Samacheer Kalvi Books– Tamilnadu State Board Text Books Solutions for Class 1 to 12.

Saturday, October 16, 2021

Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes

Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes
Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF Download: Tamil Nadu STD 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes


Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Chapter Wise Notes PDF from the links provided in this article.


Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF Download

We bring to you specially curated Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.


Board

Tamilnadu Board

Study Material

Notes

Class

Samacheer Kalvi 11th Tamil

Subject

11th Tamil

Chapter

Chapter 4.6 படைப்பாக்க உத்திகள்

Format

PDF

Provider

Samacheer Kalvi Books


How to Download Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDFs?

  1. Visit our website - https://www.samacheerkalvibook.com/
  2. Click on the Samacheer Kalvi 11th Tamil Notes PDF.
  3. Look for your preferred subject.
  4. Now download the Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் notes PDF.

Download Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Chapterwise Notes PDF

Students can download the Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF from the links provided in this article.


Question 1.
உவமை, உருவகம் – வேறுபடுத்துக.
Answer:

  • உவமை : சொல்வதை எளிதில் உணருமாறு கூற உவமை பயன்படும்.
  • உவமை முன்னும், உவமேயம் பின்னும் அமையும். எ – கா : மதி போன்ற முகம் மதிமுகம்
  • உருவகம் : ஒப்பீட்டுச் செறிவும், பொருள் அழுத்தமும் கொண்டது உருவகம். உவமேயம் முன்னும் உவமை பின்னும் அமையும்.
    எ – கா : முகமாகியமதி / முகமதி

கூடுதல் வினாக்கள்

Question 2.
உவமை என்பது யாது? உவமையை ஏன் பயன்படுத்தினர்?
Answer:

  • ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையாகும்.
  • ஒரு கருத்தைக் கூறுகையில், கேட்போர் மனத்தைக் கவரும் வகையிலும், எளிதில் உணரும் வகையிலும் கூறுவதற்கு உவமையைப் பயன்படுத்தினர்.

Question 3.
உவமை, எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்? சான்று தருக.
Answer:

  • வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை உருவாகும்.
  • எ-கா : புலிபோல – தொழில்உவமை, மழைபோல – பயன்உவமை, துடி போன்ற – வடிவுஉவமை, தளிர் போல – நிறஉவமை.

Question 4.
உவமையில் அமையும் உறுப்புகள் யாவை? சான்று தருக.
Answer:

  • உவமானம் (உவமை), உவமேயம் (பொருள்), உவமை உருபு, பொதுத்தன்மை என்னும் நான்கு உறுப்புகள் உவமையில் அமையும்.
  • சான்று : செல்வன் புலி போலப் பாய்ந்தான்.
  • உவமானம் (உவமை) – புலி; உவமேயம் (பொருள்) – செல்வன்; உவமை உருபு-போல; பொதுத்தன்மை – பாய்தல்.

Question 5.
உருவகமாவது யாது? சான்று தருக.
Answer:
உவமானத்தையும் (உவமையையும்), உவமேயத்தையும் (பொருளையும்) வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே என்பதுபோலக் கூறுவது உருவகமாகும்.
எ – கா : முகமதி, பாதமலர்.
(உருவகத்தில் பொருள் (உவமேயம்) முன்னும், உவமை (உவமானம்) பின்னும் அமையும்.)

Question 6.
உருவகம் எவ்வெவற்றின் அடிப்படையில் அமையும்? சான்று தருக.
Answer:

  • உருவகம், வினை, பயன், வடிவம், உரு என்பவற்றின் அடிப்படையில் அமையும்.
    எ – கா : எண்ணவலை பின்னும் மூளைச்சிலந்தி – வினை உருவகம்.
  • ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ (சூரியன்) – பயன் உருவகம்.
  • நிலவயலின் நட்சத்திர மணிகள் (வானம் விண்மீன்கள்) – வடிவ உருவகம்.
  • மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் (அருவி) – நிற உருவகம்.

Question 7.
உள்ளுறை உவமம் என்பது யாது?
Answer:
கவிஞர் தாம் கூறக் கருதிய, அகமாந்தர்களின் மன உணர்வுகளை வெளிப்படையாகக் கூறாமல், கருப் பொருள்கள்மூலம் உவமைப்படுத்துவது, உள்ளுறை உவமம் ஆகும்.

Question 8.
உள்ளுறை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
Answer:
வினை, பயன் போன்றவற்றின் அடிப்படைகளில் தோன்றும் குறியீடுகளைக் கொண்டு, உள்ளுறை உருவாக்கப் படுகிறது.

சிறுவினாக்கள்

Question 1.
உள்ளுறை உவமை, இறைச்சி – எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
உள்ளுறை :
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வு களை, இயற்கைப் புனைந்துரைமூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது ‘உள்ளுறை ஆகும்.

பாடலில் இடம்பெறும் மாந்தரின் உள்ளத்தில் எழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் அமையும்.

அகநானூற்றில் தோழிக்குச் சொல்வதுபோல் மறைந்துநிற்கும் தலைவனுக்குத் தலைவி கூறுவதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல், ‘உள்ளுறை’ உணர்த்துவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இறைச்சி :
அகப்பாடலில் இடம்பெறும் உள்ளுறை போன்ற மற்றொரு உத்தி, இறைச்சி. ‘இறைச்சி ‘ என்பது உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்புப் பொருளாகும்.

இது அகப்பாடலில் மட்டுமே இடம்பெறும். தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, தலைவன் செல்லும் வழியில் ஆண்யானை, பெண்யானையின் பசியைப் போக்க, ‘யா’ மரத்தில் பட்டையை உரித்து, நீர்ச்சுவையைப் பருகச் செய்யும்” என்று கூறுவாள்.

இது பாடலின் கருத்து. ஆனால், “தலைவன் இந்தக் காட்சியைக் காண்டான். விரைவில் திரும்பி, தலைவியின் துன்பம் தீர்ப்பான்’ என்பது, இது உணர்த்தும் குறியும் பொருளாகும். இவ்வாறு உரிப்பொருளின் புறத்தே நின்று, வேறு கருத்தைக் குறிப்பாக உணர்த்துவது, இறைச்சி’ ஆகும்.

பலவுள் தெரிக

Question 1.
நிழல் போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை
அ) வினை
ஆ) பயன்
இ) வடிவம்
ஈ) மெய்
Answer:
இ) வடிவம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘புலிபோலப் பாய்ந்தான்’ என்பது, …………………. அடிப்படையில் தோன்றிய உவமை.
அ) நிறம்
ஆ) வடிவம்
இ) பயன்
ஈ) தொழில்
Answer:
ஈ) தொழில்

Question 3.
‘மழைபோலக் கொடுக்கும் கை’ என்பது,………………….அடிப்படையில் தோன்றிய உவமை.
அ) உரு
ஆ) மெய்
இ) பயன்
ஈ) வினை
Answer:
இ) பயா

Question 4.
‘துடிபோலும் இடை என்பது, …………………. அடிப்படையில் தோன்றிய உவமை.
அ) வினை
ஆ) பயன்
இ) நிற
ஈ) வடிவ (மெய்)
Answer:
ஈ) வடிவ (மெய்)

Question 5.
தரியோலும் மேனி’ என்பது, ………………….அடிப்படையில் தோன்றிய உவமை.
அ) தொழில்
ஆ) பயன்
இ) வடிவ
ஈ) நிற (உரு)
Answer:
ஈ) நிற (உரு)

Question 6.
அவர்கள் மூளையில்
விதையைப் போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியைப் போல்
அறையப்படுகின்றது! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………………….
அ) உரு உவமை
ஆ) வடிவ உவமை
இ) பயன் உவமை
ஈ) வினை உவமை
Answer:
ஈ) வினை உவமை

Question 7.
வறண்ட வாழ்வு
தளிர்க்க
மழைபோல் வந்தாய் நீ! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………………….
அ) வடிவ உவமை
ஆ) பயன் உவமை
இ) வினை உவமை
ஈ) உரு உவமை
Answer:
ஆ) பயன் உவமை

Question 8.
சுருக்கிய
குடையைப் போலத்
தோன்றும்
அசோக மரம்! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………………….
அ) வினை (தொழில்) உவமை
ஆ) பயன் உவமை
இ) வடிவ (மெய்) உவமை
ஈ) நிற (உரு) உவமை
Answer:
இ) வடிவ (மெய்) உவமை

Question 9.
சோடியம் விளக்காய்
மாலை நேரச் சூரியனின்
மஞ்சள் வெளிச்சம்
தெருவில் நிரம்பி வழிந்தது! – இக்கவிதையில் இடம்பெறும் உவகை ………………….
அ) தொழில் (வினை) உவமை
ஆ) பயன் உவமை
இ) மெய் (வடிவ) உவமை
ஈ) நிற (-) உவமை
Answer:
ஈ) நிற (உரு) உவமை

Question 10.
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளை ஒப்பிட்டுக் கூறுவது………………….
அ) உருவகம்
ஆ) இறைச்சி
இ) உள்ளுறை
ஈ) உவமை
Answer:
ஈ) உவமை

Question 11.
உவமானத்தையும் உவமேயத்தையும் (உயரிக்கப்படும் பொருளையும்) வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது ………………….
அ) உவமை
ஆ) இறைச்சி
இ) உருவகம்
ஈ) உள்ளுறை
Answer:
இ) உருவகம்

Question 12.
‘உவமையின் செறிவரர்ந்த வடிவமே ………………….எனப்படும்.
அ) உவமை
ஆ) இறைச்சி
இ) உள்ளுறை
ஈ) உருவகம்
Answer:
ஈ) உருவகம்

Question 13.
உவமிக்கப்படும் பொருளே …………………. ஆகும்.
அ) உவமை
ஆ) உருவகம்
இ) உவமைத்தொகை
ஈ) உவமேயம்
Answer:
ஈ) உவமேயம்

Question 14.
ஒகக் காட்டப்படும் பொருள் …………………. ஆகும்.
அ) உவமேயம்
ஆ) உருவகம்
இ) உவமை
ஈ) உவமைத்தொகை
Answer:
இ) உவமை

Question 15.
“எண்ணவலை பின்னும் மூளைச்சிலந்தி (சிந்தனை) – இதில் இடம்பெறும் உருவகம்………………….
அ) நிற உருவகம்
ஆ) மெய் உருவகம்
இ) பயன் உருவகம்
ஈ) வினை உருவகம்
Answer:
ஈ) வினை உருவகம்

Question 16.
“ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ” (சூரியன்) – இதில் இடம் பெற்றுள்ள உருவகம் ………………….
அ) நிற உருவகம்
ஆ) வினை உருவகம்
இ) பயன் உருவகம்
ஈ) மெய் உருவகம்
Answer:
இ) பயன் உருவகம்

Question 17.
“நீல வயலின் நட்சத்திர மணிகள்” (வானமும் விண்மீன்களும்) – இதில் இடம்பெறுவது ………………….
அ) நிற உருவகம்
ஆ) வினை உருவகம்
இ) பயன் உருவகம்
ஈ) மெய் உருவகம்
Answer:
ஈ) மெய் உருவகம்

Question 18.
“மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்” (அருவி) – இதில் இடம் பெற்றுள்ளது………………….
அ) வினை உருவகம்
ஆ) மெய் உருவகம்
இ) நிற உருவகம்
ஈ) பயன் உருவகம்
Answer:
இ) நிற உருவகம்

Question 19.
தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒப்பற்ற நெறி ………………….
அ) இறைச்சி
ஆ) உவமை
இ) உருவகம்
ஈ) உள்ளுறை உவமம்
Answer:
ஈ) உள்ளுறை உவமம்

Question 20.
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே ………………….
அ) உவமை
ஆ) உருவகம்
இ) உள்ளுறை
ஈ) இறைச்சி
Answer:
ஈ) இறைச்சி

Question 21.
உவமைக்குள் மற்றொரு பொருளைக் குறிப்பாக உணர்த்துவது ………………….
அ) உருவகம்
ஆ) உவமை
இ) உள்ளுறை உவமை
ஈ) பறைச்சி
Answer:
இ) உள்ளுறை உவமை

Question 22.
குறிப்புப் பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருளை அமைத்துரைப்பது ………………….
அ) உவமானம்
ஆ) உவமேயம்
இ) உள்ளுறை உவமை
ஈ) இறைச்சி
Answer:
ஈ) இறைச்சி

Question 23.
கவிதைப் பொருளோடு சேர்ந்து காணப்படுவது………………….
அ) உவமைத்தொகை
ஆ) உருவகம்
இ) உள்ளுறை உவமம்
ஈ) இறைச்சி
Answer:
இ) உள்ளுறை உவமம்

Question 24.
கவிதைப் பொருளின் புறத்தே குறிப்புப் பொருளாய் வெளிப்படுவது ………………….
அ) உருவகம்
ஆ) உவமைத்தொகை
இ) இறைச்சி
ஈ) உள்ளுறை
Answer:
இ) இறைச்சி

Question 25.
சரியான விடையைத் தெரிவு செய்த.
1. உவமை – அசினத்தீ
2. உருவகம் – ஆ. நும்மினும் சிறந்தது நுவ்வை
3. உள்ளுறை உவமை – இ. துடிஇடை
4. இறைச்சி – ஈ. இந்த உலகமும் ஒன்றேதான்
– உ. பெருங்கை ஏற்றை வள்ளுகிர் கதுவலின் பாம்புமதன் அழியும்
1. 17 இ, — ஆ, 3 – அ, 4 – ஈ
2.1 – ஆ, 2 – இ, 3 – உ, 4 – அ
3. 1 இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ
4. 1 – அ, 2 – உ, 3 – ஈ, 4 – ஆ
Answer:
3. 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – உ

Question 26.
சரியான விடையைத் தேர்வு செய்து பொருத்துக.
அ) மழைத்துளிபோல் வந்தாய்
ஆ) மஞ்சள் வெளிச்சம் நிரம்பி வழிந்தது
இ) அறிவு ஆணியைப்போல் அறையப்படுகிறது
ஈ) குடையைப்போலத் தோன்றும் அசோகமரம்
1. வினை உவமம் 2. பயன் உவமம் 3. மெய் உவமம் 4. உரு உவமம்
1. அ – 1, ஆ – 3, இ – 2, ஈ – 4
2. அ – 3, ஆ – 2, இ – 4, ஈ – 1
3. அ – 4, ஆ – 1, இ – 3, ஈ – 2
4. அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3
Answer:
4. அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3

கற்பவை கற்றபின்

Question 1.
“பூவைவிட்டு இறங்காதே
இறக்கை முறிந்த வண்ணத்துப் பூச்சியே
உனக்காக எறும்புகள்”
– இக்கவிதையின் படைப்பாக்கத் தனி உத்தி :
Answer:
விருப்பப்படி பறக்க உதவும் இறக்கை முறிந்தால், வண்ணத்துப் பூச்சியின் கதி என்னவாகும்? எறும்பு உள்ளிட்டவற்றிற்குக் கொண்டாட்டம்தான்.

உடலில் உயிரிருந்தாலும் காத்துக்கொள்ள முடியுமா? பறக்க உதவும் இறகே முறிந்தால் என்னாவது? விரும்பியபடி மலர்த்தேனை உண்ண முடியுமா? மகரந்தச் சேர்க்கைக்குத்தான் உதவமுடியுமா?

எனவே, விழிப்புணர்வு தேவை. வானில் பறக்கும் வண்ணத்துப் பூச்சியும் தன் நிலை தவறினால் உயிரிழக்க நேரும்.
இங்குக் கூறப்பட்ட அறிவுரை, வண்ணத்துப் பூச்சிக்கு மட்டுமன்று; ஆறறிவு படைத்த தனுக்கும்தான். மெய்ப்பொருள் காண்பது அறிவு!

Question 2.
மனிதர்க்கு உணவாவதை எண்ணிக்
கண்ணீர் விட்டனவோ மீன்கள்!
கடல் நீரில் உப்பு.
– இக்கவிதையின் படைப்பாக்கத் தனி உத்தி :
Answer:
கடல்நீர், அது தோன்றிய காலத்திலிருந்தே உப்புக் கரித்துக் கொண்டுதான் உள்ளது. இப்பாடலைப் பாடிய கவிஞர், அதற்கு வேறு ஒரு புதிய கணத்தைக் கற்பித்துக் கூறியுள்ளார்.

மீனின் சுவை அறிந்த மனிதன், அதை விட்டுவைக்க நினைப்பானா? மீன்கள், மனிதர்க்கு உணவாவதை எண்ணிக் கண்ணீ ர் வடிப்பதனால், கடல்நீர் உப்பானதாகக் கடறுகிறார்.

உண்மையில் இது அழகானதொரு கற்பனைதான். இயற்கை நிகழ்வை உள்ளது உள்ளபடி கூறுவர் சிலர். அந்த இயற்கை நிகழ்வில், தம் கற்பனையை ஏற்றிக் கூறுவர் சிலர். இப்புதுக்கவிதை, அவ்வகையில் தற்குறிப்பு ஏற்ற அணியைப் படைப்பு உத்தியாகக் கொண்டுள்ளது எனலாம்.

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?
Answer:
வினை (தொழில்), பயன், படி (வடிவம்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை தோன்றும்
எ-கா : புலிபோல் பாய்ந்தான் – வினை (தொழில்) உவமை
மழை போலக் கொடுக்கும் கை – பயன் உவமை
துடி போன்ற இடை – மெய் (வடிவம்) உவமை
தளிர் போலும் மேனி – உரு (நிறம்) உவமை

Question 2.
உவமைத் தொடர்களால் அழைக்கப்பெறும் சங்கப்புலவர்கள் பெயர்களைத் தொகுத்து அவற்றில் உள்ள உவமைகளைக் கண்டறிக.
Answer:
செயலைப்பெயல்நீரார், தேய்புரிபழங்கயிற்றினார், அணிலாடுமுன்றிலார் என்போர், உவமைகளால் பெயர் பொன் புலவர்களாவர்.

செம்புலப்பெயல்நீர் – உவமை. செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் (போல)
தேய்புரிபழங்கயிறு – உவமை. தேய்ந்து மெலிந்த பழைய கயிறு (போல)
அணிலாடுமுன்றில் – உவமை. அணில் விளையாடும் வீட்டின் முற்றம் (போன்ற)

Question 3.
ஒட்டுப் போடாத
ஆகாயம் போல – இந்த உலகமும் ஒன்றேதான்…. – இக்கவிதையில் பயின்று வருவது
அ) உவமை
ஆ) உருவகம்
இ) உள்ளுறை
ஈ) இறைச்சி
Answer:
அ) உவமை

Question 4.
கீழ்க்காண்பனவற்றுள் ‘இறைச்சி’ பற்றிய கூற்றைத் தேர்க.
அ) குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்.
ஆ) ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்.
இ) வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும்.
ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப்பொருள்.
Answer:
ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப்பொருள்.

Question 5.
உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினைச் சான்றுகளுடன் ஆய்க.
உள்ளுறை :
அகமாந்தர்களின் மன உணர்வைக் (சொற்களில் வெளிப்படுத்தாமல், கருப்பொருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகளாக, நாகரிகமாக மறைத்துக் கூறி) குறிப்புப்பொருளாக வெளிப்பட வை. பது உள்ளுறை.

தோழிக்குக் கூறுவதுபோல் மறைந்து நின்ற தலைவனுக்குத் தலைவி கூறியதாகப், பெருங்குன்றூர் கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல், உள்ளுறைக்குச் சிறந்த சான்று

இதில் பசியுடன் அலையும் கரடி, ஈசல் புற்றில் கைவிட்ட செயலும், அங்குப் பங்கி இருந்த பாம்பு, கரடி நகம் பட்டுத் துன்புறும் செய்தியும் சுட்டப்பட்டுள்ளன.

இரவில் காட்டைக் கடந்துவரும் தலைவன் செயலுக்குத் தலைவி அஞ்சுவது மறைபொருளாகச் சுட்டப் பட்டுள்ளது. தலைவனுக்குக் கரடியும், தலைவிக்குப் பாம்பும் குறியீடுகளாக அமைந்த உள்ளுறை உவமமாகும்.

இறைச்சி :
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்புப்பொருளே இறைச்சியாகும். “நசை பெரிது” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் இறைச்சிக்குச் சிறந்த சான்றாகும்.

தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, “தலைவன் செல்லும் வழியில் களிறு (ஆண்யானை), தன் பிடியின் (பெண்யானையின்) பசியைப் போக்க, ‘யா’ மரத்தின் பட்டையை உரித்து, அதன் ஈரச் சுவையைப் பருகத் தரும்” என்று கூறுவாள். இதில் சொல்லப்பட்ட கறிப்புப்பொருள், “தலைவன் இந்த அன்புக் காட்சியைக் காண்பான்.

அதனால் உடனே திரும்பி வந்து, உன் துயா தீர்ப்பான்” என்பதாகும். இவ்வகைக் குறிப்புப்பொருளே ‘இறைச்சி’ ஆகும். அதாவது, “உரிப்பொரு பின் புறத்தே நின்று, அதன் கருத்தை மேலும் சிறப்பிக்கப் பயன்படுவது” என்பதே ‘இறைச்சி”

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி.யு.போப், 1839ஆம் ஆண்டில், தென்னிந்தியாவுக்கு வந்தார். சென்னையை அடைக்க போப், சாந்தோம்’ என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை, கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது.

தமிழ் மொழியைப் விலத்தொடங்கிய சிறிது காலத்திலேயே, ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், நமழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.

பேய் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார்.

பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் அருளிய பெரியார் ஜி. யு. போப் ஆவார்.

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக.

Question 1.
இலக்கணக் குறிப்புத் தருக. அ) பிறந்தார் ஆ) அருளிய
Answer:
அ. பிறந்தார் – படர்க்கைப் பலர்பால் இறந்தகால வினைமுற்று.
ஆ. அருளிய – பெயரெச்சம்.

Question 2.
திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப் – விடைக்கேற்ற வினாவை எழுதுக.
Answer:
ஜி.யு. போப், எந்த எண்ணத்தில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்?

Question 3.
பதிப்பித்தார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
பதிப்பித்தார் – பதிப்பி + த் + த் + ஆர்
பதிப்பி – (பிறவினைப்) பகுதி, த்-சந்தி, த்- இறந்தகால இடைநிலை,
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

Question 4.
வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
Answer:
பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் து ைகல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பயனளிக்குமென்றும் போர் கருதினார்.

விடை : பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாக வ அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்கும் என்றும் போப் கருதினார்.

Question 5.
பொருத்துக.
அ) தொல்காப்பியம் – i) சங்கநூல்
ஆ) திருக்குறள் – ii) பக்திநூல்
இ) புறநானூறு – iii) அறநூல்
ஈ) திருவாசகம் – iv) இலக்கணநூல்
Answer:
அ – iv ஆ – iii இ – i ஈ – ii

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. தமிழ்மொழியை ஐரோப்பியர் கற்றுக்கொள்வதற்குரிய நூல் ஒன்றைப் போப் எழுதினார்.
வினா : எந்த மொழியை, யார் கற்றுக்கொள்வதற்குரிய நூல் ஒன்றைப் ‘போப்’ எழுதினார்?

2. தாய்மொழி வழியாகவே அனைத்துத்துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார்.
வினா : கல்வி கற்றல் குறித்துப் போப்’ கருத்து யாது?

செய்திக்குக் கீழுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை மொழிபெயர்ப்புப் பகுதி யிலிருந்து கண்டறிந்து எழுதுக்.

The Chinese haver religious science. The practices of their religion (Buddhism) are derived from India. They believe that it is the Indians who brought idols to them and that the latter were their religious edan tors. In China and in India they believe in metempsychosis. The Chinese and Indians daw from the same religious principles different conclusions. In India medicine and philosophy are practiced. The Chinese practice medicine equally. Their chief treatment is cauterizatio The Chinese practice astronomy but the Indians practice this science still more.
Wton by Abu Zayd Al Sirafi, traveler, – th century. Voreign notices of South India by K.A.Neelakanda Sastri.
Answer:
சீனாவுக்கென்று தனியாக மதங்கள் இல்லை. இந்தியாவின் மதத்தை (பவுத்தம்) அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். சிலைகளைத் தங்களுக்கு அறிமுகம் செய்தோர் இந்தியர்கள் என்று நம்பும் சீனர்கள், இந்தியர்களே தங்களின் மத ஆசிரியர்கள் என்றும் கருதுகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் மரணத்துக்குப் பிந்தைய மறுபிறப்பை நம்புகின்றனர். ஒரே மதக் கோட்பாடு இருந்தாலும், சீனர்களும் இந்தியர்களும் வெவ்வேறு தீர்மானங்களுக்கு வருகிறார்கள். இந்தியாவில் மருத்துவமும், தத்துவமும் நடைமுறையில் உள்ளன. அவர்களுக்குச் சமமான சீனர்களும் மருத்துவத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். ‘தீய்த்தல்’ அவர்களது பிரதான சிகிச்சை முறை. சீனர்கள் வானியல் சாஸ்திரப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இந்த அறிவியலை இந்தியர்கள் இன்னும் அதிகமாய்ப் பயன்படுத்துகின்றனர்.

Religion மதம் (சமயம்)
Medicine மருத்துவம்
Philosophy தத்துவம்
Science அறிவியல்
Idols சிலைகள்

கீழ்க்காணும் பத்தியில் உள்ள உவமைகளையும் உருவகங்களையும் பட்டியலிடுக. உருவகங்களை உவமை களாக மாற்றுக. உவமைகளை எவ்வகை உவமைகள் என்றும் எழுதுக.

விழிச்சுடர், வாசலில் உட்கார்ந்திருந்தாள். அவளது எண்ணவலையில் மின்னல்களைப் போன்ற சொற்கள் தோன்றி மறைந்தன. அடுக்கிவைக்கப்படாத புத்தகங்களைப்போலக் குழம்பிய எண்ணங்களை ஒழுங்குபடுத்த நினைத்தாள். நேரம், நத்தையைப்போல மெதுவாக நகர்ந்தது.

அண்ணாந்து பார்த்தாள். நீலப்பட்டு உடுத்தியதைப் போன்ற வானம், அம்மாவை நினைவூட்டியது. பூனைக்குட்டியைப்போல் அம்மாவின் முந்தானைக்குள் சுருண்டு கொள்ள நினைத்தாள். பூனைக்குட்டியை மடியில் வைத்துக்கொண்டதைப்போல், அம்மாவின் கதகதப்பை உணர்ந்தாள். பசிக்கயிற்றால் சுண்டிவிடப்பட்டவள், பூட்டியிருந்த வீட்டுக்கதவின்மேல் சாய்ந்தபடி, அம்மாவின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
Answer:

2. உருவகங்களை உவமைகளாக்குதல்.
எண்ணவலை – வலைஎண்ணம் (வலை போன்ற எண்ணம்) – வடிவம்
விழிச்சுடர் – சுடர்விழி (சுடர் போன்ற விழி) – தொழில்
பசிக்கயிறு – கயிறுபசி (கயிறு போன்ற பசி) – தொழில்
நீலப்பட்டு – பட்டுநீலம் – நிறம்

உவமையை உருவகமாக்கல் : மின்னல்களைப் போன் சொற்கள் – சொற்களாகிய மின்னல்

கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.

கல்வி என்றால் என்ன? இத்தகங்களைப் படிப்பதா? பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? எதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின்மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டும் பயன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.

அக்கல்வி வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனத்தை ஒருமுகப்படுத்துதல் என்பது. கல்வியின் நோக்கம் தெய்திகளைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று; மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். மனவொருமைப்ப டே கல்வியின் அடிப்படை.

எல்லோரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவும் வளரும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச்சுடரைப் பெறுவதற்கு இதுபொன் தே சிறந்த வழியாகும். மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான். இதனால்தான், அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனத்தைப் பெற்றவன், ஒரு தவறையும் செய்ய மாட்டான்.

மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது, மன ஒருமைப்பாடுதான்.

மேலும், உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமை மாத்திரம் நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது, மன ஒருமைப்பாடுதான். அதுவே கல்விக்கு அடிப்படையாகும். (கல்வி – சுவாமி விவேகானந்தர்) (140)
Answer:
மாதிரிப்படி
பயிற்சியின்மூலம் மனவுறுதியைக் கட்டுப்படுத்தி, பயன்தரச் செய்வதே கல்வி. அதனை வளர்க்க, மன ஒருமைப்பாடே அடிப்படை. அறிவை வளர்க்கவும் மன ஒருமைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இயற்கை மூடியுள்ள அறிவுச் சுடரைப்பெற அதுவே சிறந்த வழி. சக்தியை மனிதன் வீணாக்கிவிடுவதால், அடிக்கடி தவறு செய்கிறான். பண்புடை மனம் பெற்றவன், தவறு செய்யான்.

மனத்தை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்று, மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கலைகளில் தேர்ச்சி பெற, மன ஒருமை தேவை. புதிர்களை விடுவிக்கும் திறம் அதற்கு உண்டு. அதுவே கல்விக்கு அடிப்படை.(55)

உண்மைப்படி – மன ஒருமையே வெற்றி
மனவுறுதியைக் கட்டுப்படுத்திப் பயிற்சியால் பயன்தரச் செய்வதே கல்வி. மனவொருமைப்பாடே கல்வியை வளர்க்க அடிப்படை. அறிவு வளர, மனவொருமைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இயற்கை மூடியுள்ள அறிவுச்சுடரைப் பெறச் சிறந்தவழி அதுவே. சக்தியை மனிதன் வீணாக்கி விடுவதால் தவறிழைக்கிறான்.

மனத்தை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்றதால், மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறான். கலைகளில் தேர்ச்சி பெற, மனஒருமை தேவை. புதிர்களை விடுவிக்கும் திறம் அதற்குண்டு. அதுவே கல்விக்கு அடிப்படை. (45)

இலக்கிய நயம் பாராட்டுக

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடும் காணீர்.
– பாரதியார்
Answer:
ஆசிரியர் : இப்பாடலைப் பாடியவர் நற்றமிழ்க் கவிஞர் பாரதியாராவார். இப்பாடலில் சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்க வேண்டுவதை வலியுறுத்தியள்ளார்.

மையக்கருத்து : பெண்கள் அறிவை வளர்க்கக் கல்வி அளிக்கவேண்டும். அதனால் உலகமே வெளிச்சம் பெறும் என்பதை மையக் கருத்தி வைத்துப் பாடியுள்ளார்.

எதுகைத்தொடை : அடிதோறும் முதல் சீர்களில் இரண்டாம் எழுத்து பெண்ணுக்கு, மண்ணுக்குள், கண்கள், பெண்கள் என ஒன்றிவந்தது. எனவே, அடி எதுகை அமைந்துள்ளது.

அணி : பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதனை நயம்பட இயல்பான சொற்களால் விளக்கியுள்ளார். எனவே, இயல்பு நவிற்சி அண அமைந்துள்ளது. எனினும், “கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ?” என வினவுவதால் உவமையும் அமைந்துள்ளது.

சந்த நயம் : இப்பாடலில் எதுகை மோனைச் சொற்கள் அமைய எளிய, இனிய சொற்களைக் கொண்டு சுவையுடன் பாடத்தக்க வகையில் பாடியுள்ளமையால், சந்த நயம் வெளிப்படுகிறது.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக

Answer:
இயற்கையாகப் பெற்ற அறிவால் கற்றுப் பெற வேண்டியது அதிகம்.
கலைகள் கற்போம்; ஓயுதல் செய்யோம்;
நல்ல ஆடை செய்வோம்; நாகரிகம் வளர்ப்போம்;
நடையும் பரப்பும் உணர் ஊர்திகள் செய்வோம்;
சட்டம் கற்போம்; சகலகலை திட்டம் வகுப்போம்;
மண்ணை ஆய்வோம்!
விண்ணையும் ஆய்வோம்!
திறமை, ஊக்கம், நேர்மை மறவாமல் உழைப்போம்!
ஆணும் பெண்ணும் சமம் என உழைப்போம்!
தேடு பொருள் அத்தனையும் தேசியம் செய்வோம்!

மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடிக்க.

Answer:
மேலிருந்து கீழ் : கோத்தாரி, கணக்காயன், சுவடி, பாலபாரதி, வேடல், திண்ணைப்பள்ளி, புவி, போதனார், பௌத்தம்.
கீழிருந்து மேல் : கல்லாடனார், இலக்கணம், மதரஸா, பனுவல், பாரதியார், விஜயா, மன்றம், பொத்தகம், சமணம், பிள்ளைக்கூடம்.
வலமிருந்து இடம் : பாதி, பிரசம், பொன். இடமிருந்து வலம் : பட்டிமக்னடபம், நற்றிணை, பொதி.

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
எ – கா: கால்நடை : கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்கு ஒன்ப்போனார்கள்.
சிறிய தொலைவைக் கடக்கக் கால்நடையாகச் செல்வது உடலுக்கு நலம் பயக்கும்.

1. பிண்ணாக்கு – கடலைப் பிண்ணாக்கு, கால்நடைத் தீவனமாகப் பயன்படும்.
பிள்நாக்கு – பாம்பு, தன் பிண்ணாக்கை பிள நாக்கை )வெளியே நீட்டியது.
2. எட்டுவரை – அவன் எட்டுவரை தெளிவாக எண்ணினான்.
எள்துவரை – அவன் தன் நிலத்தில் கட்டுவரை (எள் துவரை) விதைத்தான்.
3. அறிவில்லாதவன் – அறிவில்லாதவதுக்கு எதையும் பலமுறை சொன்னால்தான் புரியும்.
அறிவில் ஆதவன் – ஆசிரியர் கந்தனைப் பார்த்து, “நீ அறிவில் ஆதவன்” என்று கூறிப் புகழ்ந்தார்.
4. தங்கை – தங்தை த அண்ணனைப் போற்றிப் பேசினாள்.
தம் கை – பண்புல யோர் தங்கையே (தம்கையே) தமக்குதவி என வாழ்வர்.
5. வைகை நதியைப் பாரதியார், “தமிழ் கண்டதோர் வைகை” எனப் பாடியுள்ளார்.
வை கை – குழந்தை, தெருவிற்குச் செல்லாமல் இருக்க, “வை கை”யை என்று கூறினாள்.
6. நஞ்சிருக்கும் – வாழைப்பழத்தை நஞ்சிருக்கும்போது தின்னக் கூடாது.
நஞ்சு இருக்கும் – பாம்புக்குப் பல்லில் நஞ்சு இருக்கும்.

நிற்க அதற்குத் தக

கல்வி ரம்மைப் பண்படுத்த வேண்டும். நாம் பண்பட்டிருக்கிறோமா?
Asnwer:


How to Prepare using Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF?

Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes PDF by following certain essential steps which are provided below.


  • Use Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் notes by paying attention to facts and ideas.
  • Pay attention to the important topics
  • Refer TN Board books as well as the books recommended.
  • Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
  • Highlight and explain the concepts in details.


Samacheer Kalvi 11th Tamil All Chapter Notes PDF Download


Frequently Asked Questions on Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes


How to use Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் Notes for preparation??

Read TN Board thoroughly, make separate notes for points you forget, formulae, reactions, diagrams. Highlight important points in the book itself and make use of the space provided in the margin to jot down other important points on the same topic from different sources.

How to make notes for Samacheer Kalvi 11th Tamil Chapter 4.6 படைப்பாக்க உத்திகள் exam?

Read from hand-made notes prepared after understanding concepts, refrain from replicating from the textbook. Use highlighters for important points. Revise from these notes regularly and formulate your own tricks, shortcuts and mnemonics, mappings etc.
Share:

0 comments:

Post a Comment

Copyright © Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions About | Contact | Privacy Policy