
Answer:
இ) பலி
Question 9.
செல்வமிக்க நில உரிமையாளர்கள் ………… என்றழைக்கப்பட்டனர்.
அ) தாசர்
ஆ) கிரகபதி
இ) கர்மகாரர்
ஈ) கிரிஷாகா
Answer:
ஆ) கிரகபதி
Question 10.
விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும், …………….. எனப்பட்டார்கள்.
அ) சூத்திரர்
ஆ) ஷத்திரியர்
இ) வணிகர்
ஈ) கர்மகாரர்
Answer:
அ) சூத்திரர்
Question 11.
பௌத்த ஆவணங்களின்படி ‘ஆசீவகம்’ என்ற பிரிவை தோற்றுவித்தவர் …………………….
அ) கிஸாசம்ஹிக்கா
ஆ) மக்காலி கோசம்
இ) கச்சாயனர்.
ஈ) நந்த வாச்சா
Answer:
ஈ) நந்த வாச்சா
Question 12.
கௌதமபுத்தரை சந்தித்த பேரரசர்.
அ) அசோகர்
ஆ) அஜாதா சத்ரு
இ) சந்திரகுப்தர்
ஈ)பிந்துசாரர்
Answer:
ஆ) அஜாதா சத்ரு
Question 13.
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப் பட்டதாக நம்பியவர்………………
அ) அஜிதன்
ஆ) சார்வாஹர்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
Answer:
இ) சோழர்கள்
Question 14.
ஆசிவகர்கள் மீது வரி விதித்தவர்கள்.
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
Answer:
இ) சோழர்கள்
Question 15.
சமண மதத்தை ஆதியில் தோற்றுவித்தவர் …..
அ) ரிஷபர்
ஆ) அஜிதானந்தர்
இ) அரிஷ்டநேமி
ஈ) மகாவீரர்
Answer:
அ) ரிஷபர்
Question 16.
மகாவீரர் சமண மதத்தின் ……………… வது தீர்த்தங்கரர்.
அ) 21
ஆ) 22
இ) 23
ஈ) 24
Answer:
ஈ) 24
Question 17.
சமண மதத்தில் வென்னிற ஆடை உடுத்தியவர் …………………..
அ) திகம்பரர்கள்
ஆ) ஸ்வேதம்பரர்கள்
இ) ஆசிவகர்கள்
ஈ) ஹீனயானர்கள்
Answer:
ஆ) ஸ்வேதம்பரர்கள்
Question 18.
முதல் பௌத்த சங்கம் நடைபெற்ற இடம்
அ) காஷ்மீர்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) ராஜகிருஹம்
Answer:
ஈ) ராஜகிருஹம்
Question 19.
நான்காவது பௌத்த சங்கம் நடைபெற்ற இடம் ……………………
அ) காஷ்மீர்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) ராஜகிருஹம்
Answer:
அ) காஷ்மீர்
Question 20.
நான்காவது பௌத்த சங்கம் …………… காலத்தில் நடந்தது.
அ) அசோகர்
ஆ) கனிஷ்கர்
இ) பிந்துசாரர்
ஈ) ஹர்சர்
Answer:
ஆ) கனிஷ்கர்
Question 21.
நாளந்தா பல்கலைக் கழகத்திற்குத் தலைமை தாங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பௌத்த ஆசிரியர் ………….. அ) தம்மபாலர்
ஆ) சாமிபுத்தம்
இ) ராமாணந்தர்
ஈ) புத்தர்
Answer:
அ) தம்மபாலர்
Question 22.
பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் …………………….
அ) திருச்சி
ஆ) திருநெல்வேலி
இ) மதுரை
ஈ) திருவண்ணாமலை
Answer:
இ) மதுரை
II. குறுகிய விடை தருக :
Question 1.
நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.
Answer:
பாலி மொழியில் தொகுக்கப்பட்டது திரிபீடகம். அவை
- வினையபிடகம்,
- சுத்தபிடகம்,
- அபிதம்ம பிடகம் என்பவையாகும்.
Question 2.
‘சார்வாகம்’ குறித்து அறிந்ததைக் கூறுக.
Answer:
- இந்திய பொருள் முதல்வாதம் என்ற சிந்தனையாளர்கள் முதன்மையானவர் ‘சார்வாகம்’ ஆவார்.
- இவர் ஒரு முறையான தத்துவ முறையை நிறுவினார்.
- இவர் ஜயுறுவாதம் என்ற சிந்தனையை மேம்படுத்தினார். வேதங்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார்.
- அனுபவங்கள் வாயிலாகவே அறிவை பெறவும் முடியும் என நம்பினார்.
Question 3.
மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?
Answer:
- மகாவீரரின் போதனைகளின் மையக் கருத்து அஹிம்சை ஆகும். சமணம் வலியுறுத்திய அளவிற்கு அஹிம்சையை வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை .
- சமணம் கடவுளின் இருப்பை மறுத்ததோடு உருவ வழிபாட்டையும் எதிர்த்தது.
- கடவுளை வழிபடுவதாலே, வேள்விகள் செய்வதாலோ முக்திபெற முடியாது என்றார் மகாவீரர்.
- எளிமையான ஒழுக்கமிக்க வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலமாகவே, ஒருவர் துன்பங்களிலிருந்து தப்ப முடியும் என்றார்.
Question 4.
ஜனபதங்களுக்கும், மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக
Answer:
ஜனபதங்கள் |
மகாஜனபதங்கள் |
1. ஜன என்பது இனக்குழுக்கள் | 1. மகாஜன என்பது பெரிய பிராந்திய அரசு |
2. இனக்குழு தன் காலை பதித்த இடம் ஜனபதம் எனப்படும் | 2. ஒன்றிற் மேற்பட்ட ஜனபதங்கள்
இணைக்கப்பட்ட பிரதேசமாகும். |
3. வரி அமைப்பு காணப்படவில்லை | 3. வரி அமைப்பு காணப்படவில்லை |
4. ஒரு நாட்டிற்கான அரசாங்கம் இறையாண்மை இங்கு காணப்படவில்லை | 4. ஒரு நாட்டிற்கு தேவையான நிலம், மக்கள், அரசாங்கம், இறையாண்மை ஆகியவை
இங்கு காணப்பட்டன. |
Question 5.
தமிழ்நாட்டின் பௌத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
Answer:
- பல்லவ அரசன் 2ஆம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டது.
- சீனத்துறவி வு-கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார்.
- பொ.ஆ. 1006ல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு நாகப்பட்டினத்தில் பௌத்த கோயிலைக் கட்டினார்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
பதினாறு மகாஜன பதங்களை கூறுக.
Answer:
புராண, பௌத்த, சமண மரபுச் சான்றுகளின்படி 16 மகாஜனபதங்கள் பற்றி அறிய முடிகிறது.
அவையாவன:
- காந்தாரம்
- காம்போஜம்
- அசகம்
- வத்சம்
- அவந்தி
- சூரசேனம்
- சேதி
- மள்ளம்
- குரு
- பாஞ்சாலம்
- மத்ஸ்யம்
- வஜ்ஜி (விரஜ்ஜி)
- அங்கம்
- காசி
- கோசலம்
- மகதம்
Question 2.
புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?
Answer:
- இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள்.
- கதைகள் போன்ற பௌத்த நூல்கள், சமணநூல்கள்.
- அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும்.
- தொல்லியல் சான்றுகளும் இவற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
Question 3.
மும்மணிகள் (திரிரத்தினங்கள்) என்றால் என்ன? அவைகள் யாவை?
Answer:
சமண மதத்தினர் அனைவரும் கடைபிடிக்க மூன்று கொள்கைகள்
(திரிரத்தினங்கள்) மும்மணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அவையாவன:
- நன்னம்பிக்கை (சம்யோக் – தர்ஷனா)
- நல்லறிவு (சம்யோக் – ஞானா)
- நன்னடத்தை (சம்யோக் – மஹாவ்ரதா)
Question 4.
சமணத்துறவிகளுக்கான ஐமபெரும் சூளுரைகள் யாவை?
Answer:
- கொல்லாமை (அஹிம்சா)
- கள்ளாமை (அஸ்தேயா)
- பொய்யாமை (சத்யா )
- புலனடக்கம் (பிரும்மச்சரியா)
- பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா) ஆகியவை சமணத்துறவிகளின் ஐம்பெரும் சூளுரைகள் ஆகும்.
III. சுருக்கமான விடை தருக
Question 1.
காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.
Answer:
- ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில் கிழக்கு நோக்கி இடம் பெயரத் தொடங்கினர்.
- அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, அடர்ந்த காடுகளை எதிர் கொண்டனர்.
- காடுகளைத் திருத்துவதில் இரும்பு முக்கிய பங்காற்றியது.
- கங்கைச்சமவெளியின் வளம் செறிந்த மண்ணும் இரும்புக் கொழுமுனைகளின் பயன்பாடும் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தின.
- பானை வணைதல், மர வேலைகள், உலோக வேலைகள் போன்ற கைவினைப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததிலும் இரும்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
- கங்கை வட நீர்ப்பகுதியில் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய இரும்பு கோடாரிகளம், இரும்பு கலப்பைகளுமே வழிவகுத்தன என்ற கருத்தை R.S. சர்மா முன்வைக்கிறார்.
Question 2.
கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?
Answer:
- ஆரியர்களின் வருகைக்குப்பிறகு கங்கைப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டது.
- இரும்பு தொழில்நுட்ப பயன்பாட்டினால் வேளாண்மை பகுதி பெருகியது.
- குடியிருப்புகள் உருவாயின.
- கங்கைச்சமவெளி வளமானதால் வேளாண்மை செய்யவும், வணிகம் செய்யவும் ஏற்றபகுதியானது. அதனால் மக்கள் இங்கு அதிகம் குடியேற துவங்கினர்.
- வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக் கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியன கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
- ஆதலால் கங்கைச் சமவெளி எளிதில் நகரமயமாக மாறியது.
Question 3.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுது
Answer:
வேளாண், உபரி , கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
கங்கைப் பகுதியில் உருவான நகரங்கள்:
- ராஜகிருகம், சிராவஸ்தி, கௌசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
- உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்
- வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.
Question 4.
பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச்சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.
Answer:
- பொ.ஆ.மு. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் சில அவைதீகச் சிந்தனையாளர்கள் கேள்விக்கு உட்படுத்தியதின் விளைவாக அறிவு மலர்ச்சி தோன்றியது.
- இக்கால கட்டத்தில் தான் வைதீகக் கருத்துக்களைப் பற்றி கேள்வி எழுப்பிய சிந்தனையாளர்கள் தோன்றினர்.
- அவை தீகச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்கள்
கோசலர்
கௌதமபுத்தர்
மகாவீரர் அஜித கேசகம்பளி ஆகியோர் ஆவார். - இத்துறவிகளின் போதனைகள் புதிய ஆட்சி முறைகள் நகரமையங்களின் உருவாக்கம், கைத்தொழில்கள், தொலை தூர வணிகத்தின் வளர்ச்சி இவற்றால் விரைவில் மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைகளைப் பேசின.
- இந்த அறிவு மலர்ச்சிவாதிகள் வேதக் கருத்துக்களான ஆன்மா , மனம், உடல் ஆகிறவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
- அதன் வழியாக, புதிய மதங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள்.
Question 5.
தமிழ் நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.
Answer:
- பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ் நாட்டில் பரவியது.
- மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகளோடு கூடிய குகைகள் காணப்படுகின்றன.
- தொடக்க காலத் தமிழ் இலக்கியத்தில் (நாலடியார், பழமொழி, சீவக சிந்தாமணி, யாப்பெருங்கல காரிகை, நீலகேசி) சமணத்தின் வலுவான தாக்கத்தை உணர முடிகிறது.
- பொ.ஆ. 470ல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது.
- சமணம் தமிழ் நாட்டில் பரவியதால், பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
- காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோயில் சமணக் கோயில்களில் ஒன்றாகும்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
மகாவீரரின் இளமைக்காலம் பற்றி கூறுக.
Answer:
- வர்த்தமான மஹாவீரர் சமணப்பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர்.
- வைசாலிக்கு அருகாமையில் உள்ள குந்த கிராமத்தில் ஷத்ரிய வகுப்பைச் சேர்ந்த சித்தார்த்தருக்கும், திரிசலைக்கும் வர்த்தமானர் மகனாகப் பிறந்தார்.
- தனது 30வது வயதில் துறவு பூண்ட வர்த்தமானர் 12 ஆண்டுகாலம் காடுகளில் சுற்றி அலைந்தார்
- 42வது வயதில் ஞானத்தைப் பெற்றார்
- அதன் பின் அவர் மகாவீரர் என்ற ஜீனர் என்றும் அழைக்கப்பட்டார்.
- அவரது கருத்துக்கள் சமணம் என்று வழங்கப்பட்டது.
Question 2.
சமணம் ஒரு சமத்துவமான மதம் – தெளிவுபடுத்துக. (அல்லது)
சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை?
Answer:
- சமணம் ஒரு சமத்துவமான மதம்.
- பிறப்பின் காரணமாக எந்த வித ஏற்றத்தாழ்வுகளையும் அனுமதிப்பதில்லை.
- சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர பிறப்பல்ல என கூறுகிறது.
- ஒருவன் தன் செயலால் பிராமணனாக, சத்ரியனாக, வைசியனாக, சூத்திரனாக மாறுகிறான் என சமணம் நம்புகிறது.
- பிறப்பின் காரணமாக பெருமை கொள்வது பாவம் எனக் கூறுகிறது.
- பெண்களும் துறவிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
Question 3.
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் யாவை?
Answer:
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் :
- அரச ஆதரவை சமணம் இழந்தது.
- திகம்பரர், ஸ்வேதம்பரர் எனப் பிளவு ஏற்பட்டது.
- ஒரு மத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் சமணம் இழந்தது.
- குழு மன நிலை சமணத்தை பலவீனப்படுத்தியது.
- சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
- ஒரு போட்டி மதப்பிரிவாக பௌத்தம் பரவி, சமணத்தை பின்னுக்கு தள்ளியது.
Question 4.
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?
Answer:
(i) துன்பம் பற்றிய உண்மை | பிறப்பு, வயது, மரணம், விரும்பத்தக்கவை, பிரிவு, நிறைவேறாத விருப்பம் பற்றியது . |
(ii) துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை | இன்பம், அதிகாரம், நீண்ட ஆயுள் போன்ற வற்றிற்கான ஆசையே துன்பத்திற்கான காரணம் ஆகும். |
(iii) துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்) | துன்பத்திலிருந்து முழுமையான விடுதலை |
(iv)துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி பற்றிய பெரும் உண்மை | எண் வழிப்பாதை (துக்க நிவாரண மார்க்கம்)
|
IV. விரிவான விடை தருக :
Question 1.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
Answer:
அறிவுமலர்ச் சிக்கான காரணங்கள்:
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு, தீவிரமான அறிவு சார் கொந்தளிப்பின் காலமாகும்.
இவ்வெழுச்சிக்கான காரணங்கள்:
1. அரசு உருவாக்கமும், வேத மதத்தின் கடுமையும் சிந்தனை மற்றும் செயலுக்கான சுதந்திரத்தைக் காட்டுகிறது.
மத நடைமுறைகளுக்கு எதிரான கிளர்ச்சியாக அவைதீக மதங்கள் உருவாயின.
2. பிரதேச அடையாளங்களின் தோற்றம், சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்களை உந்தித் தள்ளியது.
அதிருப்தியுடன் இருந்த மேட்டுக்குடி மக்கள் மகதம் அல்லது மத்திய கங்கைச் சமவெளியில் வளர்ந்து வந்த அவைதீக மதங்களை நோக்கி நகர்ந்தார்கள்.
3. வேத மதம் முழுமையாக சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கவில்லை .
எனவே புதிதாக உருவாகி வந்த மதங்களை பின்பற்றுவது மக்களுக்கு கடினமானதாக இல்லை .
4. நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக வணிகர்கள், சேத்கள் (ளநவாள) போன்ற வங்கியாளர்கள் என புதியவர்க்கம் உருவானது.
இது தமது பொருளாதார தகுதி நிலைக்கு இணையான தகுதி நிலையைக் கோரியது.
5. ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கைமுறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
அவ்வுரிமை தங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது சத்திரியர்களின் மனக்குறையை இருந்தது.
மேற்கூறிய காரணங்களால் பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் அறிவு மலர்ச்சி ஏற்பட்டது.
Question 2.
ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும்குறிப்பிடவும்.
Answer:
ஆசீவகம் :
அக்காலத்துறவிகள் குழுக்களாக செயல் பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது. பௌத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவை தோற்றுவித்தவர் நந்த வாச்சா என்பவர். இவருக்கு அடுத்து கிஸா சம்கிக்கா, மக்காலி கோசலர் ஆகியோர் வழிநடத்தினர்.
கோசலர்-மகாவீரர் சந்திப்பு:
ஆசீவகர்களில் தலைசிறிந்தவர் மக்காலி கோசலர். மகாவீரரை நாளந்தாவில் சந்தித்தார். கோட்பாட்டு வேற்றுமை காரணமாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்.
புத்துயிர்ப்பு கோட்பாடு:
கோசலர் சிராவஸ்திக்கு சென்று ஹலாஹலா என்ற குயவப் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு கோட்பாட்டை நம்பினார். ஆசீவக பிரிவின் தலைமையாக சிராவஸ்தி இருந்தது. ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பினார்கள். அடிப்படைக் கொள்கை நியதி அல்லது விதி என்பதாகும்.
தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள்:
லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர்:
கோசலர் மறைவிற்குப் பிறகு புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர் என்ற இரு பரப்புரையாளர்கள் இதற்கு புத்துயிர்ப்பு கொடுத்தார்கள்.
புராணகஸ்ஸபரின் கருத்து:
செயல்களுக்கு நற்கூறுகள், தீய கூறுகள் என்பது கிடையாது. சித்திரவதை, காயம் இழைத்தல், கொலை ஆகியவற்றால் தீமையும் இல்லை. ஈகை, சுயக்கட்டுப்பாடு, உண்மையான பேச்சால் நன்மையும் இல்லை. ஏனென்றால் எல்லாமே முன்னரே முடிவு செய்தவை. எனவே, மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது என்கிறார்.
இருக்கும் ஒரே வழி செயலின்மைதான் என்பது அவரது கருத்து.
பகுதகச்சாயனாரின் கருத்து:
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார்.
அஜித கேசகம்பளி:
ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதினார்.
மரணத்திற்குப் பிறகு உடம்பு அழியும்போது புத்திசாலி, முட்டாள் எல்லோருமே முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வதில்லை என்கிறார்.
குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள் ஆசிவகத்திற்கு இருந்தார்கள். பௌத்தம், சமணம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது ஆசீவகத்தின் செல்வாக்கு ‘ குறைவுதான் என்றாலும் நாடு – முழுவதும் பரவியிருந்தது.
Question 3.
சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
Answer:
மகாவீரர் மறைவிற்குப்பின் 500 ஆண்டுகள் கழித்து சுமார் பொ.ஆ. 79-82ல் சமணத்தில் திகம்பரர்கள், ஸ்வேதாம்பரர்கள் என இரு பிரிவுகள் தோன்றின.
திகம்பரர்கள்:
மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு நோக்கிச் சென்றார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உடைகள் ஏதுமின்றி இருந்தார்கள்)
ஸ்வேதாம்பரர்கள்:
ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தவர்கள் ஸ்வேதாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தினார்கள். இந்த பிரிவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது. பாடலிபுத்திர மாநாடு:
பத்ரபாகு மரணமடைந்த பிறகு ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். 12 அங்கங்களைக் கொண்ட சமண நெறிமுறைகளை தொகுத்தது.
Question 4.
புத்தரின் எண் வழிப்பாதையை விவரி.
Answer:
உண்மையே தேடி அலைந்த சித்தார்த்தர்(புத்தர்) 35வது வயதில் பேரறிவு பெற்றார். அவரது போதனைகள் நான்கு பெரும் உண்மைகள் – எண் வழி மார்க்கம் என அழைக்கப்படுகிறது.
நான்கு பெரும் உண்மைகள்:
- துன்பம் பற்றிய பெரும் உண்மை
- துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை
- துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை
- துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழி பற்றிய பெரும் உண்மை (எண் வழிப்பாதை) ஆகியவையாகும்.
எண் வழிப்பாதைகள் :
- நன்னம்பிக்கை
- நல்லார்வம்
- நல்வாய்மை
- நற்செயல்
- நல் வாழ்க்கை முறை
- நன் முயற்சி
- நற்சிந்தனை
நல்ல தியானம் ஆகியவை எண்வழிப்பாதைகளாகும்.
- புத்தர் கடவுள் பற்றி குறிப்பிடவோ, பேசவோ இல்லை .
- கடவுளின் இருப்பை ஏற்கவும் இல்லை , மறுக்கவும் இல்லை .
- பௌத்தம் சாதி முறையை ஏற்கவில்லை சமத்தவத்தை வலியுறுத்தியது.
- அனைவரிடத்திலும் அன்பையும் அஹிம்சையையும் போதித்தது.
- வணிகத்தையும், சிக்கனத்தையும் ஆதரித்தது.
- ஆயுதங்கள், உயிருள்ள ஜீவன்கள், இறைச்சி, மது, விஷம் ஆகியவற்றை விற்பனை செய்வதை அனுமதிக்கவில்லை. நடை முறைக்கு சாத்தியமான ஒழுக்க நெறிகளை போதித்து சமத்துவ கோட்பாட்டிற்கு வித்திட்டார்.
Question 5.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை? இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:
Answer:
1. சமயப் பிரிவினை .
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பௌத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்.
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பௌத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பௌத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரச ஆதரவை இழத்தல்.
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பௌத்தம் அரச ஆதரவை இழந்தது. வேத மதம் அரச ஆதரவை பெற்றது. பௌத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்.
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானுஜர், ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினர். இதனால் பௌத்தமத வளர்ச்சி பாதித்தது.
5. ஹுணர்கள் படையெடுப்பு.
ஹுண ஆட்சியாளர்களான தோராமானர், மிகுரகுலர் ஆகியோர் பௌத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த பௌத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு.
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவிர ஆதரவாளர்கள். ஆதலால் பௌத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொல்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பௌத்த மதம் வீழ்ச்சியுற காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு.
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பௌத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி, நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பௌத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.
கூடுதல் வினாக்கள்
Question 1.
பௌத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
Answer:
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பௌத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பௌத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பௌத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பௌத்த சங்கம் :
தலைமை தாங்கியவர் உபாலி. இடம், ராஜ கிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும், ஆனந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பௌத்த சங்கம் :
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பௌத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும்இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பௌத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பௌத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பௌத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில்
தொகுக்கப்பட்டுள்ளன.
Question 2.
பௌத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?
Answer:
ஸ்த விரவதின்கள், மகா சங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பௌத்தத்தின் முக்கியமான பிரிவுகளாக உருவாகின.
ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது ஹீனயானம், மஹாயானம் என பௌத்தமாக இரண்டாக பிரிய வழி வகுத்தது.
மஹாயானம் :
இந்தியாவில் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. பௌத்த கல்வியின் முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்கு பரவியது.
ஹீனயானம்:
இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது வங்காளத்தைச் சேர்ந்த பால’ வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது.
வஜ்ராயனம்:
குப்தர்களின் ஆட்சியின் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடி, மின்னல் பாதை உருவானது. இது வங்கம், பீகார் பகுதிகளில் செல்வாக்குப்பெற்றது. 11ம் நூற்றாண்டில் திபெத்திற்கு பரவியது.
பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன. பௌத்தத்திற்கு முக்கியமான கல்வி நிலையமாகும்.
Question 3.
தமிழ் நாட்டில் பௌத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
Answer:
பௌத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பௌத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பௌத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் ‘தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு’ என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பௌத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பௌத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டிணத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.)
பெ.மு. 1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம விகாரம் எனப்படுகிற பௌத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பௌத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
How to Prepare using Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 11th History All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 11th History Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Notes
- Samacheer Kalvi 11th History Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 5 தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 6 மௌரியருக்கு பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 7 குப்தர் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 7 குப்தர் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Notes
- Samacheer Kalvi 11th History Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 9 தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Notes
- Samacheer Kalvi 11th History Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 10 அரபியர், துருக்கியரின் வருகை Notes
- Samacheer Kalvi 11th History Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 11 பிற்காலச் சோழரும் பாண்டியரும் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 12 பாமினி விஜய நகர அரசுகள் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 13 பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 14 முகலாயப் பேரரசு Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 14 முகலாயப் பேரரசு Notes
- Samacheer Kalvi 11th History Chapter 15 மராத்தியர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 15 மராத்தியர்கள் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 16 ஐரோப்பியரின் வருகை Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 16 ஐரோப்பியரின் வருகை Notes
- Samacheer Kalvi 11th History Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 17 ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 18 ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் Notes
- Samacheer Kalvi 11th History Chapter 19 நவீனத்தை நோக்கி Notes PDF Download: Tamil Nadu STD 11th History Chapter 19 நவீனத்தை நோக்கி Notes
0 comments:
Post a Comment