Samacheer Kalvi Books– Tamilnadu State Board Text Books Solutions for Class 1 to 12.

Thursday, September 23, 2021

Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.6 படிமம் Notes

Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.6 படிமம் Notes
Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download: Tamil Nadu STD 12th Tamil Chapter 5.6 படிமம் Notes


Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Chapter Wise Notes PDF from the links provided in this article.


Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF Download

We bring to you specially curated Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.


Board

Tamilnadu Board

Study Material

Notes

Class

Samacheer Kalvi 12th Tamil

Subject

12th Tamil

Chapter

Chapter 5.6 படிமம்

Format

PDF

Provider

Samacheer Kalvi Books


How to Download Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDFs?

  1. Visit our website - https://www.samacheerkalvibook.com/
  2. Click on the Samacheer Kalvi 12th Tamil Notes PDF.
  3. Look for your preferred subject.
  4. Now download the Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் notes PDF.

Download Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Chapterwise Notes PDF

Students can download the Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF from the links provided in this article.


Question 1.
இரவும் பகலும்
எதிரெதிர் மோதிட
உடைந்த பகலின் துண்டுகள் – இக்கவிதையில் படிம உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுக.
Answer:
இரவும் பகலும் மோதிக்கொள்ளும் வினையைக் காட்சிப்படுத்தியதால் இது வினைப்படிமம் ஆகும்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
படிமம் என்பதன் பொருள்
அ) சொல்
ஆ) செயல்
இ) காட்சி
ஈ) ஒலி
Answer:
இ) காட்சி

Question 2.
‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்’ இக்கவிதையில் ………… பயின்று வந்துள்ளது.
அ) பயன் படிமம்
ஆ) வினைப்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) வினைப்படிமம்

Question 3.
கூற்று : உவமைஉருவகம்போலபடிமமும்வினை,பயன்,மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் சரி, காரணமும் சரி
ஈ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி

Question 4.
மெய்ப்படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.
அ) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு
ஆ) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்
ஈ) வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
Answer:
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்

Question 5.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது” – இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?
Answer:

  • இப்பாடலடிகளில் மெய் (வடிவப்) படிமம் வெளிப்படுகிறது.
  • மாந்தோப்பு பருவ காலத்தின் அழகு பட்டாடையாக மரத்தைப் போர்த்தியிருப்பது பூக்களும் தளிர்களும் பட்டாடையை உடுத்திய பெண்ணின் தோற்றத்தை அல்லது பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு ஒப்பிட்டுள்ளது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கும்” – என்று எருமையின் சுரணையைற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துபவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
ஆ) தேவதேவன்

Question 2.
“கத்தல்களின் நெருக்கடியில்
தத்துவங்கள்
குழந்தைகள் போல்
அடிக்கடி தொலைந்துபோகும்” – என்று எழுதியவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
அ) ஆ.வே.முனுசாமி

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) தாழைமலர் – 1. பொன்
ஆ) செருந்தி மலர் – 2. அன்ன ம்
இ) முள்ளி மலர் – 3. முத்துகள்
ஈ) புன்னை மலர் – 4. நீலமணி

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 4.
எயிற்பட்டினம் உள்ள ஓய்மாநாட்டை ஆட்சி செய்தவன்
அ) அதியமான்
ஆ) நல்லியகோடன்
இ) பேகன்
ஈ) நளங்கிள்ளி
Answer:
ஆ) நல்லியகோடன்

Question 5.
‘அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்’- என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) பெரும்பாணாற்றுப்படை
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) மலைப்படுகடாம்
ஈ) அகநானூறு
Answer:
ஆ) சிறுபாணாற்றுப்படை

Question 6.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கின்றது’ என்ற படிமக்கவிதையின் ஆசிரியர்
அ) தேவதேவன்
ஆ) ஆ.வே.முனுசாமி
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
இ) ந. பிச்சமூர்த்தி

Question 7.
‘கட்டில் நிணக்கும் இழிசினன் கையது’ என்னும் புறநானூற்றில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
அ) வினைப்படிமம்

Question 8.
“காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத் துள்ளிவரும்
புதுவெயில்” – என்று கல்யாண்ஜி கவிதையில் படிமப்படுத்தப்படுவது

அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்
ஆ) கன்றின் செயல், காலை இளம் வெயிலின் அழகோடு ஒப்பிடுதல்
இ) கன்றின் செயல் இளைஞரோடு ஒப்பிடல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்

Question 9.
‘நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே’ என்னும் குறுந்தொகை பாடலில் இடம்பெறும் படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) பயன்படிமம்

Question 10.
“யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்” – என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்ப டிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) மெய்ப்ப டிமம்

Question 11.
“கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும்” – என்னும் ந. பிச்சமூர்த்தியின் கவிதையில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) வடிவப்படிமம்

Question 12.
‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப என்னும் அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஈ) உருப்படிமம்

குறுவினா

Question 1.
படிமம் என்றால் என்ன?
Answer:

  • படிமம் என்பது காட்சி என்பது பொருள்.
  • காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி.

Question 2.
படிமத்தின் பணிகள் யாவை?
Answer:

  • காட்சித்தன்மை கொண்டவற்றை அப்படியே காணும் வகையில் வெளிப்படுத்தி தெளிவை ஏற்படுத்தலாம்.
  • புதிய முறையில் தோற்றக் கூறுகளை எழுத்துக் காட்டலாம்.
  • கருத்துத்தன்மையுள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டி காட்சித்தன்மை தரலாம்.
  • கருத்துக்களைப் புரிய வைக்கலாம்.
  • காட்சிக்குத் தெளிவுப்படுத்துவது, காட்சிப்படுத்துவது படிமத்தின் பணிகள் ஆகும்.

Question 3.
காட்சிப் படிமத்தை சான்றுடன் விளக்குக.
Answer:
“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதி நீரில் கிடக்கும்”

எருமையின் சுரணையற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துகிறார் கவிஞர். இது காட்சிப் படிமம் ஆகும்.

Question 4.
வினைப்படிவம் சான்றுடன் விளக்குக.
Answer:
கட்டிலைப் பின்னுகின்ற ஒருவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ அவ்வளவு விரைவாக ஊரைக் கைப்பற்ற வந்த வீரனின் போர் என்று கீழ்வரும் பாடல் வினையைக் காட்சிப்படுத்துகின்றது.

“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனோடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரோ.”

Question 5.
பயன் படிமம் விளக்குக.
Answer:
“நோம் என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!”

இனிய செய்தல் இன்னா செய்தல் என்ற பயன்களை, இனிய வகையாக நெருஞ்சி பூவையும், இன்னாதவையாக நெருஞ்சி முள்ளையும் காட்சிப் பொருளால் படிமப்படுத்தியுள்ளார் கவிஞர்.

Question 6.
யானை தன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பின் தோன்றும் – இப்பாடலில் பயின்று வரும் படிமத்தை விளக்குக.
Answer:
இப்பாடலில் மெய்ப்படிமம் பயின்று வந்துள்ளது. மதங்கொண்ட யானையானது தன் வாய்க்குள் துதிக்கையின் மூலம் உணவை வைக்கிறது. யானையின் வாய் மலைக்குகை வாயினைப் போல் உள்ளதாகவும். துதிக்கை மலைக்குகையில் நுழையும் பாம்பினைப் போல் உள்ளதாகவும் வடிவத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

Question 7.
புதுக்கவிதையில் கையாளும் உத்திகள் யாவை?
Answer:
உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகியன.

Question 8.
படிமத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை?
Answer:
வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்).

சிறுவினா

Question 1.
சங்கப் பாடலில் காணப்பெறும் உவமைகளில் படிமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன – விளக்குக.
Answer:
நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஓய்மா நாட்டின் காட்சி:

“அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழா அலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்”

எனும் பாடலில்

“தாழை மலர் அன்னம் போலவும்
செருந்தி மலர் பொன்னைப் போலவும்
முள்ளி மலர் நீலமணியைப் போலவும்”

புன்னை மரத்து அரும்பு முத்துப் போலவும் காட்சிப்படுத்துவதால் இப்பாடல் படிமங்களாகிறது. சங்கப்பாடலில் உவமை, உள்ளுறை மிகுதியாகக் காண முடிகிறது.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
ஒருமுறை எட்டயபுரம் அரண்மைனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர் சிறப்பத்தார். அவவருவால் ஒருவா சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.

பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார். சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

‘என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க்கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக்குறிப்பிடுவார். இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்.

தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். : இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை :முன்னின்று நடத்தினார். வ.உ.சி. சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தகுந்தது. அவருடைய தீந்தமிழுக்குச் சான்று.

“கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு , எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் : தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு.”.

(நாவலர் சோமசுந்தர பாரதியின் நூற்தொகுதி 4- ‘நற்றமிழ்’ என்னும் கட்டுரையிலிருந்து)

வினாக்கள்:
1. பாரதி பட்டம் பெற்ற இருவர் யார்?
2. பின்வரும் தொடருக்கு இலக்கணக்குறிப்பு எழுதுக: எளிமையும் தெளிவும்
3. புணர்ச்சி விதி தருக: வழக்கறிஞர்
4. சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் ஒன்றினை எழுது.
5. சோமசுந்தர பாரதியார் ஈடுபட்ட போராட்டம் எது?
Answer:

  1.  சுப்பிரமணிய பாரதியார், சோம சுந்தர பாரதியார்
  2. எளிமையும் தெளிவும் – எண்ணும்மை
  3.  வழக்கறிஞர் – வழக்கு + அறிஞர்
    • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி, வழக்க் + அறிஞர் என்றானது.
    • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = கி) வழக்கறிஞர் எனப் புணர்ந்தது.
  4. தசரதனன் குறையும் – கைகேயின் நிறையும்
  5.  இந்தி எதிர்ப்புப் போராட்டம்

தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene

தமிழாக்கம்:
பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்தப்பட்டோர்களுக்காகப் போராடி வெற்றி கண்டவர். அதுமட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை உடையது. எந்தப் பிரச்சினைக்கும் அவர் கூக்குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியார் அவர்களின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது.

இலக்கிய நயம் பாராட்டுதல்

பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்! – கவிமணி தேசிக விநாயகம்

தலைப்பு :
தீண்டாமையை விரட்டுவோம்.

ஆசிரியர் குறிப்பு :
பெயர் : கவிமணி தேசிக விநாயகம்
பெற்றோர் : சிவதாணு – ஆதிலட்சுமி
பிறப்பு : 1976 – 1954
சூர்யா – இளமைத்தமிழே
ஊர் : கன்னியாகுமரி – தேரூர்
நூல்கள் : ஆசிய ஜோதி, மலரும் மாலையும்

திரண்ட கருத்து:
மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான புகழ் வரவேண்டுமெனில் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும். தீமை செய்பவரை ஒருவரும் தீண்டமாட்டார்.

தொடை நயம்:
தொடையற்ற பாக்கள்
நடையற்று போகும்
என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு அளபெடை நயங்கள் அமைந்துள்ளன.

மோனை நயம் :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

சான்று :
நன்மை
நாடும்
தின்மை
தீண்ட

எதுகை நயம் :
மதுரைக்கு வகை
செய்யுளுக்கு எதுகை முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது எதுகை.

சான்று :
பிறப்பினால்
சிறப்பு
தின்மை
தீண்ட

இயைபு :
இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.

சான்று :
வாராதப்பா
வேண்டுமப்பா
மேற்குலத்தார்
ஒண்ணாதார்

அணி நயம் :
குளத்துக்கு தாமரை அழகு
கண்ணுக்கு மை அழகு
செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு ஏற்ப இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது.

முடிவுரை:
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.


உழைத்து உழவு செய்த
உப்பையெல்லாம்
வண்டியில் பூட்டி எருதோடு வணிகர்கள்
வாழ வழி கண்டு
உப்புக்கு மாற்றாக நெல்லைப் பெற
தன் மகளிரோடு உள்நாட்டுச் சந்தைக்குச்
செல்கின்ற காட்சி
வணிகர்களின் வீதிஉலாபோல்
காட்சி தருகிறது

பேச்சுவழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

எ.கா: இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ .
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்
நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும்.

2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான்.

3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார்.

4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.

5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்
இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்.

வெட்டியும் ஒட்டியும் பேசுதல்

Question 1.
கிராமங்கள் நகரமாவது வளர்ச்சியா?
Answer:
(i) கிராமங்களில் அழிவால் நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அதுமட்டுமல்லாமல் நவீன உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக நகரங்கள் அமைகிறது.

(ii) நகரங்களின் வளர்ச்சியால் கிராமங்கள் அழிக்கப்படுகிறது. இயற்கைப் பாதிப்பு, தொழிற்சாலைப் பெருக்கத்தால் நீர் மாசுபாடு, மனவளம் குன்றல், (வேளாண்மை ) விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படக்கூடும்.

ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.


 பத்தி அமைத்தல்:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். அவை இரண்டு வகைப்படும். ஒன்று எட்டுத்தாகை. மற்றொன்று பத்துப்பாட்டு. எட்டுத்தொகை என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அகம் சார்ந்த இலக்கியங்கள் ஐந்து: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை. புறம் சார்ந்த நூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் சார்ந்த நூல் பரிபாடல் ஆகும்.

பத்துப்பாட்டு அகம், புறம் என இரண்டு : – வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அகம் சார்ந்த நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை. புறம் சார்ந்த நூல்கள்: மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை. இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து ஆகும்.

கீழ்க்காணும் பகுதியைப் படித்து பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது; எல்லாம் மாயை; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விலாசத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.
Answer:
அரசு கொடுக்கும் ஊதியம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் பொய்த்தோற்றம். உள்ளூர நிற்கும் உயிர் மாசுபடவில்லை. தான் வேறு தோற்றம் வேறு. தான் இந்த உலகத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு வடிவம் என்று திடமாக நம்பியிருந்தார்.

ஏனென்றால், அவரது உயிர் அடையாளத்தைச் சோதனைப் போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ, மனிதனுக்கோ நேரம் கிடைத்ததில்லை. மனித வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையைப் புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.

செய்து கற்போம்.

Question 1.
நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்காரணங்களைனத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.
Answer:
சிதம்பரம்:
இறைவன் நடராசர் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும் அதுவே சிதம்பரம் என்றாயிற்று என்பர். சித் + அம்பரம் = சிதம்பரம் என்றாயிற்று. சித் என்றால் அறிவு, அம்பரம் என்றால் ஆகாயம் அல்லது வெட்டவெளி. வெட்டவெளிக்கு எல்லைக் கிடையாது. அதுபோல எல்லையற்ற
அறிவைக் கொண்டவராலும் புரிந்துகொள்ள முடியாதவர் நடராசர்.

குற்றாலம்:
குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் என்று பெயர் பெற்றது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது.

சிவகாசி:
தென் மதுரையை ஆண்ட ஹரிகேசரிபராக்கிரம பாண்டியன் வாரனாசியிலிருந்து (வாரனாசி என்பது காசி) ஒரு சிவலிங்கத்தைக் கொண்டுவந்து நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால் காசி சிவலிங்கம் பெயராலே சிகவாசி ஆயிற்று.

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். சென்னையின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது. முன்பு இங்கு நீர்நிலைகளில் செங்கழுநீர் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என்றானது.

நிற்க அதற்குத் தக

(ஆளுமைத்திறன் என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியம நடத்தை, உணர்வு, சிந்தனை ஆகியவற்றைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை, நேர்மறைச் சிந்தனைகள், அடிப்படை ஒழுக்கம், உடற்பயிற்சி ஆகிய அனைத்துமே ஆளுமைப் பண்புகளுள் அடங்கும்)

இமயா இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுகிறாள். ஓட்டுகையில் இடையில் தடுமாறிக் கீழே விழுகிறாள். கற்றுக்கொடுக்கும் அவளுடைய அண்ணன். ‘உன்னால் இருசக்கர வாகனம் ஓட்ட இயலாது’ என்கிறான். நீங்கள் இமயாவாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?
Answer:
அண்ணா நீங்கள் எனக்குத் தொடர்ந்து ஒரு வாரம் பழக்கிக் கொடுங்கள். நிச்சயம் கற்றுக்கொள்வேன். முடியாது என்பது வெறும் பேச்சு , முடியும் என்பது உயிர் மூச்சு. எனவே, பயிற்சி மேற்கொண்டால் எந்த வேலையும் எளிமையாகும் அண்ணா .

பள்ளி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு நன்றியுரை நிகழ்த்த ஆசிரியர் அழைக்கின்றார். அந்நிலையில் நீவிர் என்ன செய்வீர்?
Answer:
நன்றியுரை ஆற்ற வருவதற்கு நிச்சயம் ஒத்துக்கொள்வேன். தலைவர், சிறப்பு விருந்தினர், : ஆசிரியர், மாணவ மாணவியர், பெற்றோர் என வரிசைப்படுத்தி நன்றி என்றாலே போதுமே! மேலும், சிறப்பு விருந்தினர் கல்வியை விலைக்கு வாங்க முடியாது. கல்விக்கூடங்களில் கற்றால் மட்டுமே கல்வியைப் பெறலாம் என்று கூறியதை முன்வைத்து நன்றி சொல்வேன்.

படிப்போம் பயன்படுத்துவோம் (நீதி மன்றம்)

1. Affidavit – ஆணை உறுதி ஆவணம்
2. Allegation – சாட்டுரை
3. Conviction – தண்டனை
4. Jurisdiction – அதிகார எல்லை
5. Plaintiff – வாதி
6. Sentence – வாக்கியம்


How to Prepare using Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF?

Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes PDF by following certain essential steps which are provided below.


  • Use Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் notes by paying attention to facts and ideas.
  • Pay attention to the important topics
  • Refer TN Board books as well as the books recommended.
  • Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
  • Highlight and explain the concepts in details.


Samacheer Kalvi 12th Tamil All Chapter Notes PDF Download


Frequently Asked Questions on Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes


How to use Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் Notes for preparation??

Read TN Board thoroughly, make separate notes for points you forget, formulae, reactions, diagrams. Highlight important points in the book itself and make use of the space provided in the margin to jot down other important points on the same topic from different sources.

How to make notes for Samacheer Kalvi 12th Tamil Chapter 5.6 படிமம் exam?

Read from hand-made notes prepared after understanding concepts, refrain from replicating from the textbook. Use highlighters for important points. Revise from these notes regularly and formulate your own tricks, shortcuts and mnemonics, mappings etc.
Share:

0 comments:

Post a Comment

Copyright © Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions About | Contact | Privacy Policy