![]() |
Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes |
Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 9th Tamil |
Subject |
9th Tamil |
Chapter |
Chapter 7.6 ஆகுபெயர் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 9th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் notes PDF.
Download Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF from the links provided in this article.
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.6 ஆகுபெயர்
கற்பவை கற்றபின்
Question 1.
ஆகுபெயரைக் கண்டறிக.
அ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள்.
தமிழரசி வள்ளுவரைப் படித்தாள்.
ஆ) மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது.
நாடும் வீடும் நமதிரு கண்கள்.
இ) கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள்.
கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்.
ஈ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும்.
உ) ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது.
நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா.
Answer:
அ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள். – தொழிலாகு பெயர்
தமிழரசி வள்ளுவரைப் படித்தாள். – கருத்தாவாகு பெயர்
ஆ) மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது. – இடவாகு பெயர்
நாடும் வீடும் நமதிரு கண்கள். – சினையாகு பெயர்
இ) கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள். – தொழிலாகு பெயர் கலைச்செல்வி பச்சை உடுத்தினாள். – பொருளாகு பெயர் (முதலாகு பெயர்)
ஈ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. – எண்ணலளவையாகு பெயர்
நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும். – காரியவாகுபெயர்
உ) ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது. – தொழிலாகு பெயர்
நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா. – இடவாகு பெயர்
Question 2.
ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ) மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.
Answer:
மதுரையில் இரவு வணிகம் உண்டு.
ஆ) இந்திய வீரர்கள் எளிதில் வென்றனர்.
Answer:
இந்தியா எளிதாக வென்றது.
இ) நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.
Answer:
நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது.
ஈ) நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது.
Answer:
நீரின்றி உலகு இயங்காது.
சிந்தனை வினா
Question 1.
தற்காலப் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் ஆகுபெயரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
தற்காலத்தில் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் ஆகுபெயர் பயன்படுத்துகிறோம்.
சான்றுகள்:
- சிவசங்கரியைப் படித்தேன் – என்னும் பொழுது சிவசங்கரி எழுதிய கதையைப் படித்தேன் என்று பொருள்பட, சிவசங்கரி – என்பது அவர் எழுதிய நூலுக்கு ஆகி வந்தது.
- ஐந்து மீட்டர் கொடு – துணிக்கடைக்குச் செல்லும் பொழுது, “ஐந்து மீட்டர் என்பது – நாம் தேர்ந்தெடுத்த துணிக்கு ஆகி – நீட்டலளவை ஆகுபெயராய் பயன்படுத்துகிறோம். .
- மஞ்சள் பூசினேன் – என்று கூறும் பொழுது “மஞ்சள் வண்ணத்தில் உள்ள கிழங்கை அரைத்துப் பூசினேன்” என்று விளக்காமல், “மஞ்சள் பூசினேன்” என்கிறோம். இஃது மஞ்சள் வண்ண கிழங்கைக் குறிக்கும் பண்பாகு பெயராகும்.
Question 2.
பட்டப்பெயர்கள் ஆகுபெயர்கள் ஆகுமா? எடுத்துக்காட்டுகளுடன் விளக்கு.
Answer:
பட்டப்பெயர்கள் ஆகு பெயராகும்.
சான்று:
வாயாடி வந்தாள் – இதில் குறிப்பிட்ட பெண்ணின் பெயரைச் சொல்லிக் கூறாமல், அவள் ஓயாது பேசும் இயல்பை பெயராக்கி “வாயாடி” என்று பட்டப்பெயருடன் கூறுகிறோம். “பேசுதல்” (வாயாடுதல்) என்னும் காரியத்திற்கு ஆகி வருகிறதல்லவா.
கலாரசிகன் வந்துவிட்டான் – இத்தொடரில் “கலா ரசிகன்” என்னும் பட்டப்பெயர் அவன் கலைகளை விரும்பிப் பார்க்கும் கேட்கும் செயல்களுக்கு ஆகி வருவதால், பட்டப்பெயர்களும் ஆகு பெயர் ஆகும்.
மொழியை ஆள்வோம்,
படித்துச் சுவைக்க.
மொழிபெயர்க்க.
Conversation between two friends meeting by chance at a mall.
Aruna : Hi! Vanmathi! It’sgreat to see you after a long time.
Vanmathi : It’s great seeing you. How long has it been? It must be more than 6 months. I’m doing good. How about you?
Aruna : Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?
Vanmathi : I came with my father. He has gone to buy tickets for a 3D movie.
Aruna : Which movie?
Vanmathi : Welcome to the jungle.
Aruna : Great! I am going to ask my parents to take me to that movie.
இரண்டு தோழிகள் வணிகவளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்.
Answer:
அருணா : வான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப்பின் உன்னைப் பார்க்கிறேன், மகிழ்ச்சி .
வான்மதி : எனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்! உன்னைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்.
அருணா : நான் என் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ..?
வான்மதி : நான் என் தந்தையுடன் வந்தேன் இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண (3D) திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்க சென்றிருக்கிறார்.
அருணா : என்ன படம்?
வான்மதி : காட்டுக்குள் வரவேற்பு
அருணா : ஓ… நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்க போகின்றேன்.
பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.
Quesiton 1.
புத்தகம் படிக்கலாம் (நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)
Answer:
அ) நல்ல புத்தகங்கள் படிக்கலாம்.
ஆ) நல்ல புத்தகத்தில் ஆழ்ந்த கருத்துகளைப் படிக்கலாம்.
இ) நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்.
ஈ) நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து படிக்கலாம்.
உ) நல்ல புத்தகங்களை நாளும் மகிழ்ந்து, உணர்ந்து படிக்கலாம்.
Question 2.
விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)
Answer:
அ) மாலையில் அனைவருடன் சேர்ந்து விளையாடுவது நன்று.
ஆ) மாலையில் திடலில் ஓடியாடி விளையாடுவது நன்று.
பிழை நீக்குக.
பெருந்தலைவர் காமராசர் பள்ளிப்படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
Answer:
கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக.
விமலா கூடத்தில் உள்ள தட்டிலிருந்த டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள். மல்லிகையைப் படத்திற்குச் சூட்டினாள். அடுப்பிலிருந்து பாலை இறக்கினாள். பின்பு தோட்டத்திற்குச் சென்றாள். விமலாவைப் பார்த்தவுடன் தோட்டம் அமைதியானது! “தலைக்கு இருநூறு கொடுங்கம்மா” என்று தோட்டத்தில் வேலை செய்தவருள் ஒருவர் சொன்னார். வெள்ளை மனங்கொண்ட வேலையாட்களின் கூலியைக் குறைக்க விரும்பாமல் அதனை அவளும் ஏற்றுக்கொண்டாள். அவர்கள் சென்றதும், காலையில் சாப்பிடப் பொங்கல் வைத்தாள். வீட்டில் சமையல் செய்ய, எந்தெந்தப் பொருள்கள் குறைவாக உள்ளன என்பதைப்பற்றிச் சிந்தித்தாள்.
“சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் வாங்க வேண்டும்” எனத் திட்டமிட்டாள். அலைபேசி அழைத்தது. அரை நிமிடம் அலைபேசியில் வந்த வயலின் கேட்டு மகிழ்ந்தாள். பிறகு எடுத்துப் பேசினாள். கடைக்குப் போய்விட்டு வந்த பிறகு. பாதியில் விட்டிருந்த சிவசங்கரியைப் படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்தாள்.
Answer:
பயண அனுபவங்களை விவரிக்க.
‘எனது பயணம்’ என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.
Answer:
இந்த ஆண்டு நான் பயணம் மேற்கொண்ட இடம் வயநாடு ஆகும். கேரளாவின் வற்றாத அழகு கொட்டிக்கிடக்கும் பகுதி இது. எங்கு திரும்பினும் பச்சைப் பசேல் தான். கடல் மட்டத்தில் இருந்து 700 முதல் 2100 மீட்டர் உயரத்தில் அமைந்த பகுதி இது. இயற்கை அன்னை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க பகுதி.
வயநாடு மாவட்டத்தில் கல்பெற்றா, மானந்தவாடி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவை.
இவ்விடங்களில் விலங்குகளின் சரணாலயங்கள் உண்டு. துள்ளித் திரியும் மான் கூட்டம், கூட்டம் கூட்டமாய் செல்லும் யானைகள், எங்கோ கேட்கும் பறவைகள் கரையும் ஓசை என மனதுக்கு இன்பம் தரும் இடம் ஆகும்.
கல்பெற்றாவில் இருந்து சிறிது தூரம் சென்றால் செம்ப்ரா மலை முகடு உள்ளது. இது வயநாட்டின் உயரமான மலை உச்சியாகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடமாகும். கல்பெற்றாவில் இருந்து 15 கல் தொலைவில் கரலாட் ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி செய்து கொண்டு ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து நாங்கள் குழந்தைகளாகி மகிழ்ந்தோம். வயநாட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும் அருவிகள் பல உண்டு. அவற்றுள் சிப்பாரா அருவி மிகப் புகழ் பெற்றது.
100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராகக் கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள் கண்களையும், கருத்தையும் கொள்ளை கொள்கின்றன. அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழ்ந்து புத்துணர்வு பெற்றோம். இங்கு அபூர்வ மூலிகைகள், தங்குவதற்கு மரவீடுகள், இரவில் மிரளச் செய்யும் விலங்குகள் கூட்டம் என நம்மை இன்னொரு உலகுக்கு அழைத்துச் செல்லும். நீங்களும் ஒரு முறை சென்று வரலாமே.
“இயற்கை ஆட்சி செய்யும் இவ்விடம் அனைவருக்கும் பிடிக்கும்”.
நயம் பாராட்டுக.
வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
வளைந்துசெல் கால்களால் ஆறே!
அயலுள ஓடைத் தாமரை கொட்டி
ஆம்பலின் இதழ்களை விரித்தாய்
கயலிடைச் செங்கண்கருவரால் வாளை
கரைவளர் தென்னையில் பாயப்
பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்
பெருங்குளம் நிறைந்து விட்டாயே! – வாணிதாசன்
Answer:
முன்னுரை:
தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளன. அவை கற்போரின் மனத்தைப் பெரிதும் கவர வல்லன. அந்த வகையில் வாணிதாசன் பாடல் ஒன்றிற்கு அமைந்துள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.
திரண்ட கருத்து:
வளைந்து செல்லும் கால்வாய்கள் மூலம் ஆறே வயல்வெளியில் புகுந்தாய் மணிபோன்ற கதிர்களை விளையச் செய்தாய். அருகில் உள்ள ஓடைகள் குளங்களை நிறைத்தாய். தாமரை கொட்டி, ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச்செய்தாய். சிவந்த கண்களையுடைய கருமையுடைய வரால், வாளை மீன்கள் கரையில் ஓங்கி வளர்ந்த தென்னையில் பாய்ந்து விளையாடுகின்ற நீர் நிறைந்த பெருங்குளங்கள் நிலமெங்கும் நிறையச் செய்து, நிலத்தில் ஒரு வானம் இருப்பதுபோல தோன்றச் செய்கிறாய்.
மையக்கருத்து:
ஆறு, கால்வாய்கள் நீர்நிலைகளை நிரப்பி, நிலத்தைச் செழிக்க செய்வதோடு நிலத்தில் நிறைந்திருக்கும் நீரிலே வானம் தெரிவதால் பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்று இயற்கை வளங்களை மையமாக வைத்துப் பாடியுள்ளார் வாணிதாசன்.
எதுகை:
செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
சான்று:
வயலிடை
அயலுள்
கயலிடை
பெயரிடை
மோனை:
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
சான்று:
வயலிடை – வளைந்து
அயலுள் – ஆம்பல்
பெயரிடை – பெருங்குளம்
இயைபு
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும்.
சான்று:
விளைத்தாய் – விரித்தாய்
அணிநயம்:
செய்யுளின் அழகுக்குச் சேர்ப்பது அணியே ஆகும். அணி இல்லாத பாடல் அழகில்லா மங்கை போலும். பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்னும் அடியில் உவமை அணி அமைந்து இச்செய்யுளின் அழகுக்கு அழகு சேர்த்துள்ளது.
சுவை நயம்:
இப்பாடலைப் படிக்கப் படிக்க, மனத்தில் மகிழ்வு உண்டாவதால் “உவகைச் சுவை” அமைந்துள்ளது.
முடிவுரை:
வாணிதாசன் இயற்கைப் புனைவுகளைப் பாடுவதில் வல்லவர். அவரது கவித்திறனுக்கு இப்பாடல் சான்றாக அமைவதோடு, அனைத்து நயங்களையும் பெற்று ஒளிர்கிறது.
மொழியோடு விளையாடு
Question 1.
புதிர் அவிழ்க்க .
Answer:
அம்புலி
Question 2.
பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க.
(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை]
மானாமதுரை ஒரு அழகான …………………………… நீண்டவயல்களும் …………………………..களும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் …………………………..பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் ………………………….. வீசிட சோலைப் …………………………..களின் ………………………….. கேட்போரைப்…………………………..அடையச் செய்கிறது.
Answer:
(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை]
மானாமதுரை ஒரு அழகான பேரூர். நீண்டவயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் பேரொளி வீசிட சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது.
வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.
Answer:
Question 3.
காட்சியைக் கண்டு கவினுறு எழுதுக.
Answer:
மலை யெனவும் (குறிஞ்சி)
முல்லைவனம் எனவும்
மருத நிலமாம் வயல் எனவும்
நெய்தலாம் கடலும்
பாலையாம் வெயிலும் என உன்
நிலத்தைப் பிரித்தாய்
முல்லைச்சரங்கள் தொடுக்கும்
கரங்கள் ஆடல் கலைகளையும் நடத்தும்
முல்லையும் கொட்டியும் ஆம்பலும்
இசை முழங்கி பாடும்
நீர் நிறை கரைகளில்
வளர் மரங்களில்
பைங்கிளியும் மணிப்புறாவும் மனம்
மயக்கும் தம் இசையால்
சிறுபானை தொடங்கி உயர்
கோபுரம் வரை மின்னும் கலைவண்ணம்
இப்பாடல் உணர்த்தும் தமிழ்
கலாச்சாரத்தை மக்கள்
மறவாமல் இருந்தால் போதும்
செயல்திட்டம்
ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களின் வரவு செலவு பட்டியலை உருவாக்குக.
Answer:
ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப்பொருட்கள் இவ்வார வரவு = ₹2000/-
அகராதியில் காண்க.
ஈகை, குறும்பு, கோன், புகல், மொய்ம்பு
Answer:
சொல் – பொருள்
ஈகை – கொடை, பொன், கற்பகமரம், காடை, காற்று, மேகம், கொடுத்தல்.
குறும்பு – குறுநில மன்னர், பாலை நில ஊர், பகைவர், குறும்புத்தனம்.
கோன் – அரசன், தலைவன் இடையர்பட்டப் பெயர்.
புகல் – புகுகை, தஞ்சம், செல், விருப்பம், வெற்றி, புகழ், போக்கு.
மொய்ம்பு – தோள், வலிமை.
நிற்க அதற்குத்தக….
அ) குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
ஆ) தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் தடுப்பேன்.
இ) என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வேன்.
…………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………
சமூகத்திற்கு எனது பணிகள்
Answer:
அ) குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
ஆ) தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் தடுப்பேன்.
இ) என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வேன்.
ஈ) மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்துவேன்.
உ) பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவேன்.
ஊ) இயற்கையைப் பேணிப் பாதுகாக்க மரங்களை நடுவேன்.
எ) சாலை விதிகளைப் பின்பற்றுவேன். பிறரையும் பின்பற்ற செய்வேன்.
ஏ) நம் கலைகளையும் பண்பாட்டையும் பேணிக்காக்க என்னால் இயன்றதைச் செய்வேன்.
கலைச்சொல் அறிவோம்
இந்திய தேசிய இராணுவம் – Indian National Army
பண்டமாற்றுமுறை – Commodity Exchange
காய்கறி வடிசாறு – Vegetable Soup
செவ்வியல் இலக்கியம் – Classical Literature
கரும்புச் சாறு – Sugarcane Juice
பாடநூல் வினாக்கள்
சிறுவினா
Question 1.
தற்குறிப்பேற்ற அணியைச் சான்றுடன் விளக்குக.
Answer:
அணி விளக்கம்:
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி)
எ.கா:
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப் பட்ட(து) எனவெரீஇப்புன்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
அணிப் பொருத்தம்:
சேறுபட்ட, நீர்வளம் மிகுந்த வயல் பகுதிகளில், பொய்கைகளில் செவ்வாம்பல் மலர் விரிவது இயல்பான நிகழ்வு. இதைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டதாக எண்ணியதாக கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.
Question 2.
பண்பாகு பெயர், தொழிலாகுபெயர் – விளக்குக.
Answer:
பண்பாகு பெயர்:
‘மஞ்சள் பூசினாள்’
‘மஞ்சள்’ என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்துள்ளது.
தொழிலாகு பெயர்:
‘வற்றல் தின்றான்’
‘வற்றல்’ என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகிவந்துள்ளது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
கார் அறுத்தான் – எவ்வகை ஆகுபெயர்?
அ) பொருளாகு பெயர்
இ) காலவாகு பெயர்
ஆ) சினையாகு பெயர்
ஈ) கருவியாகு பெயர்
Answer:
இ) காலவாகு பெயர்
Question 2.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) வகுப்பறை சிரித்தது – 1. எண்ணலளவை ஆகுபெயர்
ஆ) மஞ்சள் பூசினாள் – 2. காரியவாகுபெயர்
இ) பைங்கூழ் வளர்ந்தது – 3. பண்பாகுபெயர்
ஈ) ஒன்று பெற்றால் ஒளிமயம் – 4. இடவாகுபெயர்
i) 4 3 2 1
ii) 3 2 1 4
iii) 4 2 1 3
iv) 3 1 2 4
Answer:
i) 4 3 2 1
சிறுவினா
Question 1.
ஆகுபெயர் என்றால் என்ன? அதன் வகைகள் எத்தனை?
Answer:
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும். தொல்காப்பியர் ஆகுபெயர்கள் ஏழு வகைப்படும் எனவும், நன்னூலார் பதினைந்து எனவும் வகுத்துள்ளனர்.
How to Prepare using Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 9th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.2 தமிழோவியம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.2 தமிழோவியம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.3 தமிழ்விடு தூது Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.3 தமிழ்விடு தூது Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.4 வளரும் செல்வம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.4 வளரும் செல்வம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.5 தொடர் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.5 தொடர் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.2 பட்டமரம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.2 பட்டமரம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.3 பெரியபுராணம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.3 பெரியபுராணம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.5 தண்ணீர் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.5 தண்ணீர் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.6 துணைவினைகள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.6 துணைவினைகள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.1 ஏறு தழுவுதல் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.1 ஏறு தழுவுதல் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.2 மணிமேகலை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.2 மணிமேகலை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.3 அகழாய்வுகள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.3 அகழாய்வுகள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.4 வல்லினம் மிகும் இடங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.4 வல்லினம் மிகும் இடங்கள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.5 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.5 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.3 உயிர்வகை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.3 உயிர்வகை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.4 விண்ணையும் சாடுவோம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.4 விண்ணையும் சாடுவோம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.2 குடும்ப விளக்கு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.2 குடும்ப விளக்கு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.3 சிறுபஞ்சமூலம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.3 சிறுபஞ்சமூலம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.1 சிற்பக்கலை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.1 சிற்பக்கலை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.2 இராவண காவியம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.2 இராவண காவியம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.3 நாச்சியார் திருமொழி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.3 நாச்சியார் திருமொழி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.4 செய்தி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.4 செய்தி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.5 புணர்ச்சி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.5 புணர்ச்சி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.2 சீவக சிந்தாமணி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.2 சீவக சிந்தாமணி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.3 முத்தொள்ளாயிரம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.3 முத்தொள்ளாயிரம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.4 மதுரைக்காஞ்சி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.4 மதுரைக்காஞ்சி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.5 சந்தை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.5 சந்தை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.2 ஒளியின் அழைப்பு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.2 ஒளியின் அழைப்பு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.3 தாவோ தொ ஜிங் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.3 தாவோ தொ ஜிங் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.4 யசோதர காவியம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.4 யசோதர காவியம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.6 யாப்பிலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.6 யாப்பிலக்கணம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.1 விரிவாகும் ஆளுமை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.1 விரிவாகும் ஆளுமை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.2 அக்கறை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.2 அக்கறை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.3 குறுந்தொகை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.3 குறுந்தொகை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.5 அணியிலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.5 அணியிலக்கணம் Notes
0 comments:
Post a Comment