![]() |
Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes |
Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 9th Tamil |
Subject |
9th Tamil |
Chapter |
Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 9th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் notes PDF.
Download Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF from the links provided in this article.
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல்
கற்பவை கற்றபின்
Question 1.
பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
அ) பெண்ணடிமை போகவேண்டும்; பெண், கல்வி பெற வேண்டும். பெண்கள் படித்தால் தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.
ஆ) நமது முன்சந்ததியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம்.
மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
Answer:
இடைச்சொற்கள் :
Question 2.
உம், ஓ, ஏ, தான் மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச் சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர்களை உருவாக்குக.
Answer:
1. உம் : வீரர்களும் போற்றும் வீரன்.
2. ஓ : பூங்கொடியோ மலர்க்கொடியோ இப்படத்தை வரையுங்கள்.
3. ஏ : தேவி நடந்தே வீட்டுக்கு வந்தாள்.
தான் : இனியா நான்தான் ஆடுவேன் என்றாள்
5. மட்டும் : உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்.
ஆவது : இன்றாவது மழை வருமா?
7. கூட : தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை .
8. ஆ : புகழேந்தி பாடினானா?
9. ஆம் : தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்.
10. ஆகிய : “ஆகிய” என்னும் இடைச்சொல் தற்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
Question 3.
பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.
அ) மணற்கேணி………… போல் விளங்கும். நூல்………… உறுதுணை………… இருக்கிறது.
ஆ) பெண்க………… படிக்க வைக்காத காலத்தில்………… பெண் இனத்………… பெருமை சேர்க்கும் படி………… நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர………… வந்தார்கள்.
இ) மக்க………… மனங்க………… உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
Asnwer:
அ) மணற்கேணியைப் போல் விளங்கும். நூல்கள் உறுதுணையாக இருக்கிறது.
ஆ) பெண்களைப் படிக்க வைக்காத காலத்தில்தான் பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள்.
இ) மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
Question 4.
இணைத்து எழுதிப் பாருங்கள் :
Asnwer:
Question 5.
பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.
அ) ………………….. பெரும் பொதுக்கூட்டம் [கடி / மா]
ஆ) ………………….. விடுதும் [உறு/ கடி)
இ) ………………….. நுதல் [வாள் / தவ]
ஈ) ………………….. சிறந்தது [சால் / மழ]
உ) ………………….. மனை [கடி / தட]
Answer:
அ) மா பெரும் பொதுக்கூட்டம் [கடி / மா]
ஆ) கடி விடுதும் [உறு/ கடி)
இ) வாள் நுதல் [வாள் / தவ]
ஈ) சால சிறந்தது [சால் / மழ] உ]
கடி மனை [கடி / தட]
சிந்தனை வினா
Question 1.
தான் என்னும் இடைச் சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
Answer:
- தான் என்னும் இடைச்சொல்லை அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம்.
- எந்தச் சொல்லுடன் வருகின்றதோ, அச்சொல்லை முதன்மைப்படுத்தும் வகையில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம்.
- சான்று: நிர்மலாதான் பாடினாள்.
Question 2.
அவர்களுக்குப் பரிசு தருவேன் – இத்தொடரில் ‘ஆ’ என்னும் இடைச் சொல்லைச் சேர்த்து வினாக்களை
அமைக்க.
Answer:
- அவர்களுக்கா பரிசு தருவேன்?
- அவர்களுக்குப் பரிசு தருவேனா?
Question 3.
செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருள்களில் இடம் பெறுகின்றன?
Answer:
- உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்றும் அவை,
- ஒரு சொல் பல பொருளுக்கு உரியது.
- பல சொல் ஒரு பொருளுக்கு உரியது என இடம் பெறும்.
Question 4.
தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச் சொற்களை எழுதுக.
Answer:
- மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி – முதலியவை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச் சொற்கள்.
- மேலும் மழ, குழ, விழுமுதல், என்பனவும் பயன்பாட்டில் உள்ளன.
Question 5.
‘ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதை எழுதுக.
Answer:
- ‘ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் “ஐயம்” தோன்ற வரும்.
- சான்று : அவனா பேசினான்
Question 6.
இடைச்சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.
அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
Answer:
வீட்டிற்குச் செல்வதற்குத்தான் இவ்வளவு பீடிகையாம்.
ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.
Answer:
இந்தச் சூழ்நிலையை மாற்றித்தான் ஆக வேண்டும்.
இ) வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
Answer:
வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் ஆகிய செயல்கள் கூட ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாம்.
ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
Answer:
சமைப்பது மட்டும் தாழ்வென எண்ணலாமா?
உ) பூக்காமலே சில மரங்களில் காய்ப்பதுண்டு.
Answer:
பூக்காமலும் சில மரங்கள் காய்க்கும்.
ஊ) வாளால் வெட்டினான்.
Answer:
வாளால்தான் வெட்டினான்.
மொழியை ஆள்வோம்
ஒப்பிட்டுச் சுவைப்போம் :
மொழிபெயர்க்க.
Akbar said, “How many crows are there in this city?”
Without even a moment’s thought, Birbal replied “There are fifty thousand five hundred and eighty nine crows, my lord”.
“How can you be so sure?” asked Akbar.
Birbal said, “Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere”.
Akbar was placed very much by Birbal’s wit.
Answer:
பீர்பாலின் நகைச்சுவையுணர்வு
இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.
எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.
உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்.
பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.
பிழை நீக்கி எழுதுக :
Question 1.
மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்
Answer:
மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும்
Question 2.
நல்ல தமிழுக்கு எழுதுவோம்
Answer:
நல்ல தமிழில் எழுதுவோம்
Question 3.
பவள விழிதான் பரிசு உரியவள்.
Answer:
பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.
Question 4.
துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்
Answer:
துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.
Question 5.
குழலியும் பாடத் தெரியும்
Answer:
குழலிக்கும் பாடத் தெரியும்
இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.
(எ.கா) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
Question 1.
அலுவலர் வந்தார் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
Answer:
அலுவலர் வந்தவுடன் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
(அல்லது)
அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்
Question 2.
சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.
Answer:
சுடர்க்கொடியும் மாலனும் பாடினார்கள்.
Question 3.
பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.
Answer:
பழனிமலையைவிட இமயமலைதான் மிகவும் பெரியது.
Question 4.
கவலையற்ற எதிர்காலம்; கல்வியே நிகழ்காலம்.
Answer:
கவலையற்ற எதிர்காலம் அமைய வேண்டுமெனில் கல்வியே நிகழ்காலமாக வேண்டும்.
விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றியமைக்க :
Answer:
செய்தி
புத்தகத் திருவிழா
செப் – 18. தஞ்சாவூர்.
தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவினை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
6. நிகழ்வினைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
அண்ணாவின் வாழ்க்கையில்….
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்ற அறியாமலே திறந்துகாட்டச் செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, “தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம்.
“இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே, அண்ணா , “நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.
Question 1.
மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
Answer:
மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள் வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என வருவாய் அலுவலர்
அறிந்து கொண்டார்.
Question 2.
அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
Answer:
முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தை திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
Question 3.
அண்ணா வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
Answer:
சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில்தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்களே உயர்பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.
Question 4.
பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக?
Answer:
தான் : பதவி உயர்வு வழங்கத்தான் உம் பெயரைக் கேட்டேன். இன் : சட்டத்தைக் காக்கும் பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது கள் : பொறுப்புணர்வுடன் செயல்படும் அலுவலர்கள் நாட்டிற்குத் தேவை.
Question 5.
நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பிடுக:
Answer:
” பொறுப்புணர்வு” (அல்லது) “கடமையுணர்வு”
மொழியோடு விளையாடு
சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை உருவாக்குக.
எ.கா. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
Answer:
1. மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்.
2. மாணவர்களே! எழுதுகோலும் அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்.
3. பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
4. மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.
5. வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
6. ஆசிரியர் அறையிலிருந்து புத்தகம் எடுத்து வா.
7. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை.
8. சீருடை அணிந்தே வழிபாட்டுக்கூட்டத்திற்கு வரவேண்டும்.
9. கரும்பலகையை அழிப்பானால் சுத்தம் செய்தான்.
10. சீருடையும், மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.
அகராதியில் காண்க.
(அரங்கு, ஒட்பம், கான், நசை, பொருநர்)
Answer:
அரங்கு – அரங்கம், உள்வீடு
ஒட்பம் – அறிவு, அழகு, நன்மை, மேன்மை
கான் – காடு, மணம், வாய்க்கால், இசை
நசை – ஆசை, குற்றம், எள்ளல், ஈரம்
பொருநர் – படைவீரன், தலைவன், போர்க்களத்து சென்று பாடும் கூத்தன்.
படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீ ர் தண்ணீ ர்)
Answer:
1. நா. காமராசனின் கவிதை நூல்:
2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல்:
3. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட ஹெமிங்வேவின் குறு நாவல்:
4. சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற சிற்பியின் கவிதை நூல்
5. எஸ்இராமகிருஷ்ணனின் சிறார் நாவல்
Question 10.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Answer:
‘வாழ்க்கையின் கீழ்படியில் நின்றேன்
அண்ணாந்து பார்த்தேன்
உயரச் செல்ல ஏங்கினேன்
பள்ளியின் படியில் கால் வைத்தேன்
கசடற கற்றேன் உயர்ந்தேன்
பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன ன
கல்வியே நம்மை உயர்த்தும்
படிக்கட்டு என உணர்ந்தேன்……..
Question 11.
கடிதம் எழுதுக:
உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
மா.இனியன்,
அரசு ஆண்கள் மேல்நிைைலப்பள்ளி,
நாவலூர்.
பெறுநர்
மேலாளர் அவர்கள்,
நெய்தல் பதிப்பகம்,
மதுரை – 16.
ஐயா,
பொருள் : நூலகத்திற்கு அகராதி அனுப்புதல் தொடர்பாக
வணக்கம். எங்கள் பள்ளி நாவலூரில் அமைந்துள்ளது. சுமார் 500 மாணவர்கள் பயில்கின்றோம். எங்கள் பள்ளி நூலகத்திற்கு, தங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள, தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பின்வரும் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பும்படி வேண்டிக்கொள்கிறேன்.
நாள் : 06.08.18
இடம் : நாவலூர்
இப்படிக்கு,
மா. இனியன்.
அகராதிகள் அனுப்ப வேண்டிய முகவரி
மா. இனியன்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
நாவலூர், வேலூர் மாவட்டம்.
நன்றி!
செயல்திட்டம்
பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றிய செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.
Answer:
மாணவர்களே!
பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள்
மகாத்மா காந்தி, ஈ.வெ.ரா. பெரியார், பாரதியார், பாரதிதாசன், கைலாஷ் சத்யார்த்தி
இவர்களின் புகைப்படங்களைச் சேகரித்து ஒரு படத் தொகுப்பினை உருவாக்குங்கள். இவர்கள் மட்டுமல்ல. இன்னும் கல்விக்காக தொண்டு புரிந்த, உனக்குத் தெரிந்த தலைவர்களின் படங்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.
நிற்க அதற்குத்தக…
எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்
1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.
எவரையும் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதும், குறை கூறாமல் பேசுவதும் என் பொறுப்பு
2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.
பள்ளிச்சுவர், வீட்டுச்சுவர், பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல் இருப்பதோடு பிறரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு
Answer:
இகழாது இருப்பது என் பொறுப்பு இவ்வாறு, நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்கின்ற பொழுது, எந்நிலையிலும் பிறரைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாது இருப்பது நம் பொறுப்பாகும்.
கலைச்சொல் அறிவோம்
சமூக சீர்திருத்தவாதி : (Social reformer)
தன்னார்வலர்(volunteer)
களர் நிலம் (Saline soil)
சொற்றொடர் (Sentence)
Answer:
சமூக சீர்திருத்தவாதி : (Social reformer)
தன் கொள்கைகளாலும், செயல்களாலும் சமூக நிலையை மாற்ற முயற்சிப்பவர்.
தன்னார்வலர்(volunteer)
தானாகவே முன் வந்து சக மனிதர்க்கும், சமூகத்துக்கும் நற்செயல் செய்பவர்.
களர் நிலம் (Saline soil)
நற்பயிர்கள் வளர இயலாத பண்படாத உவர் நிலம்
சொற்றொடர் (Sentence)
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைந்து பொருள் தரும் வகையில் அமைவது
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
அ) கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
ஆ) கடி, உறு, கூர், கழி
இ) வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
ஈ) இன், கூட, கிறு, அம்பு
Answer:
ஈ) இன், கூட, கிறு, அம்பு
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.
அ) உரிச்சொற்கள்
ஆ) பெயர்ச்சொற்கள்
இ) வினைச்சொற்கள்
ஈ) இடைச்சொற்கள்
Answer:
ஈ) இடைச்சொற்கள்
Question 2.
சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவுப் பொருளில் வரும் இடைச்சொல் ……..
அ) இல்லை
ஆ) அம்இ
இ) ஆம்
ஈ) இல்
Answer:
இ) ஆம்
Question 3.
உரிச்சொல் எப்பொருள்களுக்கு உரியதாய் வரும்.
1) குறிப்பு
அ) 1 சரி
ஆ) 2 சரி
2) பண்பு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி
Question 4.
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
அ) நன்னூலார்
ஆ) தொல்காப்பியர்
இ) இறையனார்
ஈ) வீரமா முனிவர்
Answer:
அ) நன்னூலார்
Question 5.
ஒழியிசை முதலா அசைநிலை ஈறாக எட்டுப்பொருளில் வரும் இடைச்சொல் எது?
அ) ஆ
ஆ) ஏ
இ) ஓ
ஈ) இ
Answer:
இ) ஓ
Question 6.
சரியான கூற்றினைத் தேர்க.
1. அன்று என்பது ஒருமைக்கு உரியது.
2. அல்ல என்பது பன்மைக்கு உரியது
3. அன்று என்பது பன்மைக்கு உரியது
4. அல்ல என்பது ஒருமைக்கு உரியது
அ) 1, 2 – சரி, 3, 4 – தவறு
ஆ) 1, 2 – தவறு 3, 4 – சரி
இ) 1, 3 – சரி, 2, 4 – தவறு
ஈ) 1, 3 – தவறு, 2, 4 – சரி
Answer:
அ) 1, 2 – சரி, 3, 4 – தவறு
Question 7.
‘கடிநகர்’ என்னும் சொல்லில் ‘கடி’ என்பதன் பொருள் …………………
அ) மணம்
ஆ) காவல்
இ) விரைவு
ஈ) கூர்மை
Answer:
ஆ) காவல்
Question 8.
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் ……………. என்னும் பொருளில் வருகின்றன.
அ) மிகுதி
ஆ) குறைவு
இ) விரைவு
ஈ) கூர்மை
Answer:
அ) மிகுதி
Question 9.
தொழிற்பெயர் விகுதிகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) தல்
ஆ) அம்
இ) மை
ஈ) இய
Answer:
ஈ) இய
Question 10.
எதிர்மறை இடைநிலைகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) தல்
ஆ) அல்
இ) இல்
ஈ) ஆ
Answer:
அ) தல்
குறுவினா
Question 1.
இடைச்சொற்களின் இயல்புகள் யாவை?
Answer:
இடைச்சொற்கள் பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன. தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல.
Question 2.
பகுபதம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:
- பிரிக்கக் கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ‘பகுபதம்’ எனப்படும்.
- பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்
Question 3.
‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருள்களில் வரும்? சான்று தருக.
Answer:
- ‘உம்’ என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.
- எ.கா : மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை . (எதிர்மறை உம்மை )
பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)
Question 4.
ஏகார இடைச்சொல் எத்தனை பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது?
Answer:
பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் ஏகார இடைச்சொல் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.
Question 5.
தற்காலத்தில் ஏகாரம் எப்பொருளில் மட்டுமே வருகிறது? சான்று தருக.
Answer:
- தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் (அழுத்தம்) மட்டுமே வருகிறது.
- எ.கா : அண்ணல் காந்தி அன்றே சொன்னார். நடந்தே வந்தான்.
Question 6.
மட்டும் என்னும் இடைச்சொல் எப்பொருளில் வருகிறது?
Answer:
- மட்டும் என்னும் இடைச்சொல் ‘வரையறைப்பொருள்’ தருகிறது.
- முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.
- எ.கா : படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்)
Question 7.
எழுத்துப்பேறு என்பது யாது?
Answer:
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும். சாரியை இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு.
Question 8.
சொல்லின் இறுதியில் வரும் விகுதி எவற்றைக் காட்டும்?
Answer:
சொல்லின் இறுதிநிலையாக வரும் விகுதியானது, பால், எண், இடம் காட்டும்.
How to Prepare using Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 9th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.2 தமிழோவியம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.2 தமிழோவியம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.3 தமிழ்விடு தூது Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.3 தமிழ்விடு தூது Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.4 வளரும் செல்வம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.4 வளரும் செல்வம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 1.5 தொடர் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 1.5 தொடர் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.2 பட்டமரம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.2 பட்டமரம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.3 பெரியபுராணம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.3 பெரியபுராணம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.5 தண்ணீர் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.5 தண்ணீர் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 2.6 துணைவினைகள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 2.6 துணைவினைகள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.1 ஏறு தழுவுதல் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.1 ஏறு தழுவுதல் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.2 மணிமேகலை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.2 மணிமேகலை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.3 அகழாய்வுகள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.3 அகழாய்வுகள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.4 வல்லினம் மிகும் இடங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.4 வல்லினம் மிகும் இடங்கள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 3.5 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 3.5 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.3 உயிர்வகை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.3 உயிர்வகை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.4 விண்ணையும் சாடுவோம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.4 விண்ணையும் சாடுவோம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.2 குடும்ப விளக்கு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.2 குடும்ப விளக்கு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.3 சிறுபஞ்சமூலம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.3 சிறுபஞ்சமூலம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 5.5 இடைச்சொல் – உரிச்சொல் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.1 சிற்பக்கலை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.1 சிற்பக்கலை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.2 இராவண காவியம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.2 இராவண காவியம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.3 நாச்சியார் திருமொழி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.3 நாச்சியார் திருமொழி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.4 செய்தி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.4 செய்தி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.5 புணர்ச்சி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.5 புணர்ச்சி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 6.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 6.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.2 சீவக சிந்தாமணி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.2 சீவக சிந்தாமணி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.3 முத்தொள்ளாயிரம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.3 முத்தொள்ளாயிரம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.4 மதுரைக்காஞ்சி Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.4 மதுரைக்காஞ்சி Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.5 சந்தை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.5 சந்தை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 7.6 ஆகுபெயர் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.2 ஒளியின் அழைப்பு Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.2 ஒளியின் அழைப்பு Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.3 தாவோ தொ ஜிங் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.3 தாவோ தொ ஜிங் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.4 யசோதர காவியம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.4 யசோதர காவியம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.5 மகனுக்கு எழுதிய கடிதம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 8.6 யாப்பிலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 8.6 யாப்பிலக்கணம் Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.1 விரிவாகும் ஆளுமை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.1 விரிவாகும் ஆளுமை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.2 அக்கறை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.2 அக்கறை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.3 குறுந்தொகை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.3 குறுந்தொகை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.4 தாய்மைக்கு வறட்சி இல்லை Notes
- Samacheer Kalvi 9th Tamil Chapter 9.5 அணியிலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 9th Tamil Chapter 9.5 அணியிலக்கணம் Notes
0 comments:
Post a Comment