Samacheer Kalvi Books– Tamilnadu State Board Text Books Solutions for Class 1 to 12.

Saturday, October 16, 2021

Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes

Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes
Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes


Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Chapter Wise Notes PDF from the links provided in this article.


Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF Download

We bring to you specially curated Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.


Board

Tamilnadu Board

Study Material

Notes

Class

Samacheer Kalvi 11th Tamil

Subject

11th Tamil

Chapter

Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

Format

PDF

Provider

Samacheer Kalvi Books


How to Download Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDFs?

  1. Visit our website - https://www.samacheerkalvibook.com/
  2. Click on the Samacheer Kalvi 11th Tamil Notes PDF.
  3. Look for your preferred subject.
  4. Now download the Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் notes PDF.

Download Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Chapterwise Notes PDF

Students can download the Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF from the links provided in this article.


பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காணும் திருத்தற்குறியீடுகளைப் பொருத்திச் சரியான விடை காண்க.
1. நிறுத்தற்குறிகள்
2. இடைவெளி தரவேண்டியவை
3. இணைக்க வேண்டியவை
4. எழுத்து வடிவம்

1. 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
2. 1 – அ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ
3. 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
4. 1 – இ, 2 – ஆ, 3 – அ, 4 – ஈ
Answer:
1.1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 ஆ

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக?
Answer:
நூல்களோ, இதழ்களோ பிரைகோடு வெளிவந்தால், படிப்பவர் கருத்துகளைத் தவறாக உணர்வர். எனவே, எழுத்துப்பிழை, தொடர்பிலை மயங்கொலிப்பிழை, ஒருமை பன்மைப்பிழை இல்லாமல் திருத்தமாக அச்சிட வேண்டும். அச்சுப்படி மெய்ப்பு) திருத்துபவர், இப்பணியைச் செய்வதற்குரிய நெறிமுறைகளை திருத்தக் குறியீடுகளைத் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.

அச்சுப்படி திருத்துபவர் அறிந்திருக்க வேண்டிய குறியீடுகளை ஐந்து வகைகளாகப் பிரிப்பர்.
i. பொதுவானரை (General)
ii. நிறுத்த குறியீடுகள் தொடர்பானவை (Punctuations)
iii. இன்வெளி தரவேண்டியவை (Spacing)
iv இணைக்க வேண்டியவை (Alignment)
எழுத்து வடிவம் (Type / Font) என்பனவாகும்.
Answer:


Question 2.
ஏற்ற இடங்களில் அச்சுத் திருத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறையைக் கீழ்க்காணும் பத்தியின் மூலம் அறிக.

அறிஞர் வாழ்வில் நகைச்சுவை

கவிஞர் கண்ணதாசன் கல்லூரி ஒன்றில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு

கவிதை யை வாசிக்க ஆரம்பித்தார்ர். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடித்தது) கரவொலி)
அடங்க வெகு நேரம் பிடித்தது கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார் ,”இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதைய எழுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார் அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதியுஅ கவிதையை அவரை வாசிக்கசொ சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என்கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு. ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய சொல்லும் பொருளைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது”.
Answer:
கவிஞர் கண்ணதாசன், கல்லூரி ஒன்றில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது, ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடித்ததும், கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது. கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், “இன்று நான் வாசித்த கவிதை, நான் எழுதியது அன்று. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர், நேற்று ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு வந்து, என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது. எனவே, நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்கச் சொல்லிவிட்டு, அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது, எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது, பலத்த வரவேற்பு. ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழியச் சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”

Question 3.
அச்சுப்படி திருத்துபவரின் பணிகள் யாவை?
Answer:

  • அச்சுப்படியில் ஒவ்வொரு வரியையும் படித்து, மூலப்படியில் உள்ளபடியே செய்திகள் அச்சாகி உள்ளனவா எனக் கவனிக்க வேண்டும்.
  • செய்தியின் உள்ளடக்கம், புள்ளி விவரங்கள், எண்கள், அட்டவணைகள் முதலியன விடுபட்டுள்ளனவா என்பதை, மூலப்படியுடன் ஒப்பிட்டுக் கவனிக்க வேண்டும்.
  • அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ, உள்ளடக்கத்தையோ மாறுதல் கூடாது.
  • பிழை ஏற்பட்ட சொல்லின் மீது திருத்தத்தை எழுதக்கூடாது. வலமாகவே இடமாகவோ ஓரத்தில் எழுதவேண்டும்.
  • ஒரு வரியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிழைகள் இருந்தால், பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாகக் காட்டல் வேண்டும்.
  • பிழைகள் பல இருந்தால், அதை நீக்கித் தெளிவாக எழுதி வேண்டும்.
  • அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ண மையால் திருத்த வேண்டும்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
திரு. வி. கலியான கந்தரனார் (1883-1953)

“பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயாருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை, உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன பாரிக்கின்றன; இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இள ஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்தும் வவவொளி வீசி எழுங்கள்; எழுங்கள்” என்று, இளமை விருந்து நூலில் தமிழினைக் கட்டுக்குள் அக்காமல் செழுமையுறச் செய்ய இளைஞர்களை அழைத்தவர் திரு.வி.க.

திரு.வி.க. தம் கந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார். வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா. கதிரைவேல் என்பவரிடய தமிழ்ப் படித்தார். பிறகு மயிலை தணிகாசலம் என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார்.

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படும் திரு.வி.க… பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு , மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்தினவ, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய நூல்களை எழுதினார். சிறந்த மேடைப்பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய இவர், தேசபக்தன், நவசக்தி இதயக்களுக்கு ஆசிரியராக விளங்கினார். தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தார். இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி:

1. பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து, உலகை
நோக்குங்கள் – ஒரே தொடராக மாற்றுக.
பொறுமையைப் பூண்டு, அதன் ஆற்றலை உணர்ந்து உலகை நோக்குங்கள்.

2. எவையேனும் இரண்டு முன்னிலைப் பன்மை வினைமுற்றுச் சொற்களைப் பத்தியிலிருந்து எடுத்து எழுதுக.
நோக்குங்கள், உணருங்கள்.

3. தமிழ்த்தென்றல் என்று திரு.வி.க. அழைக்கப்படுகிறார். – இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக.
திரு.வி.க.வைத் தமிழ்த்தென்றல் என அழைக்கின்றனர்.

4. ஞாயிற்றொளி – புணர்ச்சிவிதி கூறுக.
ஞாயிற்றொளி – ஞாயிறு + ஒளி
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் டறஒற்று இரட்டும்” (ஞாயிற்று + ஒளி)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (ஞாயிற்ற் + ஒளி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஞாயிற்றொளி)

5. எண்ணும்மைத் தொடர்கள் இரண்டனை எடுத்து எழுதுக.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இந்தியாவும் விடுதலையும்.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. தமிழினைக் கட்டுக்குள் அடக்காமல், செழுமையுறச் செய்ய இளைஞர்களை ‘இளமைவிருந்து’ நூலில் அழைத்தவர் திரு.வி.க.
வினா : ‘இளமைவிருந்து’ நூலில் இளைஞர்களைத் திரு.வி.க. எதற்காக அழைத்தார்?

2. திரு. வி. க. தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
வினா : திரு.வி.க., எதைத் தோற்றுவித்து, எதற்காகப் பாடுபட்டார்?

3. சிறந்த மேடைப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய திரு.வி.க. தேசபக்தன், நவசக்தி
இதழ்களுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.
வினா : திரு.வி.க. எவ்வெவற்றில் சிறந்து விளங்கினார்?

தமிழக்கம் தருக.

1. An eye for an eye only end up making the whole world blind.
கண்ணுக்குக் கண் எனப் பழிவாங்கும் செயல், முடிவில் உலகம் முழுவதையுமே குருடாக்கிவிடும்.

2. You must be the change you wish to see in the world.
இந்த உலகத்தில் மாற்ற தைக் காண விரும்பினால், நீ முதலில் மாறவேண்டும்.

3. The week can never forgive. Forgiveness is the attribute of the strong.
வலிமை இல்லாதவன் மறக்கமாட்டான். மறப்பது என்பது வலிமையானவனின் உயர்பண்பு.

4. Nobody can hurt me without my permission.
என் அனுமத் இல்லாமல் என்னை எவரும் வேதனைப்படுத்த முடியாது.

5. You must not lost faith in humanity. Humanity is an ocean, if a few drops of the
S are dirty, the ocean does not become dirty. – Mahatma Gandhi மனித இனத்திடம் நீ நம்பிக்கையை இழக்கக்கூடாது. மனித இனம் என்பது பெருங்கடல். அதில்
சில துளிகள் அழுக்காக இருந்தால், கடலே அழுக்கடைந்து விடாது.

கதையைப் படித்துப் பொருளுணர்ந்து, நிகழ்வை உரையாடலாக மாற்றுக. கதையில் காணலாகும் எவையேனும் ஐந்து பிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களை எழுதுக. நிகழ்வை உரையாடலாக மாற்றுதல்.

(அலுவலகத் தொலைபேசி ஒலிக்கிறது)

அம்மா : வணக்கம்.
செந்தில் : உடனே நீ அலுவலகத்திற்கு விடுப்புச் சொல்லிவிட்டு, என் அலுவலகம் வா. இன்று ஆயுள்காப்பு விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடவேண்டும். உன் நிழற்படத்தையும், சஞ்சுவின் நிழற்படத்தையும் எடுத்து வா (தொலைபேசி துண்டிப்பு)

அம்மா : (தனக்குள்) அலுவலகத்தில் கணக்குத் தணிக்கை நடக்கிறது. என்ன செய்வது? (மீண்டும் தொலைப்பேசி ஒலிக்கிறது) (தனக்குள்) இது, சஞ்சுவின் பள்ளி அழைப்புப்போல் உள்ளதே! என்னவோ?

சஞ்சு : அம்மா, நான் சஞ்சு பேசுகிறேன்.
அம்மா : என்னடா, உடம்புக்கு ஏதாவதா? (பதற்றத்தை மறைத்தபடி)
சஞ்சு : அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா. வகுப்பு ஆசிரியரிடம் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் பேசுகிறேன். மன்னித்துக்கொள்
அம்மா. அம்மா : சஞ்சு, எதற்கு மன்னிப்பு?
சஞ்சு : இன்று உங்கள் பிறந்தநாள் ஆயிற்றே! மறந்துவிட்டீர்களா?

அம்மா : அடடே. ஆமாம், ஜூலை பத்து இல்லே. எப்படி மறப்பேன்? உன் அப்பாகூட நினைவில் வைத்து வாழ்த்துச் சொல்லவில்லையே!
சஞ்சு : (கொஞ்சும் குரலில்) ம்மா….இரவுகூட நினைவு இருந்தது. காலையில் திடீரென மறந்து போனது. மன்னித்துக்கொள்ளுங்கள்

அம்மா. உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள்!
(மகிழ்ச்சியில் திக்கித் திணறியபோது) அம்மா, நான் உங்களுக்காக ஒரு கரியகாந்திப்பூ வரைந்து வைத்துள்ளேன். மாலை வீடு வந்ததும் தருகிறேன். சரியா?

அம்மா : ரொம்ப நன்றி செல்லம். ரொம்ப நன்றி! (மனச்சுமை குறைந்து, மகனுடன் நடப்பதுபோல் உணர்தல்)

ஏழு பிறமொழிச் சொற்கள் – உரிய தமிழ்ச்சொற்கள்

1. போன் – தொலைபேசி
2. லீவ் – விடுப்பு
3. இன்ஷூரன்ஸ் பேப்பர் – ஆயுள்காப்பீட்டுப் படிவம்
4. ஸ்பெஷல் பர்மிஷன் – சிறப்பு அனுமதி
5. பர்த்டே – பிறந்தநாள்
6. ஈவ்னிங் – மாலை
7. தாங்க்ஸ் – நன்றி

உரை எழுதுவோம்

உன் பள்ளியில் திரு. அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படுகிறது. பள்ளிக்கு அருகில் உள்ள கல்லூரியின் மாணவர்கள் திரட்டிய நிதியைக் கொண்டு, பள்ளியின் உயர்வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் கையடக்கட பிரதி ஒன்றும், நில வரைபடப் புத்தகம் ஒன்றும் பரிசளிக்கிறார்கள். அவர்களுக்குப் பள்ளியின் சார்பாக நன்றி கூற, ஒருபக்க அளவில் நன்றியுரை ஒன்றை எழுதுக.

விழா நாயகர் அவர்களே
விழா நடத்தும் கல்லூரி மாணவச் சகோதரர்களே!
கூடி இருக்கும் மாணவ நண்பர்களே!
இந்த விமாவின் நோக்கம் இன்னது என்பதை நாம் அறிவோம். சாதனை பல படைத்து, சாதாரண குடிமகனும் அருஞ்செயல்களால் இந்திய நாட்டின் தலைமகனாகச் செயல்பட முடியும் என்பதை நிலைநாட்யெவா, மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்.

அவர் இன்று நம்மோடு இல்லை. எனினும், அவர் குறிப்பாக மாணவச் சமுதாயத்துடன் கொண்ட தொடர்பையோ, நம்மிடம் செலுத்திய அன்பையோ, நம் முன்னேற்றத்திற்கு அவர் கூறிய அறிவுரைகளையோ நாம் மறந்துவிட முடியாது.

அதற்கு வாழும் சான்றாக, நம் அருகிலுள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள், அண்ணன்மார்கள், நமக்கு வழிகாட்டவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல் ஒன்றையும், நில வரைபடப் புத்தகம் ஒன்றையும் வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மட்டுமல்ல, நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்பித்ததற்காகவும் என் சார்பாகவும், எங்கள் பள்ளியின் சார்பாகவும், நெறிகாட்டும் தலைமை மற்றும், ஆசிரியர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம்.
– மகாத்மா காந்தி

இலக்கிய நயம் பாராட்டுக

சங்கத் தமிழ் அனைத்தும் தா

இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற
மூதாயியை தேடியலைந்த களைப்பில் பறவை
ஒருகாலத்தில் தன் தாகம் தணித்த
மண்பானையைத்தேடி அல்லலுற்றது.
பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன
கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை
ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி
அடைகாக்க இன்னொரு இடமற்றுப் போக…….
நீலவண்ண க் கடற்பரப்பில்

அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது.
அதன் குஞ்சு பொரிப்பில்
ஆயுதமும் புல்லாங்குழல் மறுகையுமாய்
அணங்கொருத்தி உதித்தெழுந்தாள்.
வயல்வெளியெங்கும் சலசலத்துத் திரிந்த
மருதயாழின் ஓசை வழிந்தோட
கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின்முன்
பிரபஞ்சமே தன்னைப் புனைந்து கொண்டது
பாணனின் கோப்பை
இப்போது காலியாயிருந்தது
தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்து பூவைக்
குழந்தைக்குத் தந்து வலியில் வாழ்கிய

பச்சைத்தாவரத்தின் கண்களில்
ஒருதுளி ரத்தம் தேங்கியருந்தது
சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத்திறந்து
காக்கைப்பாடியை வெளியேவந்தாள்.
ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென
அருகே வந்தவள் முத்தம் தருகையில் பறவைகள் தொலைந்துபோன பூமியில்
குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து
கணிப்பொறித்திரையில்
என் சின்னமகள்
ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள்.
– ஹெச். ஜி. ரசூல்

சங்கத் தமிழ் அனைத்தும் தா

ஆசிரியர் குறிப்பு : இந்தப் புதுக்கவிதையைப் பாடியுள்ளவர் ஹெச். ஜி. ரசூல் ஆவார். இவர் இயற்கை, மொழி, இலக்கியம், தமிழ்ப் பண்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி இதனைப் படைத்துள்ளார்.

பாடல் பொருள் : இரண்டாயிரம் ஆண்டுக்கால வாழ்வுடைய நீண்ட நெடிய கவிதையைப் பெற்றெடுத்த முதுமையான தாயைத் தேடிக் களைத்தேன். அது, ஒரு காலத்தில் தன் தாகத்தைத் தணிக்கத் தண்ணீரைத் தேடி அலைந்த காக்கை, மண் பானையைக் கண்டு நீர் பருக அல்லல் உற்றதுபோல் உள்ளது. பாடப் புத்தகத்தில் படங்களைப் பார்த்துச் சொல்லிக் கொடுத்த கதைக்கு உள்ளிருந்து எந்த நீரூற்றும் பீறிட்டு எழவில்லை. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்துவகையான நிலங்களையும் பெயர்த்தெடுத்து, வேறு இடத்தில் வைத்துப் பாதுகாக்க வழி இல்லை.

நீலவண்ணக் கடலை ஒட்டிய நிலப்பரப்பில் அந்தப் பறவை முட்டை ஒன்றை இட்டது. அது குஞ்சு பொரித்தபோது, பெண் ஒருத்தி, ஒருகையில் படைக்கருவியும் இன்னொரு கையில் புல்லாங்குழலுமாகத் தோன்றினாள்! வயல்வெளி எங்கும் மருதயாழின் ஓசை சலசலத்து வழிந்து ஓடியது! கால்களைச் சுழற்றி ஆடிய நாட்டிய நங்கை (விறலி)யின் கூத்தின்முன், இந்தப் பிரபஞ்சமே தன்னை அலங்கரித்துக் கொண்டது.

பாடலிசைப்பவனின் (பாணனின்) கைக்கோப்பை கள்ளின்றி இப்போது காலியாக உள்ளது. அதோ, தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்து எடுத்த பூவைக் குழந்தைக்குக் கொடுத்துவிட்டு, வலியில் மூழ்கித் துன்புறும் பசுமையான தாவரத்தின் கண்களில் இரத்தம் ஒரு துளியாகத் தேங்கி இருப்பதைப் பார்த்தாயா? சங்க இலக்கியக் கவிதையிலிருந்து எழுத்து ஒன்றைத் திறந்துகொண்டு, காக்கைப்பாடினி அம்மை வெளிவந்தாள். என்னைக் கண்டு, “ஆறாம் திணையில் துளிர்த்தெழுந்த அறிவியல் தமிழ், நீ” எனக் கூறியபடி அருகில் வந்து முத்தம் கொடுத்தாள். அப்போது பூமியில் பறவைகள் தொலைந்துபோய் இருந்தன. குளிர் ஊட்டப்பட்ட அறை ஒன்றுக்குள் உட்கார்ந்துகொண்டு, என் சிறிய மகள் கணிப்பொறித் திரையில் ஒரு காக்கையின் படத்தை வரைந்து கொண்டிருந்தாள்.

மையக்கருத்து : இயற்கைவழி வாழ்ந்ததை மறந்து, இன்று மக்கள் அறிவியல் சாதனங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வெளியில் சிட்டுக் குருவிகளையும் காக்கைகளையும் காண முடியவில்லை. வசிக்கும் அறை குளிரூட்டப்பட்டிருக்கிறது. வாழ்வுமுறைகள் அனைத்தும் மாறி இருக்கின்றன. பண்டைய இயற்கை வாழ்வை இலக்கியங்களில் இருந்துதான் காணமுடிகிறது. அவர்றையாவது காப்போம். தாகம் தீர்க்க முயல்வோம் என்பதே மையப்பொருளாகும்.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக

Answer:
ஆறறிவு படைத்த மனித இனம் நீ
ஐயறிவு படைத்த விலங்தனம் நான்
நான் தோன்றிய காலம் முதல் இப்படியே வாழ்கிறேன்
நீ குளிரில் சம்பரிக் கோட்டும் குல்லாயும் அணிந்துள்ளாய்
உன் அறிவும் செயலும் இயற்கையை மாற்றிவிட்டது
நான் இன்றும் இயற்கையோடு பொருந்தியே வாழ்கிறேன்.
என்ன அறிவு இருந்து என்ன பயன்?
இயற்கைவழி வாழ்வே நல்வாழ்வு என்று தெளிவுகொள்!
நாயதானே சொன்னது என்று நக்கல் செய்யாதே !
மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்றார் ஐயன் வள்ளுவர்!

missing content

இடமிருந்து வலம் :

1. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளைக் கூறும் துறை (9) – பொருண்மொழிக் காஞ்சி
7. தேன் – மற்றொரு சொல் (4) – பிரசம்
15. புல்லின் இதழ்கள் – நூலாசிரியர் (4) – விட்மன்
16. கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடம் (4) – மன்றம்
17. சி.சு.செல்லப்பா நடத்திய இதழ் (4) – எழுத்து
19. ஜி.யு.போப், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பக்தி இலக்கியம் (6) – திருவாசகம்

வலமிருந்து இடம் :
6. யானை – வேறொரு சொல் (5) – அஞ்சனம்
9. வந்தவாசிக்கு அருகில் சமணப்பள்ளி இருந்த ஊர் (3) – வேடல்
12. உமறுப்புலவரை ஆதரித்தவர் (5) – சீதக்காதி
20. கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் (4) – அன்னம்

மேலிந்து கீழ் :
2. புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை (4) – காங்கனை
3. பாரதி நடத்த விரும்பிய கருத்துப்பட இதழ் (6) – சித்திரவளி
4. இளையராஜா உருவாக்கிய இராகம் (5) – பஞ்சமுகி
5. நற்றிணை 153ஆவது பாடலை இயற்றியவர் (6) – தனிமகனார்
6. அணுவைப்போலச் சிறுத்து நிற்கும் ஆற்றல் (3) – அணிமா
12. இந்தச் சொல்லின் திரிபே சீறா (3) – சீறத்
13. மகாபாரதத்தில் கொடைவீரன் (4) – கர்ணன் (கன்னன்)
14. பாரதிதாசன் நடத்திய இதழ் (3) – குயில்

கீழிருந்து மேல் :
7. தவறு – வேறொரு சொல் (2) – பிழை
8. தருமு சிவராம் என்னும் புனைபெயரிலும் வாதியவர் (4) – பிரமிள்
9. மூங்கில் – மற்றொரு சொல் (2) – வேய்
10. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் (6), – திருவாதவூர்
11. ஐங்குறுநூறு பாடும் மலர்களில் ஒன்று (2) – சாயா
18. மலை என்றும் சொல்லலாம் (2) – வரை (கிரி)
19. பத்தாம் திருமுறை (7) – திருமந்திரம்

நிற்க அதற்குத் தக

மனித இனம் கூடிவாழும் இயல்புடையது. நாம் அன்றாடம் பலருடன் பழகக்கூடிய இன்றைய சூழலில் ஏற்படக்கூடிய சிறிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
Answer:

கலைச்சொல் அறிவோம்

நாங்கூழ்ப் புழு – Earthworm
உலகமயமாக்கல் – Globalisation
முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D)
விழிப்புணர்வு – Awareness
கடவுச்சீட்டு – Passport
பொருள்முதல் வாதம் – Materialism


How to Prepare using Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF?

Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes PDF by following certain essential steps which are provided below.


  • Use Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் notes by paying attention to facts and ideas.
  • Pay attention to the important topics
  • Refer TN Board books as well as the books recommended.
  • Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
  • Highlight and explain the concepts in details.


Samacheer Kalvi 11th Tamil All Chapter Notes PDF Download


Frequently Asked Questions on Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes


How to use Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Notes for preparation??

Read TN Board thoroughly, make separate notes for points you forget, formulae, reactions, diagrams. Highlight important points in the book itself and make use of the space provided in the margin to jot down other important points on the same topic from different sources.

How to make notes for Samacheer Kalvi 11th Tamil Chapter 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் exam?

Read from hand-made notes prepared after understanding concepts, refrain from replicating from the textbook. Use highlighters for important points. Revise from these notes regularly and formulate your own tricks, shortcuts and mnemonics, mappings etc.
Share:

0 comments:

Post a Comment

Copyright © Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions About | Contact | Privacy Policy