![]() |
Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes |
Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 10th Tamil |
Subject |
10th Tamil |
Chapter |
Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 10th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் notes PDF.
Download Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF from the links provided in this article.
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம்
கற்பவை கற்றபின்
Question 1.
பண்டைத் தமிழரின் திணைநிலை வாழ்க்கை முறையையும் இன்றைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு ஒவ்வொருவர் கருத்தையும் பதிவு செய்து பொதுக் கருத்தை அறிக.
Answer:
பதிவு செய்யப்பட்ட கருத்துகள் கருத்து – 1:
காலங்கள் பல கடந்தாலும் தெய்வநம்பிக்கையும் சடங்குகளும் பெருமளவில் மாறாமல் உள்ளன. மக்களிடம் சாதி வெறியும் சாதி வேறுபாடும் நீங்கியுள்ளது. மக்கள் அனைவரும் சமம் என்ற நிலைக்குத் தகுதிபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து – 2:
உணவு முறையில் இன்று பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயற்கையான தானியங்கள் மற்றும் பயிறு வகை உணவுப் பொருட்கள் பெரும்பாலும் உணவில் சேர்க்கப்படுவதில்லை.
கருத்து – 3:
தங்களுக்கெனக் குறித்த பண், யாழ், பறை ஆகியவற்றைப் பண்டைத் திணை நில தமிழர் பயன்படுத்தியதைப் போல இன்று யாரும் பயன்படுத்தவில்லை. அவரவர் விருப்பமான இசையை இசைப் பள்ளிகளுக்குச் சென்று கற்றுக் கொள்கின்றனர்.
கருத்து – 4:
திணை நிலத்திற்கேற்ப தொழில்கள் இன்று பெருமளவில் நடைபெறவில்லை. இயற்கையின் விளையாட்டால் இன்று மருதநில தொழில்களும், நெய்தல் நில தொழில்களும் மிகவும் நலிவடைந்துள்ளன. மேலும் அதிக வருமானம் பெறுவதற்காகவும் கல்வியறிவு பெற்று வருவதால் உயர் பதவியில் உள்ள வேலைகளைத் தேடி நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
கருத்து – 5:
இயற்கைச் சூழலும், நாகரிக வளர்ச்சியும், காலச் சூழலும் எல்லா நிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் பண்டைய மரபு மாறாது வாழ்கின்றனர்.
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்ப்பு:
Koothu
Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient Puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.
Answer:
தமிழாக்கம் :
கூத்து
தெருக்கூத்து அதன் பெயருக்கு ஏற்றாற்போல் தெருவில் நடக்கும் ஒரு மிகச் சிறந்த கலை. இதில் கிராமப்புற கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதன் கதைகள் பழங்காவியமான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பழைய புராணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் பழைய பாடல்களை உரையாடலுடன் கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். பதினைந்து முதல் இருபது கலைஞர்கள் சிறிய இசைக்குழுவாக சேர்ந்ததுதான் தெருக்கூத்து கூட்டம். இசைக்குழுவில் பல பாடல்கள் இருந்தபோதும் கலைஞர்கள் தங்கள் குரலிலேயே பாடுவார்கள். கலைஞர்கள் மிகச் சிறந்த உடையலங்காரமும் ஒப்பனையும் செய்திருப்பர். கிராமப் புறங்களில் கூத்துமிகவும் பிரபலமானது.
தொடர்களை அறிவோம், தொடர்ந்து செய்வோம்.
Question 1.
ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும்.
Answer:
எ.கா: அ) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்.
ஆ) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.
Question 2.
தொடர் சொற்றொடர், ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலையைக் கொண்டு இருக்கும்.
Answer:
எ.கா: அ) இனிய நிலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.
ஆ) அன்வர் அரங்கத்திற்கு வந்து நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.
Question 3.
கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.
Answer:
எ.கா: அ) மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.
பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான் – முதன்மைத் தொடர்
மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் – துணைத் தொடர்
தொடர்களை அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
எ.கா: அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
(தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக)
அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.
Question 1.
இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
Answer:
(தொடர் சொற்றொடராக மாற்றுக) இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கி, புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
Question 2.
ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
Answer:
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.) ஒயிலாட்டக் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிந்து கொள்வர். கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
Question 3.
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
Answer:
(கலவைச் சொற்றொடராக மாற்றுக) கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
Question 4.
ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
Answer:
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அதனால் அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைபட்டது.
பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றுக.
புதிர்:
உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
Answer:
தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டைரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!
நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக.
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
அழகைக் கொண்டு பூ கவருகையில்
அப்பூக்களிடம் பணிவது மனிதர்களே!
கட்டுரை எழுதுக.
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
முன்னுரை:
எங்கள் ஊரில், அரசுப் பொருட்காட்சி, திலகர் திடலில் நடைபெற்றது. அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்தேன். அங்கே நான் கண்டு மகிழ்ந்த நிகழ்வுகளைக் குறித்து இக்கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நுழைவுச்சீட்டு:
பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பத்து வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.30ம் பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.50ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நாங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றோம்.
பல்துறைக் கண்காட்சி அரங்கங்கள்:
வனத்துறை அரங்கத்தின் உள்ளே சென்று பார்த்தபோது வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டேன். கல்வித்துறை அரங்கத்தின் உள்ளே கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கல்வியின் சிறப்பு குறித்து பல்வேறு செய்திகள் அச்சிடப்பட்டு ஒட்டிவைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துத் துறையினர் சாலை விதிகளைக் கடைபிடிப்பதால் சாலை விபத்துக்களைத் தவிர்க்கலாம் என்ற விழிப்புணர்ச்சி கருத்துகளைத் தெரிவித்தன. மேலும் சில போக்குவரத்துக் குறியீடுகளுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன. காவல்துறை, பொதுப்பணித் துறை, மீன் வளத்துறை, வேளாண்துறை போன்று பல்வேறு துறை சார்ந்த அரங்கங்களின் உள்ளே சென்று அரிய பல தகவல்களை அறிந்து கொண்டேன்.
அங்காடிகள்:
வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு பல்வேறு அங்காடிகள் இருந்தன. தேவையான சில பொருட்களை மட்டும் நான் வாங்கிக் கொண்டேன். உணவு அங்காடிக்குச் சென்று டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பனிக்கூழ் முதலியவற்றை வாங்கி உண்டேன்.
இராட்டினம்:
மயக்கம் தந்தாலும் மனதை மயக்கும் இராட்டினங்களைச் சுழலும் முறையை வியப்புடன் பார்த்தேன். இராட்சச இராட்டினம், குவளை இராட்டினம், டிராகன் இராட்டினம் எனப் பல்வேறு இராட்டினங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.
பிற பொழுதுபோக்கு அம்சங்கள்:
பேய்வீடு, பாதாளக் கிணறு, முப்பரிமாண திரையரங்கம், மீன்காட்சி சாலை, பனிவீடு எனப் பல்வேறு அரங்கங்கள் இருந்தன. இப்பொழுதுபோக்கு அரங்கங்களுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது.
முடிவுரை:
பல மணி நேரமாக சுற்றிப்பார்த்த களைப்பு ஒருபுறம் இருந்தாலும் அங்கே சுற்றிப்பார்த்த மகிழ்ச்சி மிகுதியுடன் வீடு திரும்பினேன்.
மொழியோடு விளையாடு
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.
1. வானம் …………………….. தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் …………………….
3. ……………………. மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ……………………. புல்வெளிகளில் கதிரவனின் …………………….வெயில் பரவிக் கிடக்கிறது.
5. வெயிலில் அலையாதே; உடல் …………………….விடும்.
Answer:
1. வானம் கருக்கத் தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது.
3. வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பச்சை புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக் கிடக்கிறது.
5. வெயிலில் அலையாதே; உடல் கருத்து விடும்.
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் …………………..
2. காலை ஒளியினில் மலரிதழ் …………………..
சோலைப் பூவினில் வண்டினம் …………………..
3. மலை முகட்டில் மேகம் ………………….. அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் …………………..
4. வாழ்க்கையில் ………………….. மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் ………………….. கூத்து சொல்லும்.
5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே …………………… – அதில்
வரும்காசு குறைந்தாலும் அதுவே அவர் …………………..
Answer:
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் மரவீடு.
2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்.
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்.
3. மலை முகட்டில் மேகம் தங்கும். அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.
4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவை கூத்து சொல்லும்.
5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது. – அதில்
வரும்காசு குறைந்தாலும் அதுவே அவர் விருந்து.
அகராதியில் காண்க.
தால் – தாலாட்டு, தாலு, பிள்ளைக் கவியுறுப்பில் ஒன்று, நாக்கு.
உழுவை – ஒருவித மீன், புலி, தும்பிலி
அகவுதல் – அழைத்தல், ஆடல், கூத்தாடல்
ஏந்தெழில் – மிக்க அழகு, மிகு வனப்பு
அணிமை – சமீபம், அருகு, நுட்பம், நுண்மை .
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Answer:
செயல்திட்டம்
பல்வேறு நிகழ்கலைகளின் ஒளிப்படங்களைத் தொகுத்து வகுப்பறையில் கண்காட்சி அமைக்க. (மாணவர் செயல்பாடு)
நிற்க அதற்குத் தக
அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள். ஒருபுறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள்…. இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.
இக்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
Answer:
கலைச்சொல் அறிவோம்
- Aesthetics – அழகியல், முருகியல்
- Terminology – கலைச்சொல்
- Artifacts – கலைப் படைப்புகள்
- Myth – தொன்மம்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை , குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
Answer:
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
குறுவினா
Question 1.
காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
Answer:
Question 2.
கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருள்களைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
Answer:
- உழவர்கள் வயலில் உழுதனர்.
- நெய்தல்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர். (அல்லது) தாழைப்பூச் செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.
- முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே இடையர்கள் காட்டுக்குச் சென்றனர்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
அ) 3, 4, 1, 2, 5
ஆ) 4, 3, 1, 5, 2
இ) 3, 2, 5, 1, 4
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
ஈ) 3, 5, 1, 2, 4
Question 2.
பொருத்தமான விடையைக் கண்டறிக.
i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு
ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
iii) மருதம் – 3. காட்டாறு
iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்
v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி
அ) 4, 3, 2, 5, 1
ஆ) 5, 4, 1, 2, 3
இ) 4, 3, 5, 1, 2
ஈ) 3, 4, 5, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 5, 1
Question 3.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) முல்லை – வரகு, சாமை
ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்
இ) நெய்தல் – தினை
ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்
Answer:
இ) நெய்தல் – தினை
Question 4.
முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) முன்பனி
ஈ) பின்பனி
Answer:
அ) கார்காலம்
Question 5.
ஐந்திணைகளுக்கு உரியன ……………
i) முதற்பொருள்
ii) கருப்பொருள்
iii) உரிப்பொருள்
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி
Question 6.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்
ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்
iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்
iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1
Question 7.
மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை
Question 8.
பொழுது எத்தனை வகைப்படும்?
அ) இரு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
அ) இரு
Question 9.
பொருத்திக் காட்டுக.
i) கார்காலம் – 1. மாசி, பங்குனி
ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை
iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை
iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1
Question 10.
இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள் ……………
அ) ஆவணி, புரட்டாசி
ஆ) சித்திரை, வைகாசி
இ) ஆனி, ஆடி
ஈ) மார்கழி, தை
Answer:
ஆ) சித்திரை, வைகாசி
Question 11.
ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) இளவேனிற்காலம்
ஈ) முதுவேனிற்காலம்
Answer:
ஈ) முதுவேனிற்காலம்
Question 12.
பொருத்திக் காட்டுக.
i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை
iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை
அ) 4, 3, 2, 1|
ஆ) 2, 1, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1
Question 13.
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது ……………
அ) எற்பாடு
ஆ) மாலை
இ) யாமம்
ஈ) வைகறை
Answer:
இ) யாமம்
Question 14.
வைகறைக்குரிய கால நேரம்……………
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை
இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
Answer:
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
Question 15.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கார்காலம்
ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்
iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி
iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3
Question 16.
நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை
Question 17.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. வைகறை
ii) முல்லை – 2. எற்பாடு
iii) மருதம் – 3. யாமம்
iv) நெய்தல் – 4. மாலை
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2
Question 18.
திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கொற்றவை
ii) முல்லை – 2. வருணன்
iii) மருதம் – 3. இந்திரன்
iv) நெய்தல் – 4. திருமால்
v) பாலை – 5. முருகன்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3,1
இ) 3, 2, 4, 5, 1
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 19.
திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.
i) வெற்பன் – 1. குறிஞ்சி
ii) தோன்றல் – 2. முல்லை
iii) ஊரன் – மருதம்
iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்
v) எயினர் – 5. பாலை
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 5, 4, 1, 2
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
ஈ) 1, 2, 3, 4, 5
Question 20.
பொருத்திக் காட்டுக.
i) புலி – 1. பாலை
ii) மான் – 2. நெய்தல்
iii) எருமை – 3. மருதம்
iv) முதலை – 4. முல்லை
v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 2, 1, 4, 5, 3
ஈ) 4, 2, 3, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 21.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி
ii) முல்லை – 2. தாழை
iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்
iv) நெய்தல் – 4. தோன்றி
v) பாலை – 5. காந்தள்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 2, 3, 4, 1, 5
ஈ) 3, 1, 4, 2, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 22.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை
ii) முல்லை – 2. கொன்றை, காயா
iii) மருதம் – 3. காஞ்சி
iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்
v) பாலை – 5. இலுப்பை
அ) 1, 2, 3, 4, 5
ஆ) 2, 3, 1, 5, 4
இ) 3, 4, 2, 1, 5
ஈ) 5, 4, 3, 2, 1
Answer:
அ) 1, 2, 3, 4, 5
Question 23.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடற்காகம்
ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்
iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
iv) நெய்தல் – 4. கிளி, மயில்
v) பாலை – 5. புறா, பருந்து
அ) 4, 2, 3, 1, 5
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 5, 2
ஈ) 3, 4, 2, 5, 1
Answer:
அ) 4, 2, 3, 1, 5
Question 24.
விளரி யாழ் எத்திணைக்கு உரியது?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
இ) நெய்தல்
Question 25.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. துடி
ii) முல்லை – 2. மீன் கோட்பறை
iii) மருதம் – 3. மணமுழா
iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை
v) பாலை
5. தொண்டகம்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 3, 4, 5, 2, 1
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 26.
செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே
அ) நெய்தல், பாலை
ஆ) குறிஞ்சி, முல்லை
இ) மருதம், நெய்தல்
ஈ) மருதம், பாலை
Answer:
அ) நெய்தல், பாலை
Question 27.
முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்
அ) வெண்நெல், வரகு
ஆ) மலைநெல், திணை
இ) வரகு, சாமை
ஈ) மீன், செந்நெல்
Answer:
இ) வரகு, சாமை
குறுவினா
Question 1.
பொருள் இலக்கணம் குறிப்பு வரைக.
Answer:
- பொருள் என்பது ஒழுக்க முறை.
- தமிழர் வாழ்வியல் ஒழுக்கங்களை அகம், புறம் என வகுத்தனர்.
- இவற்றைப் பற்றிக் கூறுவதே பொருள் இலக்கணம்.
Question 2.
அகத்திணை என்றால் என்ன?
Answer:
அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது அகத்திணை ஆகும்.
Question 3.
அன்பின் திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
அன்பின் திணைகள் ஐந்து. அவை:
குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை.
Question 4.
அகத்திணைக்குரிய பொருள்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
அகத்திணைக்குரிய பொருள்கள் மூன்று. அவை:
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.
Question 5.
முதற்பொருளாவது யாது?
Answer:
நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்.
Question 6.
ஐவகை நிலங்களின் அமைவிடங்களைக் கூறுக.
Answer:
- குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
- முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
- வயலும் வயல் சார்ந்த இடமும்
- நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
- பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்
Question 7.
பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பொழுது இரண்டு வகைப்படும் அவை: பெரும்பொழுது, சிறுபொழுது.
Question 8.
பெரும்பொழுதிற்குரிய கூறுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பெரும்பொழுதிற்குரிய கூறுகள் ஆறு. அவை:
கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்.
Question 9.
சிறுபொழுதிற்குரிய கூறுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
சிறுபொழுதிற்குரிய கூறுகள் ஆறு. அவை:
காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை.
Question 10.
எற்பாடு பிரித்து பொருள் எழுதுக.
Answer:
எல் + பாடு = எற்பாடு
எல் – சூரியன்
பாடு – மறையும் நேரம்
பொருள் – சூரியன் மறையும் நேரம்.
Question 11.
கருப்பொருள் என்றால் என்ன?
Answer:
ஒவ்வொருநிலத்திற்கும் உரிய தெய்வம் முதலாகத்தொழில் வரையில் தனித்தனியே குறிப்பிடப்படுவது கருப்பொருள்.
Question 12.
உரிப்பொருள் என்றால் என்ன?
Answer:
கவிதைகளில் கருப்பொருளின் பின்னணியில் அமைத்துப் பாடப்படுவது உரிப்பொருள்.
Question 13.
ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்களின் பெயர்களைக் கூறு.
Answer:
குறிஞ்சி – முருகன்
முல்லை – திருமால்
மருதம் – இந்திரன்
நெய்தல் – வருணன்
பாலை – கொற்றவை
Question 14.
ஐவகை நிலத்திற்குரிய பறைகளைக் கூறு.
Answer:
குறிஞ்சி – தொண்டகப் பறை
முல்லை – ஏறுகோட்பறை
மருதம் – மணமுழா, நெல்லரிகிணை
நெய்தல் – மீன் கோட்பறை
பாலை – துடி
Question 15.
ஐவகை நிலத்திற்குரிய யாழ், பண் எவை என எழுதுக.
Answer:
Question 16.
ஐவகை நிலத்திற்குரிய மரம், பூ ஆகியவற்றை எழுதுக.
Answer:
Question 17.
ஐவகை நிலத்திற்குரிய மக்கள் யாவர்?
Answer:
Question 18.
ஐவகை நிலத்திற்குரிய விலங்குகள் மற்றும் பறவைகள் எவை எனக் கூறுக.
Answer:
Question 19.
ஐவகை நிலத்திற்குரிய தொழில்கள் யாவை?
Answer:
Question 20.
ஐவகை நிலத்திற்குரிய நீரை எழுதுக.
Answer:
Question 21.
ஐவகை நிலத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
Answer:
Question 22.
ஐவகை நிலத்திற்குரிய ஊர்களைக் குறிப்பிடுக.
Answer:
சிறுவினா
Question 1.
பெரும்பொழுதிற்குரிய கூறுகளை எழுதி, அக்காலத்திற்கான மாதங்களையும் எழுதுக.
Answer:
(1 ஆண்டின் 12 மாதங்களும் இரண்டிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (12/2 = 6)
Question 2.
சிறுபொழுதிற்குரிய கூறுகளையும் அதற்குரிய நேர அளவுகளையும் குறிப்பிடுக.
Answer:
(1 நாளின் 24 மணி நேரமும் நான்கு நான்கு மணி நேரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (24/4=6)
Question 3.
ஐந்திணைக்கும் உரிய பெரும்பொழுதுகள் சிறுபொழுதுகளை எழுதுக.
Answer:
How to Prepare using Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 10th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.1 அன்னை மொழியை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.2 தமிழ்சொல் வளம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.2 தமிழ்சொல் வளம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 1.5 எழுத்து சொல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.2 காற்றை வா! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.3 முல்லைப்பாட்டு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.3 மலைபடுகடாம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.2 நீதி வெண்பா Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.2 நீதி வெண்பா Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.4 புதியநம்பிக்கை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.4 புதியநம்பிக்கை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.2 பூத்தொடுத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.2 பூத்தொடுத்தல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.4 கம்பராமாயணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.4 கம்பராமாயணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.5 பாய்ச்சல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.5 பாய்ச்சல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.1 சிற்றகல் ஒளி (தன்வரலாறு) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.2 ஏர் புதிதா? Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.2 ஏர் புதிதா? Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.3 மெய்க்கீர்த்தி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.4 சிலப்பதிகாரம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.2 ஞானம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.2 ஞானம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.3 காலக்கணிதம் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.2 சித்தாளு Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.2 சித்தாளு Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.3 தேம்பாவணி Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Notes
- Samacheer Kalvi 10th Tamil Chapter 9.5 அணி Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 9.5 அணி Notes
0 comments:
Post a Comment