![]() |
Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes |
Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 10th Tamil |
Subject |
10th Tamil |
Chapter |
Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 10th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் notes PDF.
Download Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF from the links provided in this article.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்
கற்பவை கற்றபின்
Question 1.
பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் பாவகைகளையும் வகைப்படுத்தி பட்டியல் இடுக.
Answer:
1. குறள்வெண்பா : திருக்குறள்
2. வெண்பா : நீதி வெண்பா, திருவிளையாடற்புராணம், தேம்பாவணி,
3. கலிவெண்பா : முல்லைப்பாட்டு, பரிபாடல்
4. ஆசிரியப்பா : அன்னைமொழியே, மலைபடுகடாம், திருமால் திருமொழி, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மெய்க்கீர்த்தி, சிலப்பதிகாரம், ஞானம், காலக்கணிதம், ஏர் புதிதா?
5. இணைக்குறள் ஆசிரியப்பா : காற்றே வா, பூத்தொடுத்தல், சித்தாளு.
6. கலிப்பா : கம்பராமாயணம்
Question 2.
வெண்பாவில் அமைந்த நூல்கள், ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வெண்பாவில் அமைந்த நூல்கள் : திருக்குறள், நாலடியார்.
ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: இரகு, மது, சாந்தி.
இரகு : நண்பா! இரகு செய்யுள் நூல்கள் பல எழுதப்பட்டாலும் நாம் இப்போது வெண்பாவிலும், ஆசிரியப்பாவிலும் எழுதப்பட்ட நூல்கள் பற்றி உரையாடுவோம்.
மது : நல்ல செய்தி தான், வெண்பாவில் ஒன்றும் ஆசிரியப்பாவில் ஒன்றும் எடுத்துக்கொள்ளலாமா?
சாந்தி : மது அண்ணா ! வெண்பாவில் திருக்குறளும், ஆசிரியப்பாவில் சிலப்பதிகாரமும் பற்றி பேசலாமா!.
இரகு : பேசலாமே! முதலில் வெண்பாவில் திருக்குறளைப் பற்றி பேசலாம்.
மது : உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்றை தலைமையாகக் கொண்டு 133 அதிகாரத்தையும் 1330 பாக்கள் கொண்டு குறள் வெண்பாவால் பாடப்பட்ட நூல்.
சாந்தி : இந்த நூலுக்கு பத்து பேர் உரை எழுதி உள்ளார்களாம்.
இரகு : இன்று ஏராளமானவர் எழுதி உள்ளனர். பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை.
சாந்தி : நாம் திருக்குறளைப் படிப்பதோடு இல்லாமல் திருக்குறளோடு குறள் கூறியுள்ளது போல் வாழ்வோம்.
மது : சரி, வெண்பாவினால் அமைந்த நூலைப் பார்த்தோம்.
சாந்தி : ஆசிரியப்பாவால் அமைந்த நூல், தமிழில் முதன் முதலில் தோன்றிய காப்பியம் எது என்றுசொல்லுங்கள்?
மது : சிலப்பதிகாரம் சாந்தி!.
இரகு : இந்நூல் கோவலன், கண்ணகி, மாதவி என மூன்று மூன்றாக பாடினாலும்
குடிமக்களைப்பற்றி பாடிய நூல்.
சாந்தி : 1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
3. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
என்னும் மூன்று உண்மைகளைக் கூறுகிறது.
இரகு : ஒவ்வொரு நூலையும் பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். நேரம் போய்க்
கொண்டே இருக்கிறது. வீட்டில் தேடுவார்கள். புறப்படுவோமா!
மூவரும் : நல்லது. புறப்படுவோம்.
Question 3.
யாப்போசை தரும் பாவோசைகள் எவையெனப் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்?
Answer:
யாப்போசை தரும் பாவோசை
1. செப்பலோசை : இருவர் உரையாடுவது போன்ற ஓசை.
2. அகவலோசை : ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
3. துள்ளலோசை : கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது
4. தூங்கலோசை : சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை,
தாழ்ந்தே வருவது – யாப்பதிகாரம், புலவர் குழந்தை
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்ப்பு:
Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city, “He is helped whom God helps”. The Second beggar used to cry, “He is helped who the king helps”. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him, “What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well baked” Then the Emperor said, “Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out of his palace.
Answer:
தமிழாக்கம்:
முன்பொருநாள் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன் கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான். இரண்டாம் பிச்சைக்காரன் மன்னனைப் புகழ்ந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான். தினமும் இருவரும் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
ரோம் அரசர் தன்னைப் பற்றிப் பேசிப் புகழ்ந்து எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ விரும்பினார்.
நீளமான ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித் துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்துக் கொடுத்தான்.
இரண்டாம் பிச்சைக்காரன் ரொட்டித் துண்டு பொட்டலம் கனமாக இருக்கிறது; விற்றால் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்றுவிடுகிறான்.
இப்படியே ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை வாங்கும் முதலாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டை வெட்டிப்பார்த்தால் தினமும் பொற்காசுகள் மின்னின.
தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து சேர்த்து வைத்தான். பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான்.
இரண்டாம் பிச்சைக்காரன் தொடர்ந்து வீதிகளில் பிச்சை எடுத்துக்கொண்டே இருக்கிறான். மன்னன் அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டிப் பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார்.
அது எடுத்துச்செல்ல கனமாக இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்றுவிட்டேன் என்றான்.
மன்னர் தனக்குள் நினைத்துக்கொண்டார். “கடவுள் தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது உதவுகிறார்” இரண்டாம் பிச்சைக்காரனிடம் திரும்பி, ‘சரி நீ போகலாம்’ என்று அரண்மனையில் இருந்து வெளியேறச் சொன்னார்.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
மனக்கோட்டை:
கண்ணும் கருத்தும்:
அள்ளி இறைத்தல்:
ஆறப்போடுதல்:
Answer:
மனக்கோட்டை:
படிக்காமலே தேர்வில் வெற்றிபெற்றுவிடலாம் என்று சில மாணவர்கள் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.
கண்ணும் கருத்தும்:
கண்ணும் கருத்தாய் கவனமுடன் படித்தால் முதல் மதிப்பெண் பெறலாம்.
அள்ளி இறைத்தல்:
பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தால் விரைவில் வறுமைநிலை அடைவாய்.
ஆறப்போடுதல்:
பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாது ஆறப்போடுதல் அநேக தீயவிளைவுகளைத் தடுக்கும்.
பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
பேச்சுவழக்கு:
“தம்பீ? எங்க நிக்கிறே?”
“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்…”
“சரிங்கண்ணே ”
Answer:
எழுத்து வழக்கு:
“தம்பி எங்கே நிற்கிறாய்?”
“நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது.”
“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன்.”
“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன.”
“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.”
“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ”
“இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”
“சரி அண்ணா !”
கடிதம் எழுதுக.
உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
எஸ். சங்கரன்,
23, வள்ளலார் சாலை,
பாரதிதாசன் நகர்,
திருச்சி.
பெறுநர்
உயர்திரு. மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள், செயற்பொறியாளர் அலுவலகம்,
திருச்சி.
பொருள்: தெருவிளக்குகள் பழுது நீக்குதல் – தொடர்பாக
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். நான் பாரதிதாசன் நகர் வள்ளலார் சாலையைச் சார்ந்தவன். கடந்த வாரம் வீசிய தானே புயலால் எங்கள் தெருவில் உள்ள மினவிளக்கு கம்பங்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டன. இதனால் இரவில் வெளியே செல்வோர்க்கு மிகவும் துன்பமாக இருக்கிறது. தெருவிளக்கு இல்லாததைப் பயன்படுத்தி சமூக விரோதிகளின் செயல்களும் அதிகமாகி விட்டது. அதனால் தயவுசெய்து நேரில் பார்வையிட்டு பழுதடைந்த மின்விளக்குக் கம்பங்களைச் சரிசெய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
இப்படிக்கு,
தெருமக்கள் சார்பாக,
எஸ். சங்கரன்.
21.03.2020
பாரதிதாசன் நகர்.
உறைமேல் முகவரி:
நயம் பாராட்டுக.
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே. – வள்ளலார்
Answer:
திரண்ட கருத்து:
கோடையில் இளைப்பாறும் வகையில் கிடைத்த குளிர்ச்சி பொருந்திய தரு ஆனவன். மரம் (தரு) தரும் நிழலாகவும், நிழலின் குளிர்ச்சியாகவும், நிழல் தரும் கனியாகவும் இருப்பவன். ஓடையிலே ஊறுகின்ற இன்சுவை நீராகவும், நீரின் இடையில் மலர்ந்து சுகந்தம் தரும் வாசமலராகவும் திகழ்பவன். மேடையிலே வீசுகின்ற மென்பூங்காற்றாகவும், மென்காற்று தரும் சுகமாகவும் சுகத்தின் பயனாகவும் இருக்கும் இறைவா. இவ்வுலக வாழ்வில் ஆடிக்கொண்டிருக்கும் என்னையும் ஏற்றுக்கொண்ட (மனந்த) தலைவனே (மணவாளனே) பொதுவிலே ஆடுகின்ற, ஆட்டுவிக்கின்ற எம் அரசே நான் தரும் பாமாலையை (அலங்கல்) அணிந்து எனக்கு அருள் செய்வாயாக.
மோனை நயம்:
குயவனுக்கு பானை
செய்யுளுக்கு மோனை
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை ஆகும்.
மேடையிலே
மென்காற்று…
ஆடையிலே…
ஆடுகின்ற… என்று மோனை நயமும் மிகுந்து வருகின்றது.
எதுகை நயம்:
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க அடியிலோசீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகையாகும். இப்பாடலில்,
கோடையிலே
ஓடையிலே
மேடையிலே
ஆடையிலே – என்று எதுகை நயம் அமைந்துள்ளது.
இயைபு நயம்:
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும்.
தண்ணீரே
மலரே என இயைபு நயமும் உள்ளது.
அணி நயம்:
அணி என்றால் அழகு. இப்பாடலின் அழகுக்கு அழகு செய்யும் வகையில்,
“குளிர் தருவே…
நிழல் கனிந்த கனியே…”
இறைவனை உருவகப்படுத்தும் “உருவக அணியும்” இறைவனை மேன்மைப்படுத்தி உயர்த்திப் புகழ்ந்து பாடியிருப்பதால் “உயர்வு நவிற்சி அணியும்” அமைந்து பாடலுக்கு நயம் கூட்டியுள்ளது.
சந்த நயம்:
இப்பாடல் இனிய ஓசையுடன், இசையுடன் பாடும் வகையில், ஒழுகிய ஓசையாய் ‘எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவலோசையுடன் சந்த நயமும் மிக்குள்ளது.
இப்பாடல் அனைத்து இலக்கிய நயங்களுமுடையதாய்ப் படிப்போர் மனதில் இறைபக்தியையும், இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.
மொழியோடு விளையாடு
கண்டுபிடித்து எழுதுக.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம்பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக……
Answer:
எண்ணுப்பெயர்கள் இடம்பெறும் திருக்குறள் பாக்கள்:
ஒன்று :
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
இரண்டு :
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.
மூன்று :
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
நான்கு :
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்.
ஐந்து :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்.
ஆறு :
படைகுடி கூழ்அமைச்சு நட்பரன் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
ஏழு:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
எட்டு :
கோயில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை.
ஒன்பது :
ஒன்பது என்ற எண்ணை திருவள்ளுவர் தம் நூலில் எங்கும் பயன்படுத்தவில்லை
பத்து :
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
சொற்களைப் பிரித்துப் பொருள் தருக.
1. கானடை
2. வருந்தாமரை
3. பிண்ணாக்கு
4. பலகையொலி
கானடை : கான் அடை காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
Answer:
1. கானடை : கான் அடை காட்டைச் சேர்
கான் நடை – காட்டுக்கு நடத்தல்
கால் நடை – காலால் நடத்தல்
2. வருந்தாமரை: வரும் தாமரை தாமரை மலர்
வரும் தா மரை – தாவும் மான் வருகிறது.
வருந்தா மரை – துன்புறாத மான்
3. பிண்ணாக்கு : பிண்ணாக்கு – எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது.
பிள் நாக்கு – பிளவுபட்ட நாக்கு
4. பலகையொலி : பலகை ஒலி – பலகையால் ஏற்படும் ஒலி
பல கை ஒலி – பல கைகள் தட்டும் ஒலி.
அகராதியில் காண்க.
ஆசுகவி
மதுரகவி
சித்திரகவி
வித்தாரகவி
Answer:
ஆசுகவி – கொடுத்தப் பொருளை உடனே பாடும் பாட்டு.
அப்பாடலைப் பாடும் புலவன்.
மதுரகவி – இனிமை பெருகப் பாடும் கவி.
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு.
சித்திரகவி – சித்திரத்தில் அமைத்ததற்கு ஏற்ப பாடும் இறைக்கவி, 21 நயங்களில் கவிதை இயற்றுபவர்
வித்தாரகவி – விரித்துப் பாடப் பெறும் பாட்டு.
விரிவாகப் பாடும் நூல்.
கலைச்சொல் அறிவோம்
Belief – நம்பிக்கை
Philosopher – மெய்யியலாளர்
Renaissance – மறுமலர்ச்சி
Revivalism – மீட்டுருவாக்கம்
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Answer:
நிற்க அதற்குத் தக
நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை, நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ, உடன்பிறந்தவருடனோ எதிர்பாராமல் சச்சரவு ஏற்படுகிறது….. இந்தச் சமயத்தில் சினம்கொள்ளத் தக்க சொற்களைப் பேசுகிறோம்; கேட்கிறோம்; கைகலப்பில் ஈடுபடுகிறோம்; இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படுகளும் நன்மைகளும்…..
Answer:
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……………………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Answer:
அ) அகவற்பா
குறுவினா
Question 1.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
- குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
- முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
எ.கா: கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
Question 2.
வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
Answer:
வஞ்சிப்பா தூங்கல் ஓசையையும், கலிப்பா துள்ளல் ஓசையையும் பெற்று வரும்.
சிறுவினா
Question 1.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
Answer:
- அகவல் ஓசை பெற்று வரும்.
- ஈரசைச் சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
- ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.
- வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவி வரும்.
- மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
- ஏகாரத்தில் முடியும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
யாப்பின் உறுப்புகள்…………………….
அ) 3
இ) 6
ஆ) 5
ஈ) 7
Answer:
இ) 6
Question 2.
பொருத்திக் காட்டுக.
அ) 2, 4, 1, 3
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 1, 2, 4
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 2, 4, 1, 3
Question 3.
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா
Question 4.
வெண்பாக்களின் வகைகள் எத்தனை?
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
இ) ஐந்து
Question 5.
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …………..
அ) அகவல்
ஆ) துள்ளல்
இ) தூங்கல்
ஈ) செப்பல்
Answer:
ஆ) துள்ளல்
Question 6.
வெண்பாவில் அமைந்த நூல்கள் …………..
அ) குறள்; நாலடியார்
ஆ) நாலடியார்; மணிமேகலை
இ) குறள்; சிலம்பு
ஈ) குறள், வளையாபதி
Answer:
அ) குறள்; நாலடியார்
Question 7.
ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பா …………..
அ) ஆசிரியப்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) வெண்பா
Question 8.
“பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை …………..
அ) அகவற்பா
ஆ) வெண்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
அ) அகவற்பா
Question 9.
பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும் பா வகை …………..
அ) கலிவெண்பா
ஆ) வஞ்சிப்பா
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) இன்னிசை வெண்பா
Answer:
ஆ) வஞ்சிப்பா
Question 10.
சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது – …………..
அ) தூங்கலோசை
ஆ) துள்ளலோசை
இ) செப்பலோசை
ஈ) அகவலோசை
Answer:
அ) தூங்கலோசை
Question 11.
இருவர் உரையாடுவது போன்ற ஓசை – …………..
அ) செப்பலோசை
ஆ) அகவலோசை
இ) துள்ளலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
அ) செப்பலோசை
Question 12.
ஆசிரியப்பாவின் வகைகள் …………..
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு
Question 13.
“ஏகாரத்தில்” முடியும் சிறப்புடைய பா வகை …………..
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா
Question 14.
பொருத்துக.
1. இருவர் உரையாடுவது போன்றது – அ) அகவலோசை
2. சொற்பொழிவாற்றுவது போன்றது – ஆ) செப்பலோசை
3. தாழ்ந்து உயர்ந்து வருவது – இ) தூங்கலோசை
4. தாழ்ந்தே வருவது – ஈ) துள்ளளோசை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
Question 15.
அகவற்பாவுடன் தொடர்பில்லாத ஒன்று …………..
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பெருங்கதை
ஈ) நாலடியார்
Answer:
ஈ) நாலடியார்
Question 16.
பொருத்துக.
1. நேர் – அ) மலர்
2. நிரை – ஆ) காசு
3. நேர்பு – இ) பிறப்பு
4. நிரைபு – ஈ) நாள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
Question 17.
பொருத்துக.
1. நேர் நேர் – அ) புளிமா
2. நிரை நேர் – ஆ) தேமா
3. நேர் நிரை – இ) கருவிளம்
4. நிரை நிரை – ஈ) கூவிளம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
Question 18.
பொருத்துக.
1. நேர் நேர் நேர் – அ) புளிமாங்காய்
2. நிரை நேர் நேர் – ஆ) தேமாங்காய்
3. நேர் நிரை நேர் – இ) கருவிளங்காய்
4. நிரை நிரை நேர் – ஈ) கூவிளங்காய்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
Question 19.
பொருத்துக.
1. நேர் நேர் நிரை – அ) புளிமாங்கனி
2. நிரை நேர் நிரை – ஆ) தேமாங்கனி
3. நேர் நிரை நிரை – இ) கருவிளங்கனி
4. நிரை நிரை நிரை – ஈ) கூவிளங்கனி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
Question 20.
புலவர் குழந்தை இயற்றிய யாப்பு நூல் …………………
அ) யாப்பதிகாரம்
ஆ) யாப்பருங்கலம்
இ) யாப்பருங்கலங்காரிகை
ஈ) நன்னூல்
Answer:
அ) யாப்பதிகாரம்
குறுவினா
Question 1.
யாப்பின் உறுப்புகள் யாவை?
Answer:
எழுத்து, அசை, சீர், அடி, தொடை, தளை ஆகியவை ஆகும்.
Question 2.
பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பா நான்கு வகைப்படும். அவையாவன: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.
Question 3.
வெண்பாவின் வகைகள் யாவை?
Answer:
வெண்பா ஐந்து வகைப்படும்: அவையாவன:
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவையாகும்.
Question 4.
ஆசிரியப்பாவின் வகைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
ஆசிரியப்பாவின் வகைகள் நான்கு வகைப்படும். அவை:
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா
Question 5.
திருக்குறளும் நாலடியாரும் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
Answer:
- திருக்குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளது.
- அதன் ஓசை : செப்பலோசை.
Question 6.
சங்க இலக்கியங்கள் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது எனச் சுட்டி, அதன் ஓசைகளையும் குறிப்பிடுக.
Answer:
- சங்க இலக்கியங்கள் அகவற்பாவில் அமைந்துள்ளது.
- அதன் ஓசை :அகவல் ஓசை
Question 7.
அகவலோசையில் அமைந்த நூல்கள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை
Question 8.
பதின்மூன்று அடிக்கு மேல் வரும் வெண்பா எது?
Answer:
கலிவெண்பா.
Question 9.
கலித்தளையும் வெண்டளையும் விரவிவரும் பா எது?
Answer:
ஆசிரியப்பா (அகவற்பா).
Question 10.
ஓரசைச் சீர்கள் யாவை?
Answer:
நேர் – நாள் ; நிரை – மலர்
நேர்பு – காசு ; நிரைபு – பிறப்பு
Question 11.
ஈரசைச் சீர்கள் யாவை?
Answer:
நேர் நேர் – தேமா ; நிரை நேர் – புளிமா
நிரை நிரை – கருவிளம் ; நேர் நிரை – கூவிளம்
Question 12.
மூவசைச் சீர்கள் யாவை?
Answer:
சிறுவினா
Question 1.
வெண்பாவின் பொது இலக்கணத்தை விளக்குக.
Answer:
- வெண்பா செப்பல் ஓசை பெற்று வரும்.
- ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
- இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்.
- ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.
Question 2.
அகவற்பாவை விளக்கி, சான்று தருக.
Answer:
- அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது.
- இலக்கணக் கட்டுக் கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா .
சான்று: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை – ஆகியவையாகும்.
Question 3.
அலகிட்டு வாய்பாடு எழுதுக.
Answer:
குறள்: உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
How to Prepare using Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 10th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.2 தமிழ்சொல் வளம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.2 தமிழ்சொல் வளம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.2 நீதி வெண்பா Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.2 நீதி வெண்பா Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.4 புதியநம்பிக்கை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.4 புதியநம்பிக்கை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.2 பூத்தொடுத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.2 பூத்தொடுத்தல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.4 கம்பராமாயணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.4 கம்பராமாயணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.5 பாய்ச்சல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.5 பாய்ச்சல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.2 ஏர் புதிதா? Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.2 ஏர் புதிதா? Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.2 ஞானம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.2 ஞானம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.2 சித்தாளு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.2 சித்தாளு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.5 அணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.5 அணி Notes
0 comments:
Post a Comment