Samacheer Kalvi Books– Tamilnadu State Board Text Books Solutions for Class 1 to 12.

Saturday, October 16, 2021

Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes

Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes
Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes


Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Chapter Wise Notes PDF from the links provided in this article.


Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF Download

We bring to you specially curated Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.


Board

Tamilnadu Board

Study Material

Notes

Class

Samacheer Kalvi 11th Tamil

Subject

11th Tamil

Chapter

Chapter 7.5 ஆக்கப்பெயர்கள்

Format

PDF

Provider

Samacheer Kalvi Books


How to Download Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDFs?

  1. Visit our website - https://www.samacheerkalvibook.com/
  2. Click on the Samacheer Kalvi 11th Tamil Notes PDF.
  3. Look for your preferred subject.
  4. Now download the Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் notes PDF.

Download Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Chapterwise Notes PDF

Students can download the Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF from the links provided in this article.


Question 1.
ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கார் வாழ்வியலில் மிகுந்துள்ளன. – ஏன்?
Answer:

  • காலச்சூழலுக்கு ஏற்றவாறு, பயன்பாட்டிற்காகப் பல்வேறு பெயர்களைப் புதிதாக ஆக்கிக்கொள்கிறோம்.
  • இடுகுறியாகவும், காரணமாகவும் ஆக்கப்படும் புதிய சொல், ஆக்கப்பெயராகும்.
  • பெயர், வினைச்சொற்களுடன் ‘காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி’ என்னும் விகுதிகள் சேர்த்து உருவாக்கப்படும் புதுச்சொற்கள், தமிழின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.

கூடுதல் வினாக்கள்

Question 2.
தமிழில் பயன்படும் ஆக்கப்பெயர் விகுதிகள் யாவை?
Answer:
காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம், அகம் என்பன, தமிழில் பயன்படும் ஆக்கப்பெயர் விகுதிகள்.

எ-டு: வண்டிக்காரன், சமையல்காரர், வேலைக்காரி, பணியாள், ஆணையாளர், குற்றவாளி, விண்ண ப்பதாரர், கட்டுமானம், அலுவலகம்.

Question 3.
பொருள்களுக்கு முன்னோர் எவ்வாறு பெயரிட்டு வழங்கினர்?
Answer:
உலகப் பொருள்கள் அனைத்தும் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. சில பொருள்களுக்குக் காரணம் கருதியும், சில பொருள்களுக்குக் காரணம் இன்றியும் முன்னோர், பெயரிட்டு வழங்கினர்.

எ-டு: i. நாற்காலி, காற்றாடி, (காரணப்பெயர்கள்)
ii. இலை, கல், மண் – (இடுகுறிப்பெயர்கள் – காரணம் இன்றிப் பெயர் இடப்பட்டவை)

Question 4.
காரணப்பெயர்கள், இடுகுறிப்பெயராவதனை விளக்குக.
Answer:

  • காலப்போக்கில், பொருளின் மாற்றத்தால், அவை பயன்படும் நிலைக்கு ஏற்றவாறு, சில நேரங்களில் காரணப்பெயர், இடுகுறிப்பெயராகி விடுகிறது.
  • எ-டு : நான்கு கால்களோடு பின்புறம் சாயவும் கைகளை வைத்துக் கொள்ளவும் வசதியாக மரத்தால் செய்யப்பட்ட இருக்கை, காரணம் கருதி ‘நாற்காலி ‘ எனப் பெயரிடப்பட்டது.
  • இன்று நான்கு கால்கள் இல்லாத இருக்கைகளையும் ‘நாற்காலி’ என அழைக்கிறோம்.
  • அதாவது, கருதி வழங்கப்பட்ட ஒரு பொருளுக்கான பெயர், இன்று ‘இடுகுறியாக’ வழங்கப்படுகிறது.

Question 5.
ஆக்கப்பெயர் விகுதிகளின் தனிச்சிறப்பை எழுதுக.
Answer:

  • தமிழ்ச்சொற்களோடு ஆக்கப்பெயர் விகுதிகள் சேரும்போது, எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாகின்றன.
  • அவை தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.
  • தமிழ்மொழியில் பேச்சு வழக்கில் ஆக்கப்பெயர்கள், மிகுதியாக வழங்குவதனைக் காணலாம்.
    எ-டு : பூ விற்கும் பெண் – பூக்காரி (காரி)
    நெசவு செய்பவர் – நெசவாளி / நெசவாளர் (ஆளி / ஆளர்)
    உழைப்பவர் – உழைப்பாளி / உழைப்பாளர் (ஆளி / ஆவர்

Question 6.
‘காரன்’ விகுதி பெற்ற ஆக்கப்பெயர்கள் சில கூறு.
Answer:
வண்டிக்காரன், சினிமாக்காரன், மாட்டுக்காரன், ஆட்டோக்காரன், தோட்டக்காரன்.

Question 7.
ஆக்கப்பெயர்ச்சொற்களை, விகுதிகளைக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
Answer:
ஆக்கப்பெயர்ச்சொற்களை விகுதிகளைக் கொண்டு, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை:

  1. பெயருடன் சேரும் விகுதிகள்.
  2. பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்.
  3. வினையுடனும் எச்சத்துடனும் சேரும் வரதிகள்.

Question 8.
பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகள் யாவை? சான்று தருக.
Answer:
காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர் என்பன, பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகளாகும்.

Question 9.
பெயருடனும் வினையுடனும் சேரும் ஆக்கப்பெயர் விகுதியைச் சான்று தந்து விளக்குக.
Answer:

  • இடை என்னும் ஆக்கப்பெயர் விகுதி, பெயருடனும் வினையுடனும் சேர்ந்து வரும்.
  • அச்சு + அகம் – அச்சகம் (‘அச்சு’ என்னும் பெயருடன் வந்தது )
  • அலுவல் + அகம் – அலுவலகம் (‘அலுவல்’ என்னும் வினையுடன் வந்தது)

Question 8.
வினையுடனும் எச்சத்துடனும் சேரும் ஆக்கப்பெயர் விகுதியைச் சான்று தந்து விளக்குக.
Answer:

  • ‘மானம்’ என்னும் ஆக்கப்பெயர் விகுதி, வினையுடனும் எச்சத்துடனும் சேர்ந்து வரும்.
  • அடை + மானம் – அடைமானம் (‘அடை’ என்னும் வினையுடன் வந்தது)
  • கட்டு + மானம் – கட்டுமானம் (‘கட்டு’ என்னும் எச்சத்துடன் வந்தது )
  • தேய் + மானம் – தேய்மானம் (‘தேய்’ என்னும் எச்சத்துடன் வந்தது )

Question 9.
காரன், காரி, காரர் என்னும் ஆக்கப்பெயர் விகுதிகள், எவ்வெப்பொருள்களில் வரும்? சான்று தருக.
Answer:
ஆக்கப்பெயர் விகுதிகளுள் ‘காரன், காரி, காரர்’ என்பன, உடைமை, உரிமை, உறவு (தொடர்பு), தொழில் (ஆளுதல்) என்னும் நான்கு பொருள்களில் வரும்.

Question 10.
(விகுதி பெற்ற) தொழிற்பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதி எது? சான்று தருக.
Answer:
‘ஆளர்’ என்னும் ஆக்கப்பெயர் விகுதி, (விகுதிபெற்ற) தொழிற்பெயருடன் சேரும்.

Question 11.
பணிபுரிவோரைப் பிரித்து அறிய உதவும் ஆக்கப்பெயர் விகுதிகள் யாவை?
Answer:

  • ஆக்கப்பெயர் விகுதிகளுள் ‘ஆள்’ என்பது கடைநிலைப் பணிபுரிவோரையும்,
  • ‘ஆளர்’ என்பது உயர்நிலைப் பணிபுரிவோரையும்,
  • ‘ஆளி’ என்பது பணிபுரிவோருள் இருபாலாரையும் குறிக்கும் ஆக்கப்பெயர்களோடு வரும்.

Question 12.
கீழ்க்காணும் ஆக்கப் பெயர்ச்சொற்களில் காணப்பெறும் விகுதிகளை எழுதுக.
Answer:
அறிவியல் – அறிவு இயல்
திறமைசாலி – திறமை + சாலி
கோழைத்தனம் – கோழை தனம்
சமத்துவம் – சமம் + துவம்
பெண்ணியம் – பொன் + இயம்
பேச்சாளன் – பேச்சு + ஆளன்
ஏற்றுமதி – ஏற்று + மதி
குரங்காட்டி – குரங்கு + ஆட்டி
வண்டியோட்டி – வண்டி + ஓட்டி
பழந்தின்னி – பழம் + தின்னி
வாயாடி- வாய் + ஆடி
குடித்தனம் – குடி + தனம்
நீதிமான் – நீதி + மான்

பலவுள் தெரிக

Question 1.
அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள். – இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தம். அ) அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
ஆ) அடையாறுப் பாலத்தின் சுவரில்
இ) அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
ஈ) அடையாற்றுப் பாலத்தின் சுவரில்
Answer:
ஈ) அடையாற்றுப் பாலத்தின் சுவரில்

Question 2.
ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க.
அ) காவலாளி
ஆ) மேலாளர்
இ) உதவியாள்
ஈ) ஆசிரியர்
Answer:
ஈ) ஆசிரியர்

கூடுதல் வினாக்கள்

Question 3.
உடைமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர் எது?
அ) தோட்டக்காரர்
ஆ) உறவுக்காரர்
இ) நாட்டுக்காரி
ஈ) வீட்டுக்காரன்
Answer:
ஈ) வீட்டுக்காரன்

Question 4.
உரிமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர்
அ) வீட்டுக்காரன்
ஆ) தமிழ்நாட்டுக்காரி
இ) உறவுக்காரர்
ஈ) தோட்டக்காரர்
Answer:
அ) வீட்டுக்காரன்

Question 5.
உறவுப்பொருளில் வந்த ஆக்கப்பெயருக்குச் சான்று
அ) வீட்டுக்காரன்
ஆ) தமிழ்நாட்டுக்காரி
இ) உறவுக்காரர்
ஈ) தோட்டக்காரர்
Answer:
இ) உறவுக்காரர்

Question 6.
தொழில் பொருளில் வந்த ஆக்கப்பெயர்
அ) வண்டிக்காரர்
ஆ) தமிழ்நாட்டுக்காரன்
இ) சொந்தக்காரன்
ஈ) தையல்காரன்
Answer:
ஈ) தையல்காரன்

Question 7.
புதியதாக ஆக்கப்படும் சொல்லுக்கு – எனப் பெயர்.
அ) பொருட்பெயர்
ஆ) இடப்பெயர்
இ) வினைப்பெயர்
ஈ) ஆக்கப்பெயர்
Answer:
ஈ) ஆக்கப்பெயர்

Question 8.
கடைநிலைப் பணிபுரிவோரைக் குறிக்கும் ஆக்கப்பெயாவிகுதி பெறும்.
அ) ஆளர்
ஆ) ஆளி
இ) ஆள்
ஈ) கார்
Answer:
இ) ஆள்

Question 9.
உயர்நிலைப் பணிபுரிவோரைக் குறிக்கும் ஆக்கப்பெயர்,
அ) கள்
ஆ) ஆளி
இ) ஆள்
ஈ) ஆளர்
Answer:
ஈ) ஆளர்

Question 10.
இருபால் பொதுப்பெயர்களைக் குறிக்கும் ஆக்கப்பெயர்கள், _ விகுதி பெறும்.
அ) ஆளர்
அ கள்
இ) ஆளி
ஈ) ஆள்
Answer:
இ) ஆளி

Question 11.
பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை, விகுதிகள் என அழைப்பர்.
அ) சினைப்பொ
ஆ) குணப்பெயர்
இ) ஆக்கப்பெயர்
Answer:
இ) ஆக்கப்பெயர்

Question 12.
ஆக்கப் பெயர்களில் தனிச் சிறப்புடையவை
அ) பகுதிகள்
ஆ) இடைநிலைகள்
இ) விகுதிகள்
ஈ) சந்திகள்
Answer:
இ) விகுதிகள்

இலக்கணத் தேர்ச்சி கொள்

பயிற்சி – 1

கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆக்கப் பெயர்களை எடுத்தெழுதுக.

எங்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்குக் காவல்துறை ஆணையாளர், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், “மாணவர்களாகிய நீங்கள் படிப்பகங்களைப் பயன்படுத்தி விண்ணியல், மண்ணியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கவேண்டும்.

நல்ல பண்பாளர்களைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டு, உதவியாள் இல்லாமலே ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ முதலாளியாகவோ ஆகலாம்” என்று கூறி, மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
Asnwer:
ஆக்கப்பெயர்கள் : ஆணையாளர், அழைப்பாளர், விண்ணியல், மண்ணியல், பண்பாளர், கூட்டாளி, உதவியாள், மேலாளர், முதலாளி.

பயிற்சி – 2

அடைப்புக்குள் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகளைக் கொண்டு, விடுகதைகளுக்குரிய ஆக்கப்பெயர்களைக் கண்ட றிக.
Answer:
1. வேவு பார்த்திடுவான்; ஓசையின்றிச் சென்றிடுவான் (ஆளி) உளவாளி
2. அறிவைத் தேடிப் போகுமிடம்; உலகம் அறிய உதவுமிடம் (அகம்) நூலகம்
3. வந்தால் மகிழ்ச்சி இது; உழைத்தால் கிடைக்கும் இது (மானம்) வருமானம்
4. வேட (ஷ)ம் போட்டவன்; வேடதாரிப் பட்டம் வாங்கியவன்? (தாரி) பட்டதாரி
5. அளந்து அளந்து கொட்டிடுவான்; அகம் மகிழத் தந்திடுவான் (ஆள்) கொடையாள்

மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
மயிலை சீனி. வேங்கடசாமி (1900 – 1980)

தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவுகடந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் புதிய புதிய செய்திகளைப் புலப்படுத்திய வருதைப் படைப்புகள்.

இராமேசுவரத்தீவு, உறையூர் அழிந்த வரலாறு, மறைந்துபோன மருங்காப்பட்டினம் போன்ற தனித்தன்மை கொண்ட அவர்தம் கட்டுரைகள், வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சின. கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலிய நூல்கள், அவர் நமக்கு வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். அவருடைய ‘களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூல், இருண்டகாலம் என்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தைச் செப்பனிட்டது.

நகராட்சிப் பள்ளி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவர், தன்னுணர்வால், உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார். ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்.

சிறந்த வரலாற்றாசிரியர், நடுநிலை பிறழாத ஆய்வாளர், மொழியியல் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்புக் கொண்டவர். அவருக்கு மதுரையல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டு, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் பட்டமளித்துப் பாராட்டியது. கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ் நூல்கள் போலாற பல நூல்களால் தமிழ் ஆய்வு வரலாற்றில் மயிலை சீனி. வேங்கடசாமி, அழியாச் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

1. மறந்ததும் மறைந்ததும் இதுப்பான்ற இரண்டு தொடர்களை உருவாக்குக.
எ – கா : படித்ததும் படைத்ததும், கண்டதும் கொண்டதும், உணர்ந்ததும் உவந்ததும்.

2. அழிந்த வரலாறு, புதிய வெளிச்சம் – அடிக்கோடிட்ட சொற்களின் எச்ச வகைகளை எழுதுக.
அழிந்த – தெரிநிலைப் (இறந்தகாலப்) பெயரெச்சம், புதிய – குறிப்புப் பெயரெச்சம்

3. அழியாச் சிவப்பிடம் – இலக்கணக்குறிப்புத் தருக.
அழியாசி சிறப்பிடம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் (தொடர்)

4. முதலிய, முதலான – பொருளறிந்து சொற்றொடர் அமைக்க.
உப்பு மிளகாய், புளி முதலிய மளிகைப் பொருள்களை வாங்கினார்.
தமிழ், ஆங்கிலம் முதலான மொழிகளைக் கற்றான்.

5. பத்தியில் உள்ள உயர்வு சிறப்பு உம்மையைக் கண்டு எழுதுக.
பேராசிரியர்களும், போற்றும்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மயிலை சீனி வேங்கடசாமி தமிழ்மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த அளவு கடந்த
செய்திகளை வெளிக்கொணர்ந்தார்.
வினா : மயிலை சீனி வேங்கடசாமி எவற்றை வெளிக்கொணர்ந்தார்?

2. மயிலை சீனி வேங்கடசாமி தம் கட்டுரைகள் மூலம் தமிழர் வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சினார்.
வினா : தமிழர் வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் யார்? எவ்வாறு?

3. ‘களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூல், இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தைச் செப்பனிட்டது.
வினா : ‘களப்பிரர் காலத் தமிழகம்’ எதற்கு ஒளியூட்டி, எதைச் செப்பனிட்டது?

4. மயிலை சீனி வேங்கடசாமி தன்னுணர்வால், உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார்.
வினா : மயிலை சீனி வேங்கடசாமி எவ்வெவற்றால், எவர் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார்?

தமிழாக்கம் தருக

Balu : Hi Velu, Good evening
Velu : Hi Balu. Good evening.
Balu : Yesterday you were watching the Republic day function the whole day. Velu : Yes. I was touched by one award ceremony.
Balu : Which award?
Velu : Param Vir Chakra award, highest award for army personnel
Balu : Why were you touched?
Velu : Most of the awards were received by the wives of soldies posthumously Balu : Why? What do you mean by posthumous?
Velu : It means ‘after death’. Many soldiers had laid dowin their lives protecting the border of our Motherland. They have sacrificed their lives to save our Country.
So that we can be free and safe.
Answer:
பாலு : வேலு! மாலை வணக்கம்.
வேலு : பாலு! மாலை வணக்கம்.
பாலு : நீ நேற்று முழுவதும் குடியரசு தினவிழி நிகழ்ச்சிகளைப் பார்த்தாயா?
வேலு : ஆமாம். அவற்றுள் விருது ஒன்று வாங்கிய நிகழ்ச்சியில் நெகிழ்ந்து போனேன்.
பாலு : எந்த விருது?
வேலு : இராணு வீரர்களுக்கு வழர் கட்டும் உயரிய விருதான ‘பரமவீரர் சக்கர’ விருதுதான் அது.
பாலு : எதனால் நீ நெகிழ்ந்து போனாய்?
வேலு : பெரும்பாலான விவங்கள், வீரர்களின் இறப்புக்குப்பின் மனைவியரால் பெறப்பட்டதுதான்
காரணம்.
பாலு : ஏன்? இறப்புக்கு பின் என்றால்?
வேலு : அதற்கு மாவளத்திற்குப்பின்’ என்பது பொருள். நம் தாய்நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்காக
வீரர்கள் பலர் தம் உயிரை ஈந்துள்ளனர். அவர்கள் தங்கள் உயிரை நம் நாட்டைக் காக்கத் தியாகம் செய்துள்ளனர். அதனால்தான் நாம் எல்லோரும் இவ்வளவு சுதந்திரமாகவும், பாக்குர்ப்பாகவும் வாழமுடிகிறது.

மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
Asnwer:
சான்று) ! எதிர் நீச்சல் – வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து எதிர்த சல் போட்டு, வெற்றி பெற வேண்டும்.

1. சொந்தக்காலில் நிற்றல் : தனக்கு எவரேனும் பொருளுதவி செய்வார்கள் என எதிர்பார்க்காமல்,
வேலவன் பள்ளியில் படிக்கும்போதே சிறுசிறு பணிகளைச் செய்து, பொருளீட்டித் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொண்டு, சொந்தக்காலில் நிற்கப் பழகிக் கொண்டான்.

2. தாளம் போடுதல் : அரசியலில் மாறிமாறிக் கூட்டணி அமைக்கும் தலைவர்கள், தங்கள் கூட்டணித் தலைவர்களின் கூற்றுகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தாளம் போடுதலை நாம் காண்கிறோம்.

3. மதில்மேல் பூனை : தேர்வு நெருக்கத்தில் மட்டுமே படித்துத் தேர்வு எழுதுவோர், தேர்வு முடிவு வெளிவரும்போது, மதில்மேல்பூனைபோல் மன அழுத்தத்தில் திண்டாடுவர்.

4. நிறைகுடம் : நன்றாக, தெளிவுபடக் கற்றறிந்த சான்றோர், நிறைகுடம்போல் அமைதியாக இருப்பர்.

5. கைதூக்கிவிடுதல் : ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்து, கல்வி கற்பித்து, மக்களைக் கைதூக்கிவிடக்
காமராசர் பாடுபட்டார்.

6. கண்ணாயிருத்தல் : இளையோர், மாணவப்பருவத்தில் கல்வி கற்பதில்மட்டுமே கண்ணாயிருத்தல்
வேண்டும்.

7. அவசரக்குடுக்கை:மக்களிடம் ஓரளவுக்கு அறிமுகமானவுடனே தன்னைத் தலைவனாகத்
தேர்ந்தெடுத்து விடுவர் எனச் சிலர் அவசரக்குடுக்கைபோல் செயல்பட்டு, மூக்கறுபட்டுத் தோல்வி காண்பது உண்டு.

8. முதலைக் கண்ணீர் : தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிலர், மக்கள் படும் துன்பங்களுக்காகத் தாம்
போராடப் போவதாகப் பேசி, முதலைக்கண்ணீர் வடிப்பது உண்டு.

9. கானல்நீர் : முதியோர் இல்லத்தில் மகனால் சேர்க்கப்பட்டபோது, தங்கள் எதிர்கால வாழ்க்கை
கானல் நீராகிப் போனதைப் பெற்றோர் உணர்ந்தனர்.

வரைபடம் கொண்டு விவரிக்க

நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். வழி தெரியாத ஒருவர், உங்களிடம் வந்து நூலகத்திற்கு வழி கேட்கிறார். கீழ்க்காணும் வரைபடத்தைக் கொண்டு, அப்புதியவருக்கு வழிகாட்டுங்கள்.

Answer:
எதிரில் இருக்கும் வாய்க்கால் தெருவில் நடந்து நேராகச்சென்றால், திருவள்ளுவர் தெரு வரும்; அங்கு இடப்புறம் திரும்பி நடந்தால் ஒரு நாற்சந்தி வரும். அங்கு மேலைத் தேர்த்தெருவும், தெற்குத்தேர்த் தெருவும் சந்திக்கும் மூலையில் நூலகம் உள்ளது என வழிகாட்டுவேன்.

இலக்கியநயம் பாராட்டுக

தந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ ?
பதம்தரும் பெருமையும் பணம் தரும் போகமும்
பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?
இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்
நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அதுவேண்டும்.
– நாமக்கல் கவிஞர்
Answer:
ஆசிரியர் குறித்து : ஈரோடு மாவட்டம் ‘நாமக்கல்’ என்னும் ஊரில் வாழ்ந்தமையால், ‘நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்பெற்றார். இவர் சிறந்த கவிஞர்; ஓவியம் வரைபவர்; கதை எழுதுபவர். தேசப்பற்றும் தமிழ்மொழிப் பற்றும் உடையவர். சுதந்திரப் போராட்டக் களத்தில் பங்கு பெற்றவர். தேசியத்தையும் தமிழையும் தமிழ் இனத்தையும் போற்றி வாழ்ந்தவர். சுதந்திர இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்தவர்.

பாடல் பொருள் : உலகில் சுதந்திரம் தருகின்ற மகிழ்ச்சியைவிட இனிய சுகம் தரும் உணர்வு வேறு ஏதேனும் இருக்கிறதா? வகிக்கின்ற பதவி கொடுக்கின்ற பெருமையையும், சேர்த்த செல்வத்தால் அனுபவிக்கும் இன்பமும் சுதந்திரத்துடன் ஒப்பிடும்போது தாழ்ந்தவைதாமே? வாழ்வுக்கு இதம் தரும் அறச்செயல்களும், புகழுடன் வாழ்வதும் ஆகிய எல்லாம், சுதந்திரம் இருப்பதால்தானே நம்மால் அனுபவிக்க முடிகிறது? தினமும் நம்மை வருத்தும் துன்பங்களை நிமிர்ந்து நின்று எதிர்த்து விரட்ட, நிச்சயமாக நமக்குச் சுதந்திரம் வேண்டும் அல்லவா?

மையக்கருத்து : சுதந்திரம் இல்லை என்றால், வாழ்வில் நாம் எந்தச் சுகத்தையும் பெறவோ, அனுபவிக்கவோ முடியாது. எதையும் சாதித்து இன்பம் துய்க்கச் சுதந்திரமே இன்றியமையாதது என்னும் மையக்கருத்தைக் கவிஞர் வலியுறுத்துகிறார்.

நயம் : எளிய சொற்களில், அரிய கருத்தைச் சந்த நயம் அமையக் கவிஞர் கூறியுள்ளது நயம் பயக்கிறது.
இச்செய்யுள், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். இச்செய்யுளில் சுதந்தரத்தின் சிறப்புகள் இயல்பாகக் கூறப்பட்டுள்ளன. எனவே, ‘இயல்பு நவிற்சி அணி’ அமைந்துள்ளது.

தொடை நயம் : அடிதோறும் முதல் சீர்களில் (சுதந்திரம், பதம்தரும், இதம்தரும், தெம்தரும் என்பவற்றில்) இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து, அடி எதுகை அமைந்துள்ளது.

சீர்தோறும் முதலெழுத்து ஒன்றிவருவது சீர்மோனை. பதம்தரும், பணம் தரும்; இதம்தரும், இசையுடன்; நிதம்தரும், நிமிர்ந்துநின் – சீர்மோனை.

இறுதிச்சீர் ஒன்றுவது இயைபுத்தொடை ஆகும். வேறுண்டோ கீழன்றோ ? என்னும் சீர்களில் ஓசை ஒன்றி, இயைபுத்தொடை அமைந்துள்ளது. அவற்றின் ஓ என்னும் ஓசை படிப்பதற்கு இன்பமளிக்கிறது.

மொழியோடு விளையாடு

கீழுள்ள கட்டத்தினுள் நுழைந்து சொற்களை எடுத்தும் தேவையான சொற்களைச் சேர்த்தும் தொடரமைக்க. (அடைபட்ட பகுதியில் உள்ள சொற்களைத் தவிர்க்கவும்.

எ – டு : மாணவர்கள் வகுப்பறையினுள் நுண்கலைகளையும் கற்க வேண்டும்.

[அடைப்பட்ட பகுதியில் உள்ள தவிர்க்கப்பட்ட சொற்கள் :
1. தாமதம், 2. மன்னிப்பு, 3. வெளியேற்றம், 4. பட்டினி, 5. புறக்கணிப்பு, 6. வேலையின்மை , 7. தண்டனை, 8. தவறவிடல்] [கட்டத்தினுள் நுழைந்து, எடுத்துக்கொள்ளப்பட்ட சொற்கள் : 1. வகுப்பு, 2. வகுப்பறை, 3. கரும்பலகை, 4. சிந்தனை, 5. எழுதுகோல், 6. காமராசர், 7. ஆசிரியர், 8. மாணவர், 9. வழிபாடு, 10. விளையாட்டு, 11. திறமை, 12. மதிய உணவு, 13. கூடுதல் நேரம், 14. வாசிப்பு, 15. உடல்உறுதி, 16. வேண்டும், 17. நடக்கும், 18. செய்வோம், 19. நுண்கலை, 20. பள்ளிக்கூடம்]

அமைக்கப்பட்ட தொடர்கள் : மேற்கோள் குறியில்

1. ‘மாணவர்கள், தவறாமல், பள்ளிக்கூடம்’ செல்வதற்குக் கரும வீரர் காமராசர்’ மதிய உணவுத்
திட்டத்தைக் கொண்டுவந்தார்.
2. காலை எழுந்தவுடன் ‘வாசிப்பும்’, மாலை வந்தவுடன் ‘விளையாட்டு’ம் என வைத்துக்கோன’ வேண்டும்’.
3. ‘வகுப்பறை’ தூய்மையாக இருக்குமாறும் ‘வகுப்பு’ அமைதியாக இருக்குமாறும் பார்த்துக்கொள்க.
4. பள்ளி தொடங்குமுன், கூட்டு ‘வழிபாடு’ ‘நடக்கும்’.
5. ‘சிந்தனை’ வளர்வதற்கும், ‘திறமை’ கூடுவதற்கும் ‘நுண்கலைப் பயிற்சி இன்றயமையாதது.
6. ‘ஆசிரியர்’ ‘கரும்பலகை’யிலும், மாணவர்கள் குறிப்பேட்டிலும் எழுத, எழுதுகோல்’ (முறையே சுண்ணக்கோல், கரிக்கோல் அல்லது மைக்கோல்) அவசியம்.
7. மாணவர்களாகிய நாங்கள், காலையில் படிப்பதற்கும், மாலையில் பாழுதுவதற்கும் ‘கூடுதல் நேரம் ஒதுக்கீடு
‘செய்வோம்’.
8. மாணவர்களாகிய நாங்கள், “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்னும் திருமூலர் கூற்றுப்படி,
‘உடல் உறுதி’ பெறுவதற்கு ஆவன செய்வோம்

படித்துப் பார்த்துப் படைக்க.
Answer:

நிற்க அதற்குத் தக

உம்முடைய பொறுப்பை உணர்ந்து, கட்டங்களை நிறைவு செய்க.
Answer:

கலைச்சொல் அறிவோம்

உத்திகள் – Strategies
சமத்துவம் – Equality
தொழிற்சங்கம் – Trade Union
பட்டிமன்றம் – Debate
பண் முக ஆளுமை – Multiple Personality
புனைபெபர்- Pseudonym


How to Prepare using Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF?

Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes PDF by following certain essential steps which are provided below.


  • Use Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் notes by paying attention to facts and ideas.
  • Pay attention to the important topics
  • Refer TN Board books as well as the books recommended.
  • Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
  • Highlight and explain the concepts in details.


Samacheer Kalvi 11th Tamil All Chapter Notes PDF Download


Frequently Asked Questions on Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes


How to use Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் Notes for preparation??

Read TN Board thoroughly, make separate notes for points you forget, formulae, reactions, diagrams. Highlight important points in the book itself and make use of the space provided in the margin to jot down other important points on the same topic from different sources.

How to make notes for Samacheer Kalvi 11th Tamil Chapter 7.5 ஆக்கப்பெயர்கள் exam?

Read from hand-made notes prepared after understanding concepts, refrain from replicating from the textbook. Use highlighters for important points. Revise from these notes regularly and formulate your own tricks, shortcuts and mnemonics, mappings etc.
Share:

0 comments:

Post a Comment

Copyright © Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions About | Contact | Privacy Policy