Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 12th History |
Subject |
12th History |
Chapter |
Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 12th History Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் notes PDF.
Download Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF from the links provided in this article.
Question 1.
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது? (மார்ச் 2020)
அ) திலகர்
ஆ) அன்னிபெசன்ட்
இ) பி.பி. வாடியா
ஈ) எச்.எஸ். ஆல்காட்
Answer:
ஆ) அன்னிபெசன்ட்
Question 2.
பின்வருவனவற்றுள் அன்னிபெசன்ட் பற்றிய சரியான கூற்று எது?
1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசன்ட்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
3. 1915ஆம் ஆண்டு “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 3
ஈ) 1, 2 மற்றும் 3
Answer:
அ) 1 மற்றும் 2
Question 3.
கூற்று : ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
காரணம் : லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.
அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்.
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Answer:
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்
Question 4.
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?
அ) மகாத்மா காந்தியடிகள்
ஆ) மதன்மோகன் மாளவியா
இ) திலகர்
ஈ) பி.பி. வாடியா
Answer:
ஆ) மதன்மோகன் மாளவியா
Question 5.
1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் (மார்ச் 2020 )
அ) முஸ்லீம் லீக் எழுச்சி
ஆ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
இ) முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது
ஈ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு
Answer:
ஆ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
Question 6.
பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக .
அ கதார் கட்சி – i. 1916
ஆ நியூ இந்தியா – ii .1913
இ |தன்னாட்சி இயக்கம் – iii. 1909
ஈ |மிண்டோ -மார்லி சீர்திருத்தம் iv. 1915
அ) ii, iv, i, iii
ஆ) iv, i, ii, iii
இ) i, iv, iii, ii
ஈ) ii, iii, iv. i
Answer:
அ) ii, iv, i, iii
Question 7.
“Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
அ) லாலா லஜபதிராய்
ஆ) வேலண்டைன் சிரோலி
இ) திலகர்
ஈ) அன்னிபெசண்ட்
Answer:
ஆ) வேலண்டைன் சிரோலி
Question 8.
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?
அ) லாலா லஜபதிராய்
ஆ) ஏ.சி. மஜும்தார்
இ) லாலா ஹர்தயாள்
ஈ) சங்கர்லால் பாங்கர்
Answer:
இ) லாலா ஹர்தயாள்
Question 9.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?
அ) பி.பி. வாடியா
ஆ) ஜவஹர்லால் நேரு
இ) லாலா லஜபதிராய்
ஈ) சி.ஆர். தாஸ்
Answer:
இ) லாலா லஜபதிராய்
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
1903 – 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?
Answer:
- தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியத் தகவல்களை இரகசியமாகச் சேகரிப்பதற்காக 1903இல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை உருவாக்கினார்.
- பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் (1908)
- வெடி பொருட்கள் சட்டம் (1908)
- இந்திய பத்திரிகைகள் சட்டம் (1910)
- தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச்சட்டம் (1911) ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.
- வெளிநாடுகளில் இருந்த சில புரட்சியாளர்களின் நுழைவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினர் அவசரச்சட்டம் 1914இல் இயற்றப்பட்டது.
- கூட்டங்கள், தேசத் துரோக பிரசுரங்களைப் பிரச்சாரத்துக்காக அச்சிடுவது
- சுற்றுக்கு விடுவது ஆகியவற்றைத் தடுப்பது, சந்தேகத்துக்கிடமானவர்களைக் கைது செய்வது என காலனி ஆதிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
Question 2.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது?
Answer:
- கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் துருக்கிய சுல்தான் விளங்கினார்.
- போருக்குப் பிறகு துருக்கியின் நிலையைப் பலவீனப்படுத்த முடிவு செய்த பிரிட்டன் செவ்ரெஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டு வர கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இசுலாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.
- உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் கலீபாமீது அனுதாபம் கொண்டார்கள் அதனால் இந்நடவடிக்கையை எதிர்க்க முடிவு செய்தனர்.
- மௌலானா முகமது அலி, மெளலானா சௌஹத் அலி என்ற முஸ்லீம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
Question 3.
அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிக்கைகளின் , பெயர்களைக் கூறுக.
Answer:
- அன்னிபெசண்ட் அம்மையார் 1914இல் “தி காமன்வீல்” என்ற வாரந்திரியை தொடங்கினார்.
- 1915இல் “இந்தியா எவ்வாறு விடுதலைப் போரை முன்னெடுத்துச் சென்றது” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.
- 1915 ஜூலை 14இல் “நியூ இந்தியா” என்ற தினசரியைத் தொடங்கினார்.
- “தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்”.
Question 4.
1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் பற்றி விவரிக்கவும்.
Answer:
இந்திய பாதுகாப்புச் சட்டம்:
- முதல் உலகப்போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
- இது இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது. இதில் மூன்று ஆணையர்கள் கொண்ட சிறப்புத்தீர்ப்பாயம்
- சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இச்சட்டம் அனுமதி அளித்தது.
- இச்சட்டத்தை மீறுவோருக்கு மரண தண்டனை விதிப்பது, வாழ்நாள் முழுவதற்கும் நாடு கடத்துவது. 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம் அதிகாரமளித்தது.
- வழக்கு விசாரணை காமிரா மூலம் பதிவு செய்யப்பட்டு முடிவுகள் மேல்முறையீட்டுக்குத் தகுதி இல்லாததாகவும் இருந்தன.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்களை பற்றி விவாதிக்கவும்.
Answer:
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள்: ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொன்று பெசன்ட் அம்மையார் தலைமையிலும் என 1916இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
- பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது
- தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகியன அந்த இரண்டு குறிக்கோள்களாகும்.
Question 2.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது ஏன்?
Answer:
- இந்தியாவில் புரட்சிகர தேசிய செயல்பாட்டுக்கு உகந்த நிலைமைகளை முதல் உலகப்போர் உருவாக்கியது காதர் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
- 1916 அக்டோபரில் இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லீம் உறுப்பினர்கள்லாலாஹர்தயாள் 1913இல் நிறுவினார். இந்த அமைப்புகாதர்கட்சி என்று அழைக்கப்பட்டது.
- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காதர் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும்.
- கோமகடமரு என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவில் இருந்து குடியேறியவர்களுடன் கனடாவில்
- இருந்து திரும்பியது. * இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல் பயணிகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
- இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆழமான வடுவை ஏற்படுத்தியது.
Question 3.
1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?
Answer:
1920 மார்ச் மாதம் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்.
- துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடர வேண்டும். *
- இசுலாமியப் புனிதத் தலங்கள் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- சுல்தானிடம் போதுமானப் பகுதிகள் தரப்பட்டு இசுலாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
- ஜாசிரத்-உல்-அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்) ஆகியன இவரின் இறையாண்மையின் கீழிருக்க வேண்டும்.
Question 4.
சென்னை தொழிற்சங்கத்தின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் என்ன?
Answer:
- 1917ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது தாக்க, ஏற்படுத்தியது.
- இந்தியாவில் 1918இல் முதன்முறையாக பி.பி.வாடியா அவர்களால் மதராஸ் தொழில் ட நிறுவப்பட்டது.
- பக்கிங்ஹாம், பெரம்பூர் கர்நாடிக் மில் ஆகியவற்றின் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டதன் காரணமாக இந்தத் தொழிற்சங்கம் முக்கியமாக ஏற்பட்டது.
- மதிய உணவுக்கு குறுகிய கால இடைவெளி, தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி நடத்தியத் தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகியன இந்தத் தொழிற்சங்கம் அமையக் காரணமாக அமைந்தன.
- ஒட்டுமொத்தமாக பேரம் பேசுவதைப் பின்பற்றி வகுப்புப் போராட்டத்துக்குத் தொழிற்சங்கம் சார்ந்த கொள்கைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தத் தொழிற்சங்கம் முனைந்தது.
- கல்கத்தா மற்றும் பம்பாயில் இந்தியக் கடற்படை வீரர்கள் சங்கம், பஞ்சாப் பத்திரிகை ஊழியர்கள் சங்கம்,
பம்பாய் ரயில்வே பணியாளர்கள் சங்கம், எம்.எஸ்.எம். ரயில்வே ஊழியர் சங்கம், அஞ்சல் பணியாளர்கள் சங்கம், துறைமுகப் பொறுப்புக் கழக ஊழியர் சங்கம், ஜாம்ஷெட்பூர் தொழிலாளர் சங்கம், ஜாரியாவில் இந்திய
நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் சங்கம் என பல்வேறு ரயில்வேக்களின் ஊழியர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. - 1920 அக்டோபர் 30இல் 1,40,854 உறுப்பினர்களைக் கொண்ட 64 தொழிற்சங்கங்களை பம்பாயில் சந்தித்து லாலா லஜபதி ராயின் தலைமையில் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸை (AITUC) நிறுவினர்.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
Answer:
(மார்ச் 2020 ) லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ் லீக் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்-ஐ ஒன்றிணைப்பதில் அன்னிபெசன்ட் அம்மையாரும் திலகரும் முக்கியப் பங்காற்றினார்கள்.
- நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
- மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
- மாகாண மற்றும் மத்திய சட்டப் பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
- மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து-முஸ்லீம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்க கடமைப்பட்டுள்ளன. கவர்னர் ஜெனரல் அல்லது சபைகளின் ஆளுநர்கள் வீட்டோ அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி (டொமினியன்) தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கும், இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்கவேண்டும். ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சமநிலை பெற்றிருக்க வேண்டும். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்துக்கும் லக்னோ ஒப்பந்தம் வழிவகுத்தது.
Question 2.
திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவக்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின்
செயல்பாடுகளை விளக்குக.
Answer:
(அ) திலகரின் தன்னாட்சி இயக்கம்:
- 1916 ஏப்ரலில் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் இது நிறுவப்பட்டது. பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்படும்.
- திலகரின் இயக்கத்துக்கு ஆறு கிளைகள் ஒதுக்கப்பட்டன. அன்னிபெசன்ட் அம்மையாரின் இயக்கத்துக்கு இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
- தன்னாட்சி குறித்த கோரிக்கைகளை தமது உரைகள் மூலம் திலகர் பிரபலப்படுத்தினார்.
- மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்திருந்த அவரது இயக்கம், 1917 ஏப்ரலில் 14 ஆயிரம் உறுப்பினர்களில் இருந்து 1918இன் தொடக்கத்தில் 32 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்தது.
- தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜூலை 23 தமது அறுபதாவது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.
(ஆ) பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம்:
- காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த அறிகுறியும் தென்படாத காரணத்தால் 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசன்ட் தொடங்கினார்.
- கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, காலிகட், அகமதுநகர் ஆகிய இடங்களில் இந்த இயக்கத்தின் கிளைகள் அமைந்தன. இந்தியா முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு தன்னாட்சி குறித்த கருத்தை அவர் பரவச் செய்தார்.
- இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் செயல்படாத நிலை குறித்து அதிருப்தி அடைந்த மிதவாத காங்கிரசார் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர்.
- ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, பி. சக்கரவர்த்தி, ஜிதேந்திரலால் பானர்ஜி, சத்யமூர்த்தி, கலிக்குஸ்மான் ஆகியோர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டதிலிருந்து இந்த இயக்கத்தின் பிரபலத்தை அறிய முடியும்.
Question 3.
மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.
Answer:
மலபார் மாப்பிள்ளை :
- கிலாபத் விஷயம் பல பிரிவினராலும் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது.
- உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லீம்கள் கிலாப் (எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்திற்கு எதிரான பொதுக் கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
- இவ்வாறே மலபாரைச் சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர். ‘
- தொழிலாளர்கள் இயக்கத்தை அடக்கும் நோக்கத்தோடு பணமுதலாளிகளின் துணையோடு அரசு தொழிலாளர்களைக் கீழ்நிலையில் வைத்திருக்க அனைத்து வழிகளிலும் முயன்றது.
- வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்தனர், அவர்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)
1. தற்கால சமூகப் பிரிவுகள் ஒழுங்கமைக்கப்படுவதற்குத் தொழிற்சங்கங்கள் ஏன் முக்கியமானவை என விவாதம் செய்தல்.
2. குழுச் செயல்பாடு: முக்கிய கூட்டமைப்பு மற்றும் தொழில் சங்கங்களை அடையாளங்கண்டு அவைகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்.
12th History Guide இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Additional Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்
Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1916ல் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தம் அ) லக்னோ ஒப்பந்தம்
ஆ) லாகூர் ஒப்பந்தம்
இ) செவ்ரேஸ் ஒப்பந்தம்
ஈ) தன்னாட்சி இயக்கம்
Answer:
அ) லக்னோ ஒப்பந்தம்
Question 2.
1915ல் ‘நியூ இந்தியா’ பத்திரிக்கையை ஆரம்பித்தவர்.
அ) பாரதியார்
ஆ) வ.உ.சி.
இ) அன்னிபெசன்ட் அம்மையார்
ஈ) திலகர்
Answer:
இ) அன்னிபெசன்ட் அம்மையார்
Question 3.
‘இந்தியக் கிளர்ச்சி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
அ) R.C. மஜும்தார்
ஆ) லாலா லஜபதிராய்
இ) ரவீந்தரநாத் தாகூர்
ஈ) வேலண்டைன் சிரோலி
Answer:
ஈ) வேலண்டைன் சிரோலி
Question 4.
மிண்டோ -மார்லி சீர்த்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
அ) 1909
ஆ) 1919
இ) 1929
ஈ) 1939
Answer:
ஈ) 1939
Question 5.
வெளிநாட்டினர் அவசரச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1912
ஆ) 1914
இ) 1916
ஈ) 1918
Answer:
ஆ) 1914
Question 6.
…… தலைமையில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசை (AITUC) உருவாக்கப்பட்டது.
அ) பாலகங்காதர திலகர்
ஆ) லாலா லஜபதிராய்
இ) பிபின் சந்திரபால்
ஈ) அன்னிபெசன்ட்
Answer:
ஆ) லாலா லஜபதிராய்
Question 7.
ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1917
ஆ) 1918
இ) 1919
ஈ) 1920
Answer:
இ) 1919
Question 8.
பின்வருவனவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.
i. ரௌலட் சட்டம் – 1920
ii. AITUC – 1908
iii. போல்ஷ்விக் புரட்சி – 1919
iv. வெடிப்பொருட்கள் சட்டம் – 1917
அ) ii, i, iv, iii
ஆ) iii, i, ii, iv
இ) ii, iv, i, iii
ஈ) iv, ii, i, iii
Answer:
இ) ii, iv, i, iii
Question 9.
1903ல் CID (குற்ற உளவுத்துறை)யை உருவாக்கியவர்
அ) கானிங் பிரபு
ஆ) கர்சன் பிரபு
இ) மவுண்ட்பேட்டன்
ஈ) வெல்லிங்டன் பிரபு
Answer:
ஆ) கர்சன் பிரபு
Question 10.
“இந்து-மூஸ்லீம் ஒற்றுமையின் தூதர்” என்று சரோஜினியால் அழைக்கப்பட்டவர் .
அ) சவுகத் அலி
ஆ) திலகர்
இ) மகாத்மா காந்தி
ஈ) முகமது ஜின்னா
Answer:
ஈ) முகமது ஜின்னா
II. சுருக்கமாக விடையளிக்கவும்
Question 1.
தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சியைப் பற்றி கூறுக.
Answer:
- “இந்திய கிளர்ச்சி” என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலன்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த
அவதூறு வழக்கை நடத்துவதற்காக 1918 செப்டம்பரில் திலகர் பிரிட்டனுக்குச் சென்றார். - உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசன்ட் ஏற்றுக் கொண்டார்.
- இதன்பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
Question 2.
மகாத்மா காந்தி தனது பொது நல சேவைக்காக பெற்ற பதக்கங்கள் யாவை?
Answer:
- தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இ-ஹிந்த் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
- 1906ல் ஆம்புலன்ஸ் படையில் ஒரு அதிகாரியாக அவரது சேவையைப் பாராட்ட ஜூலு போர் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.
- 1899-1900ல் போயர் போரின் போது தூக்குப்படுக்கை கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவைபுரிந்தமைக்காக போயர் போர் வெள்ளிப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
Question 3.
மகாத்மா காந்தி தான் பெற்ற பதக்கங்களை திருப்பி கொடுத்ததற்காக அவர் கூறிய காரணங்கள் யாவை?
Answer:
- கடந்த ஒரு மாதகாலமாக நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது கிலாபத் இயக்க விஷயத்தில் ஏகாதி மத்திய அரசு,
- நேர்மையற்ற, நியாயமற்ற வகையிலும் மற்றும் கிரிமினல் போலவும் நடந்து
- தங்கள் நேர்மையற்றத் தன்மையைப் பாதுகாக்கத் தவறுக்கு மேல் தவறு செய்தன.
- இத்தகைய அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை.
- ஆதலால் அனைத்து பதக்கங்களையும் திருப்பி ஒப்படைக்கிறேன் என கூறினார்.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம் யாது?
Answer:
- காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் மக்களை ஒன்று திரட்ட தன்னாட்சி இயக்கங்கள் களம் அமைத்தன.
- காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் ஈடுபட்டோர் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள்.
- இந்த இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் காந்திய போராட்டங்களைப் பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தினர்.
- அனைத்துவித பிரிவுகளையும் தாண்டி காங்கிரஸ், முஸ்லீம் லீக், பிரம்ம ஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கமாக தன்னாட்சி இயக்கம் விளங்கியது.
Question 2.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
Answer:
- இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கும், விடுதலை இயக்கத்துக்கும் லக்னோ ஒப்பந்தம் வழிவகுத்தது.
- லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை “இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்” என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
- லக்னோ உடன்படிக்கையானது காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கில் இருந்த படித்த வகுப்பினர் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியினை விவரி.
Answer:
இயந்திரங்களின் அறிமுகம்:
இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோர் “தொழிற்சாலை பணியாளர்” என்ற புதிய வர்க்கம் தோன்றின.
பணியாளர்களின் பணிவு:
இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களை சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்கள் முடிவில் மிக பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர்.
பணியாளர்கள் நலன் காக்க குரல் எழுப்புதல் :
பம்பாயின் சோரப்ஜி, ஷபூர்ஜி மற்றும் என்.எம். லோக்காண்டே வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தங்களின் குரல்களை எழுப்பினர்.
தொழிலாளர் பிரச்சனை:
தொழிலாளர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்ததால் தொழிலாளர்களின் நலன் காக்க தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
விழிப்புணர்வு:
ரஷ்ய போல்ஷ்விக் கட்சி புரட்சியின் வெற்றி, வகுப்பு பேதம் பற்றிய விழிப்புணர்வும், அறிவார்ந்த சிந்தனையும் இந்திய தொழிலாளர்களின் மத்தியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.
உலகப்போரின் தாக்கம்:
போரால் ஏற்பட்ட பொருளாதார சிரமங்கள் காரணமாக ஏற்பட்ட தொழில் வீழ்ச்சி, வேலை கொடுப்போர் மற்றும் வேலை செய்வோருக்கிடையே பெரிய இடைவெளி, பல்வேறு நாடுகள் பங்கேற்புடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியன இந்திய தொழிலாளர்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
How to Prepare using Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 12th History All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 12th History Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Notes
- Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Notes
- Samacheer Kalvi 12th History Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை Notes
- Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Notes
0 comments:
Post a Comment