![]() |
Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes |
Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 12th Tamil |
Subject |
12th Tamil |
Chapter |
Chapter 7.6 தொன்மம் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 12th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் notes PDF.
Download Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF from the links provided in this article.
Question 1.
தொன்மம் என்னும் உத்தியைப் பயன்படுத்திப் புதுக்கவிதையொன்றை எழுதுக.
Answer:
தாண்டிக் கெட்டாள் சீதை
தாண்டாமல் கெட்டாள் கண்ணகி.
இரண்டு அடியாவது வாங்கினால்தான்
திருந்துவாய்….
வள்ளுவர் வாக்கு
இலக்கணத் தேர்ச்சி கொள்
Question 1.
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்க.
அ) கர்ணன் தோற்றான் போ.
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி
இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
ஈ) இந்தா போறான் தருமன்
Answer:
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி
Question 2.
தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.
அ) உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட வடிவங்கள்
ஆ) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.
இ) நம்ப முடியாதது போல் தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்.
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
Answer:
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
Question 3.
‘சாபவிமோசனம்’ ‘அகலிகை’ கவிதைகளில் தொன்மங்களாய் பயன்படுத்தியவர்
அ) கு. அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயமோகன்
ஈ) எஸ்.இராமகிருஷ்ண ன்
Answer:
ஆ) புதுமைப்பித்தன்
Question 4.
பண்புக்குறியீடுகளைக் கதை மாந்தர்களோடு பொருத்துக.
அ) அறம் – 1. கர்ண ன்
ஆ) வலிமை – 2. மனுநீதிச்சோழன்
இ) நீதி – 3. பீமன்
ஈ) வள்ள ல் – 4. தருமன்
அ) 3, 2, 1, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1
குறுவினா
Question 5.
தொன்மம் விளக்குக.
Answer:
- சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன.
- உவமைக் கதைகளாகவும், மெய்யியல் உருவங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
- அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாது.
- சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாக அவற்றினால் ஏற்படும் கட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.
Question 6.
பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக.
Answer:
(i) நம் அன்றாடப் பேச்சில் மரபுத்தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.
(ii) “கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான்’ – என்பது இராமாயணத்தில் பர்ணசாலையை விட்டு சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத்தொடர்.
(iii) ‘மனுநீதிச் சோழன்’ – தன் தேர்ச்சக்கரத்தில் இறந்த கன்றுக்காக தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற சோழன் நீதி தவறாத ஆட்சி.
Question 7.
உள்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா? – இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?
Answer:
- தொன்மங்கள் முரண்பட்டவை.
- ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
- இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகிய தொன்மங்கள் வெளிப்படுகின்றன.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொருத்திக் காட்டுக.
i) பழங்கதை
ii) புராணம்
iii) புதுக்கதை
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) i, ii – சரி
Answer:
ஈ) i, ii – சரி
Question 2.
கவிதையில் பழங்கதையைத் துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவது
அ) படிமம்
ஆ) தொன்மம்
இ) குறியீடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) தொன்மம்
Question 3.
புதுமைப்பித்தன், சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதத் தொன்மாகப் பயன்பட்ட நூல்
அ) இராமாயணம்
ஆ) மகாபாரதம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) இராமாயணம்
Question 4.
திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு ‘விட்டகுறை’, ‘வெந்தழலால் வேகாது’ என்னும் சிறுகதைகளைப் படைத்தவர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) அழகிரிசாமி
இ) எஸ். ராமகிருஷ்ண ன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) அழகிரிசாமி
Question 5.
தொன்மங்களைக் கொண்டு படைக்கப்பட்டவைகளையும், படைப்பாளிகளையும் பொருத்திக் காட்டுக.
i) புதுமைப்பித்தன் – அரவாணன்
ii) அழகிரிசாமி – பத்மவியூகம்
iii) ஜெயமோகன் – விட்ட குறை
iv) எஸ். இராமகிருஷ்ண ன் – அகலிகை
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1
Question 6.
தொன்மைக்குச் சான்றாக இளம்பூரணர் உரையில் இடம் பெறுவன
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
இ) பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
ஈ) இராம சரிதம், பெருந்தேவனார் பாரதம்
Answer:
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
Question 7.
தொன்மைக்குச் சான்றாகப் பேராசிரியர் உரையில் இடம் பெறுவன
அ) இராமசரிதம், பாண்டவ சரிதம்
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
இ) பாண்டவ சரிதம், தகடூர் யாத்திரை
ஈ) இராம சரிதம், பெருந்தேவனார் பாரதம்
Answer:
ஆ) பெருந்தேவனார் பாரதம், தகடுர் யாத்திரை
Question 8.
‘வெல்வேல் கவுரியர் தொன்முதுகோடி’ என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள தொன்மம் உணர்த்துவது
அ) காதல் வெற்றி
ஆ) காதல் தோல்வி
இ) தலைவன் மரணம்
ஈ) தலைவி வருத்தம்
Answer:
அ) காதல் வெற்றி
Question 9.
“முருகு உறழ் முன்பொரு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை”
என்ற நற்றிணை பாடல்களில் வெளிப்படும் தொன்மம் உணர்த்தும் செய்தி
அ) காதல் வெற்றி
ஆ) யானையின் போர் – முருகனின் வீரம்
இ) பெண்ணியம் போற்றுவது
ஈ) கொடையாற்றலின் சிறப்பு
Answer:
ஆ) யானையின் போர் – முருகனின் வீரம்
Question 10.
மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்
எப்பவும் எரிதழல் மடிசுமப்பது இனி
எங்கள் வேலையல்ல – என்னும் கவிதையில் அமைந்துள்ள தொன்மம்
i) இக்காலப் பெண்ணியத்திற்கான தொன்மமாகக் கண்ணகி
ii) பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மமாக மதுரை
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி
Question 11.
கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக் காட்டுக.
i) இந்திரன் – சோல்
ii) வருணன் – மார்ஸ்
iii) பலராமன் – டயானிசிஸ்
iv) கார்த்திகேயன் – ஊரனாஸ்
v) சூரியன் – சீயஸ்பிடர்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 3, 5, 1, 2
இ) 5, 1, 2, 3, 4
ஈ) 2, 1, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 12.
கிரேக்கத் தொன்மங்களுக்கும் இந்தியத் தொன்மங்களுக்கும் உள்ள ஒப்புமைகளைப் பொருத்திக் காட்டுக.
i) சந்திரன் – இராஸ்
ii) விஸ்வகர்மன் – மினர்வா
iii) கணேசன் – ஜீனோ
iv) துர்க்கை – ஜோனஸ்
v) சரஸ்வதி – வன்கண்
vi) காமன் – லூனஸ்
அ) 6, 5, 4, 3, 2, 1
ஆ) 5, 6, 4, 3, 2, 1
இ) 4, 3, 2, 1, 5, 6
ஈ) 3, 2, 4, 5, 6
Answer:
அ) 6, 5, 4, 3, 2, 1
குறுவினா
Question 1.
தொன்மத்தை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்?
Answer:
- தொன்மத்தை வெளிபடுத்தும் முதன்மையான கருவி கவிதை.
- உலகில் பெரும்பாலான தொன்மங்கள் கவிதை மூலமே வெளிப்படுகின்றன.
Question 2.
திரைப்படங்கள், நாடகங்கள், கதைகளில் தொன்மங்கள் கையாண்டுள்ளவற்றைச் சில சான்றுகள் தருக.
Answer:
- இராமாயணத்தின் அகலிகை’ கதையை வைத்துப் புதுமைப்பித்தனின் சாப விமோசனம்.
- திருவிளையாடற் புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு அழகிரிசாமி, ‘விட்டகுறை’ வெந்தழலால் வேகாது என்னும் சிறுகதை.
- ஜெயமோகனின் – பத்மவியூகம், எஸ். ராமகிருஷ்ணனின் – அரவாணன் போன்ற புதினங்களில் தொன்மங்கள்.
Question 3.
தொன்மம் பற்றி தொல்காப்பியனார் கூறுவன யாவை?
Answer:
- தொன்மை தானே சொல்லுங்காலை.
- உரையோடு புணர்ந்த பழமை மேற்றே (தொல் செய்யுளியல் – 228).
- உரையோடு சேர்ந்த பழமையே தொன்மம் என்கிறார் தொல்காப்பியர்.
Question 4.
தொன்மம் பற்றி இளம்பூரணரர் கூறுவன யாவை?
Answer:
தொன்மையாவது உரையோடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவசரிதமும் மேல்வருஞ் செய்யுள் என்கிறார் இளம்பூரணர்.
Question 5.
தொன்மம் பற்றி பேராசிரியர் கூறுவன யாது?
Answer:
தொன்மை என்பது உரை விராஅய்ப் பழமையனவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது. அவை:
“பெருந்தேவனார் பாரதம்
தகடூர் யாத்திரை” போன்றன என்று உரையாசிரியர் கூறுகிறார்.
சிறுவினா
Question 1.
சங்க இலக்கியங்கள் காட்டும் முருகனின் தொன்மத்திணை நற்றிணை வாயிலாக விளக்குக.
Answer:
- சங்க இலக்கியங்களில் முருகன் பற்றிய கதைப்பகுதிகள் உள்ளன.
- முருகனுக்கு வெறியாடும் சடங்கு முறைகளும் தொன்மங்களாக ஆளப்பட்டுள்ளன.
- முருகனை அழகுக்கும், ஆற்றலுக்கும், வீரத்துக்கும் உவமையாக்கி உள்ளனர்.
- யானைசினங்கொண்டு போர் செய்த சிறப்பினை முருகன் வீரத்தோடு இணைத்துக் கூறியுள்ளனர்.
“முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை” (நற்றிணை 225-1-2)
Question 2.
தொன்மங்கள் பற்றி அப்துல் ரகுமானின் கருத்து யாது?
Answer:
- தொன்மங்கள் முரண்பட்டவை.
- ஒன்று சேர்ந்திருக்கிற சூழலை விளக்கப் பயன்படுகின்றன.
“உன்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும்” – என்பதை நீ அறிவாய் அல்லவா! - இப்பாடலில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்களாக வெளிப்படுகின்றன.
Question 3.
பெண்ணியம் பற்றித் தொன்மம் கூறுவன யாவை?
Answer:
கண்ணகி கதை தொன்மை நோக்கிய வளர்ச்சியைப் பெற்றது. “பெண்ணியத்திற்கான தொன்மம் – கண்ணகியும், பெண்ணியப் போராட்டத்திற்கான தொன்மம் – மதுரையும்” பின்வரும் கவிதைகளில் பெண்கள் வாழ்க்கை முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
“மதுரை எரிக்கக் கண்ணகியாயும்
மீண்டும் எழுந்திடச் சீதையாயும்”.
Question 4.
தொன்மம் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answer:
- தொன்மம் எங்கும் எப்போதும் எல்லா இடத்திலும் வழக்கில் உள்ளது.
- காலத்தைக் கடந்து நிற்பது.
- இக்காலத்தோடு கடந்த காலத்தை இணைப்பது.
- சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை.
- விளக்க தொன்மம் பயன்படுகிறது.
- கருத்தினை ஆழமாக விளக்கும் உத்தியாகவே உள்ளது.
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
இவரின் தந்தை அரசுப் பணியாளர் என்பதால் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. எனவே தற்போதைய ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் நான்காம் வகுப்புவரை தெலுங்கு மொழியையே பயின்றார். இளம் வயதில் தந்தையை இழந்து தமையனாரால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதை அடைந்த நிலையில் ‘இனி இவன் எங்கே படிக்கப் போகிறான்?’
என்று முடிவெடுத்து ஒரு மையல் கடையில் அவரது தமையனாரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். ‘நான் பதினைந்து நாட்கள் வேலை கற்றுக்கொண்டேன்; காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தையல் இயந்திரத்தில் தைக்கக் கற்றுக்கொண்டேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா
கொடுப்பார்’ என்று பின்னாளில் பதிவு செய்த அவரால் அத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை .
தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தனது பதினைந்தாவது வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடியில் கல்வி பயின்ற அவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றதோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த் தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்பு ழுத்தர், பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர் என வளர்ந்தார். அவர்தான் இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் மிளிர்ந்த தமிழறிஞர் மா.இராமாணிக்கனார்.
ஆய்வு நெறி முறைகளிலும் அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளைக் கையாண்ட இவர், சங்ககாலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்; சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ -தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே.உமாமகேசுவரன், ந.மு. வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே.
சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட இவர் சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பெரிய புராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நூ ல்களை இயற்றிய பெருமைக்கழியவராகத் திகழ்ந்தார். 2006-2007ஆம் ஆண்டு இவருடைய நூ ல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய சொல்லாற்றலுக்கொரு சான்று:
“அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்றவிருக்கம் நிலையில் அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும்.” (மா.இராசமாணிக்கனார் எழுதிய புதிய தமிழகம் நூலில் இருந்து)
வினாக்கள்
1. இராசமாணிக்கனாரின் பன்முகத்தன்மை பற்றிக் கூறுக.
2. இவருடைய நூல்கள் எந்த ஆண்டு தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன?
3. பிரித்தறிக: பேருதவி
4. உறுப்பிலக்கணம் தருக : இழந்து
5. இலக்கணக் குறிப்பு வரைக: காய்தல்
Answer:
1. இலக்கியம், சமயம், வரலாறு, கல்வெட்டு போன்றவை.
2. 2006 – 2007 ஆம் ஆண்டு .
3. பேருதவி – பெருமை + உதவி.
5. காய்தல் – தொழிற்பெயர்
தமிழாக்கம் தருக.
A White woman, about 50 years old, was seated next to a black man. Obviously disturbed by this, she called the airhostess. “Madam, what is the matter?” the hostess asked. “You placed me next to a black man. Give me an alternative seat”. The hostess replied. “Almost all the places on this flight are taken. I will go to see if another place is available. The hostess went away and came back a few minutes later. “Madam, just as I thought, there are no other available seats in the economy class. We still have one place in the first class”.
Before the woman could say anything, the hostess continued. “It would be scandalous to make someone sit next to someone so disgusting”. She turned to the black guy and said, ” Sir, a seat awaits you in the first class”. At the moment, the other passengers who were shocked by what they had just witnessed stood up and applauded. Take a lesson from the sun who shines his light on everyone. Or the rain that falls on every single shore. No distinction of our race or the colour of our face. Nature’s gifts are there for all men rich or poor. (Courtesy: S.S.S. Bal Vikas)
தமிழாக்கம்:
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒரு கருப்பு நிற (நீக்ரோ) மனிதன் அருகே அமர்ந்திருந்தாள். இதனால் வெறுப்புற்ற அவள், விமான பணிப்பெண்ணை அழைத்து, தமக்கு வேறு இருக்கை வேண்டும் என முறையிட்டாள். ஏறக்குறைய எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. வேறு ஏதேனும் உள்ளனவா என பார்க்கிறேன் என்று பணிப்பெண் பதிலளித்தாள். சற்று தூரம் சென்ற பணிப்பெண் ஒருசில வினாடிகளில் திரும்பி வந்து இரண்டாம் வகுப்பில் இருக்கைகள் இல்லை. ஆனால் முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது என்றாள். அந்தப் பெண் வாய் திறக்குமுன், விமான பணிப்பெண் தொடர்ந்தாள்.
“பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது வெறுப்பாக உள்ளது என்பதை நானும் வெறுக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்தக் கருப்பின இளைஞனை நோக்கி, “ஐயா, உங்களுக்கு முதல் வகுப்பில் ஒரு இருக்கை காத்திருக்கிறது” என்று அவனை அழைத்தாள். இதனைக் கண்ட மற்ற பயணிகள் எழுந்து நின்று அவளின் செயலைக் கண்டு கைதட்டி பாராட்டினார்கள். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், சூரியன், பேதமின்றி அனைவழக்கும் ஒளி வீசுகிறது. மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது. இயற்கையே இவ்வாறு பேதமின்றி தனது கொடைகளைவழங்கும் போது, இனத்தையும், நிறத்தையும் மற்றும் முகத்தையும் பார்த்து சக மனிதனை நாம் வெறுக்கலாமா?
கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து நாளிதழ்ச் செய்தியாக மாற்றுக.
புத்தகக் கண்காட்சி
– நமது சிறப்பு நிருபர் –
42வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 2019 ஜனவரி 4 முதல் நடைபெற உள்ளது. அனைத்து வயதினரும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. 800 அரங்குகள், 20,00,000. வாசகர்கள். 30,00,000, பார்வையாளர்கள் பங்குபெறும் அறிவித்திழவிழா. நுழைவுக் கட்டணம் ரூபாய் 10/- மட்டுமே. நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு 10% கழிவு உண்டு. வாருங்கள் புத்தகங்களை வாசிப்போம்! வாழ்க்கையை நேசிப்போம்…!!
விழா ஏற்பாடு: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் | மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்.
மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
ஆற அமர : ஒரு பிரச்சினையில் தெளிவான நல்ல முடிவெடுக்க வேண்டுமென்றால் முதலில் உணர்ச்சிவசப்படாமல் ஆர அமர’ யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
ஆணி அடித்தாற் போல : எங்கள் தமிழாசிரியை நடத்திய குறியீட்டு இலக்கணம் என் மனதில் ‘ஆணி அடித்தாற் போல் பதிந்தது.
அகலக்கால் : பின்வரும் விளைவுகளை யோசிக்காமல் அகலக்கால்’ வைத்தால் துன்பம் நேரிடும்.
வழிவழியாக : சோழமன்னர்களின் ஆட்சி வழிவழியாக அவருடைய வாரிசுகளே ஆண்டு வந்துள்ளனர்.
கண் துடைப்பு : எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும்போதெல்லாம் தம்பியை அரவணைத்தும், என்னை அடித்தும் ஒரு கண்துடைப்பு நடத்துவார்.
உங்கள் கனவு ஆசிரியர் குறித்துக் கட்டுரை எழுதுக.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”
இறைவனுக்கு வணங்காத தலையும், ஆசிரியரை வணங்காத கையும் இருந்ததென்ன பயன். அதுபோல உலக மக்கள் உய்ய வள்ளுவன் போல ஆசிரியராக விளங்கிட வேண்டும்.
“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”,
என்று பாப்பா பாட்டின் மூலம் படிப்பினைப் பதிப்பித்த பாரதி போல் ஆசானாக வேண்டும்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி
இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே’,
என்று சமூக அவலத்தைத் தோலுரித்துக் காட்டிய புரட்சிக் கவி போல ஆசானாக மிளிர வேண்டும்.
“பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் வேண்டும் கற்பு”
என்று அறிவுறுத்திய பெரியரைப் போல சமூக நீதி கற்பிக்கும் ஆசானாக வேண்டும்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும்”
என்று முழங்கிய பேரறிஞர் போல் ஆசானாக வேண்டும்.
“மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வம் வேறு இடத்தினில் சேர்வதினால் வரும் தொல்லையடி”
என்று பாமர மக்களுக்குப் பாடம் புகட்டிய பட்டுக்கோட்டையார் போல் ஆசானாக வேண்டும்.
“உங்கள் வாழ்க்கையின் கடைசித் தருணம் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டதற்கு நான் மாணவர் மத்தியில் பாடம் நடத்திக் கொண்டிக்கும் போது அத்தருணம் வாய்க்க வேண்டும்” என்றாராம் கலாம்.
அவர்க்கு மட்டுமே அத்தருணம் வாய்த்தது. அத்தகைய ஆசான் போல் ஆக வேண்டும். மானுடன் வாழ நல்ல போதனைகளைத் தந்திட்ட இச்சான்றோர்களே என் கன(வு)வின் ஆசிரிய பிரம்மாக்கள் ஆவர்.
இலக்கிய நயம் பாராட்டுக.
பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே – கோடிப்
புதிய தென்றலாக்குவேன்
இரவில் விண்மீன் காசினை – செலுத்தி
இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை – ஏழை விறகெரிக்க வீசுவேன் – நா. காமராசன்
ஆசிரியர் குறிப்பு :
பெயர் : நா. காமராசன்.
பிறப்பு : 1942 – தேனி மாவட்டம், போ. மீனாட்சிபுரம்.
இறப்பு : மே 24. 2017, சென்னை .
பணி : கவிஞர், பாடலாசிரியர்.
சிறப்பு : புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவர், பேராசிரியர், மொழிபெயர்ப்புத் துறை.
திரண்டக் கருத்து :
பாலைவனம் போல் காட்சியளிக்கும் பூமியை முத்து பூத்த கடல் போல் ஆக்குவேன். புயலைக் கூறுபடுத்தி தென்றல் ஆக்குவேன். இரவில் விண்மீனைப் பயன்படுத்தி இல்லாதவரோடு பேசுவேன். சுட்டெரிக்கும் சூரியனை வீட்டுக்கு விறகெரிக்கப் பயன்படுத்துவேன்.
மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை
சான்று:
பூமிச்சருகாம்
புயலை
புதிய
இரவில்
இரவலரோடு
இரவெரிக்கும்
எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
சான்று:
இரவில்
இரவலரோடு
இரவெரிக்கும்
இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
சான்று:
கடல்களாக்குவேன்
தென்றலாக்குவேன்
பேசுவேன்
வீசுவேன்
கற்பனை நயம் :
கற்பனை விற்பனை அல்ல. கவிஞர் தம் கற்பனையை விற்பனை செய்யாமல் தம் : கவிதையிலேயே பயன்படுத்தியுள்ளார்.
புயலைக் கூறுபடுத்தியே – கோடி
புதிய தென்றலாக்கு வேன்.
அணி நயம் :
குளத்துக்குத் தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு
அணி என்பதன் பொருள் அழகு ஆகும். இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது.
தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
Question 1.
வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
Answer:
வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.
Question 2.
முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
Answer:
முருகன் சோறு உண்டு பால் பருகினான்.
Question 3.
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.
Answer:
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை வேய்ந்தான்.
Question 4.
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக்குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
Answer:
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும், யானைக் குட்டியும் கண்டேன்.
Question 5.
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
Answer:
ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.
Question 6.
பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
Answer:
பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.
பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தற்குறிகளை இட்டு எழுதுக.
இளங்கோ அடிகள் சாத்தனாரிடம் முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.
“இளங்கோ அடிகள் சாத்தனாரிடம்” முன்செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே! அவர்களுடைய முந்தைய வினை யாது? அதன் விளைவு என்ன? நிகழ்ந்த காலம் யாது? அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்.
கீழ்க்காணும் விண்ணப்பத்தை நிரப்புக.
குறிப்பு:
விண்ணப்பப் படிவத்துடன் கீழ்க்காணும் சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட படிகள் இணைக்கப்பெற வேண்டும்.
1. மதிப்பெண் பட்டியல் (10ஆம் வகுப்பு/10+2/10+3/11+1+3/இளநிலை வரிசையில்),
2. மாற்றுச் சான்றிதழ்
3. தற்காலிகச் சான்றிதழ் (Provisional certificate)அல்ல து பட்டச் சான்றிதழ் (Degree certificate)
மொழியோடு விளையாடு
படித்துப் பார்த்துப் படைக்க
மென்பறவைக் கூடு மின்றி
தின்பதற்குத் தீனியின்றி
தன் சிறிய குஞ்சுகளை
பொன் சிறகில் மூடி நின்று
நிற்கதியாம் நிலைதனிலே
நிற்க ஒரு நிழல் தேடி
பற்பலவாய் எண்ணமிட்டு
பக்கம் ஒரு மரம் கண்டு
தருவின் நிழல் கண்டு
தானியத்தின் மணி கண்டு
அருகில் தன் குஞ்சுகளை
அணைத்தங்கு சென்றதுவே
நெருங்கி வந்து பார்க்கையிலே
நிழலில்லை மணியில்லை
நெருஞ்சி முள்ளை நெல்மணியாய்
நினைத்து விட்ட பரிதாபம்
பச்சையற்ற மரத்தருகே
படர்வதுண்டோ நிழலதுவும்
பசையற்ற நெஞ்சினுள்ளே
பாசமெனும் நிழலுண்டோ ? – பூரணி
படித்துப் பார்த்துப் படைத்தது
உடலைக் கூடாக்கி
உள்ளத்தைக் கல்லாக்கி
உண்பதற்கு உணவின்றி
தன் சந்ததியை
தானே இறகில் சுமந்து
அமர இடமில்லாமல் அலைகிறது.
தான் நொந்து
தன் பிள்ளையைக் கண்டு
மனம் நொந்து
மரம்தரும் கனியைத்
தேடி அலைகிறது.
மரங்கண்டு மனமகிழ்ந்து
சென்றால் மரம்
கானல் நீர்போல்
காட்சியளிக்கிறது.
நெருஞ்சி முட்கள்
பச்சையற்ற மரத்தினருகே
இச்சையற்று இனிமேல்
உயிர்வாழ்வேன் என மாய்ந்தது.
எண்ணங்களை எழுத்தாக்குக.
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள்
வீட்டினில் அடைத்து வைக்கும் கிளிகளல்ல நாங்கள்
பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல நாங்கள்
விண்ணில் பயணம் செய்திடுவோம்
விந்தைகள் பல புரிந்திடுவோம்
ஆடல் மட்டும் ஆடும் பெண்களல்ல
விளையாட்டுக்களில் விவேகம் காட்டும் வீராங்கனைகள்
கணிதம் அறியா மக்குகளல்ல நாங்கள்
கணினியிலும் விற்பன்னர்கள் நாங்கள்
நிதியிலும் நீதியிலும் மேலாண்மை பெறுவோம் – நாங்கள்
வீராங்கனைகளாகப் பாதுகாப்புக்கும் வலம் வரும்
காவல் தெய்வங்கள் நாங்கள்
விமானிகளாகி விண்ணகத்தில் உலா வருவோம்
ஆட்சியராகி அகிலத்தில் நல்லாட்சி தருவோம்
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அல்ல
தீமைகள் அழிவதும் பெண்ணாலே என திருத்துவோம்
மாதராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்
என்று பாடிய கவிமணியை வணங்கி முடிக்கிறோம்.
செய்து கற்போம்
உங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வகுப்பறையில் பகிர்ந்துக் கொள்க.
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா
இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா
நிற்க அதற்குத் தக
பொதுச்சொத்துக்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவம் நீவிர் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுக.
(நம்முடைய வீட்டின் மீது நமக்கு இருக்கும் பொறுப்பினைப் போலவே பொதுச்சொத்துக்களின் மீதும் நமக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு. எவையெல்லாம் பொதுச்சொத்துகள் எனப் பட்டியலிட்டு அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூறுக.
படிப்போம் பயன்படுத்துவோம் (வங்கி)
1. Debit Card – பற்று அட்டை
2. Demand Draft – கேட்பு வரைவோலை
3. Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
4. Teller – விரைவுக் காசாளர்
5. Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
6. Internet Banking – இணையவங்கி முறை
How to Prepare using Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 12th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.1 இளந்தமிழே! Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.1 இளந்தமிழே! Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.1 பெருமழைக்காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.1 பெருமழைக்காலம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.2 பிறகொரு நாள் கோடை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.2 பிறகொரு நாள் கோடை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.3 நெடுநல்வாடை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.3 நெடுநல்வாடை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.4 முதல்கல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.4 முதல்கல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.2 விருந்தினர் இல்லம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.2 விருந்தினர் இல்லம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.3 கம்பராமாயணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.3 கம்பராமாயணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.4 உரிமைத்தாகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.4 உரிமைத்தாகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.5 பொருள் மயக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.5 பொருள் மயக்கம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.2 இதில் வெற்றி பெற Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.2 இதில் வெற்றி பெற Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.3 இடையீடு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.3 இடையீடு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.1 மதராசப்பட்டினம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.1 மதராசப்பட்டினம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.2 தெய்வமணிமாலை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.2 தெய்வமணிமாலை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.3 தேவாரம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.3 தேவாரம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.4 அகநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.4 அகநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.5 தலைக்குளம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.5 தலைக்குளம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.6 படிமம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.1 திரைமொழி Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.1 திரைமொழி Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.2 கவிதைகள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.2 கவிதைகள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.3 சிலப்பதிகாரம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.3 சிலப்பதிகாரம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.4 மெய்ப்பாட்டியல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.4 மெய்ப்பாட்டியல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.5 நடிகர் திலகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.5 நடிகர் திலகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.2 அதிசயமலர் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.2 அதிசயமலர் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.2 முகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.2 முகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.5 கோடை மழை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.5 கோடை மழை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes
0 comments:
Post a Comment