Samacheer Kalvi Books– Tamilnadu State Board Text Books Solutions for Class 1 to 12.

Monday, December 6, 2021

Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes

Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes
Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes


Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Chapter Wise Notes PDF from the links provided in this article.


Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF Download

We bring to you specially curated Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.


Board

Tamilnadu Board

Study Material

Notes

Class

Samacheer Kalvi 10th Tamil

Subject

10th Tamil

Chapter

Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Format

PDF

Provider

Samacheer Kalvi Books


How to Download Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDFs?

  1. Visit our website - https://www.samacheerkalvibook.com/
  2. Click on the Samacheer Kalvi 10th Tamil Notes PDF.
  3. Look for your preferred subject.
  4. Now download the Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் notes PDF.

Download Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Chapterwise Notes PDF

Students can download the Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF from the links provided in this article.


Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

கற்பவை கற்றபின்

 

வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

Question 1.
அன்புச்செல்வன் திறன் பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.
Answer:
அன்புச்செல்வன் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
தொடுதிரை – வினைத்தொகை

 

Question 2.
அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.
Answer:
மோர்ப் பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
மோர் கொடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

Question 3.
வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
Answer:
வெண்டைக்காய்ப் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

 

Question 4.
தங்க மீன்கள் தண்ணீர்த் தொட்டியில் விளையாடுகின்றன.
Answer:
தங்கமீன்கள் – உவமைத்தொகை
தண்ணீர்த் தொட்டியில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

 

மொழியை ஆள்வோம்

தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flower’s fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
Answer:

இயற்கை

பொன்னான கதிரவன் நாள்தோறும் காலையில் எழுந்து அதன் ஒளிக்கதிர்களை வீசி, இருளை மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையைத் தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று அனைத்து
இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.

 

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்
Answer:
எ.கா: இன்சொல் – பண்புத்தொகை
இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.

1. எழுகதிர் – வினைத்தொகை
மனித வாழ்க்கை எழுகதிர் போன்றது.

2. கீரிபாம்பு – உம்மைத்தொகை
கலாவும் மாலாவும் கீரியும் பாம்பும் போல எப்பொழுதும் பகைமையோடு வாழ்கின்றனர்.

3. பூங்குழல் வந்தாள் – அன்மொழித்தொகை
பூ போன்ற கூந்தலையுடைய (குழல்) பெண் வந்தாள்

4. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை
குறிஞ்சி நில மக்கள் மலையின் கண் வாழ்வார்.

5. முத்துப்பல் – உவமைத்தொகை
மாலாவின் முத்துப்பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது.

 

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு, ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள், ஆல மலர்; பலா மலர்.

மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் : சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் : அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.

பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன : நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
– கோவை. இளஞ்சேரன்.

 

Question 1.
மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.
Answer:
மலருக்குப் பெயர் உண்டு.

Question 2.
அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
Answer:
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.

Question 3.
நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் அதன் பயன்களையும் எழுதுக.
Answer:
முருங்கைப்பூ:
இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும். குடித்துவர நீரழிவு நோய், நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவு ஆற்றல் பெருகும்.

எருக்கம் பூ:
எருக்கம் பூவைக் காய வைத்து பொடி செய்து புண்களில் பூச விரைவில் குணமாகும். கால் வீக்கம் குறைய இப்பூவை எண்ணெயில் வதக்கிக் கட்ட வீக்கம் நீங்கும்.

 

Question 4.
அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
குறிப்புப் பெயரெச்சம்

Question 5.
தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.
Answer:
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும். இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை, கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.

 

வாழ்த்துமடல் எழுதுக.

மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
Answer:

திருநெல்வேலி,
12-03-2020.

அன்புள்ள நண்பன் அரசுக்கு,
உன் உயிர் நண்பன் எழுதுவது. நலம் நலமறிய ஆவல்,
நேற்றைய நாளிதழில் ‘மரம் இயற்கையின் வரம்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்குகொண்டு முதல் பரிசு பெற்றதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினோம். நாளிதழிலும் அக்கட்டுரை வெளிவந்திருந்தது. அதனைப் படித்துப் பார்த்தோம்.

என்று நீ எழுதிய சொற்கள் விழிப்படையச் செய்துவிட்டது. நாங்களும் எங்கள் பகுதியில் மரங்களை நட்டு இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டோம்.

நீயும் இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு உலகளாவிய சாதனைகளைப் பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமைத் தேடித்தர மனதார உன்னை வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,
உன் உயிர் நண்பன்,
க. தமிழ்ம ணி .

பாரதியின் வசனநடை – சிட்டுக்குருவி

சிறியதானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.
இது போன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசனநடையில் எழுதுக.

 

மயில்

உறுதி மிக்க மூக்கு; விதையொத்த கண்கள்; சின்னத்தலை; கரும்பச்சை மற்றும் கருநீல நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; கருமை, சாம்பல் மற்றும் செந்நிறம் கலந்த பட்டுப்போர்த்த முதுகு; நீண்ட அழகிய பல வண்ணத்தாலான தோகை; பனங்கிழங்கையொத்த கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒருவர் கையிலே பிடிப்பது மிகவும் அரிது. இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டுத் தோட்டத்திற்கு இரண்டு, உயிர்கள் வந்து போகின்றன. அவற்றில் ஒன்று ஆண் மயில் மற்றொன்று பெண் மயில்.

மொழியோடு விளையாடு

சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

Question 1.
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
Answer:
நறுமணம்

Question 2.
பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்.
Answer:
புதுமை

 

Question 3.
இருக்கும்போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை.
Answer:
காற்று

Question 4.
நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும்.
Answer:
விண்மீன்

Question 5.
ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்.
Answer:
காடு

 

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

Question 1.
கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
Answer:
காற்றின் பாடல்

Question 2.
புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
Answer:
மொட்டின் வருகை.

 

Question 3.
சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
Answer:
மிதக்கும் வாசம்.

Question 4.
இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
Answer:
உயிர்ப்பின் ஏக்கம்.

Question 5.
நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
Answer:
நீரின் சிலிர்ப்பு.

 

Question 6.
குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.
Answer:
வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு.

அகராதியில் காண்க.

அகன்சுடர், ஆர்கலி, கட்புள், கொடுவாய், திருவில்
Answer:
அகன்சுடர் – (அகல் என்பதன் திரிபு) அகல்சுடர், அகன்ற சுடர்.
ஆர்கலி – கடல், மழை, வெள்ளம், பேரொலி, ஆரவாரம்.
கட்புள் – ஓர் புலவன்.
கொடுவாய் – ஒரு மிருகம், பழிச்சொல், புலி, குறளை, வளைந்த வாய்.
திருவில் – இந்திரவில்.

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நிற்க அதற்குத் தக

வானொலி அறிவிப்பு

ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயலின்போது

மேற்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

  • புயலின் போது வெளியே செல்ல மாட்டோம்.
  • தொலைபேசி மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.
  • மாடியில் இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியிலேயே குடும்பத்தினரோடு தங்குவேன்.
  • காற்றடிப்பது நின்றாலும் வானொலி அறிவிப்பைக் கேட்டு அதற்கேற்ப செயல்படுவோம்.

 

கலைச்சொல் அறிவோம்

  • Storm – புயல்
  • Tempest – பெருங்காற்று
  • Sea Breeze – கடற்காற்று
  • Tornado – சூறாவளி
  • Land Breeze – நிலக்காற்று
  • Whirlwind – சுழல்காற்று

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
அ) பண்புத்தொகை

 

குறுவினா

Question 1.
தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.
Answer:
தண்ணீ ர் குடி

  • தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
  • மிகுந்த தாகத்தினால் தண்ணீரைக் குடித்தேன்.

தயிர்க்குடம்

  • தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)
  • கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

 

சிறுவினா

Question 1.
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பகுதியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.
Answer:
மல்லிகைப்பூ

  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.
  • மல்லிகை என்னும் பூ (மல்லிகை – சிறப்புப் பெயர், பூ – பொதுப் பெயர்)

பூங்கொடி

  • உவமைத் தொகை
  • பூ போன்ற கொடி

தண்ணீர்த் தொட்டியில்

  • இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
  • தண்ணீரை ஊற்றும் தொட்டி

குடிநீர் நிரப்பினாள்

  • இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • குடிநீரை நிரப்பினாள்

 

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஈ) ஆறு

Question 2.
கீழ்க்காணும் சொற்களில் உம்மைத்தொகை அல்லாத சொல் எது?
அ) தேர்ப்பாகன்
ஆ) அண்ண ன் தம்பி
இ) வெற்றிலை பாக்கு
ஈ) இரவு பகல்
Answer:
அ) தேர்ப்பாகன்

 

Question 3.
‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?
அ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை
Answer:
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

Question 4.
பொருத்துக.
1. மதுரை சென்றார் – அ) வினைத்தொகை
2. வீசு தென்றல் – ஆ) பண்புத்தொகை
3. செங்காந்தள் – இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. மார்கழித் திங்கள் – ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
ஆ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
இ) 1.ஈ 2.ஆ 3.அ 4.இ
ஈ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

 

Question 5.
பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
அ) 1.ஆ 2.ஈ. 3.அ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.இ 3.அ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ

Question 6.
பண்புத்தொகை அல்லாத ஒன்று அ) செங்காந்தள்
ஆ) வட்டத்தொட்டி
இ) இன்மொழி
ஈ) கொல்களிறு
Answer:
ஈ) கொல்களிறு

 

Question 7.
காலம் கரந்த பெயரெச்சம்
அ) வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
அ) வினைத்தொகை

Question 8.
வேற்றுமையுருபு அல்லாதது
அ) ஐ, ஒடு
ஆ) கு, இன்
இ) ஆகிய, ஆன
ஈ) அது, கண்
Answer:
இ) ஆகிய, ஆன

 

Question 9.
பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்
ஆ) பண்புத்தொகை – இன்மொழி
இ) உம்மைத்தொகை – தாய் சேய்
ஈ) அன்மொழித்தொகை – சிவப்புச்சட்டை பேசினார்
Answer:
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்

Question 10.
‘மலர் போன்ற கை’ இதில் ‘மலர்’ என்பது ………………….. ‘போன்ற’ என்பது ……………… ‘கை’ என்பது…………………..
அ) உவம உருபு – உவமை – உவமேயம்
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்
இ) உவமேயம் – உவமை – உவம உருபு
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
Answer:
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்

 

Question 11.
சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும் தொகைச்சொல்
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

Question 12.
மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?
அ) மார்கழி, சாரை
ஆ) திங்கள், பாம்பு
இ) மார்கழி, பாம்பு
ஈ) திங்கள், சாரை
Answer:
ஆ) திங்கள், பாம்பு

 

Question 13.
‘செங்காந்தள்’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) ஐ
Answer:
ஆ) ஆகிய

Question 14.
‘இன்மொழி’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) இன்
Answer:
அ) ஆன

Question 15.
‘மதுரை சென்றாள்’ – இவ்வேற்றுமைத்தொகைச் சொல்லில் இடம்பெறும் வேற்றுமை உருபு
அ) கு
ஆ) கண்
இ) ஆல்
ஈ) அது
Answer:
அ) கு

 

Question 16.
கரும்பு தின்றான் – இத்தொடர் …………………………….. வேற்றுமைத்தொடர்.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) நான்காம்
ஈ) ஆறாம்
Answer:
அ) இரண்டாம்

Question 17.
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கான சொல்
அ) தேர்ப்பாகன்
ஆ) தமிழ்த்தொண்டு
இ) கரும்பு தின்றான்
ஈ) மதுரை சென்றார்
Answer:
ஆ) தமிழ்த்தொண்டு

 

Question 18.
பொருத்திக் காட்டுக.
i) வீசு தென்றல் – 1. உம்மைத் தொகை
ii) செங்காந்தள் – 2. உவமைத்தொகை
iii) மலர்க்கை – 3. பண்புத்தொகை
iv) தாய்சேய் – 4. வினைத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 19.
இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்
அ) மலர்க்கை
ஆ) அண்ண ன் தம்பி
இ) மார்கழித்திங்கள்
ஈ) தேர்ப்பாகன்
Answer:
இ) மார்கழித்திங்கள்

 

Question 20.
பொருத்துக.
i) இன்மொழி – 1. உவமைத்தொகை
ii) தாய்சேய் – 2. வினைத்தொகை
iii) முத்துப்பல் – 3. உம்மைத் தொகை
iv) வருபுனல் – 4. பண்புத்தொகை
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஈ) 4, 3, 1, 2

Question 21.
சிவப்புச்சட்டை பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
அ) பண்புத்தொகை

 

குறுவினா

Question 1.
சொற்றொடர் என்றால் என்ன? எ.கா. தருக.
Answer:

  • சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தரும்.
  • இது தொடர் அல்லது சொற்றொடர் எனப்படும்.
    எ.கா: நீர் பருகினான்.

Question 2.
தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
Answer:

  • பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும் சேரும் தொடர்.
  • இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து வரும்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்கும்.
    எ.கா: கரும்பு தின்றான்.

Question 3.
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை:

  • வேற்றுமைத்தொகை
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை
  • உம்மைத்தொகை
  • அன்மொழித்தொகை

 

Question 4.
வேற்றுமை உருபுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
வேற்றுமை உருபுகள் ஆறு. அவை: ஐ, ஆல், கு, இன், அது, கண்.

Question 5.
வேற்றுமைத்தொகை என்றால் என்ன? எ.கா தருக.
Answer:
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளில் ஏதேனும் ஒன்று மறைந்து வந்து பொருள் தரும். எ.கா: மதுரை சென்றார் – மதுரைக்குச் சென்றார்.

Question 6.
உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை என்றால் என்ன? எ.கா. தருக.
Answer:
ஒருஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வரும். எ.கா: தேர்ப்பாகன்.
தேரை ஓட்டும் பாகன். ஐ – உருபு; ஓட்டும் – பயன்.
இதுவும் வேற்றுமைத் தொகையே.

 

Question 7.
பண்புத்தொகையைச் சான்றுடன் விளக்குக.
Answer:

  • அளவு, நிறம், வடிவம், சுவை ஆகியவற்றை உணர்த்தும்.
  • பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும். இடையில் ‘மை’ என்னும் பண்பு விகுதி மறைந்து வரும்.
  • ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகள் மறைந்து வரும்.
    எ.கா: செங்காந்தள், வட்டத்தொட்டி.

Question 8.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன? சான்று தருக.
Answer:

  • சிறப்புப் பெயர் முன்னும் பொதுப் பெயர் பின்னுமாக வரும்.
  • இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வரும்.
    எ.கா: மார்கழித் திங்கள்.

Question 9.
உவமைத்தொகை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தந்து விளக்குக.
Answer:
உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் உவம உருபு மறைந்து வரும்.
எ.கா: மலர்க்கை . உவமை – மலர், உவமேயம் – கை, உவம உருபு – போன்ற.
மலர் போன்ற கை எனப் பொருள் படும்.

 

Question 10.
உம்மைத்தொகை என்றால் என்ன? சான்று தந்து விளக்குக.
Answer:
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வரும். எ.கா: தாய்சேய், அண்ண ன் தம்பி.
தாயும் சேயும், அண்ணனும் தம்பியும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.

Question 11.
அன்மொழித்தொகை என்றால் என்ன?
Answer:
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்களில் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தரும்.
எ.கா: முறுக்கு மீசை வந்தார்.
முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகை நிலைத்தொடர் அல்லாத வேறு சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது.

Question 12.
உம்மைத்தொகை எத்தனை அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்? அவை யாவை?
Answer:
உம்மைத்தொகை நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும். அவை:

  • எண்ண ல்
  • நீட்டல்
  • எடுத்தல்
  • முகத்தல்

 

Question 13.
இடைச்சொல் மறைந்து வரும் தொகைச் சொற்கள் எவை?
Answer:

  • வேற்றுமைத் தொகை
  • இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • வினைத்தொகை
  • உவமைத்தொகை
  • பண்புத்தொகை
  • அன்மொழித்தொகை

 

Question 14.
வினைத்தொகையைச் சான்றுடன் விளக்குக.
Answer:
காலம் கரந்த பெயரெச்சம். காலம் காட்டும். இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்கும். வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடக்கும். எ.கா: வீசு தென்றல் என்பது, வீசிய தென்றல் வீசுகின்ற தென்றல் வீசும் தென்றல் என முக்காலத்திற்கும் பொருந்தும்.


How to Prepare using Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF?

Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes PDF by following certain essential steps which are provided below.


  • Use Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் notes by paying attention to facts and ideas.
  • Pay attention to the important topics
  • Refer TN Board books as well as the books recommended.
  • Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
  • Highlight and explain the concepts in details.


Samacheer Kalvi 10th Tamil All Chapter Notes PDF Download


Frequently Asked Questions on Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes


How to use Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Notes for preparation??

Read TN Board thoroughly, make separate notes for points you forget, formulae, reactions, diagrams. Highlight important points in the book itself and make use of the space provided in the margin to jot down other important points on the same topic from different sources.

How to make notes for Samacheer Kalvi 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் exam?

Read from hand-made notes prepared after understanding concepts, refrain from replicating from the textbook. Use highlighters for important points. Revise from these notes regularly and formulate your own tricks, shortcuts and mnemonics, mappings etc.
Share:

0 comments:

Post a Comment

Copyright © Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions About | Contact | Privacy Policy