![]() |
Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes |
Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 12th Tamil |
Subject |
12th Tamil |
Chapter |
Chapter 6.6 காப்பிய இலக்கணம் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 12th Tamil Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் notes PDF.
Download Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF from the links provided in this article.
Question 1.
சிலப்பதிகாரப் பாடப்பகுதியில் அமைந்துள்ள காப்பிய இலக்கணக்கூறுகளைக் கட்டுரையாக எழுதுக.
Answer:
வியப்பு:
அரங்கேற்ற காதை நிகழ்வுகளின் போக்கு:
மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமைத் தவறாது, பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைபிடித்து நன்மை பெறுகவும் தீமை நீங்கவும் வேண்டி ‘ஓரொற்றுவாரம்’ ‘ஈரொற்று வாரம்’ என்னும் தெய்வப் பாடலை முறையாகப் பாட பாடலுக்கு ஏற்ப இசை அமைக்க மாதவி ஆடியதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
கொடை:
மன்னன் பட்டமும் பரிசும் மாதவிக்கு அளித்தது:
- மாதவியின் ஆடல் கண்டு அகமகிழ்ந்தான் மன்னன்.
- மாதவிக்கு தலைக்கோல் அரிவை’ என்னும் பட்டத்தை வழங்கினான்.
- ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னன் பரிசாக வழங்கினான்.
- பாடப்பகுதிக்கும் காப்பிய இலக்கணத்திற்கும் உள்ள பொருத்தம்
பெருமிதம்:
அரங்கேற்றுகாதையில் தலைமகளாக உள்ள மாதவியின் நாட்டியம், அரங்கேற்றம் போன்றவற்றைக் கண்டு பரிசு பெறுதல், இன்பம் காணுதல் ஆகியவைக் காப்பிய இலக்கணத்திற்கு
பொருத்தமாக உள்ளது.
மன்னனின் போர்:
சோழ மன்னன் பகைமன்னனுடன் நிகழ்த்திய போரில் பறித்த வெண்கொற்றக் கொடையின் : காம்பில் செய்யப்படுவது தலைக்கோல். இவ்விடத்தில் போர் வெற்றிச் செய்தி காணப்படுகிறது. இவ்வெற்றிச் செய்தி காப்பிய இலக்கணத்திற்குப் பொருத்தமானது.
இலக்கணத் தேர்ச்சி கொள்
Question 1.
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
அ) சிவஞான முனிவர்
ஆ) மயிலை நாதர்
இ) ஆறுமுக நாவலர்
ஈ) இளம்பூரணர்
Answer:
ஆ) மயிலை நாதர்
Question 2.
கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
கூற்று 2 : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
Question 3.
சரியானவற்றைப் பொருத்தித் தேர்க :
அ) காதை – 1. கந்தபுராணம்
ஆ) சருக்கம் – 2. சீவகசிந்தாமணி
இ) இலம்பகம் – 3. சூளாமணி
ஈ) படலம் – 4. சிலப்பதிகாரம்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1
Question 4.
தவறான இணையைத் தேர்க :
Answer:
அ) விருத்தப்பா – நாலடியார்
குறுவினா
Question 5.
காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை ?
Answer:
காப்பியம் இரு வகைப்படும். அவை, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம்.
ஐம்பெருங்காப்பியங்கள் :
சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி.
ஐஞ்சிறுகாப்பியங்கள் :
நீலகேசி, சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம்.
Question 6.
காப்பியத்தைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
இதிகாசம், புராணம், இலக்கியம், சரிதம், காவியம் முதலான பெயர்கள் காப்பியத்தின் வேறு பெயர்கள்.
Question 7.
காப்பியத்தின் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுது.
Answer:
காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை காப்பியத்தின் சிற்றுறுப்புகள் ஆகும்.
Question 8.
பாவகம் – விளக்குக.
Answer:
- காப்பியத்தின் பண்பாகப் பாவகம் என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.
- காப்பியக் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தைப் பாவகம் என்பர்.
எ.கா: பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்பது கம்பராமாயணத்தின் பாவகம்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொருத்திக் காட்டுக.
அ) காதை – 1. சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
ஆ) சருக்கம் – 2. கந்தபுராணம், கம்பராமாயணம்
இ) இலம்பகம் – 3. சீவக சிந்தாமணி
ஈ) படலம் – 4. சூளாமணி, பாரதம்
உ) காண்டம் – 5. சிலப்பதிகாரம், மணிமேகலை
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4, 5
இ) 4, 3, 2, 1, 5
ஈ) 2, 3, 4, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 2.
EPOS என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்
அ) சொல் அல்லது பாடல்
ஆ) எழுத்து அல்லது கவிதை
இ) வாக்கியம் அல்லது வரலாறு
ஈ) பக்தி அல்லது பண்பாடு
Answer:
அ) சொல் அல்லது பாடல்
Question 3.
நன்னூலுக்கு உரை எழுதியவர்
அ) மயிலைநாதர்
ஆ) சி.வை.தாமோதரனார்
இ) சேனாவரையர்
ஈ) இளம்பூரணர்
Answer:
அ) மயிலைநாதர்
Question 4.
‘பஞ்சகாப்பியம்’ என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்ட நூல்
அ) நன்னூல்
ஆ) தமிழ்விடுதூது
இ) பொருள்தொகை நிகண்டு
ஈ) திருத்தணிகை உலா
Answer:
ஆ) தமிழ்விடுதூது
Question 5.
சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி.வை.தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பன அறிய செய்வது
அ) மயிலைநாதரின் நன்னூல் உரை
ஆ) சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை
இ) பொருள்தொகை நிகண்டு
ஈ) திருத்தணிகை உலா
Answer:
ஆ) சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை
Question 6.
வடமொழியில் ‘காவ்யதரிசனம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) இலக்கண விளக்கம்
ஈ) தொன்னூல் விளக்கம்
Answer:
அ) தண்டியலங்காரம்
Question 7.
தண்டியலங்காரம் காப்பிய வகை ……………. பகுக்கின்றது.
அ) இரண்டாக
ஆ) மூன்றாக
இ) நான்காக
ஈ) ஐந்தாக
Answer:
அ) இரண்டாக
Question 8.
‘பாவிகம் என்பது காப்பிய பண்பே’ என்று கூறும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம்
ஈ) மாறனலங்காரம்
Answer:
இ) தண்டியலங்காரம்
Question 9.
பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப்பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
Answer:
இ) சீவகசிந்தாமணி
Question 10.
‘பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப்’ என்பது …………. பாவிகம்.
அ) கம்பராமயணத்தின்
ஆ) சிலப்பதிகாரத்தின்
இ) சீவகசிந்தாமணியின்
ஈ) குண்டலகேசியின்
Answer:
அ) கம்பராமயணத்தின்
Question 11.
தண்டியலங்காரம் கூறும் ‘தொடர்நிலை’ என்னும் செய்யுள் வகை ………….. குறிப்பதாகும்.
அ) சிற்றிலக்கியத்தை
ஆ) அக இலக்கத்தை
இ) காப்பியத்தை
ஈ) புற இலக்கியத்தை
Answer:
இ) காப்பியத்தை
Question 12.
பொருள்தொடர்நிலைக்கான நூல்கள்
அ) சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
ஆ) அந்தாதி இலக்கியங்கள்
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
Question 13.
விருத்தம் என்னும் ஒரேவகைச் அசெய்யுளில் அமைந்தவை
அ) சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை
இ) குண்டலகேசி, வளையாபதி
ஈ) இராவணகாவியம்
Answer:
அ) சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
Question 14.
பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) குண்டலகேசி
ஈ) வளையாபதி
Answer:
ஆ) சிலப்பதிகாரம்
Question 15.
‘அந்தாதி இலக்கியங்கள்’, செய்யுள் வகைகளில் ……….. சான்றாக அமைகின்றன.
அ) பொருள் தொடர்நிலைக்கு
ஆ) சொல்தொடர்நிலைக்கு
இ) தொகைநிலைக்கு
ஈ) முத்தகத்துக்கு
Answer:
ஆ) சொல்தொடர்நிலைக்கு
Question 16.
பொருத்திக் காட்டுக.
அ) பாரதியார் – 1. பாஞ்சாலி சபதம்
ஆ) பாரதிதாசன் – 2. மருமக்கள் வழி மான்மியம்
இ) கவிமணி – 3. பாண்டியன் பரிசு
ஈ) கண்ண தாசன் – 4. மாங்கனி
அ) 1, 3, 2, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 2,1, 3, 4
Answer:
அ) 1, 3, 2, 4
Question 17.
பொருத்திக் காட்டுக.
அ) கவியோகி சுத்தானந்த பாரதியார் – 1. ஏசுகாவியம்
ஆ) புலவர் குழந்தை – 2. பராசக்தி மகாகவியம்
இ) பாரதிதாசன் – 3. இராவண காவியம்
ஈ) கண்ண தாசன் – 4. இருண்டவீடு
அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 2, 3, 4, 1
Question 18.
‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ என்னும் குறுங்காப்பியத்தை இயற்றியவர்
அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) கவிமணி
ஈ) புலவர் குழந்தை
Answer:
ஆ) கண்ண தாசன்
குறுவினா
Question 1.
காப்பியம் – பெயர்க்காரணம் கூறுக.
Answer:
ஆங்கிலத்தில் EPIC என்பர்.
- EPOS என்ற கிரேக்கச் சொல். EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பர்.
- வடமொழியில் காவியம் என்பர்.
- காப்பு & இயம் எனப் பிரித்து மரபைக் காப்பது இயம்புவது.
- மொழியைச் சிதையாது காப்பதும் என்பர்.
Question 2.
காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் யாவை?
Answer:
- பொருட்டொடர் நிலைச் செய்யுள்
- விருத்தச் செய்யுள்
- கதைச் செய்யுள்
- அகலக் கவி
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.
- தொடர்நடைச் செய்யுள்
Question 3.
காப்பிய அமைப்பு முறையை விளக்கிப் பட்டியல் இடுக.
Answer:
காப்பியத்தின் சிற்றுறுப்புகள் :
காதை, சருக்கம், இலம்பகம், படலம் பல சிற்றுறுப்புகள் தொகுதி காண்டம் என்பர்.
- காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை
- சருக்கம் – சூளாமணி, பாரதம்
- இலம்பகம் – கந்தபுராணம், கம்பராமாயணம்
- காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
Question 4.
தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணத்தை விளக்குக.
Answer:
வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணி இலக்கண நூல். இந்நூலில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனப் பிரிக்கப்பட்டு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
காப்பியங்கள் :
‘ஒரே வகைச் செய்யுளாலும்
பல வகைச் செய்யுளாலும்’ ஆகும்.
Question 5.
சிறுகாப்பியத்திற்குரிய இலக்கணம் தருக.
Answer:
அறம், பொருள், இன்பம், வீடு நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறு காப்பியம் ஆகும்.
Question 6.
பாவிகம் என்றால் என்ன?
Answer:
காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தே பாவிகம் ஆகும்.
Question 7.
கம்பராமாணத்தின் பாவிகம் யாது?
Answer:
‘பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடும் என்பதே ஆகும்.
Question 8.
சிலப்பதிகாரத்தின் பாவிகம் கூறுக.
Answer:
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் – என்பதேயாகும்.
Question 9.
காப்பியம் என்பது யாது?
Answer:
- ஒரு மொழியின் வளத்தைக் காப்பியங்களே புலப்படுத்தும்.
- எளிய நடை, இனிய கதை, அழகியல், கற்பனை ஆகிய ஒரு சேர அமைந்த இலக்கிய வடிவமே காப்பியமாகும்.
Question 10.
தொடர்நிலை என்பது யாது?
Answer:
ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகை தொடர்நிலை ஆகும்.
Question 11.
தொடர்நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை? சான்றுடன் விளக்குக.
Answer:
இரண்டு வகைப்படும். அவை: பொருள் தொடர்நிலை, சொல் தொடர்நிலை.
பொருள் தொடர்நிலை : சிலப்பதிகாரம், கம்பராமாயணம்.
சொல் தொடர்நிலை : அந்தாதி, இலக்கியங்கள்.
Question 12.
தண்டியலங்காரம் – குறிப்பு வரைக.
Answer:
- அணி இலக்கணத்தைக் கூறும் நூல். வடமொழியில் ‘காவ்யதரிசம்’ என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.
- இந்நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை என நான்கு வகைப்படும்.
- தொடர்நிலை என்னும் வகை காப்பியத்தைக் குறிக்கும்.
சிறுவினா
Question 1.
பெருங்காப்பியத்திற்குண்டான இலக்கணம் தருக.
Answer:
- வாழ்த்துதல் தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல், மூன்றில் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோ வருதல் வேண்டும்.
- அறம், பொருள், இன்பம், வீடு நான்கும் திரண்ட பொருளாக இருத்தல் வேண்டும்.
- தன்னிகர் இல்லாத தன்மைக் கொண்டவனாகத் தலைவன் இருத்தல் வேண்டும்.
- 18 உறுப்புகளும், இயற்கை வருணனைகள் அமைதல் வேண்டும்.
- திருமணம், மக்கட்பேறு, முடிசூடல் நிகழ்வு இருத்தல் வேண்டும்.
- அமைச்சர்களுடன் கலந்துரையாடல், தூது, போர் வெற்றி நிகழ்வுகள் இருத்தல் வேண்டும்.
- கதைப்போக்கு வரிசைப்படி அமைதல் வேண்டும்.
- உட்பிரிவு சருக்கம், இலம்பகம், காதை, பரிச்சேதம் என்ற பெயரில் அமைதல் வேண்டும்.
- எண் வகைச்சுவை மெய்ப்பாட்டுக் குறிப்புகள் அடைதல் வேண்டும்.
இவையே பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணம் ஆகும்.
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
வை.மு. கோதைநாயகி (1901-1960)
ஐந்தரைவயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர். தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கு புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எழுத முடியும் என்று அவர் வருந்திய போது, அவரது தோழி, : நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான ‘இந்திர மோகனா’ என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் ‘நாவல் ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. (‘வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்’) ஆவார்.
இவர் ‘ஜகன் மோகினி’ என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப்பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார்.
தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘குடும்பமே உலகம்’ என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின் மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார்.
அவருடைய எழுத்தாற்றலுக்கொரு சான்று :
“என்ன வேடிக்கை ! அடிக்கடி பாட்டி உலகானுபவம்,,,, உலகம் பலவிதம் ,,,, லோகோ பின்னருசி’,,, என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே ,,, பாட்டி சொல்லிய வசனங்களை விடக் கடிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கிவிடும் போலிருக்கிறதே! பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்துவிட்டாள்,,,,,
நான் கிராமத்தை வெறுத்துச் சண்டையிட்டு வீணாக அவர் மனதை நோவடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்துத் தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே! ,,, என்ன உலக விசித்திரம்!,,, என்று கட்டுமீறிய வியப்பில் சித்ரா மூழ்கினாள்.”
(‘தபால் வினோதம்’ குறுநாவலில் இருந்து)
வினாக்கள் :
1. வை. மு. கோதைநாயகியின் முதல் நூல் எது?
2. தொடர்ந்து உறுப்பிலக்கணம் தருக: தொடர்ந்து
3. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள உவம உருபினை எடுத்து எழுதுக.
4. பிரித்தறிக: பங்கேற்று
5. புணர்ச்சி விதி கூறுக: தன்னுடைய
Answer:
1. இந்திர மோகனா
3. போலவே (போல)
4. பங்கேற்று – பங்கு + ஏற்று
5. தன்னுடைய – தன் + உடைய
- தனிக்குறில் முன் ஒன்று உயிர்வரின் காட்டும் என்ற விதிப்படி, தன்ன் + உடைய என்றானது.
- உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ன்+உ=னு) தன்னுடைய என்று புணர்ந்தது.
தமிழாக்கம் தருக.
Popular as the ‘Cultural Capital’ of India, Tamil Nadu is extremely well-known for its marvellous temples and other architectural gems. The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished at the time of Chola dynasty in ancient Tanjavoor. In this traditional art form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with glass pieces, pearls, semi-precious stones, and gold and other vibrant colours. In the modern times, Tanjore paintings look up to human figures, animals, floral motifs and birds as muses.
தமிழாக்கம்:
இந்தியாவில் தமிழகம் கலாச்சாரத் தலைநகரமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு பிரம்மாண்டமான / கோவில்களுக்கும் மற்றும் கட்டடக்கலைகளுக்கும் புகழ்பெற்றது. குறிப்பாக, தஞ்சாவூர் ஓவியங்கள் சோழவம்சத்தின் கலாச்சாரங்களையும் பண்டைய தஞ்சாவூரின் பாரம்பரிய கலை, ஓவியங்கள் மற்றும் புனித தெய்வங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது.
தெய்வங்களின் உருவங்கள் கண்ணாடித் துண்டுகள் ஓவியங்கள், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றில் பல : – வண்ணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் மனித உருவங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பறவைகள் – உருவங்கள் கொண்டதாகப் புதிய பரிணாமம் பெற்றுள்ளன.
கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச் சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுது.
எ.கா: கபிலன் திறமையானவர் என்று ………….. (குமரன்) தெரியும்.
கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.
1. நேற்று முதல் …………… (அணை ) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
2. உங்களுக்கு …………… (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.
3. முருகன் …………. (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை .
4. நம்முடைய ……….. (தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.
Answer:
1. அணையின்
2. யாரால்
3. வேகமாகச்
4. தேவையின்
பொருள் வேறுபாடறிந்து தொடர் அமைக்க.
எ.கா: களம் – கலம் : போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்குக் கலத்தில் நீர் தரப்பட்டது.
வலம், வளம் : ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன.
1. புல் – புள்
புல் தரையில் புட்கள் (புள்கள்) கூட்டம் அமர்ந்து விளையாடின.
2. உழை – உளை
தனது முதலாளிக்காக உழைக்கும் குதிரையின் உளை (பிடரி மயிர்) மிகவும் அழகாக இருக்கிறது.
3. கான் – காண்
கானகத்தில் வாழும் விலங்குகளைக் காண்பது மகிழ்ச்சி தரக்கூடியது.
4. ஊண் – ஊன்
ஊண் (மாமிசம்) உணவை உண்டு ஊனை (உடலை) வளர்ப்பது பாவம்.
5. தின்மை – திண்மை
திண்மை (வலிமை) கொண்ட ஒருவன் எளியவருக்கு தின்மை (தீமை) செய்தல் மறமாகாது.
மொழியோடு விளையாடு
எண்ணங்களை எழுத்தாக்குக.
உன்னை நீயே உற்றுப்பார்
நீ ஒரு நிலா,
கூர்மையான முட்கள்
மூடியிருக்கின்றது உன்னை
அவைகளை விலக்கி விட்டுப்பார்
உன்னை சுவாசம் செய்ய
நந்தவனமாய் நான்
இலக்கிய நயம் பாராட்டுதல்
அந்தியிருளாற் கருகும் உலகம் கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றே இயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ ? – பாரதிதாசன்
தலைப்பு : வெண்ணிலவு.
ஆசிரியர் குறிப்பு :
பெயர் : பாராதிதாசன் (கனகசுப்புரத்தினம்)
பெற்றோர் : கனகசபை – இலக்குமி
பிறப்பு : 29-4-1891
சிறப்பு : புரட்சிக்கவி
நூல்கள் : குடும்பவிளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், அழகின் சிரிப்பு… இன்னும் பல.
திரண்டக் கருத்து:
மாலை இருளினால் கருமையாகும் உலகினைக் கண்டேன். அதுபோல வானமும் இருளாவதைக் கண்டேன். திசைகள் எட்டும் இருளில் மறைவதைக் கண்டேன். பின்னர் கருமையான இருள் சிரிப்பதில்லை. பெருஞ்சிரிப்பு ஒளியின் முத்துக்களாகிய முழு நிலவே நீதான் அழகெல்லாம் ஒன்று சேர்த்துக் காட்சி தருகிறாய். உலகிற்குக் குளிர் ஏற்றி, ஒளியும் ஊட்டுகிறாய். இயற்கையாகிய அன்னை தனது எழில் வாழ்வைச் சித்தரிக்கும் அழகோ நீ நிலவே – என்கிறார் பாரதிதாசன்.
மோனை நயம் :
நாட்டுக்கு அழகு சேனை
பாடலுக்கு அழகு மோனை
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.
சான்று :
அந்தியிருளால்
அவ்வாறே
பிந்தியந்த
பெருஞ்சிரிப்பின்
எதுகை நயம் :
பெண்ணுக்கு அழகு புன்னகை
பாடலுக்கு அழகு எதுகை
பாடல் அடிகளின் சீர்களின் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை .
சான்று :
அந்தியிருளால்
பிந்தியந்த
சிந்தாமல்
சிந்தாவென்று
அணி நயம் :
இயற்கை அன்னைத் தனது எழில் வாழ்வைக் காட்டவே நிலவாகச் சித்தரித்துக் காட்டுகிறாள் : என்னும் அடிகளில் இயற்கையை உயர்வாகப் பாடியிருப்பதால் உயர் வு நவிற்சி அணி இடம்பெற்றுள்ளது.
கற்பனை நயம் :
கவிஞர்க்குக் கற்பனை கைவந்தக் கலை. இருளால் மூழ்கும் இவ்வுலகைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பாரதிதாசன் . வானில் தோன்றும் வெண்ணிலவை இயற்கையின் அழகு என்று வர்ணிக்கிறார் பாரதிதாசன்.
நான்கரைச் சக்கர வடிவம்
மேனி திடமே விடுமே!
மேடு விளையாடுவமே!
மேவ டுவோட சாருமே!
மேரு சாதுதூ தினிமே!
விளக்கம் :
காடு மேடு என்று பாராமல் நன்றாக விளையாடுவோம். அதனால், நம் உடம்பு (மேனி) திடமாகும். மேவிவரும் நோய்களும் (வடு) ஓட, இமயமலை (மேரு) போன்ற சான்றோர் பாராட்டும்படியான செய்தியும் (தூது) இனி மேவிவரும்
உரிய இடத்தில் எழுதுக.
தேடு தேனீயோ லாவதே
தேவ லாமென நாடுதே !
தேடு நாநய மாடுதே!
தேடு மாநிலை தேடுதே !
விளக்கம் :
பூக்கள் தோறும் தேனைத் தேடி அலைகின்ற தேனீயைப் போல, சுறு சுறுப்பாகும் நிலைதான் சிறந்ததென்று நாட வேண்டும். எவரிடமும் நயத்தோடு பேச வேண்டும். எவரிடமும் நயத்தோடு பேச வேண்டும். இவ்வாறிருந்தால் உயர்ந்தோர் நம்மைத் தேடிவருவர்.
கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க
வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மை ஒன்று என் வீட்டில் நெடுங்காலமாக இருந்தது. மிகுந்த அன்போடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். எத்தனையோ வாசனைகளை அதன் மீது பூசினேன். ஆனாலும் அந்தக் கசப்பின் வாசம் போகவில்லை . இரவில் அதன் மெல்லிய விம்மல் ஓசை கேட்கும் ……
நாம் ஒரு நாள் விம்மலோசைக் கேட்டவுடன் நான் எழுந்து பார்த்தேன் மேரியை. என் படுக்கை அறையின் ஒரு மூலையில் கிடந்தாள் மேரி. மெதுவாக மேரியின் அருகில் சென்றேன். என் வருகையைச் சற்றும் எதிர்பாராத மேரி அழுகையை நிறுத்திக் கொண்டது. முதலில் நான்தான் மேரியிடம் பேச்சுக் கொடுத்தேன். உனக்கும் பேசத் தெரியுமா, அழக்கூடத் தெரியுமா என்றேன்.
எனக்கும் உணர்வுகள் உண்டு. நானும் பேசுவேன் என்றது மேரி. நீ மனிதராக இருப்பதால் உனக்கு எல்லாம் கிடைக்கிறது. மரமாக நான் இருப்பதால் கேட்பாரற்றுக் கிடக்கிறேன் என்றது மேரி. உனக்கு என்ன வேண்டும்? என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்று மேரியிடம் கேட்டேன். முதலில் எங்கள் பெற்றோரிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்கள். நாங்கள் மனிதர் வாழ நல்ல காற்றினைத் தருகிறோம். எங்களிடமிருந்து கிடைக்கும் எண்ணெய் நல்ல நாட்டு மருந்து ஆகும். அப்படியிருக்க எங்களை வெட்ட மனிதருக்கு அரக்கக் குணம் எப்படி வந்தது என்று கேட்டது மேரி.
இனிமேல் எங்களை வெட்டமாட்டோம் என்று உறுதி அளித்தால்தான் அழுகையை நிறுத்துவேன் என்றது மேரி. மேலும் எனது பாராம்பரிய கசப்பு வாசனையைப் போக்க என் மீது ஏதேதோ தடவுகிறாய். என்னிடமிருந்து எனது மணத்தைப் பிரிக்கமாட்டேன் என்று உத்திரவாதம் கொடு என்றது மேரி. அத்தனைக்கும் ஒப்புக் கொண்ட நான் மேரியிடம் வாக்குறுதி அளித்தேன். இதற்கிடையே என்னை யாரோ அழைப்பது போல் இருந்தது. விழித்துப் பார்த்தேன். அம்மா அழைத்திருந்தாள். கனவாக இருந்தாலும் மேரிக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன்.
வேம்பு தரும் நற்காற்று
வேம்புக்குத் தருவோம் பாதுகாப்பு.
அண்மையில் நீங்கள் பார்த்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஒன்றின் திரை விமர்சனத்தை அப்படத்தின் இயக்குநருக்கு கடிதமாக எழுதுக.
20-6-2019
திருநெல்வேலி.
உயர்திரு இயக்குநர் அவர்களுக்கு,
வணக்கம்.
சென்ற வாரம் தாங்கள் இயக்கிய படம் பார்த்தேன். படங்களுக்கு இப்போதெல்லாம் படங்களுக்கு வசனங்களை விட விமர்சனங்களே பக்க பலமாக இருக்கிறது. இதோ எனது விமர்சனம்.
மாணவர்களுக்கு ஊக்கம் தரும் படம். அம்மா கதாபாத்திரம் – உணவகத்தில் வேலை பார்க்கும் பெண். மகளுக்குத் தெரியாது என்ன வேலை என்று. மகள் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள். அனைத்துப் பாடங்களிலும் சராசரி மதிப்பெண்கள். கணிதத்தில் மிகக் குறைவு. அம்மா கேட்டாள் காரணத்தை, நீ சொல்லிக் கொடு என்றாள் மகள். மகள் வகுப்பில் அம்மா சேர்ந்து படிக்கிறாள் சலனமின்றி.
நல்லா படிக்கும் மாணவன் அம்மாவிற்குக் கணிதம் சொல்லிக் கொடுக்கிறான். கணிதத்தில் நல்ல மதிப்பெண் அம்மாவுக்கு. மகளின் வேண்டுகோள் நீ பள்ளிக்கு வரவேண்டாம். இனிமேல் நான் நன்றாகப் படிக்கிறேன் என்றாள் மகள்.
இறுதியில் மகள் (இ.ஆ.ப) மாவட்ட ஆட்சியர் ஆகிறாள். ஒரு பேட்டியில் கணிதத்தில் உச்சத்தில் இருக்கும் நீங்கள் ஆட்சியர் பணிக்கு வந்ததன் நோக்கம் பற்றிக் கேட்டதற்கு, இது என் அம்மாவின் ஆசை. நான் வேலைக்காரி ஆகக்கூடாது. இதுவே மகளின் பதில்.
மாணவர் மத்தியில் ஒரு உற்சாகம் ஊட்டும் விதமாக திரைப்படம் அமைந்துள்ளது. பாராட்டுக்கள். கீதை உபதேசம் இல்லை இது. அம்மா உபதேசம். அம்மா கணக்குத் தப்பாது. அது லாப கணக்குதான். 80/100 மதிப்பெண்.
கீழ்க்காணும் நான்கு சொற்களைச் சிறு பத்தியாக மாற்றுக.
நிற்க அதற்குத் தக
குறிப்பேடுகள் உருவாக்குதல், சேகரித்தல், ஏதேனும் கலை பயிலல் :
படிப்போம் பயன்படுத்துவோம் (திரைத்துறை)
1. Artist – கவின் கலைஞர்
2. Sound-Effect – ஒலி விளைவு
3. Cinematography – ஒளிப்பதிவு
4. Newsreel – செய்திப்படம்
5. Animation – இயங்குபடம்
6. Multiplex compled – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
How to Prepare using Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 12th Tamil All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.1 இளந்தமிழே! Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.1 இளந்தமிழே! Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.1 பெருமழைக்காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.1 பெருமழைக்காலம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.2 பிறகொரு நாள் கோடை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.2 பிறகொரு நாள் கோடை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.3 நெடுநல்வாடை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.3 நெடுநல்வாடை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.4 முதல்கல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.4 முதல்கல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.1 தமிழர் குடும்ப முறை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.2 விருந்தினர் இல்லம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.2 விருந்தினர் இல்லம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.3 கம்பராமாயணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.3 கம்பராமாயணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.4 உரிமைத்தாகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.4 உரிமைத்தாகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.5 பொருள் மயக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.5 பொருள் மயக்கம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 3.6 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.2 இதில் வெற்றி பெற Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.2 இதில் வெற்றி பெற Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.3 இடையீடு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.3 இடையீடு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.1 மதராசப்பட்டினம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.1 மதராசப்பட்டினம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.2 தெய்வமணிமாலை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.2 தெய்வமணிமாலை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.3 தேவாரம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.3 தேவாரம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.4 அகநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.4 அகநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.5 தலைக்குளம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.5 தலைக்குளம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.6 படிமம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.1 திரைமொழி Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.1 திரைமொழி Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.2 கவிதைகள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.2 கவிதைகள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.3 சிலப்பதிகாரம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.3 சிலப்பதிகாரம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.4 மெய்ப்பாட்டியல் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.4 மெய்ப்பாட்டியல் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.5 நடிகர் திலகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.5 நடிகர் திலகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.6 காப்பிய இலக்கணம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 6.7 திருக்குறள் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.2 அதிசயமலர் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.2 அதிசயமலர் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.4 புறநானூறு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.4 புறநானூறு Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 7.6 தொன்மம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.2 முகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.2 முகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம் Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.5 கோடை மழை Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.5 கோடை மழை Notes
- Samacheer Kalvi 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 8.6 குறியீடு Notes
0 comments:
Post a Comment