Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Chapter Wise Notes PDF from the links provided in this article.
Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF Download
We bring to you specially curated Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.
Board |
Tamilnadu Board |
Study Material |
Notes |
Class |
Samacheer Kalvi 12th History |
Subject |
12th History |
Chapter |
Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் |
Format |
|
Provider |
How to Download Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDFs?
- Visit our website - https://www.samacheerkalvibook.com/
- Click on the Samacheer Kalvi 12th History Notes PDF.
- Look for your preferred subject.
- Now download the Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் notes PDF.
Download Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Chapterwise Notes PDF
Students can download the Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF from the links provided in this article.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
அ) அரவிந்த கோஷ்
ஆ) தாதாபாய் நௌரோஜி
இ) ஃபெரோஸ் ஷா மேத்தா
ஈ) லாலா லஜபதி ராய்
Answer:
ஈ) லாலா லஜபதி ராய்
Question 2.
பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i) 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
(ii) 1905இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
(iii) 1905 ஆகஸ்ட் 7இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுக்களில் எது-எவை சரியானவை.
அ) (i) மட்டும்
ஆ) (i) மற்றும் (iii) மட்டும்
இ) (i) மற்றும் (ii) மட்டும்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
Answer:
அ) (i) மட்டும்
Question 3.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
அ இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 | 1 சுய ஆட்சி ஆ |
விடிவெள்ளிக் கழகம் | 2 சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி |
சுயராஜ்யம் | 3 தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது | சுதேசி |
சுதேசி | 4 கல்விக்கான தேசியக் கழகம் |
Answer:
இ) 3 4 1 2
Question 4.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது? (மார்ச் 2020 )
அ) பங்கிம் சந்திர சாட்டர்ஜி – ஆனந்த மடம்
ஆ) G.சுப்ரமணியம் – விடிவெள்ளிக் கழகம்
இ) மிண்டோபிரபு – பல்கலைக்கழகச் சட்டம், 1904
ஈ) தீவிர தேசியவாத மையம் – சென்னை
Answer:
அ) பங்கிம் சந்திர சாட்டர்ஜி – ஆனந்த மடம்
Question 5.
கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர் (மார்ச் 2020 )
அ) புலின் பிஹாரி தாஸ்
ஆ) ஹேமச்சந்திர கானுங்கோ
இ) ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார் கோஷ்
ஈ) குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
Answer:
அ) புலின் பிஹாரி தாஸ்
Question 6.
கூற்று : 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
காரணம் : மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer::
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Question 7.
கூற்று : வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம் : இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
Question 8.
சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?
அ) பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.
ஆ) பாரதி திலகரின் “Tenets of New Party” என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார்.
இ) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
ஈ) பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
Answer:
இ) பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
மிதவாத தேசியவாதிகளின் இறைஞ்சுதல் கொள்கை ‘ (The Medicant Policy) என்றால் என்ன? (_மார்ச் 2020)
Answer:
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது.
- மிதவாதிகளின்கவனமான அணுகுமுறை, ஆங்கிலேயரிடம் மன்றாடுதல், மனுச் சமர்ப்பித்தல் போன்றவை என்று பெயர்.
- இறைஞ்சுதல் கொள்கையை கடுமையாக விமர்சித்தனர்.
Question 2.
மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?
Answer:
- சுதேசி’ என்பதன் பொருள் ஒருவரது சொந்த நாடு’ என்பதாகும்.
- ரானடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
Question 3.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
Answer:
- பாலகங்காதர திலகர்
- பிபின் சந்திரபால்
- சுப்பிரமணிய சிவா
- பாரதி
- லாலா லஜ்பதி ராய்
- அரவிந்த கோஷ்
- வ.உ.சி.
Question 4.
தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன் குறைந்தது?
Answer:
- தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் ‘மேத்தா காங்கிரஸ்’ என அழைக்கப்பட்டது.
- 1908இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மிதவாத தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
- ஆங்கில ஆட்சிக்கு சவாலாக இருக்கும் எண்ணமில்லாத காங்கிரஸ் ஓர் வலுவற்ற அரசியல் சார்ந்த அமைப்பாயிற்று.
- தீவிர தேசியவாதிகளினால் அதுபோன்ற அரசியல் சார்ந்த அமைப்பை உருவாக்க இயலவில்லை.
- முக்கியத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்த அரசின் அடக்கு முறையே அதற்கான முக்கியக் காரணமாகும்.
Question 5.
தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?
Answer:
ஆங்கிலேயரின் அடக்குமுறை:
- 1908 டிசம்பரில் மிண்டோ -மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. –
- இது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து முஸ்லீம்களைப் பிரித்தது. –
- 1908 செய்தித்தாள் சட்டம் ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது.
- 1910 இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் அச்சக உரிமையாளர்களும் வெளியீட்டாளர்களும் பிணைத்தொகை மாக்கியது.
- மேந்தியக் குற்றவயல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் விசாரணையின்றி முடிவுகளை மேற்கொள்ள அனுமதித்தது. மேலும் பொது அமைதிக்கு ஆபத்தான அமைப்புகளைத் தடை செய்தது.
III. குறுகிய விடையளிக்கவும்.
Question 1.
காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.
Answer:
- 1907ல் நடைபெற்ற சூரத் காங்கிரஸில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- தலைமை பதவிக்கு மிதவாதிகள் இராஷ்பீகாரி கோஷினை தேர்வு செய்தனர்.
- தீவிரவாதிகள் லாலா லஜபதிராயை தங்கள் வேட்பாளராக நிறுத்தினர்.
- மிதவாதிகள் வெற்றி பெறத் தீவிரவாதிகள் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.
- மிதவாதிகளுக்கு தலைமையேற்றவர்கள் சுரேந்திரநாத் பானர்ஜி, பிரோஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே ஆகியோராவர்.
Question 2.
சுதேசி இயக்கத்தின் போது அதிகரித்த தனி நபர் வன்முறைகளுக்கான காரணங்களை எழுதுக.
Answer:
- சுதேசி இயக்கத்தின் போது தனிநபர் வன்முறை எழுச்சி பெறுவதற்கு மூன்று காரணிகள். அவையாவன.
- அந்நிய அடக்குமுறை ஆட்சியின் கீழ் வெகுவாகப் பாறுமை இழந்து கொண்டிருந்த இளைஞர்கள் அரசியலற்ற ஆக்கசார் செயல்பாடுகளை ஓரளவே ஏற்றுக் கொண்டனர்.
- இளம் வயது மக்களுக்குத் தலைமையேற்று அவர்களை ஒரு நீண்டகால வெகுஜனப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதில் தீவிரவாத தேசியவாதிகள் தோல்வியடைந்தது. தனிநபர் செயல்பாடுகள் வளர்வதற்குக் காரணமாயிற்று.
- புரட்சிகர செயல்பாடானது இந்திய தறுகாண்மையை மீட்டெடுக்கும் குறியீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவும் கருதப்பட்டது. அத்தன்மையை ஆங்கிலேயர் அடிக்கடி எதிர்ப்பதாயும் இகழ்வதாயும் புரட்சிவாதிகள் நம்பினர்.
Question 3.
பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள் யாவை?
Answer:
- பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட சமிதிகள் (தொண்டர் படைகள் ) எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
- உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளைக் கற்றுக் கொடுத்தல், பஞ்சங்களின் போதும் நோய்களின் தாக்கத்தின் போதும் சேவையாற்றுதல்.
- விழாக்காலங்களில் சுதேசி செய்தியைப் பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல் போன்ற பல பணிகளில் இச்சமிதிகள் ஈடுபடுத்தப்பட்டன.
- தனது இயல்பான அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் ஆங்கில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தராமல் இருப்பதே அதன் நோக்கம்.
- சமிதிகளின் தொண்டர்களில் பெரும்பாலோர் கற்றறிந்த மத்தியதர வர்க்கத்திலிருந்தும் இந்து உயர்ஜாதி வகுப்பாரிடையே இருந்தும் அணி திரட்டப்பட்டிருந்தனர்.
Question 4.
1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலைநிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?
Answer:
- சூரத் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ஊர் திரும்பியவ.உ.சி. ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்குவதற்கானப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டார்.
- சுதேசி இயக்கத்தைப் போதித்து வந்த சுப்ரமணிய சிவாவைச் சந்தித்தார்.
- மக்களுக்குச் சுதேசி குறித்தும், புறக்கணித்தல் பற்றியும் கற்றுக் கொடுத்தனர்.
- 1908இல் கோரல்மில் தொழிலாளர்களின் படுமோசமான வேலை, வாழ்க்கைச் சூழல்கள், வ.உ.சி., சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது.
- அவ்வுரைகளால் தூண்டப்பெற்று நூற்பாலைத் தொழிலாளர்கள் 1908 மார்ச்சில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- தேசிய செய்திப் பத்திரிகைகள் நூற்பாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முழுமையாக ஆதரித்தன. இருந்தபோதிலும் ஆலை உரிமையாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை.
- தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தலைவர்கள் தூத்துக்குடி நகரினுள் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.
- தொழிலாளர்களின் வெற்றியை வங்காளத்துச் செய்திப் பத்திரிகைகள் வாழ்த்தின.
- கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளது.
Question 5.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.(மார்ச் 2020)
Answer:
- சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டமும் தீட்டப்பட்டது.
- கொலை செய்யும் பொறுப்பு இளம் சித்தரஞ்சன்தாஸ் இவ்வழக்கில் புரட்சியாளர்களுக்காக வாதாடினார்.
- இதுவே அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு எனப்படுகிறது.
- ஒரு வருட காலம் நடைபெற்ற அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Question 6.
பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதின் விளைவு யாது?
Answer:
- ஆறுமாதகாலச்சிறைதண்டனைக்கு பின்னர் பிபின்சந்திரபால்1907 மார்ச் 9 இல் விடுதலை செய்யப்பட்டார். அந்நாளை தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் சுதேசி தினமாக திருநெல்வேலியில் கொண்டாட
முடிவு செய்தனர். - அரசு நிர்வாகம் அனுமதி மறுத்ததையும் மீறி வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாபர் ஆகியோர் செயல்பட்டனர்.
- அவர்கள் 1908 மார்ச் 12இல் தேச துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர்.
- முக்கியமான சுதேசி இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் சினம் கொண்ட உள்ளூர் மக்கள் எதிர்வினையாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
- திருநெல்வேலியில் நகரசபைக் கட்டடமும் காவல் நிலையமும் தீ வைக்கப்பட்டன.
- 1908 ஜூலை 7இல் வ.உ.சி.யும், சுப்ரமணிய சிவாவும் குற்றம் செய்தனர் என அறிவிக்கப்பட்டு தேச துரோகக் குற்றத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
- அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காகச் சிவாவுக்கு 10 ஆண்டுகள் நாடு கடத்துதல் தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக வ.உ.சி.க்கு ஆயுள் தண்டனையும் (20 ஆண்டுகள்) விதிக்கப் பெற்றது.
- வ.உ.சி அரசை எதிர்த்துப் பேசிய குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றார்.
- திருநெல்வேலியில் போராட்டங்களை எந்த அளவிற்கு அரசு தீவிரத்துடன் நோக்கியது என்பதை இக்கொடூரமான தண்டனைகள் உணர்த்துகின்றன.
Question 7.
வ.உ.சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக.
Answer:
- 1906இல் வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
- வ.உ.சி. S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்.
- சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை உருவாக்குவது என்ற எண்ணம் உண்மையில் கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்தது.
- வ.உ.சி. அப்பகுதியின் வளமான வரலாற்றையும் இந்தியாவின் பண்டையகாலக் கடற்பயணப் பெருமைகளையும் துணையாகக் கொண்டார்.
- வ.உ.சி.யின் சுதேசி இயக்க முன்னெடுப்பு தேசியத் தலைவர்களால் பாராட்டப் பெற்றது.
- சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.
- அரவிந்த கோஷீம் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார்.
Question 8.
கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார்?
Answer:
- சுதேசி இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது இளைஞர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கின.
- திருநெல்வேலி நிகழ்வுக்குப் பழி வாங்குவதற்காக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது.
- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ், ஜூன் 1911 இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ‘பாரத மாதா என்ற புரட்சிவாதக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினராவார்.
IV. விரிவான விடையளிக்கவும்.
Question 1.
இந்திய தேசிய இயக்கத்தில் லால் – பால் – பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.
Answer:
- பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதி ராய் ஆகிய முப்பெரும் தலைவர்களின் இயக்க நடவடிக்கைகளின் விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கத் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
- தீவிர தேசியவாதத் தலைவர்களில் மற்றுமொரு செல்வாக்கு பெற்ற ஆளுமையாக இருந்தவர் அரவிந்த் கோஷ் ஆவார்.
- தொடக்க கால இந்திய தேசியவாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வகைப்பட்ட தேசியவாதம் மிகவும் உறுதியுடையதாய் இருந்தது.
சுயராஜ்யம் அல்லது அரசியல் சுதந்திரம்:
- தீவிர தேசியவாதத் தலைவர்களில் பொதுவான குறிக்கோள்களில் ஒன்று
- சுயராஜ்யம் அல்லது சுயாட்சி என்பதாகும்.
- சுயராஜ்யத்தின் பொருள் குறித்து தலைவர்கள் வேறுபட்டனர்.
- திலகரின் கருத்து, சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே. இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதல்ல.
- பிபின் சந்திரபாலின் கருத்துப்படி ‘சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைதல் என்பதாகும்.
- இவர்கள் மக்களின் தேசபற்று உணர்வுகளை மதத்தின் அடையாளங்களைப் பயன்படுத்தித் தூண்டினர்.
Question 2.
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.
AnsweR:
தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது. ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்ட கோபத்தைப் பொதுச் சரடாகக் கொண்டு தமிழ் நடைபெற்ற சுதேசி இயக்கம் அனைத்திந்திய பண்புகளை பெற்றிருந்தது.
தமிழகத்தில் சுதேசி இயக்கம் (பிபின் சந்திரபால் உரை):
- தமிழகத்தில் மெரினா கடற்கரை மற்றும் மூர்மார்கெட் வளாகம் ஆகிய பகுதிகளில் சுதேசிக் கூட்டங்கள் நடைபெறும்.
- 1907ல் சென்னை வந்த பிபின் சந்திரபாலின் எழுச்சி உரை தமிழக மக்களை உத்வேகப்படுத்தியது.
வ.உ.சி.யும் நீராவிக் கப்பலும்:
- 1906ல் வ.உ.சி. சுதேசி நீராவி கப்பல் கம்பெனி எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தை பதிவு செய்தார்.
- இரண்டு கப்பல்களை வாங்கி இந்திய மக்களுக்காக செயல்படுத்தினார்.
- சுதேசி இயக்கத்திலும் விடுதலை போராட்டத்திலும் தீவிரமாக கலந்து கொண்டதால் வ.உ.சிதம்பரமும், சுப்ரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
- சுதேசி கப்பலை சிதைக்க ஆங்கில நிர்வாகம் வேற்றுமை உணர்வுடன் நடந்து கொண்டது.
கோரல் நூற்பாலை கிளர்ச்சி: த –
- 1908ல் கோரல் நூற்பாலை தொழிலாளர்கள் படுமோசமான நிலையில் இருந்தனர்.
- தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெறச் செய்தனர்.
சுதேசி இயக்கத்தின் வலிமை மட்டுமின்றி தேசிய இயக்காதை மேலும் ஊக்குவித்ர
சுப்ரமணிய பாரதியார்:
- சி. சுப்ரமணிய பாரதியார் சிறந்த பத்திரிக்கை ஆசிரியராக, கவிஞராக இருந்து தமிழகத்தின் சுதேசி இயக்கத்திற்கு பாடுபட்டவராவார்.
- மாத காலம் சிறைவாசம் சென்று வெளிவந்த பிபின் சந்திரபாலின் விடுதலை நாளை “சுதேசி நாளாக” கொண்டாட (திருநெல்வேலியில்) முடிவு செய்தனர்.
வ.உ.சி., சிவா கைது:
- வ.உ.சி.. சுப்ரமணிய சிவா. பத்மநாபர் ஆகியோரை தேச துரோக குற்றம் சாட்டி கடுமையான தண்டனைக்குட்பட்டனர்.
- இதனால் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தனர். நால்வர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர்.
தூத்துக்குடி:
- தூத்துக்குடியில் சுதேசி முயற்சி அடக்கப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டது இளைஞர்களிடையே பெரும் கோபத்தை உண்டு பண்ணியது.
வாஞ்சிநாதன்:
- 1911ல் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை வ.வே. சுப்ரமணியம் என்பவரால் பயிற்சியளிக்கப்பட்ட வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றான்.
- வாஞ்சிநாதன் “பாரத மாதா” என்னும் புரட்சிவாத குழுவில் இவரும் ஒரு உறுப்பினர். இன்னும் எண்ணற்ற தமிழக புரட்சிகர இளைஞர்கள், தலைவர்கள், பெண்கள் என இந்திய சுதேச இயக்கத்தில் பங்கு பெற்றார்கள்.
V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
Question 1.
சுப்ரமணிய பாரதியின் தொலைநோக்கு குறித்து சொற்பொழிவு ஒன்றை நடத்துக.
2. கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தை திரையிட்டு காட்டுக.
12th History Guide தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Additional Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்
Question 1.
ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு
அ) சூரத் காங்கிரஸ் பிளவு
ஆ) சுயராஜ்ய கட்சி தோற்றம்
இ) வங்கப்பிரிவினை
ஈ) முஸ்லீம் லீக் தோற்றம்
Answer:
இ) வங்கப்பிரிவினை
Question 2.
இந்தியப் பத்திரிக்கைச் சட்டம்
அ) 1910
ஆ) 1909
இ) 1908
ஈ) 1907
Answer:
அ) 1910
Question 3.
வங்கப்பிரிவினை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள்
அ) 1905 ஜூலை 19
ஆ) 1905 டிசம்பர் 16
இ) 1905 ஜூலை 16
ஈ) 1906 டிசம்பர் 19
Answer:
அ) 1905 ஜூலை 19
Question 4.
அதிகாரப்பூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் ………………….
அ) 1905 ஜூலை 19
ஆ) 1905 ஜூலை 5
இ) 1905 டிசம்பர் 16
ஈ) 1906 டிசம்பர் 16
Answer:
இ) 1905 டிசம்பர் 16
Question 5.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பொருந்தியுள்ளது?
அ) 1905-முஸ்லீம் லீக் தோற்றம்
ஆ) 1906-வங்கப்பிரிவினை
இ) 1907-விடிவெள்ளிக்கழகம் நிறுவப்பட்டது
ஈ) 1904-பல்கலைக்கழகச் சட்டம்
Answer:
ஈ) 1904 – பல்கலைக்கழகச் சட்டம்
Question 6.
திலகரின் “புதிய கட்சியின் சித்தாந்தங்கள்” எனும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர். ………………
அ) ராஜகோபாலாச்சாரி
ஆ) வ.உ.சிதம்பரம் பிள்ளை
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
Answer:
இ) பாரதியார்
Question 7.
கூற்று : தொழிலாளர்களின் வெற்றி “கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு
இணைப்பை உருவாக்கியுள்ளது”
காரணம் : இந்திய தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்குக் கிடைத்த வெற்றி.
i) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
ii) கூற்று சரி, காரணம் தவறு
iii) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
iv) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
i) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
Question 8.
வ.உ.சி. குறித்த பின்வரும் எந்த செய்தி தவறானது?
i) 1908 மார்ச் 12ல் தேச துரோகம் குற்றம் சாட்டி வ.உ.சி. கைது செய்யப்பட்டார்.
ii) வ.உ.சி.க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது
iii) செக்கிழுத்த செம்மல் என போற்றப்பட்டார்
iv) சுதேசி கப்பலை வணிகத்திற்காக வாங்கினார்.
Answer:
ii) வ.உ.சி.க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது
II. சுருக்கமான விடையளிக்கவும்
Question 1.
வங்கப்பிரிவினையில் கர்சன் பிரபுவின் நோக்கம் யாது?
Answer:
- இந்து முஸ்லீம்களை பிரிக்கும் நோக்கம்.
- ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி இந்து
முஸ்லீம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவது.
Question 2.
“ஆக்கபூர்வமான சுதேசி திட்டம்” என்பதை வரையறு.
Answer:
- ஆக்கபூர்வமான சுதேசித் திட்டம் பெருமளவு சுயஉதவிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
- அது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற்ற சுயாட்சிக்கான மாற்று – நிறுவனங்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தியது.
- மக்கள் தங்களைச் சுயவலிமை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டிய தேவைக்கு முக்கியத்துவம் வழங்கியது.
Question 3.
திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் படுகொலையின் பின் விளைவுகள் யாவை?
Answer:
- விசாரணையின் போது ஆஷ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாண்டிச்சேரியில் தலைமறைவால் இருக்கும் வ.வே. சுப்ரமணியரும், மற்றவர்களும் நெருக்கமாக இருந்து செயல்பட்டனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டது.
- இத்தகையோர் சூழ்நிலை தேசியவாதக் கருத்துக்களை பரப்புரை செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தியது
- இக்கொலையின் பின்விளைவாக காலனியரசு மேற்கொண்ட அடக்குமுறை, தமிழ்நாட்டில் தேசிய இயக்கம் செயல் வேகம் குறைந்த, மந்தமான காலகட்டத்தை எதிர் நோக்கியது.
III. குறுகிய விடையளிக்கவும்
Question 1.
வங்கப் பிரிவினையைப் பற்றி அறிவது யாது?
Answer:
- ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி, இந்து-மூஸ்லீம் மக்களிடையே பிரிவினையை உருவாக்க கர்சன்பிரபு திட்டம் தீட்டினார்.
- 1905ல் நிர்வாக வசதிக்காக எனக் கூறி வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார் கர்சன் பிரபு.
- ஆனால் இதனை மூஸ்லீம்களையும் இந்துக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சி என இந்தியர்கள் கருதினர்.
- வங்கப்பிரிவினை வங்காள மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்கு பதிலாக அவர்களை ஒன்றுபடுத்தியது.
- கோபால கிருஷ்ண கோகலேயின் கருத்துப்படி வங்காளப்பிரிவினை மக்களை நாடு முழுவதும் தேசிய உணர்ச்சி கொண்டு கிளர்ச்சி எழச் செய்தது.
- பொது மக்களின் எதிர்ப்பு உணர்ச்சி உச்ச நிலையை அடைந்தது.
Question 2.
புரட்சி தேசியவாதம் – ஆய்க
Answer:
- 1908ல் தீவிரவாத தேசியவாதம் சரிவுற்று புரட்சிகர செயல்பாடுகள் மேலெழுந்தன.
- வன்முறை சாராத நடவடிக்கையிலிருந்து வன்முறையை நோக்கி, எனும் மாற்றத்தை சுட்டிக் காட்டியது..
- ஆங்கில ஆட்சிக்கு உயர்மட்டத்தைச் சார்ந்தோரின் எதிர்ப்பு என்ற மாற்றத்தை அது உணர்த்தியது.
- 1870ல் விவேகானந்தர் விளக்கியவாறு எஃகிலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன.
- பங்கிம் சந்திர சட்டர்ஜியின் “ஆனந்த்மத்” (ஆனந்தமடம்) என்னும் நாவல் வங்காளத்து புரட்சிவாதிகளால் பின்பற்றப்பட்டது. இதில் உள்ள “வந்தே மாதரம்” பாடல் சுதேச இயக்கத்தின் கீதமாயிற்று.
Question 3.
வட்டாரமொழி சொற்பொழிவு கலையின் வளர்ச்சியைப் பற்றி கூறுக.
Answer:
- வங்கப்பிரிவினைக்கு எதிராக கூட்டங்கள் வழக்கமாக நடைபெற்றன.
- இக்கூட்டங்களில் தலைவர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலாளர்கள் என அச்சமயம் கூடியிருப்போரிடம் வட்டார மொழியில் சொற்பொழிவாற்றினர்.
- ஆங்கிலத்தில் சொற்பொழிவு என்பதிலிருந்து வட்டார மொழியில் சொற்பொழிவு நிகழ்த்துவது என்பது இக்காலத்தில் குறிப்பிட்ட மாற்றமாகும். வளர்ச்சியாகும்.
- இது தமிழ்நாட்டின் வெகுஜன அரசியலின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- தமிழ்நாட்டில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட் வளாகம் பகுதிகளில் சுதேசிக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
- 1907ல் சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திரபால் சென்னை கடற்கரையில் ஆற்றிய உரை மக்களை உத்வேகப்படுத்தியது.
- தமிழில் ஆற்றப்பட்ட பொது சொற்பொழிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் செயல்பாடுகள் தொடங்கிய காலத்தில் காணப்படாத புதிய பார்வையாளர்களை உருவாக்கியது.
IV. விரிவான விடையளிக்கவும்
Question 1.
இந்திய விடுதலை போராட்டத்தில் பத்திரிகை ஆசிரியராக பாரதியாரின் பங்கினை விவரி.
Answer:
- ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான செய்தி பத்திரிக்கைகளின் வளர்ச்சி தமிழகத்தில் சுதேசி இயக்கத்திற்குத் துணை நின்றது.
- C. சுப்ரமணியம் அவர்கள் தமிழில் முதலாவதாக “சுதேசமித்திரன்” என்ற தினசரி இதழைத் தொடங்கினார்.
பத்திரிகை ஆசிரியராக :
- 1904ல் சுப்ரமணிய பாரதி சுதேச மித்திரன் பத்திரிகையின் துணையாசிரியராக பணி அமர்த்தப்பட்டார்.
- பாரதி “சக்ரவர்த்தினி” எனும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
- அயர்லாந்து நாட்டு பெண்மணியும் விவேகானந்தரின் சீடருமான நிவேதிதா பாரதியாரின் தேசியவாத சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தார். –
- ஆங்கில ஆட்சியை புதிய அணுகுமுறையில் எதிர்கொள்ளப்பட வேண்டும் என நினைத்த பாரதியாருக்கு தீவிர தேசியவாதிகளின் வழிமுறைகள் ஏற்புடையதாய் இருந்தன.
- காங்கிரசின் சூரத் மாநாட்டிற்குப் பின்னர் திலகர் மீது ஆர்வமும் பற்றும் அதிகமாகியது. ‘
- திலகரின் “புதிய கட்சியின் சித்தாந்தங்கள்” எனும் நூலை பாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார்.
- 1907ல் “சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாண தீவிர தேசியவாதிகள் குறித்து” எனும் சிறு புத்தகம் ஒன்றை வெளியிட்டார். ‘
- பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய “இந்தியா” என்ற வார இதழ் தீவிர தேசிய வாதிகளின் குரலாக மாறியது.
How to Prepare using Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF?
Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF by following certain essential steps which are provided below.
- Use Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் notes by paying attention to facts and ideas.
- Pay attention to the important topics
- Refer TN Board books as well as the books recommended.
- Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
- Highlight and explain the concepts in details.
Samacheer Kalvi 12th History All Chapter Notes PDF Download
- Samacheer Kalvi 12th History Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Notes
- Samacheer Kalvi 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Notes
- Samacheer Kalvi 12th History Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 11 புரட்சிகளின் காலம் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 12 ஐரோப்பாவில் அமைதியின்மை Notes
- Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 14 இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் Notes
- Samacheer Kalvi 12th History Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Notes
0 comments:
Post a Comment