Samacheer Kalvi Books– Tamilnadu State Board Text Books Solutions for Class 1 to 12.

Tuesday, September 28, 2021

Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes

Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes
Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download: Tamil Nadu STD 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes


Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download: Students of class can download the Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download from our website. We have uploaded the Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் notes according to the latest chapters present in the syllabus. Download Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Chapter Wise Notes PDF from the links provided in this article.


Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF Download

We bring to you specially curated Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF which have been prepared by our subject experts after carefully following the trend of the exam in the last few years. The notes will not only serve for revision purposes, but also will have several cuts and easy methods to go about a difficult problem.


Board

Tamilnadu Board

Study Material

Notes

Class

Samacheer Kalvi 12th History

Subject

12th History

Chapter

Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

Format

PDF

Provider

Samacheer Kalvi Books


How to Download Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDFs?

  1. Visit our website - https://www.samacheerkalvibook.com/
  2. Click on the Samacheer Kalvi 12th History Notes PDF.
  3. Look for your preferred subject.
  4. Now download the Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் notes PDF.

Download Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Chapterwise Notes PDF

Students can download the Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF from the links provided in this article.


Question 1.
ஜெர்மனியின் முன்னேறி வந்து கொண்டிருந்த படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து தோற்கடித்த போரின் பெயர் என்ன?
அ) மார்னே போர்
ஆ) டானென்பர்க் போர்
இ) வெர்டூன் போர்ஈ ) சோம் போர்
Answer:
அ) மார்னே போர்

Question 2.
‘அரசின் தடையற்ற ‘ (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ……………. ஆவார்.
அ) ஜான் A. ஹாப்சன்
ஆ) கார்ல் மார்க்ஸ்
இ) ஃபிஷர்
ஈ) கௌர்னே
Answer:
ஈ) கௌர்னே

Question 3.
An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations என்ற நூலை எழுதியவர் …………….. ஆவார்.
அ) ஆடம் ஸ்மித்
ஆ) தாமஸ் பைன்
இ) குஸ்னே
ஈ) கார்ல் மார்க்ஸ்
Answer:
அ) ஆடம் ஸ்மித்

Question 4.
இங்கிலாந்து ……………… ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது. (மார்ச் 2020)
அ) 1833
ஆ) 1836
இ) 1843
ஈ) 1858
Answer:
அ) 1833

Question 5.
கூற்று : பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பல நாடுகள் மிகை உற்பத்தியால் பிரச்சனைகளை எதிர்கொண்டன.
காரணம் : மிகை உற்பத்தி, நாடுகளை புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க அழுத்தங்கொடுத்தது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 6.
1879ஆம் ஆண்டில் ……………. கட்டண சட்டத்தை இயற்றியது.
(மார்ச் 2020
அ) ஜெர்மனி
ஆ) பிரான்ஸ்
இ) பிரிட்டன்
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Answer:
அ) ஜெர்மனி

Question 7.
………….. க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அ) ரஷ்ய-ஜப்பனியப் போர்
ஆ) இரண்டாம் அபினிப் போர்
இ) இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர்
ஈ) சீன-ஜப்பானியப் போர்
Answer:
ஈ) சீன-ஜப்பானியப் போர்

Question 8.
போர்ட்ஸ்ம வுத் ஒப்பந்தம் ஏற்படும் பொருட்டு மத்தியஸ்தம் புரிந்த நாடு ………….. ஆகும்.
அ) ஸ்பெயின்
ஆ) பிரிட்டன்
இ) அமெரிக்க ஐக்கிய நாடு
ஈ) பிரான்ஸ்
Answer:
இ) அமெரிக்க ஐக்கிய நாடு

Question 9.
எந்த நாடு 21 நிர்ப்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது? (மார்ச் 2020)
அ) பிரான்ஸ்
ஆ) ரஷ்யா
இ) ஜப்பான்
ஈ) பிரிட்டன்
Answer:
இ) ஜப்பான்

Question 10.
………………. ஐ அடிப்படையாகக் கொண்டு அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது.
அ) புக்காரெஸ்ட் உடன்படிக்கை, 1913
ஆ) வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை , 1919
இ) லண்டன் உடன்படிக்கை, 1913
ஈ) செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை
Answer:
இ) லண்டன் உடன்படிக்கை, 1813

Question 11.
கீழ்க்காண்பனவற்றுள் எந்நாடு மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை?
அ) பல்கேரியா
ஆ) ஆஸ்திரிய-ஹங்கேரி
இ) துருக்கி
ஈ) மான்டி நீக்ரோ
Answer:
ஆ) ஆஸ்திரிய-ஹங்கேரி

Question 12.
பாரிசை நெருங்கிக் கொண்டிருந்த தாக்குதலை உணர்ந்து பிரெஞ்சு அரசு …….. பகுதிக்கு நகர்ந்து சென்றது.
அ) மார்செல்லிஸ்
ஆ) போர்டியாக்ஸ்
இ) லியோன்ஸ்
ஈ) வெர்செய்ல்ஸ்
Answer:
ஆ) போர்டியாக்ஸ்

Question 13.
கீழ்க்காண்பனவற்றுள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் பகுதியாக கருதப்படாதது எது?
அ) ஜெர்மனி அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்
ஆ) சார் பள்ளத்தாக்கு பிரான்சிற்கு வழங்கப்பட வேண்டும்
இ) ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்
ஈ) டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும்
Answer:
இ) ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும்

Question 14.
கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.
அ விடுதலை ஆணை – 1. இரண்டாம் அலெக்ஸாண்டர்
ஆ இரத்த ஞாயிறு – 2. இரண்டாம் நிக்கோலஸ்
இ (ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் – 3. முதலாம் நிக்கோலஸ்
ஈ பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை – 4. மூன்றாம் அலெக்ஸாண்டர்
Answer:
ஈ) பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை – மூன்றாம் அலெக்ஸாண்டர்

Question 15.
கூற்று : பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
காரணம் : “கூட்டுப்பாதுகாப்பு ” என்ற கொள்கையை மெய் வழக்கத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியவில்லை .
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 16.
கூற்று : உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை.
காரணம் : நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 17.
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொது செயலாளரான எரிக்ட்ரம்மோன்ட் ………. …….நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
அ) பிரான்ஸ்
ஆ) தென்னாப்பிரிக்கா
இ) பிரிட்டன்
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடு
Answer:
இ) பிரிட்டன்

Question 18.
பன்னாட்டு சங்கம் ………….. ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
அ) 1939
ஆ) 1941
இ) 1945
ஈ) 1946
Answer:
ஈ) 1946

Question 19.
ஹிட்லரை ஜெர்மனியின் பிரதம அமைச்சராக நியமித்தவர் யார்?
அ) ஜெனரல் லூடன்டார்ஃப்
ஆ) வான் ஹிண்டன்பர்க்
இ) ஜெனரல் ஸ்மட்ஸ்
ஈ) ஆல்ஃபிரட்வான் பெத்மண்
Answer:
ஆ) வான் ஹிண்டன்பர்க்

Question 20.
முசோலினி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையின் பெயர் யாது?
அ) அவந்தி
ஆ) ப்ராவதா
இ) மார்க்சிஸ்ட்
ஈ) மெயன் காமப்
Answer:
அ) அவந்தி

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
ஏகாதிபத்தியத்தை வரையறுத்து ஜான் ஹாப்சன் முன்வைத்த கருத்தை விளக்குக.
Answer:
ஏகாதிபத்தியம் என்பது தொழிலை கட்டுப்படுத்துவோர் தங்கள் செல்வங்கள் சென்று சேரும் பாதையை விசாலப்படுத்தி அயல்நாட்டு சந்தைகளையும், அயல்நாட்டு நிதியையும் பயன்படுத்தி தாங்கள் உள்ளூரில் விற்க முடியாத பொருட்களையும், சந்தைப்படுத்த முடியாத மூலதனத்தையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர எடுக்கும் முயற்சியே என ஏகாதிபத்தியத்தைப் பற்றிய கருத்தை வரையறுக்குபவர் ஜான் ஹாப்சன் என்பவர்.

Question 2.
ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்ததேன்?
Answer:

  • பிரான்ஸ் நாடு அல்சேசையும், லொரைனையும் இழந்தமைக்குப் பழிவாங்கக் கூடும் என்று பிஸ்மார்க் எதிர்பார்த்தார்.
  • அதனால் பிரான்சை தனிமைப்படுத்த அவர் (ஜெர்மனி) தீர்மானம் கொண்டார்.

Question 3.
பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904இல் கையெழுத்திடப்பட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (Entente Cordiale) முக்கியத்துவம் யாது?
Answer:

  • பிரான்சு பிரிட்டனின் நட்பைக் கோரி மொராக்கோ, எகிப்து சார்ந்த பிணக்குகளை தீர்க்க முன்வந்தது.
  • மொராக்கோவில் தன்னிச்சையாக செயல்பட விடுத்து, பிரிட்டன் எகிப்தை ஆக்கிரமித்தமைக்கு பிரான்சின் அங்கீகாரத்தை பெற்றது.

Question 4.
பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக் கூறுகளை எழுதுக.
Answer:

  • பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
  • செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக்களிப்பில் திளைத்தார்கள்.
  • ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும், அதன் அண்டை நாடான போஸ்னியாவிலும் மிகுந்த தீவிரவாதத் தன்மை கொண்டதாக மாறியது.

Question 5.
“மூவர் தலையீடு” எனப்படுவது யாது?
Answer:

  • சீன-ஜப்பானிய போரின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட ஷிமனோசெக் உடன்படிக்கையின் படி ஜப்பானிற்கு ஃபார்மோஷா, ஆர்தர் துறைமுகம், லியோடுங் தீபகற்பம் ஆகிய பகுதிகள் வழங்கப்பட்டன.
  • ஜப்பானின் இந்த தீடீர் வளர்ச்சியைக் கண்டு ஐரோப்பிய சக்திகள் அஞ்சின.
  • எனவே பிரான்சு, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிட்டு ஜப்பானை லியோடுங் தீபகற்பத்தை ஒப்படைக்கும்படி செய்தன. இதுவே மூவர் தலையீடு எனப்படுகிறது.

Question 6.
முதல் உலகப்போரின் காலத்தில் கிழக்கு திசையில் வான் ஹிண்டன்பர்க் ஆற்றியப் பங்கை விளக்குக.
Answer:

  • கிழக்கு திசையில் ரஷ்ய படைகள் பிரஷ்யாவின் கிழக்குப் பகுதி வரை ஊடுருவிச் சென்றன.
  • ஜெர்மானிய ஜெனரல் வான் ஹிண்டன் பர்க் ரஷ்யப் படைகளை எதிர்த்து போரிடச் சென்றார்.
  • டானென்பர்க் போரில் வான் ஹிண்டன் பர்க்கின் போர் திறத்தால் ரஷ்யாவை தோற்கடித்தார்.

Question 7.
ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம் பற்றி எடுத்தியம்புக.
Answer:

  • மே 1916ல் டென்மார்க்கின் ஜட்லாந்து தீபகற்பத்திற்கு அருகில் நடைபெற்ற கடல் போர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இப்போர் முடிவுபடாத ஒரு போராக இருந்தது.
  • ஜட்லாந்து போர் முதல் உலகப்போரின் மிக பெரும் கடற்போராக கருதப்படுகிறது.
  • கடற்படைப் போர்களை ஜெர்மனிய அரசு நீர்முழ்கி கப்பல்களுக்கு தடையேற்படுத்தும் நோக்கம் கொண்ட நேச நாடுகளின் கப்பல்களைத் தடையில்லாமல் தாக்க அதிகாரம் வழங்கியப் பின் நின்று போனது.

Question 8.
நிகிலிசம் என்றால் என்ன?
Answer:

  • பல்லாண்டு கால் கட்டியெழுப்புதலின் வடிவமான சமூக அமைப்பை எதிர்க்கும் உணர்வின் பிரதிநிதித்துவமே நிகிலிசம் ஆகும்.
  • நிகிலிசம் நாட்டின் அரசு, கிறித்துவ ஆலயம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் கொண்டிருந்த அதிகாரத்தை மறுத்தது.
  • அதன் நம்பிக்கைகள் விஞ்ஞான அடிப்படையிலான உண்மையைச் சுற்றியே அமைந்திருந்தன.

Question 9.
கிரீசிற்கும் பல்கேரியாவிற்குமிடையே 1925இல் எழுந்த சர்ச்சையை பன்னாட்டு சங்கம் எவ்வாறு தீர்த்து வைத்தது?
Answer:

  • கிரீஸ் பல்கேரியாவின் மீது 1925ல் போர் தொடுத்தது.
  • பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை தடுத்தது.
  • விசாரணை மேற்கொண்ட பிறகு கிரீசை நஷ்ட ஈடு வழங்க ஆணையிட்டது.

Question 10.
லேட்டரன் உடன்படிக்கை எவ்வாறு முசோலினியின் அதிகாரத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கியது?
Answer:

  • பாசிசி கட்சிக்கு மதிப்பை சம்பாதிக்கும் பொருட்டு முசோலினி வாட்டிகன் நகருக்கு தனிநாடு அங்கீகாரம் வழங்கினார்.
  • இதனால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை இத்தாலியப் பேரரசை அங்கீகரித்தது.
  • இத்தாலியின் தேசிய சமயமாக ரோமன் கத்தோலிக்க மரபு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயமாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேற்கூறியவற்றை உள்ளடக்கிய லேட்டரன் உடன்படிக்கை மூலம் முசோலினியின் அதிகாரத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Question 11.
மூன்றாவது ரெய்ச் என்றால் என்ன? (மார்ச் 2020)
Answer:

  • ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி அரசு மூன்றாவது ரெய்ச் என குறிப்பிடப்படுகிறது.
  • முதல் உலகப்போருக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • இதனால் ஜெர்மனி முழுமையான மையப்படுத்தப்பட்ட அரசானது.

Question 12.
பிரெஞ்சுக்காரர்கள் ரூர் பகுதியை ஆக்கிரமித்த பிறகு ஜெர்மனியில் உருவான இரு திரைமறைவு இயக்கங்கள் யாவை?
Answer:

  • பெர்லின் நகரில் குடியரசு கட்சியின் அரசுக்கு எதிராக லூடன்டார்ஃப் என்பவர் முன்னாள் படை வீரர்களை மறைமுகச் செயல்பாடுகளுக்காக திரட்டினார்.
  • மற்றொன்று மூனிச் நகரில் முன்னாள் படைத்துறை அலுவலர் (Coroval) ஒருவரின் தலைமையில் செயலாற்றி வந்தது. அவர் தேசிய சோஷலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியை நிறுவிய அடால்ஃப் ஹிட்லர் ஆவார்.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
முதல் மொராக்கோ சிக்கல் எவ்வாறு நிகழ்ந்தது?
Answer:

  • இங்கிலாந்தோடு ஏற்பட்ட புரிதலை முன்னிறுத்தி பிரான்சு மொராக்கோவில் தனது திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைத்தது.
  • ஒரு பிரஞ்சு தூதுக்குழு 1905ல் மொராக்கோவின் ஃபெஸ் நகரை வந்தடைந்தது.
  • அதை பிரான்சின் பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியாகவே கருதி செயல்பட்டது.
  • இதற்கு ஜெர்மனி தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.
  • இந்த சர்ச்சையை ஐரோப்பிய மாநாடு ஒன்றினுக்கு எடுத்துச் செல்ல பிரான்ஸ் உடன்பட்டது.

Question 2.
அகழிப்போர் எவ்வாறு நடத்தப்பட்டது?
Answer:

  • உலகப் போரை அடையாளப்படுத்தும் அகழி முறையானது இரண்டு முதல் நான்கு அகழிகள் ஒன்றனுக்கு இணையாக மற்றொன்று செல்வதேயாகும்.
  • ஒவ்வொரு அகழியையும் எதிரிகள் சுட்டாலும் சில அடிகளுக்கு மேல் தோட்டா செல்ல முடியாதபடி நேர்கோட்டில் இல்லாமல் வளைந்து நெளிந்து வடிவமைத்திருந்தனர்.
  • அகழிகளின் முக்கிய வரிசைகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவும், பின்புறத்தில் தொடர் இணைப்பு அகழிகளும் ஏற்படுத்தப்பட்டு அதன் வாயிலாக உணவு, வெடிபொருள்கள், புதிய துருப்புகள், கடிதங்கள்,
    ஆணைகள் போன்றவை பரிமாற்றம் செய்யப்பட்டன.

Question 3.
மிக ஆபத்தான U-படகுகள் மற்றும் Q-கப்பல்கள் பற்றி நீவீர் அறிந்தது என்ன?
Answer:
Q-கப்பல்களும் U-படகுகளும்:

  • முதல் உலகப்போரின் காலத்தில் ஜெர்மனி கொண்டிருந்த மிக அச்சுறுத்தும் ஆயுதம் நீர்மூழ்கிகள் அல்லது U-படகுகளாகும்.
  • பிரிட்டனின் கப்பல்கள் அனைத்தையும் மூழ்கடிக்கும் உத்தியை ஜெர்மானியர்கள் கடைபிடித்தனர்.
  • Q-கப்பல்கள் பிரிட்டனின் ஜெர்மனிக்கான பதிலடியாகும்.
  • பிரிட்டன் இக்கப்பல்களின் வாயிலாக ஜெர்மனியைத் தாக்குதலைத் தூண்டச் செய்து பின் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் படை பலத்தையும் கொண்டு பதிலடி கொடுக்கும் உத்தியைக் கையாண்டது.

Question 4.
போரில் அமெரிக்கா நுழைந்த பிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாக எடுத்துக் கூறுக.
Answer:

  • அமெரிக்காப் போரில் இறங்கியது நேச நாடுகளின் வெற்றியை முன்பே உறுதி செய்தது போலாயிற்று.
  • ஜெர்மனியின் நட்பு நாடுகள் அனைத்தும் அதனைக் கைவிட்டு விலகின.
  • பல்கேரியா முதலில் சரணடைந்தது.
  • துருக்கியர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர்.
  • கெய்சர் அரியணையைத் துறந்து ஹாலந்திற்கு ஓட்டம் பிடித்தார்.
  • ஜெர்மனி நவம்பர் 11 அன்று சரணடைவதாக கையெழுத்திட்டது.

Question 5.
ரஷ்யப் புரட்சி அந்நாட்டிற்கு வெளியில் ஏற்படுத்திய பாதிப்புகளை விளக்குக.
Answer:

  • ரஷ்யப் புரட்சி உலகம் முழுவதிலும் வாழும் மக்களின் நினைவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • பல்வேறு நாடுகளிலும் பொதுவுடைமை கட்சி உருவாக்கப்பட்டது.
  • சோவியத் ஐக்கியம் காலனி ஆட்சிக்குட்பட்ட நாடுகளை தங்களின் விடுதலைக்காகப் போராட அறிவுறுத்தி அந்நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தது.
  • நிலவுடைமை சீர்திருத்தம், சமூக நலன், தொழிலாளர் உரிமைகள், பாலின சமத்துவம் போன்ற முக்கியத்துவமானது உலகம் முழுவதும் விவாதப் பொருளானது.
  • இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு உத்வேகமளித்ததோடு, முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு முறையையும் அறிமுகப்படுத்தியது.

Question 6.
ரஷ்யாவில் 1905 இல் நிகழ்ந்த புரட்சியின் காரணங்களையும், போக்கையும் ஆராய்க.
Answer:

  • ரஷ்யா மஞ்சூரியாவுக்குள் நுழைய 1904ல் ஜப்பான் தூண்டப்பட்டு போரில் இறங்கியது.
  • இப்போரில் ரஷ்யா தோல்வியுற்றது. எனவே சார் மன்னருக்கு எதிராக கலவரம், எதிர்ப்புகள் ஏற்பட்டது.
  • நிக்கோலஸ் அரசியல் சாசனம் மற்றும் பாராளுமன்றத்தை உருவாக்க நிர்பந்திக்கப்பட்டார்.
  • இடது சாரியினர் பீட்டர்ஸ்பர்க் நகரில் தொழிலாளர் பிரதி நிதி அவையை உருவாக்கினர்.

Question 7.
பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்து வைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • 1920 முதல் 1925 வரை பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைத்திருந்தாலும் குறிப்பாக மூன்று பிரச்சினைகளை தீர்த்து வைத்தது.
  • ஆலந்து தீவுகளின் மீது ஸ்வீடனும், பின்லாந்தும் உரிமை கோரின. பன்னாட்டு சங்கம் அத்தீவு பின்லாந்தை சேர நெறி ஏற்படுத்தியது.
  • சைலேசியாவை போலந்தும், ஜெர்மனியும் கோரிய போது சங்கம் தலையிட்டு வெற்றிகரமாகத் தீர்த்தது.
  • கிரீஸ் பல்கேரியாவின் மீது போர் தொடுத்த போது சங்கம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு போரை நிறுத்தியது.

Question 8.
பொருளாதார பெருமந்தம் எவ்வாறு அரசியல் தளத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தியது என்பதனை விளக்குக.
Answer:

  • பொருளாதார பெருமந்தம் உலக அரசியல் தளத்தில் மாற்றங்களை கொண்டு வந்தது.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியுற்றது.
  • பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் அமெரிக்காவில் 20 ஆண்டு கால குடியரசு கட்சி ஆட்சியை இழந்தது.
  • இத்தாலி மற்றும் ஜெர்மனியில் பாசிச, நாசிச கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றின.
  • அர்ஜென்டினா, பிரேசில், சிலி ஆகிய நாடுகளிலும் அரசு மாற்றம் ஆனது.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
முதல் உலகப்போரின் காரணங்களையும், விளைவுகளையும் கணக்கிடுக.
Answer:

  • முதல் உலகப் போருக்கான காரணங்கள்: * ஜெர்மனியின் பேராசைமிக்க காலனி ஆதிக்க பேராதிக்க நடவடிக்கை, ஐரோப்பிய நாடுகளின் ரகசிய
    ராணுவ ஒப்பந்தங்கள்.
  • உலக நாடுகளின் ஆதிக்க வெறியை தடுக்க சர்வதேச அமைப்பு இல்லாமை. ரஷ்யா ஜெர்மனி பிரான்ஸ் நாடுகள் படை பலத்தை அதிகப்படுத்தியமை.
  • ஐரோப்பிய நாடுகளுக்கிடையே குடியேற்றங்களை அமைப்பதிலும் வணிக நடவடிக்கைகளிலும் ஏற்பட்ட போட்டி.
  • ஆப்ரிக்க நாடான மொராக்கோவை பிரான்ஸ் கைப்பற்றியதை ஜெர்மனி ஏற்காமை. முதல் பால்கன் போரில் துருக்கி தோற்கடிக்கப்பட்டு போரின் முடிவில் கிடைத்த பகுதிகளை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை.

உடனடி காரணம்:
போஸனிய தலைநகர் செரோஜிவா நகரில் ஆஸ்திரிய பட்டத்து இளவரசர் பெர்டினாண்டும் அரசி இசபெல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டது உடனடிக் காரணமாக அமைந்தது.

விளைவுகள் :

  • 1919 பாரிஸ் அமைதி மாநாட்டின் மூலம் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
  • தோல்வியுற்ற நாடுகளின் மீது பல்வேறு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டது.
  • ஜெர்மனி மீது அவமானகரமான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை திணிக்கப்பட்டது.
  • ஆஸ்திரியா ஜெர்மன், ஹங்கேரி டிரையனான், பல்கேரியா நியூலி, துருக்கி செவ்ரேஸ் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன.
  • அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் 14 அம்ச கோட்பாட்டின் அடிப்படையில் உடன்படிக்கை சரத்துக்கள் வரையப்பட்டன.

Question 2.
“மார்க்ஸ் தீப்பொறியை வழங்கவும், அதைலெனின் தீபமாக ஏற்றினார்” தெளிவுபடுத்துக.
Answer:

  • மார்க்ஸ்சும் ஏங்கல்சும் சோஷலிச புரட்சிக்கு உழைக்கும் மக்கள் எவ்வாறு அவசியமோ அது போலவே நடுத்தர மக்களும் தேவை எனக் கருதினர். எனினும் சோஷலிச சிந்தனைகளை விட ஒடுக்கப்பட்ட வாழ்க்கை சூழல் அமைந்த இடத்தில் மார்க்சியமே செழித்து வளர்ந்தது.
  • பெரும் நிறுவன ஆற்றல் கொண்ட லெனின் மார்க்கசியத்தின் திறன்பெற்ற தலைவரானார்.
  • ரஷ்யாவில் சார் மன்னர் இரண்டாம் நிகோலஸ் அனுபவமில்லாதவர் அவர் ஆட்சியில் இரத்த ஞாயிறு
    சம்பவத்தில் நிறைய பொதுமக்கள் மாண்டதும் அவரின் முடிவை எதிர்த்த பாராளுமன்றமோ அடிக்கடி கலைக்கப்பட்டதும் அவருக்கு அப்பெயரை தந்தது.
  • 1917 பிப்ரவரியில் உணவு பற்றாக்குறையால் பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்க அவர்களுக்கு ஆதரவாக 4 லட்சம் தொழிற்சாலை பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
  • மார்ச் 15 அன்று மன்னர் பதவி விலகினார்.
  • அரசின் செயல்பாடுகளை எடுத்துச் செல்ல டூமாவில் இருந்தவர்கள் சோவியத்துக்களின் ஒப்புதல் பெற்று இடைக்கால அரசை நிறுவினர்.
  • புரட்சி தொடங்கிய காலத்தில் லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே என்ற அவரது கூற்று தொழிலாளர்களை ஈர்த்தது.
  • இடைக்கால அரசு புரிந்த தவறுகள் போல்ஷ்விக்குள் தலைமையில் பெட்ரோகிராட் கிளர்ச்சியை தீவிரமாக்கியது.
  • பின்லாந்தில் மறைந்திருந்த லெனின் தவிர மற்ற போல்ஷ்விக்குகள் கைது செய்யப்பட்டனர். கெரன்ஸ்கி பிரதமரானார்.
  • அக்டோபர் மாதம் லெனின் போல்ஷ்விக் கட்சியிடம் ஒரு புரட்சியை நடத்த அறிவுறுத்தினார்.
  • அதற்கு ட்ராட்ஸ்கி செயல் வடிவம் கொடுத்தார்.
  • அரசு கட்டமைப்புயாவும் நவம்பர் 3 அன்று புரட்சி படையால் கைப்பற்றப்பட்டது.
  • 1917 நவம்பர் 8 அன்று லெனின் தலைமையில் புது பொதுவுடைமை அரசு பதவி ஏற்றது.

Question 3.
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் கடுமையானதாகவும், அவமானப்படுத்தக் கூடியதாகவும் தெரிந்தது – இக்கூற்றினுக்கான ஆதாரப் பின்புலத்தை உறுதிப்படுத்துக.
Answer:
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமும் ஜெர்மனியும்:

  • ஜெர்மனியும் அதன் கூட்டு நாடுகளுமே போரில் விளைந்த இழப்புகளுக்கும் சேதங்களுக்கும் பொறுப்பெனக் கொள்ளப்பட்டது.
  • அல்சேசையும் லொரைனையும் ஜெர்மனி பிரான்சிடம் ஒப்படைத்தது.
  • சார் பள்ளத்தாக்கின் நிலக்கரி சுரங்கங்களை பிரான்சிடம் வழங்கப்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
    ஜெர்மனியின் பால்டிக் துறைமுகமான டான்சிக் பன்னாட்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் விடப்பட்டது.
  • கடல் வெளியில் ஜெர்மனி வைத்திருந்த பகுதிகள் யாவையும் தோழமை நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது.
  • ஜெர்மானிய காலனிகள் யாவும் பன்னாட்டு சபையின் கட்டாயத்திற்குள் கொண்டுவரப்பட்டது
  • பிரான்சு மற்றும் பெல்ஜியத்தின் மீது புதிய தாக்குதலை தவிர்க்கும் பொருட்டு ரைன் பள்ளத்தாக்கில் அரண் அமைக்கவோ படைகளை குவிக்கவோ ஜெர்மனிக்கு தடைவிதிக்கப்பட்டது.

ஜெர்மனிய படைகுறைப்பு:

  • ஜெர்மனி நிராயுதபாணியாக்கப்பட்டு அதன் நீர்முழ்கிக் கப்பல்களையும், போர்க் கப்பல்களையும் இழக்கச் செய்யப்பட்டது.
  • இராணுவப் பயன்பாட்டிற்கோ, கப்பற்படையின் தேவைக்கென்றோ ஜெர்மனி விமானங்களை கொண்டிருக்கக்கூடாது.
  • தரைப்படை அதிகாரிகளையும், பிறப்பணியாளர்களையும் சேர்த்து 1,00,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டக்கூடாது.
  • கடற்படையும் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
  • இவ்வாறாக வெற்றியாளர்களால் பகுதி வாரியாகவும், இராணுவ வகையிலும் பொருளாதார முறையிலும் ஜெர்மனி பலவீனப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தக்கூடியதாக அமைந்தது.

Question 4.
முசோலினியும், ஹிட்லரும் பாசிச அரசுகளை முறையே இத்தாலியிலும் ஜெர்மனியிலும் நிறுவ சாதகமான சூழல் எழுந்தமையை விளக்குக.
Answer:
பாசிசம்:

  • முதலாம் உலகப் போரில் பங்கு பெற்றதன் விளைவாக இத்தாலியின் பொருளாதாரம் சீரழிந்தது.
  • போரில் வெற்றி பெற்றது ஆனால் அமைதி இழந்தது.
  • நிலையான ஆட்சி இல்லாமையால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
  • நாட்டின் கடன் சுமை பன்மடங்கானது.
  • 1922 அக்டோபர் 30ம் நாள் பாசிஸ்டுகள் ரோம் நகரில் பிரம்மாண்ட அணி வகுப்பை நடத்தினர்.
  • அரசர் விக்டர் இமானுவேல் அரசமைக்கும்படி முசோலினிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நாசிசம்:

  • முதல் உலகப்போரின் போது ஹிட்லர் பவேரிய ராணுவத்தில் பணியாற்றினார். யூத மார்க்சியவாதிகளை வெறுத்தார்.
  • 1923ல் சரியாக திட்டமிடாமல் மூனிச் புறநகர் பகுதியில் அவர் நடத்த முயன்ற புரட்சி தோல்வியில் முடிந்து சிறைப்படுத்தப்பட்டார்.
  • சிறையில் இருந்த காலத்தில் தன் சிந்தனைகளை மெயின் கெம்ப் என்னும் நூலாக எழுதினார்.
  • 1931ல் உலக பெருமந்தம் ஜெர்மனியை சிக்க வைத்தது.
  • இதனால் முதலாளிகள் நிலவுடைமையாளர்கள் பாசிசத்தின் பக்கம் சாய்ந்தனர்.
  • ஹிட்லர் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
  • ஜெர்மனியில் குடியரசு கட்சி ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து தொழிலதிபர்கள் தந்த அழுத்தத்தால் குடியரசுத் தலைவர் ஹிண்டன்பர்க் ஹிட்லரை ஜெர்மனியின் சான்சலராக நியமித்தார்.
  • ஹிட்லரின் நாசிச அரசு ஜெர்மனியில் பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. இணையத்தில் (YouTube) இருக்கும் முதல் உலகப்போர் தொடர்பான காணொளிகளை மாணவர்களுக்குத்
தெரியப்படுத்தலாம்.
2. முதல் உலகப்போருக்கு முன்பும் பின்பும் வரைபடத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டு போர் நடந்த பகுதிகளைக் குறிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவலாம்.
3. பன்னாட்டு சங்கத்தின் வெற்றி, தோல்விகளை மாணவர்களைக் கொண்டு விவாதிக்கச் செய்யலாம். ( மார்ச் 2020)
4.
ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

12th History Guide ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் ……………..
அ) தாஸ் கேபிடல்
ஆ) உடோபியா
இ) இரு நாடுகளின் கதை
ஈ) காமன் வெல்த்
Answer:
அ) தாஸ் கேபிடல்

Question 2.
லெனின் தலைமையில் இயங்கிய இயக்கத்தின் பெயர் ……………….
அ) மென்ஷ்விக்
ஆ) போல்ஷ்விக்
இ) லிபரல் கட்சி
ஈ) காங்கிரஸ்
Answer:
ஆ) போல்ஷ்விக்

Question 3.
ரஷ்யாவில் லெனின் தலைமையில் பொது உடைமை அரசு தோன்றிய ஆண்டு ………………
அ) 1959
ஆ) 1925
இ) 1917
ஈ) 1923
Answer:
இ) 1917

Question 4.
முதலாளித்துவம் தோன்ற காரணமாயிருந்தது.
அ) சமதர்ம கொள்கை
ஆ) தொழிற்புரட்சி
இ) சமுதாயப் புரட்சி
ஈ) டாஸ் கபிடல்
Answer:
ஆ) தொழிற்புரட்சி

Question 5.
கடல்களின் அரசி என்று அழைக்கப்பட்ட நாடு ……………………….
அ) ரஷ்யா
ஆ) பிரான்ஸ்
இ) இங்கிலாந்து
ஈ) இத்தாலி
Answer:
இ) இங்கிலாந்து

Question 6.
முதல் உலகப் போரின் முடிவில் உலகில் அமைதியைக் காக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் …………..
அ) பன்னாட்டு நிறுவனம்
ஆ) ஐ.நா, சபை
இ) காமன்வெல்த் நிறுவனம்
ஈ) உலக வங்கி
Answer:
அ) பன்னாட்டு நிறுவனம்

Question 7.
முதல் உலகப் போர் நடந்த பொழுது அமெரிக்க குடியரசுத் தலைவர் ……….
அ) நிக்சன்
ஆ) உட்ரோ வில்சன்
இ) ஜான் கொன்னடி
ஈ) ஆபிரகாம் லிங்கன்
Answer:
ஆ) உட்ரோ வில்சன்

Question 8.
ஜெர்மனியும், இங்கிலாந்தும் கலந்து கொண்ட ஜட்லாண்டு கடற்போர் நடைபெற்ற ஆண்டு ………………
அ) 1916
ஆ) 1914
இ) 1918
ஈ) 1917
Answer:
அ) 1916

Question 9.
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் படி ஜெர்மனி பிரான்சிற்கு விட்டுக் கொடுத்த பகுதி ………….
அ) போசன், போலிஜ் தாழ்வாரம்
ஆ) காமரூன், டோகோலாந்து
இ) அல்சாஸ், லொரைன்
ஈ) கியாசௌ, ஷாண்டுங்
Answer:
இ) அல்சாஸ், லொரைன்

Question 10.
ஆர்ச் டியூக் பிரான்சிஸ் பெர்டிணாண்டும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்…………………………
அ) ரோம்
ஆ) செராஜிவோ
இ) பாரிஸ்
ஈ) வியன்னா
Answer:
ஆ) செராஜிவோ

Question 11.
கீழ்க்காண்பவனவற்றுள் சரியாக பொருத்தப்படாத ஒன்றை சுட்டுக.
அ போல்ஷ்விக் – 1. பெரும்பான்மையோர் கட்சி
ஆ மென்ஷ்விக் – 2. சிறுபான்மையோர் கட்சி
இ முசோலினி – 3. எனது போராட்டம் என்ற நூலை எழுதினார்
ஈ அடால்ஃப் ஹிட்லர் – 4. தேசிய சோஷலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியை நிறுவியவர்
Answer:
இ) முசோலினி – எனது போராட்டம் என்ற நூலை எழுதினார்

Question 12.
கூற்று :ஜெர்மனி எப்போதுமே ஒரு இராணுவ தேசமாகவே இருந்துள்ளது.
காரணம் : இராணுவம் பாதுகாப்பின் சின்னமாக மட்டுமல்லாமல் தேசப்பெருமையின் அடையாளமாகவும் விளங்கியது.
அ) கூற்று சரி. காரணம் தவறு 1
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
Answer:
இ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 13.
கூற்று : சமூக ஜனநாயகவாதிகளோடு பொது உடைமைவாதிகள் இணைந்து பணியாற்றியதால் குடியரசு கட்சி வீழ்ச்சியுற்றது.
காரணம் : ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடியை அதற்கு அவ்விடத்தில் தேசிய சோஷலிசத்தின் ஸ்வதிக்கா சின்னத்தைப் பதித்தார்.
அ) கூற்றும் காரணமும் சரி
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) கூற்றும், காரணமும் தவறு
Answer:
இ) கூற்று தவறு. காரணம் சரி

Question 14.
ஜப்பான் சீன குடியரசின் தலைவரான யுவான்-ஷி-காய் முன்பு …………. நிர்பந்தங்களை சமர்ப்பித்தது.
அ) 17
ஆ) 21
இ) 23
ஈ) 27
Answer:
ஆ) 21

Question 15.
ருஷ்ய-ஜப்பானியப் போர் நடைபெற்ற ஆண்டு ………………
அ) 1914-18
ஆ) 1904-08
இ) 1902-05
ஈ) 1904-05
Answer:
ஈ) 1904-05

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
முதல் உலகப்போருக்கு ஜெர்மனியை இட்டுச் சென்ற சூழல் யாவை?
Answer:

  • தனது தகுதிக்கேற்ற சரியான மரியாதையைப் பிறநாடுகள் வழங்கவில்லை என்ற உணர்வு.
  • அதிலும் குறிப்பாக பிரிட்டனைப் பொறுத்தமட்டில் ஜெர்மனியை சமரசப்படுத்த முடியாத போக்கைக் கொண்ட நாடாக்கியது.
  • கடைசியில் பரஸ்பர நம்பிக்கையின்மையும், இறுக்கம் நிறைந்த சூலும் முதல் உலகப்போருக்கு இட்டுச் சென்றது.

Question 2.
போக்குவரத்து, தகவல் தொடர்பு புரட்சியின் தன்மை யாது?
Answer:

  • போக்குவரத் திலும் தகவல் தொடர்பிலும் 1870 முதல் 1914 வரையிலான காலத்தில் ஏற்பட்ட புரட்சி உலகப் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தது.
  • நீராவி கப்பல்களும், தந்தி கம்பிகளும் கண்டங்களை ஒருபுறம் இணைக்க மறுபுறம் உட்பகுதிகளை
    துறைமுகங்களோடு இருப்புப்பாதைப் போக்குவரத்து இணைத்தது. –
  • ஜரோட்டாவிலருந்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும் நிதி இடம்பெயர்ந்து உலக வணிகத்தை மேம்படுத்தியது.

Question 3.
அறக்கட்டளை என்றால் என்ன?
Answer:
விலையையும், தயாரிப்பையும் கட்டுப்படுத்துவதற்காக ஒரு பொருளின் தயாரிப்பாளர்கள் அனைவருமோ அல்லது பெரும்பகுதியினரோ கூடி உருவாக்குவதே அறக்கட்டளையாகும்.

Question 4.
1905 ருஷ்ய ஜப்பான் போரைப் பற்றி கூறுக.
Answer:

  • 1904-05இல் நடந்த போரில் தோற்கடித்தமை பெரும் முக்கியத்துவம் கொண்டதானது. “மூவர் தலையீட்டை” தொடர்ந்து ரஷ்யா தெற்கு மஞ்சூரியாவை ஆக்கிரமித்தது.
  • ரஷ்யா ஜப்பானை குறைத்து மதிப்பிட்டிருந்தது. 1904-05ல் போர் வெடித்துக் கிளம்பியது. ரஷ்ய ஜப்பானியப் போரான இதில் ஜப்பான் வெற்றி பெற்றது.
  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்தியஸ்தத்தின் கீழ் போர்ட்ஸ்மவுத் உடன்படிக்கையை கையெழுத்திட்டு ஆர்தர் துறைமுகத்தை மீண்டும் பெற்றது.

Question 5.
முதல் உலகப் போரின் உடனடி காரணம் யாது?
Answer:

  • 1917ம் ஆண்டு ஜீன் 26ம் தேதி ஆஸ்திரிய இளவரசர் ஆர்ச் டியூக் பிரான்சிஸ் பெர்டிணாண்டும் அவருடைய மனைவியும் செர்பியாவின் தலைநகரான செராஜிவோ நகரில் செர்பியத் தீவிரவாத இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். –
  • ஆஸ்திரியா இந்த நிகழ்ச்சியைக் காரணமாக வைத்து செர்பியர்களை ஒடுக்க நினைத்து, இக்கொலைக்கு செர்பியா தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியது. இதுவே முதல் உலகப் போருக்கான
    உடனடி காரணமாகும்.

Question 6.
காம்ப்ராய் போர் – குறிப்பு தருக. –
Answer:
காம்ப்ராய் போர்:

  • நவம்பர்- டிசம்பர் 1917 பிரிட்டிஷாரால் அதிக அளவில் டாங்கி வகை பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டமை, * பிரான்சின் காம்ப்ராயில் நடந்தப் போரிலாகும்.
  • திடீரென 340 டாங்கிகள் போர்முனையில் தோன்றியதும் ஜெர்மானியர்கள் பெரும் திகைப்பிற்கு உள்ளானார்கள்.

Question 7.
ப்ராவ்தா – குறிப்பு தருக.
Answer:
ப்ராவ்தா என்ற ரஷ்ய சொல்லுக்கு “மெய்” என்று பொருள். இதுவே சோவியத் ஐக்கியத்தின் 5 பொதுவுடைமை கட்சிக்குரிய அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாளாக 1918 முதல் 1991 வரை இருந்தது. கல்

Question 8.
பாசிச வாதம் என்பதை வரையறு.
Answer:
பாசிசம் என்ற பதத்தின் மூலச்சொல்லான பாசஸ் என்னும் லத்தீன் சொல் ரோமானிய தேசத்தின் அதிகாரத்தைக் குறிக்கும் தடிகளால் சூழப்பட்ட கோடாரியைச் சுட்டுவதாகும்.

பாசிசம் என்பது ஒருவகையான தீவிர அதிகாரங்கொண்ட உயர் தேசியவாதம் கலந்த சர்வாதிகார சக்தியையும், அதனால் வலுப்பெற்ற எதிரிகளை ஒடுக்கும் தன்மையையும், சமூகத்தையும், பொருளாதாரத்தையும் மையப்படுத்தும் போக்கையும் உள்வாங்கி 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் முக்கியத்துவமடைந்த ஒன்றாகும்.

Question 9.
ஹிட்லரின் வெளியுறவுக் கொள்கையை கூறுக.
Answer:
ஹிட்லரின் வெளியுறவுக் கொள்கையானது

  • ஜெர்மனியின் ஆயுதப்படை வலிமையை அதிகரிப்பதும்
  • நாட்டின் பெருமையை சீர்குலைத்த வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளை மீறுவதையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது.
  • அவர் வேண்டுமென்றே வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை முறிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளே இரண்டாம் உலகப்போர் வெடிக்கக் காரணமாயிற்று.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
லாபத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவதே ஏகாதிபத்தியத்தின் முக்கிய குண நலன்களாகும். எவ்வாறு?
Answer:
ஏகபோக தொழில்கள் முதலாளிகளுக்குப் பெரும் லாபத்தைக் குவித்தன. இதன் விளைவாக மிகையாகப் பணம் குவியத் துவங்கியது.

தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் முதலீடுகளை ஏற்றுமதி செய்தால் அவை அதிகமான லாபத்தை ஈட்டும் என்று உணர்ந்தார்கள்.

இம்மிகைப் பணத்தை இருப்புப்பாதைக்கும், மின்சார உற்பத்திக்கும், சாலைகளுக்கும் அதீத தேவை இருந்த காலனிய நாடுகளில் முதலீடு செய்தார்கள்.

நேரடி முதலீடு நீங்கலாக கடனாகவும் பணத்தை அனுப்ப தாய்நாடு முன்வந்தது. இதனால் இங்கிலாந்து இருப்புப்பாதை தண்டவாளங்கள் போடவும் இரயில் பெட்டிகள், இரயில் எந்திரம், போன்றவற்றை வாங்கவும் கடன் கொடுத்ததால் அப்பணம் மீண்டும் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த உற்பத்தியாளர்களிடம் அவர்களின் லாபத்தை முன்னிறுத்தி தேவைப்படும் பொருள்கள் வாங்கப்பட்டன.

முதலீடு செய்வோரும், உற்பத்தியாளர்களும் காலனிய அமைப்பு முறை தங்களுக்குச் சாதகமாக இருப்பதை உணர்ந்தார்கள்.

Question 2.
1905க்குப் பின்னர் ஜப்பான் பின்பற்றிய வலுத்த – கர இராஜதந்திரம் பற்றி நீர் அறிவது யாது?
Answer:
ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஜப்பானிய தூதர் கொரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை – செய்யப்பட்டது ஜப்பானுக்கு 1910இல் கொரியா மீது படையெடுக்க காரணமாக அமைந்தது.

சீனாவில் 1912இல் மஞ்சு வம்சத்தின் வீழ்ச்சிக்குப்பின் நேர்ந்த குழப்பம் ஜப்பானுக்கு தனது எல்லையை – விரிவுபடுத்திக் கொள்ள மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியது.

ஜப்பான் 1915ஆம் ஆண்டு புதிதாக உருவாகியிருந்த சீன குடியரசின் தலைவரான யுவான் ஷிகாய் முன்பு 21 நிர்ப்பந்தங்களை சமர்ப்பித்தது.

இந்நிர்ப்பந்தங்களில் ஜெர்மானியர்களுக்கு சீன கடலோர மாகாணமான ஷாண்டுங்கில் வழங்கப்பட்டிருந்த உரிமையை தங்களுக்கு மாற்றிக் கொடுக்கவும். மஞ்சூரியாவில் ஜப்பானின் ஆதிக்கத்தை அங்கீகரிக்கவும், சீன அரசிற்கு ஜப்பானிய ஆலோசகர்களை நியமிக்கவும் * கோரப்பட்டிருந்தது. பெருவாரியான ஜப்பானின் கோரிக்கைகளுக்கு சீனா உடன்படும்படியானது.

Question 3.
ரஷ்யாவில் இடைக்கால அரசின் தோல்வியை விளக்குக.
Answer:

  • புரட்சி வெடித்த போது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். தொடர்ந்து போராடுதலையே லெனின் விரும்பினார்.
  • ” அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற அவரின் தாரகமந்திரம் தொழிலாளர் தலைவர்கள் யாவரையும் அவர் பக்கம் திருப்பியது.
  • போர்க்காலப் பற்றாக்குறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை ‘ரொட்டி, அமைதி, நிலம்’ என்ற முழக்கம் ஈர்த்தது.
  • ஆனால் இடைக்கால அரசு இருபெரும் தவறுகளைப் புரிந்தது. நில மறுவழங்கல் குறித்த கோரிக்கையின் முடிவை அது கால தாமதப்படுத்தியதோடு போரைத் தொடர்ந்து நடத்துவது குறித்த விஷயங்களிலும் இழுத்தடித்தது.
  • ஏமாற்றமடைந்த விவசாய வீரர்கள் தங்களின் பணியை விடுத்து நில ஆக்கிரமிப்பாளர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.
  • இது போல்ஷ்விக்குகள் தலைமையில் பெட்ரோ கிரேடில் நடந்து கொண்டிருந்த கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தியது.
  • அரசு ப்ராவ்தா என்ற செய்தித்தாளை தடை செய்ததோடு பின்லாந்தில் மறைந்திருந்த லெனின் தவிர பிற போல்ஷ்விக்குகளை கைது செய்தது.

லியோன் ட்ராட்ஸ்கியும் கைது செய்யப்பட்டார். தாராளவாதிகளும் மிதவாத சோஷலிஸ்டுகளும் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் பின்புலத்தில் கெரன்ஸ்கி பிரதம அமைச்சரானார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றை எதிர்கொண்ட கெரன்ஸ்கி அரசையும், சோவியத்துகளையும் ஒடுக்கி நீக்க நினைத்தார். ஆனால் அவரது முயற்சிகள் சோவியத்துகளால், அதிலும் குறிப்பாக மக்களிடையே பிரபலமடைந்து கொண்டிருந்த போல்ஷ்விக்குகளால் முறியடிக்கப்பட்டன.

Question 4.
அமெரிக்கா போரில் இறங்க காரணம் என்ன? (அல்லது) உட்ரோ வில்சனை கோபமுறச் செய்த நிகழ்ச்சி யாது?
Answer:

  • 1917 மார்ச்சில் அமெரிக்கக் கொடியுடன் சென்ற நான்கு வணிகக் கப்பல்களை ஜெர்மானிய நீர் முழ்கிக் . கப்பல் முழ்கடித்தது.
  • அதில் பயணம் செய்த 36 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். இந்நிகழ்ச்சி அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனை கோபமுறச் செய்தது.
  • எனவே உட்ரோ வில்சன் 1917 ஏப்ரல் 6ல் நல்ல வெள்ளி தினத்தில் ஜெர்மனி மீது போர் அறிவிப்பினைச் செய்தார்.

Question 5.
ரஷ்ய புரட்சிக்கான காரணங்களையும் விளைவுகளையம் சுருக்கமாக விவரி.
Answer:

  • முதல் உலகப்போரின் மிக முக்கிய விளைவு ரஷ்யப் புரட்சியாகும். ரஷ்ய சார் மன்னரின் அரசு முதல் உலகப்போர் ஏற்படுத்திய அழுத்தங்களை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடியது.
  • மக்கள் உணவின்றி தவித்தனர். நகரங்களும், சிற்றூர்களும் தொழிலாளர்களால் – நிறைந்து வழிந்தபோது அவர்களுக்கு இருக்க இடமோ, உண்ண உணவோ வழங்க யாருமில்லாத நிலை உருவானது.
  • முதல் புரட்சி 1917ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பெட்ரோகிரேட் நகரில் வேலை நிறுத்தங்களோடும், ஆர்ப்பாட்டங்களோடும் நடைபெற்றது. ஆனால் முதல் புரட்சி ரஷ்யாவின் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கவில்லை .
  • ரஷ்ய முடியாட்சி தூக்கியெறியப்பட்டாலும் இடைக்கால அரசு போரைத் தொடர்ந்து நடத்தவே செய்தது.
  • இதனால் நவம்பர் மாதத்தில் 2வது பெரும் புரட்சி நடந்தேறி லெனின் தலைமையிலான போல்ஷ்விக் அமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றி ரஷ்யாவில் பொதுவுடைமை அரசை நிறுவியது.

Question 6.
ரஷ்யாவில் ஏற்பட்ட புகழ்பெற்ற கிளர்ச்சிகள் பற்றி விவரி.
Answer:
சோஷலிஸ்டுகள் 1917 பிப்ரவரி 23 அன்று சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை அனுசரித்துக் கொண்டிருந்த போது சார் மன்னர் யாராலும் அசைக்க முடியாவண்ணம் தம் நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

மார்ச் 2 அன்று அவர் அரியணை இறங்கும் நிலை ஏற்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லையென்றபோதும் இராணுவத்தில் பணிபுரியும் கணவர்களைக் கொண்ட பெண் ஜவுளி தொழிலாளர்கள், உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கவும், ரஷ்யப் பேரரசின் தலைநகரானப் பெட்ரோகிரேட் நகரின் வீதிகளில் பேரணி செல்லவும் சூழ்நிலை அவர்களை உந்தித் தள்ளியது.

“பணியாளர்களுக்கு உணவு” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தீவிரவாத மனநிலை கொண்ட ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் வீதிகளில் போராடிக் கொண்டே தொழிற்சாலைப் பணியாளர்களை நோக்கி “வெளியே வாருங்கள்!” “பணிபுரிவதை நிறுத்துங்கள்!” என்று உரத்த குரலெழுப்பினர். இதன் எதிரொலியாக மறுநாள் நகரின் 400,000 ஊழியர்கள் போராட்டக்களத்தில் இறங்கினர்.

Question 7.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியைப் பற்றி கூறுக.
Answer:

  • முதலாவது மாபெரும் பங்குச்சந்தை வீழ்ச்சியானது 1929 அக்டோபர் 24 அன்று ஏற்பட்டது.
  • இதனால் அதிகமான மக்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்று சந்தையிலிருந்துவெளியேறினார்கள்.
  • ஆனால் பங்குகளை வாங்குவோர் யாருமில்லை.
  • இதனைத் தொடர்ந்து அமெரிக்க வங்கிகள் பேரிழப்பைக் கண்டன.
  • அமெரிக்க நிதியாளர்கள் வெளிநாடுகளில் செய்து வைத்திருந்த முதலீடுகளைத் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
  • ஜெர்மனிக்கு அமெரிக்கா கொடுக்கவிருந்த கடனை நிறுத்தியதால் அங்கிருந்த இரு பெரும் வங்கிகள் வீழ்ச்சியுற்றன.
  • வெளிநாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த வங்கிகளுக்கு தாராளமாகக் கடன் வழங்கி வந்த இங்கிலாந்து வங்கியும் திவாலானது.

Question 8.
பாசிசவாதம் ஜெர்மனியில் ஏற்றம் பெற காரணங்கள் யாவை?
Answer:

  • போரில் தோற்கடிக்கப்பட்டமையால் எழுந்த அவமானமாகும்.
  • ஜெர்மனி 1871 முதல் 1914 வரையான காலத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரத் தளங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தது.
  • ஜெர்மனியின் பல்கலைக்கழகங்கள், அதன் விஞ்ஞானம், தத்துவம், இசை ஆகியவை உலகப்புகழ் பெற்றிருந்தன.
  • பிரிட்டனையும் அமெரிக்க ஐக்கிய நாட்டையும் தொழில் உற்பத்தியின் பல்வேறுப் புலங்களில் ஜெர்மனி விஞ்சி நின்றது. இதனைத் தொடர்ந்தே உலகப்போரின் பெரும் தோல்வி அதனைச் சூழ்ந்தது.
  • ஜெர்மானிய மக்கள் விரக்தியடைந்தார்கள்.
  • வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நஷ்டஈடும், பிறசரத்துக்களும் பெரும் அதிருப்தியையும், சிரமத்தையும் ஏற்படுத்தின.
  • சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள விழைந்த பிற்போக்கு சக்திகள் அரசில் அங்கம் வகித்த சோஷலிஸ்டுகளும் யூதர்களுமே தேசத்திற்கெதிராகச் செயலாற்றியதாகவும் அவர்களே தோல்வியை விளைவித்தவர்கள் என்றும் பரப்புரையாற்றின.
  • ஜெர்மனி எப்போதுமே ஒரு இராணுவ தேசமாகவே இருந்துள்ளது.
  • முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட ஜெர்மனியின் தோல்வியும். அதைத் தொடர்ந்த அவமானமும் ஜெர்மானியர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Question 9.
பொருளாதார பெருமந்தத்தின் விளக்கம் தருக.
Answer:

  • செலவு குறைப்பு, அதிகமான வரிவிதிப்பு போன்ற அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டும் இங்கிலாந்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
  • பணமதிப்பிறக்கம் கடன் வழங்குவோரை கடனளிப்பதை நிறுத்திக்கொள்ளத் தூண்டியது.
  • இதனால் உலகளாவிய கடன் புழக்கம் சுருங்கியது.
  • வெவ்வேறு நாடுகளால் கைக்கொள்ளப்பட்ட இத்தற்காப்பு நடவடிக்கை உலகப் பொருளாதார சுழற்சியில் எதிர்பாராத கடும் வீழ்ச்சியை விளைவித்தது.
  • அதன் பாதிப்புகள் ஆழமாகவும், நீண்டகாலம் நீடித்ததாகவும் இருந்ததால் பொருளாதார நிபுணர்களும், வரலாற்றாசிரியர்களும் இந்நிகழ்வைப் பொருளாதாரப் பெருமந்தம் என்று குறிப்பிடுகிறார்கள்.

Question 10.
பாசிசத்தையும் நாசிசத்தையும் ஒப்பிடுக.
Answer:

  • அனைத்து அதிகாரங்களும் கொண்ட தனிமனிதனின் தன்னாட்சி அல்லது வல்லாட்சியே பாசிசம் ஆகும். ஹிட்லரின் நாசிசம் முசோலினியின் பாசிசத்தின் பிரதிபலிப்பே ஆகும்.
  • மக்களாட்சி முறை சமதர்மம் ஆகியவற்றின் எதிர்ப்புக் கொள்கையே பாசிசம் ஆகும். சமதர்மம், பொதுவுடைமை, மனித உரிமை, மக்களாட்சி ஆகிய கொள்கைகளுக்கு எதிரானது நாசிசம் ஆகும்.
  • மனிதனுக்கு முக்கியமானது நாடும் சமுதாயமும் என்பது பாசிசத் தத்துவமாகும். மக்களுக்காக நாடு அல்ல, நாட்டுக்காகவே மக்கள் என்பது ஹிட்லரின் நாசிசத் தத்துவமாகும்.
  • ஒரே கட்சி ஒரே தலைவர் என்பது பாசிசக் கொள்கையாகும். ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவர் என்பது நாசிசக் கொள்கையாகும்.
  • பன்னாட்டு அரசியலை விட தேசிய அரசியலை பாசிசம் வலியுறுத்தியது. ஏகாதிபத்தியக் கொள்கை மூலம் எல்லையை விரிவுபடுத்துவது பாசிசக் கொள்கையாகும். ஜெர்மனியின் படை பலத்தைப் பெருக்கி உலகம் முழுவதையும் ஜெர்மானியம் ஆக்குவது நாசிசக் கொள்கையாகும்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
உட்ரோ வில்சனின் பதினான்கு அம்சகோட்பாடுகள் யாவை?
Answer:
உட்ரோ வில்சனின் அறிவிப்பு:

  • உலகில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே அமெரிக்கர்கள் பிறந்திருக்கிறார்கள்.
  • அதற்காகவே அமெரிக்கா போரில் ஈடுபடுகிறது என்று உட்ரோ வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
  • 1918 ஜனவரியில் வில்சன் “பதினான்கு அம்சக்கோட்பாடுகள் மட்டுமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்” என்று அறிவித்தார்.

உட்ரோ வில்சனின் முன்மொழிவுகள்:

  1. திறந்த உடன்படிக்கைகள் வெளிப்படையாகவே உருவாக்கப்படுதல்.
  2. கட்டுப்பாடுகள் யாவும் கடல்வெளியில் தளர்த்தப்படல்.
  3. நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தடைகள் அகற்றப்படல்.
  4. போர்த்தளவாட உற்பத்தி குறைக்கப்படல்.
  5. காலனி சார்ந்த சிக்கல்களை சம்மந்தப்பட்ட மக்களின் விருப்பமறிந்து பாரபட்சம் காட்டாமல் தீர்விற்கு
    உட்படுத்தல்.
  6. ரஷ்யா தனக்கு ஏற்றதாகக் கருதும் எத்தகைய அரசையும் நிறுவ அதற்கு வாய்ப்பளிப்பதோடு அவ்வரசை
    பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளவும், ஆதரிக்கவும், வரவேற்கவும் செய்தல்.
  7. பெல்ஜியத்தை மீண்டும் சுதந்திர நாடாக்குதல்.
  8. அல்சேசையும், லொரைனையும் பிரான்சிடமே மீண்டும் ஒப்படைத்தல்.
  9. இத்தாலிய எல்லையை தேசிய அடிப்படையில் மறுநிர்ணயித்தல்
  10. தேசிய சுயநிர்ண யம்.
  11. ருமேனியா, செர்பியா, மான்டிநீக்ரோ ஆகியவை மீண்டும் உருவாக்கப்பட்டு செர்பியாவிற்கு கடலை அடைய வழி ஏற்படுத்தல்.
  12. துருக்கி மக்களை தன்னாட்சி கொண்ட வளர்ச்சி முறைக்கு கொண்டு செல்வதோடு கருங்கடல் நீர்ச்சந்தியிலிருந்து மத்திய தரைக்கடல் வரை “நிரந்தரமாக திறந்துவிடல்”.
  13. போலிஷ் மக்களுக்கென்றே சுதந்திரமான போலந்து உருவாக்கப்பட்டு அதற்கு கடல் தொடர்பு ஏற்படுத்துதல்.
  14. பன்னாட்டு சங்கத்தை ஏற்படுத்தல்.

Question 2.
பால்கன் போர்களை விவரித்து அதனால் ஏற்பட்ட விளைவுகளை விவரி.
Answer:
பால்கன் போர்கள்:

  • துருக்கி தென்மேற்கு ஐரோப்பாவில் சக்தி வாய்ந்த ஒரு நாடாகத் திகழ்ந்தது. அதன் இராஜ்ஜியம் பால்கன்
    பகுதிகளில் விரிந்து ஹங்கேரி முதல் போலந்து வரை சென்றது.
  • 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துருக்கி எதிர் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார
    நிலையற்றத்தன்மை கிரீஸ் துவங்கி பல நாட்டினரும் துருக்கியின் கட்டுப்பாட்டை உடைத்து அந்நாட்டின் பகுதிகளைப் பிரித்தெடுக்க வழிசெய்தது.

முதலாம் பால்கன் போர் (1912):

  • 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் பால்கன் ஐக்கியம் உருவாக்கப்பட்டது. அக்டோபர் 1912இல் துவங்கி இரண்டு மாதத்திற்குள்ளாகவே துருக்கியர்கள் எதிர்ப்பை முறித்தது.
  • ஐரோப்பிய மாகாணங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.
  • மே 1913இல் கையெழுத்திடப்பட்ட லண்டன் உடன்படிக்கையின் கீழ் மாசிடோனியா பிரிக்கப்பட்டு அல்பேனியா என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது.

இரண்டாம் பால்கன் போர் (1913):

  • வெற்றி பெற்ற நாடுகள் மாசிடோனியாவை பிரிக்கும் முடிவில் சண்டையிட்டுக் கொண்டன.
  • இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாங்கள் இழந்திருந்த ஏட்ரியநோப்பிளை மீண்டும் எடுத்துக் கொள்ள முனைந்தார்கள்.
  • இரண்டாம் பால்கன் போர் ஆகஸ்ட் 1913இல் புக்காரெஸ்ட் உடன்படிக்கையை கையெழுத்திட்டதோடு முடிவுக்கு வந்தது.

விளைவுகள்:

  • பல்கேரியர்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்து அதற்காக
  • செர்பியர்களை பழிவாங்க துடித்தனர்.
  • செர்பியர்கள் மிதமிஞ்சிய வெற்றிக்களிப்பில் திளைத்தார்கள். இக்காலம் முதற்கொண்டு ஆஸ்திரியர்களுக்கு எதிரான போராட்டங்கள் செர்பியாவிலும், அதன் அண்டை நாடான போஸ்னியாவிலும் மிகுந்த தீவிரத்தன்மை கொண்டதாக மாறியது.

How to Prepare using Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF?

Students must prepare for the upcoming exams from Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes PDF by following certain essential steps which are provided below.


  • Use Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் notes by paying attention to facts and ideas.
  • Pay attention to the important topics
  • Refer TN Board books as well as the books recommended.
  • Correctly follow the notes to reduce the number of questions being answered in the exam incorrectly
  • Highlight and explain the concepts in details.


Samacheer Kalvi 12th History All Chapter Notes PDF Download


Frequently Asked Questions on Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes


How to use Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் Notes for preparation??

Read TN Board thoroughly, make separate notes for points you forget, formulae, reactions, diagrams. Highlight important points in the book itself and make use of the space provided in the margin to jot down other important points on the same topic from different sources.

How to make notes for Samacheer Kalvi 12th History Chapter 13 ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் exam?

Read from hand-made notes prepared after understanding concepts, refrain from replicating from the textbook. Use highlighters for important points. Revise from these notes regularly and formulate your own tricks, shortcuts and mnemonics, mappings etc.
Share:

0 comments:

Post a Comment

Copyright © Samacheer Kalvi Books: Tamilnadu State Board Text Books Solutions About | Contact | Privacy Policy