![]() |
Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes |
Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 12th Tamil |
Subject |
12th Tamil |
Chapter |
Chapter 8.6 குறியீடு |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 12th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு notes PDF.
Download Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF from the links provided in this article.
Question 1.
குறியீடுகளைப் பொருத்துக.
அ) பெண் – 1. சமாதானம்
ஆ) புறா – 2. வீரம்
இ) தராசு – 3. விளக்கு
ஈ) சிங்கம் – 4. நீதி
அ) 2, 4, 1, 3
ஆ) 2, 4, 3, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 3, 1, 2, 4
Answer:
இ) 3, 1, 4, 2
Question 2.
கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
காரணம் : பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தவர்கள்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி
Question 3.
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
அ) உவமை
ஆ) உவமேயம்
இ) உத்தி
ஈ) உள்ளுறை உவமை
Answer:
ஈ) உள்ளுறை உவமை
Question 4.
‘திட்டம்’ என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்’ எதற்குக் குறியீடாகிறது?
அ) அமுதசுரபி
ஆ) ஆதிரைப் பருக்கை
இ) திட்ட ம்
ஈ) பயனற்ற விளைவு
Answer:
இ) திட்ட ம்
Question 5.
மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
அ) குறியீடு
ஆ) படிமம்
இ) அங்கதம்
ஈ) தொன்மம்
Answer:
அ) குறியீடு
குறுவினா
Question 1.
குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக.
Answer:
எதிரே
தலைமயிர் தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல் (பிரமிள்)
Question 2.
வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பீடுக.
Answer:
- வியர்வைக்கு – ஆதிரைப் பருக்கை
- செழிப்புக்கு – அமுத சுரபி
Question 3.
குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.
Answer:
- குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் குறியீட்டு உத்தி என்பர்.
- சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.
- சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
- இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்த வேண்டும். எ.கா. தராசு – நீதி.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
Symbol (சிம்பல்) என்பதன் பொருள்
அ) ஒன்றுசேர்
ஆ) பிரித்தல்
இ) காட்டல்
ஈ) விட்டு விலகு
Answer:
அ) ஒன்றுசேர்
Question 2.
தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர்
அ) ஜார்ஜ்
ஆ) ஹார்ட்
இ) பிரவுன்லீ
ஈ) வில்லியம்
Answer:
ஆ) ஹார்ட்
Question 3.
‘உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையை’ – என்ற கபிலரின் கலித்தொகை பாடலில் வெளிப்படும் குறியீடு.
i) தலைவியுடனான திருமணத்தைத் தோழி வலியுறுத்தியதை விரும்பாத தலைவன் அக்கூற்றை மறுத்தற்கு, யானை வேங்கை மரத்தைக் குத்தியது குறியீடாகிறது.
ii) அவள் கூற்றை வேண்டாததாகக் கருதித் தலைவன் வருந்துதலுக்கு, தந்தத்தை எடுக்க இயலாது யானை தவிப்பது குறியீடாகிறது.
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி
Question 4.
“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை” – என்னும் கபிலரின் அகநானூற்றுப் பாடலில் வெளிப்படும் குறியீடு
i) ஆண் குரங்கின் செயல் தலைவனின் செயலுக்குக் குறியீடாகிறது.
ii) சுனைநீர்த் தேறல் தலைவன் கொண்டுள்ள இன்பந்தரும் மயக்கத்திற்குக் குறியீடாகிறது.
iii) சந்தன மரத்தில் ஏறுவதற்கு முடியாமல் பூக்களாகிய படுக்கையில் குரங்கு விழுந்து கிடக்கும் செயல், திருமணம் செய்து கொள்ளாமல் இன்பத்தை மட்டும் நகர நினைக்கும் தலைவனது செயலுக்குக் குறியீடாகிறது.
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி
Question 5.
‘வியர்வை’ என்னும் தலைப்பில் ‘இந்த ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி’ என்று அப்துல்ரகுமான் எழுதியுள்ள கவிதையில் வியர்வைத்துளிக்குக் குறியீடாவது ……………………… செழிப்புக்குக் குறியீடாவது ……………..
அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி
ஆ) திட்டம், பயனற்ற விளைவு
இ) அமுதசுரபி, ஆதிரைப்பருக்கை
ஈ) பயனற்ற விளைவு திட்டம்
Answer:
அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி
Question 6.
சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இக்காலத்தில் இலக்கிய உத்தியை ………………………’ எனலாம்.
அ) தொன்மம்
ஆ) படிமம்
இ) குறியீடு
ஈ) புதுக்கவிதை
Answer:
இ) குறியீடு
குறுவினா
Question 1.
குறியீடு, குறியீட்டியம் சான்றுடன் விளக்குக.
Answer:
- இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.
- உருவ ஒற்றுமை இருக்கலாம்.
- அருவமான பண்பு ஒற்றுமை இருக்கலாம்.
சான்று
பெண்ணை – விளக்கு என்பர். குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் என்பர்.
Question 2.
குறியீட்டியம் கோட்பாட்டை வளர்த்தவர்கள் யாவர்?
Answer:
பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே
Question 3.
கபிலரின் கலித்தொகை பாடல்வழி குறியீட்டு உத்தியை விளக்குக.
Answer:
- வேங்கை மரம் பூத்திருக்கிறது.
- அது புலிபோல் தோற்றமளிக்கிறது.
- சினம் கொண்ட மதயானை அடிமரத்தைத் தந்தத்தால் குத்தியது.
- ஆழப்பதிந்த தந்தம் எடுக்க முடியாமல் முழங்கியது.
- இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன். இப்பாடலில் யானை தலைவனுக்குக் குறியீடாக இடம் பெறுகிறது.
Question 4.
குறியீடு என்பது ஒரு புதிய வடிவம் அன்று – விளக்குக.
Answer:
(i) சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்றும் இலக்கிய உத்திதான் குறியீடு.
(ii) உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாத, மறைக்க வேண்டுபவை. அதனால் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது.
(iii) குறியீடு என்பது அகம், புறம் என எல்லா வகைக் கவிதையிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்.
Question 5.
‘வியர்வை’ கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டு செய்தி யாது?
Answer:
- ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபி பாத்திரத்தில் உணவு வளர்வது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது.
- வியர்வைக்கு – பருக்கை
- செழிப்புக்கு – அமுதசுரபி குறியீடாக அமைகிறது.
Question 6.
‘திட்டம்’ கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டுச் செய்தி யாது?
Answer:
- திட்டங்கள் தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல் எதிராகப் போய்விடுகிறது.
- வரம் – திட்டத்திற்கும்.
- சாபம் – பயனற்ற விளைவுக்கும் குறியீடாக அமைகிறது.
- வரங்கள், சாபங்கள், ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்கே?
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ளவொரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால். ‘முதலாளி இல்லை’ என்று சொல்லுமாறு வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, “நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? சொல்ல மாட்டேன்” என்று பிடிவாதமாகக் கூறினார். அவர், வ.சு.ப. மாணிக்கம்.
தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினாார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றிய போது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார். திருவந்தபுரத்தின் திராவிடமொழியில் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர். தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும், உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர். ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.
அவருடைய தமிழ்த்திறத்துக்கும் ஒரு பதம்.
“ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்”.
வினாக்கள் :
1. தமிழின் இதயம் என அறிஞர்களால் போற்றப்பட்டவர் யார்?
2. வ.சு.ப. மாணிக்கத்தின் பணிகள் பற்றிக் கூறுக.
3. வ.சு.ப. மாணிக்கத்திற்கு என்ன விருது வழங்கப்பட்டது?
4. பிரித்து எழுதுக: பேராய்வாளர்
5. புணர்ச்சி விதி தருக: தமிழாய்வு
Answer:
1. தமிழின் இதயம் – வ.சு.ப. மாணிக்கம்.
2.
- அண்ணாமலைப் பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர்.
- அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் முதல்வர்.
- மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.
3. திருவள்ளுவர் விருது
4. பேராய்வாளர் – பெருமை + ஆய்வாளர்
5. தமிழாய்வு – தமிழ் + ஆய்வு
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே – தமிழாய்வு.
தமிழாக்கம் தருக.
I make sure I have the basic good habits which respecting my elders, greeting people when I meet them, wishing them well when departing etc. Other than this, observing the law, serving the poor and downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless, assisting someone with a physically challenged etc. are also other good habits of mine. To lead on a peaceful life. I develop other good habits, writing, listening to music, dancing, singing etc. are other such habits which fulfill the needs of my soul.
நான் பெரியவர்களை மதிப்பது, பிறரைச் சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது, அவர்கள் புறப்படும் சமயத்தில் நன்றி செலுத்துவது போன்ற நல்ல பழக்கங்கள் என்னிடம் இருப்பதை உறுதியாகச் சொல்வேன். இது தவிர, சட்டத்தைக் கவனித்தல், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை புரிதல், நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்,
வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் அமைத்துத் தருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்தல் போன்ற மற்ற சில நல்ல பழக்கங்களும் என்னிடம் உள்ளது. ஒரு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள நான் மேலும் சில நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறேன், பாடல் கேட்கிறேன், நடனம் ஆடுகிறேன், எழுதுகிறேன், இசையை ரசிக்கிறேன். இதுபோன்ற பழக்கங்களால் என் ஆன்மாவின் தேவைகள் பூர்த்தியாகின்றன.
கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றுக.
“எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள் காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக் கொண்டும் யோசனை செய்தாள்.
அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் ‘ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருஷம் இந்தியதேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் ‘படப்போட்டி’யை ஆரம்பித்து விட்டார்கள்.
– ராஜா வந்திருக்கிறார்’, கு. அழகிரிசாமி
உரையாடல்
ராமசாமி : என்னிடம் சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா?
செல்லையா : …. விழித்தான்.
ராமசாமி : உன்னிடம் இருக்கா?
தம்பையா : …….. ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்.
ராமசாமி : உனக்கு இருக்கா?
மங்கம்மாள் : …. மூக்கின் மேல் விரல் வைத்தாள். கண்ணை லேசாக மூடிக்கொண்டாள்.
ராமசாமி : ஏன் மூன்று பேரும் பதில் சொல்லவில்லை என் கேள்விக்கு?
மூவரும் : ….. பதில் இல்லை .
(மற்ற பிள்ளைகள் ராமசாமியின் கேள்விக்கு மூவரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தனர். அன்று பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே 112
ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் ஒரு போட்டி வந்தது.)
ராமசாமி : என்னிடம் இந்திய தேசிய சரித்திரப் புத்தகம் உள்ளது, உன்னிடம் உள்ளதா?
செல்லையா : என்னிடம் சிவிக்ஸ் புத்தகம் உள்ளது.
ராமசாமி : சரி பரவாயில்லை , போட்டியை ஆரம்பிக்கலாமா?
செல்லையா : சரி
(இருவரும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டுகிறார்கள். இடையிடையே வரைபடம் உள்ளதா, படம் உள்ளதா என்ற போட்டி விரைவாக நடந்தது. ஆளுக்கு ஒரு பக்கம்
பக்கமாகப் புரட்ட போட்டித் தொடர்ந்தது)
ராமசாமி : கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்து உன்னிடம் இன்னும் எத்தனைப் பக்கம் இருக்கிறது என்றான்.
செல்லையா : இன்னும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. உன்னிடம் எத்தனைப் பக்கம் உள்ளது?
ராமசாமி : இதுதான் எனது கடைசிப் பக்கம்.
செல்லையா : ஓ… அப்ப நான்தான் ஜெயிச்சேன்….
உரை எழுதுவோம்
உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை ஒன்றை எழுதுக.
வரவேற்புரை
நமது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை இருகரம்கூப்பி மனமகிழ்வோடு வரவேற்கிறேன்.
முயற்சி செய்து வெற்றி கிடைத்தால் விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள். முயற்சி செய்து வெற்றிகிடைக்காவிட்டால் வீண்முயற்சி என்பார்கள். இதுதான் உலகம். ஆனால், நமது அழைப்பிற்கு இசைவு தந்து நம் முன்னே ஒரு வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அமர்ந்திருக்கும் ஆட்சியாளர் ஒரு அறிவாளர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகில் சவாரி செய்வது போலாகும்.
ஒவ்வொருமாணவரும் ஏதேனும் ஒன்றைச்சாதித்தேதீரவேண்டும் என்ற குறிக்கோளோடுதான் படிக்க வேண்டும். நமது மாவட்ட ஆட்சியரும் பள்ளியிலே பயிலுகின்றபோது தான் எதிர்காலத்தில் ஆட்சியராக ஆக வேண்டும் என்று உறுதியோடிருந்தவர்.
‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கிணங்க அவருடைய முயற்சி பலித்துவிட்டது. இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றும் என்பார்கள். லட்சியத்தை அலட்சியப்படுத்தக்கூடாது. நேற்று செய்தித்தாளிலே நமது மாவட்ட ஆட்சியர் பேட்டிக் கொடுத்திருந்தார். அதிலே தான் படித்த பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் போவதாகக் கூறியிருந்தார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயென நமது பள்ளியே மகிழந்து போனது.
வெற்றிபெறுவதற்குமுன் உலகை நீ அறிவாய், வெற்றிபெற்றபிறகு உலகம் உன்னை அறியும் என்பது போல, நமது ஆட்சியரும் உலகம் அறிந்த உயர்ந்த மனிதராகக் காணப்படுகிறார். தான் படித்த பள்ளிக்கு வருகை புரிந்தும், பள்ளியால் தனக்குப் பெருமை என்று கூறும் ஆட்சியருடைய பேச்சும் : நம்மையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிடச் செய்கிறது.
‘ஞாலம் கருதினும் கைகூடும்’ என்னும் வள்ளுவனின் வாக்கிற்கு இலக்கணமான நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை மீண்டும் மீண்டும் வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.
விடைக்கேற்ற வினா அமைத்தல்
விடை : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் இடம் பெற்றுள்ளது.
வினா : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
1. விடை : நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
வினா : நடுவண் அரசு எந்த ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது?
2. விடை : சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன.
வினா : சாலைகளில் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுவது எது?
3. விடை : 1865ல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.
வினா : தென்னிந்தியாவில் முதல் தொடர்வண்டி நிலையம் எங்கு எப்போது அமைக்கப்பட்டது.
4. விடை : “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுட் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார் கிரியோர் சன்
வினா : ஆவணப்படம் என்று எதைச் சிரியோர்சன் குறிப்பிடுகிறார்?
மொழியோடு விளையாடு
எண்ணங்களை எழுத்தாக்குக.
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…….
வான் மிதக்கும்…… கண்க ளுக்கு……
மயில் இறகால் மையிடவா
மார் உதைக்கும்….. கால்களுக்கு……
மணி கொலுசு நான் இடவா…….
இலக்கிய நயம் பாராட்டுதல்
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்.
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே. – திரிகூட ராசப்பக் கவிராயர்
திரண்டக் கருத்து :
ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து பெண் குரங்குகளுக்குக் 1 கொடுக்கின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களை தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைக் கண்களால் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரையும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகள் உடையது என்று குறத்தி தன் மலையை விளக்குகிறாள்.
தொடை நயம் :
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு போன்ற நயங்கள் அமைந்துள்ளன.
மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
சான்று :
கானவர்கள்
கமன சித்தர்
கூனலிளம்
குற்றாலம்
எதுகை நயம் :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை
முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
சான்று :
வானரங்கள்
கானவர்கள்
தேனருவித்
கூனலிளம்
இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
கொஞ்சும்
யொழுகும்
வழுகும்
அணி நயம் :
அணி என்பதற்கு அழகு என்பது பொருள் செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, : பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி என்பர்.
இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது. பாடலின் பொருளை மிகவும் உயர்த்திக் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
சான்று :
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கற்பனை நயம் :
கற்பனை கவிஞனுக்கு கை வந்த கலை
என்பதற்கு ஏற்ப கவிஞர் தன் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
சான்று :
தேனருவித் திரையெழும்பி வானின் வழியொழுகும்.
குறுக்கெழுத்துப் புதிர்
Answer:
நிற்க அதற்குத் தக
நீவீர் செல்லும் வழியில் விபத்தினைக் காண்கிறீர்கள். விபத்திற்கான காரணங்கள் என்ன? பட்டியலிடுக. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எவ்விதம் உதவலாம்?
படிப்போம் பயன்படுத்துவோம் (அலுவலகப் பொருள்கள்)
1. Stamp pad – மை பொதி
2. Stapler – கம்பிதைப்புக் கருவி
3. Folder – மடிப்புத்தாள்
4. File – கோப்பு
5. Rubber Stamp – இழுவை முத்திரை
6. Eraser – அழிப்பான்
How to Prepare using Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 12th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.1 இளந்தமிழே! Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.1 இளந்தமிழே! Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.1 பெருமழைக்காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.1 பெருமழைக்காலம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.2 பிறகொரு நாள் கோடை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.2 பிறகொரு நாள் கோடை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.3 நெடுநல்வாடை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.3 நெடுநல்வாடை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.4 முதல்கல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.4 முதல்கல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.2 விருந்தினர் இல்லம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.2 விருந்தினர் இல்லம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.3 கம்பராமாயணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.3 கம்பராமாயணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.4 உரிமைத்தாகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.4 உரிமைத்தாகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.5 பொருள் மயக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.5 பொருள் மயக்கம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.2 இதில் வெற்றி பெற Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.2 இதில் வெற்றி பெற Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.3 இடையீடு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.3 இடையீடு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.1 மதராசப்பட்டினம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.1 மதராசப்பட்டினம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.2 தெய்வமணிமாலை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.2 தெய்வமணிமாலை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.3 தேவாரம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.3 தேவாரம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.4 அகநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.4 அகநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.5 தலைக்குளம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.5 தலைக்குளம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.6 படிமம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.1 திரைமொழி Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.1 திரைமொழி Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.2 கவிதைகள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.2 கவிதைகள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.3 சிலப்பதிகாரம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.3 சிலப்பதிகாரம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.4 மெய்ப்பாட்டியல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.4 மெய்ப்பாட்டியல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.5 நடிகர் திலகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.5 நடிகர் திலகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.2 அதிசயமலர் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.2 அதிசயமலர் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.2 முகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.2 முகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.5 கோடை மழை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.5 கோடை மழை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes
0 comments:
Post a Comment